Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வராஹி அம்மனுக்கு நடந்த நிகும்பலா ... குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் யானை அணிவகுப்புடன் மாசி உற்சவம் நிறைவு குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 மார்
2026
01:03

சேத்தியாத்தோப்பு: மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வளையமாதேவி அம்மன்குப்பம் கிராமத்தில் வெள்ளையம்மன், பொம்மியம்மன் சமேத மதுரை வீரன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கலச ஸ்தாபனம், வாஸ்து பூஜை, மிருத்ஸங்கிரகணம், கலச பூஜை, முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.


நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, திரவிய ஹோமம், மஹா பூர்ணாஹூதி, சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தொடர்ந்து காலை, 8:00 மணியளவில் யாக சாலையிலிருந்து கும்ப கலசம் புறப்பாடாகி காலை, 9:00 மணியளவில் மதுரைவீரன், வெள்ளையம்மன், பொம்மியம்மனுக்கும், பரிவார தெய்வங்களான முன் உடையான் ஆகியவற்றிற்கும் புனித கங்கை நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.


வளையமாதேவி, அம்மன்குப்பம், பெரிய நற்குணம், கத்தாழை உள்ளிட்ட சுற்றியுள்ள கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.


ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் வளையமாதேவி அம்மன்குப்பம் கிராமத்தினர் செய்திருந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar