ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலிமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (நவ.,20) சூரசம்ஹாரமும், நவ.,21ல் திருக்கல்யாணம் நடக்கிறது.
பெருவயல் கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான சிவசுப்பிரமணியசுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் உள்ளது. இங்கு கந்தசஷ்டி விழா நவ., 15ல் காப்புகட்டுதலுடன் தொடங்கி நவ.,21 வரை நடக்கிறது. தினமும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்பிரகாரம் உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை (நவ.,20ல்) கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம், நவ.,21ல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதுபோல வழிவிடு முருகன்கோயில், குண்டுக்கரை முருகன்கோயில் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி கந்தசஷ்டி விழா நடக்க உள்ளது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.