பழநி சூரசம்ஹார நாளில் சன்னதி, கிரி வீதிகள் அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2020 10:11
பழநி : பழநி சூரசம்ஹார விழாவையொட்டி, சன்னதி, கிரிவீதிகள் அடைக்கப்படும்- என அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர். பழநியில் கந்தசஷ்டி விழாவின் இறுதி நிகழ்வான சூரசம்ஹார விழா, திருக்கல்யாணம் நவ.20 மற்றும் 21 ல் நடக்க உள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., அசோகன் தலைமையில் நடந்தது.விழாவில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் பழநியில் கிரிவீதி, சன்னதி வீதியில் கடைகள் அடைக்க வேண்டும். அப்பகுதி மக்கள் மட்டும் அந்த வீதிகளில் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு அடையாளஅட்டை வழங்கப்படும் என முடிவெடுத்தனர்.
கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் லட்சுமணன், தாசில்தார் வடிவேல்முருகன், டி.எஸ்.பி., சிவா மற்றும் வர்த்தகர் சங்கத்தினர் பங்கேற்றனர். பழநி அனைத்து வர்த்தகர் சங்க கவுரவ தலைவர் செல்வகுமார் கூறுகையில், கிரிவீதியில் நடைபெறும் சூரசம்ஹர விழா அன்று கடைகளை அடைத்து கொள்கிறோம். நவ.21 அன்று திருகல்யாணம் மலைமீது நடைபெறுவதால் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளோம் என்றார்.