பதிவு செய்த நாள்
10
நவ
2020
01:11
சோழவந்தான் : சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் நவ.,13 லட்சார்ச்சனை துவங்கி 15ல் குருபெயர்ச்சி விழா நடக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது. கலெக்டர் அன்பழகன், எம்.எல்.ஏ., மாணிக்கம் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., செல்வராஜ், ஆர்.டி.ஓ.,முருகானந்தம், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லதுரை, தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார், டி.எஸ்.பி., ஆனந்த ஆரோக்கியராஜ் பங்கேற்றனர்.
அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: குருபெயர்ச்சியையொட்டி ஏராளமான பக்தர்கள் வருவதால் சுகாதாரத்துறை மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் முகக் கவசம், கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படும். வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும். 24 மணி நேர மருத்துவ குழுக்கள் நியமிக்கப்படும். 60 வயதிற்கு மேற்பட்டோர், 10 வயதிற்குட்பட்டோர் வருவதை தவிர்க்க வேண்டும், என்றார்.