திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2020 04:11
மதுரை: திருச்செந்தூர் கடற்கரையிலேயே சூரசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்படும் என தமிழக அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறுவதை எதிர்த்து ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம், கடற்கரையிலேயே நடக்கும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள், சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி தரக்கூடாது. கொரோனா சூழலில் மக்கள் பங்கேற்பு இல்லாமல் சூரசம்ஹார நிகழ்வை நடத்த வேண்டும். முருக பக்தர்கள் காணும் வகையில், பாகுபாடின்றி, டிவியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.