திண்டுக்கல் கோயில்களில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2020 02:11
திண்டுக்கல் : குருபெயர்ச்சியையொட்டி, திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல் வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், ரவுண்ட் ரோடு கணபதி, சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் சுவாமி, குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.வேடசந்துார்:வேடசந்துார் அய்யனார் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குருபெயர்ச்சி விழா நடந்தது. சிறப்பு யாகம், பஞ்சமூர்த்திகள் வழிபாடு மற்றும் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது.