பழநி : பழநி திருஆவினன்குடி கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் திருஆவினன்குடி கோயிலில் நவ.15, இரவு 9:48க்கு குருப்பெயர்ச்சி நடைபெறும். இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடக்க உள்ளது. இதற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. ஆகம விதிகளுக்கு உட்பட்டு நித்திய பூஜைகள் உரிய நேரங்களில் திருக்கோயில் பழக்க வழக்கப்படி நடைபெறும், என அறிவித்துள்ளார்.