கல்பத்தி தேர் திருவிழா: இன்று ஒன்றாம் தேர் திருநாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2020 10:11
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது புகழ்ப்பெற்ற கல்பாத்தி விசாலாக்ஷி விஸ்வநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டும் வெகு விமர்சியாக தேர் திருவிழா நடப்பது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு தேர் திருவிழா கொரோனா தொற்று பரவும் அச்சுறுத்தல் காரணம் 144 தடை உத்தரவுள்ளதால் நோய் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்குள் சடங்குகளாக மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதித்தனர். இதையடுத்து திரளான பக்தர்களின் இருப்பின்றி விழாவை நடத்த கோவில் நிர்வாகம் தீர்மானித்தனர். இதையடுத்து திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 7ம் தேதி நடைபெற்றன. ஒன்றாம் தேதி திருநாளான இன்று காலை விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவின் சுப்மணியர், கணபதி ஆகிய தேவகணங்கள் சிறு பல்லக்கில் கோவில் வளாகத்தினுள் மட்டும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். தவிர இதையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கும். கொடியேறியது முதல் எல்லா நாட்களிலும் விழா நடைபெறும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர், லக்ஷ்மி நாராயண பெருமாள், மந்தக்கரை மஹாகணபதி, சாத்தப்படும் பிரசன்ன மஹாகணபதி ஆகிய கோவில்களில் தேவபாராயணம் நடந்து வருகின்றன. கொடியிறங்குவது வரை இது தொடரும். இரண்டாம் தேர் திருநாளாக நாளை (14ம் தேதி) மந்தரை மஹாகணபதி கோவிலில் 9.30 மணிக்கு மூலவர் எழுந்தருளும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தினுள் வைத்து நடக்கும். 15ம் தேதி மூன்றாம் தேர் திருநாள் நடக்கின்றன. 16ம் தேதி துவஜாவரோகணத்துடன் தேர்த்திருவிழா நிறைவடைகின்றன.