கோட்டை கோவில் திருப்பணி: விரைந்து முடிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2020 05:11
சேலம்: சேலத்தில், நுகர்வோர் குரல் சங்க ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் நீதிபதி பாரி, சங்க சட்ட ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்கள் இடையே தன்னம்பிக்கை பயிற்சி, விழிப்புணர்வு முகாம் நடத்தல்; இலவச சட்ட ஆலோசனை முகாம், மருத்துவ முகாம் நடத்தல்; மாவட்டம் முழுதும் சங்க கிளைகளை தொடங்குவது என, முடிவு செய்யப்பட்டது. மேலும், கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.