மலையம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2020 03:11
தியாகதுருகம் : தியாகதுருகம் மலையம்மன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகதுருகம் நகரையொட்டி வரலாற்று சிறப்புமிக்க மலையின் மேற்கு பகுதியில் பகவதி மலையம்மன் கோவில் உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து இக்கோவிலுக்குச் செல்ல மேல் பூண்டி தக்கா ஏரியையொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது.மாதந்தோறும் பவுர்ணமி அன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்குச் செல்லும் வழியில் மின் விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் மாலை நேரங்களில் கோவிலுக்குச் சென்று திரும்புவதற்குள் இருட்டி விடும் என்பதால் பக்தர்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இச்சாலையில் மின்விளக்கு அமைத்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.