வள்ளிக்கொடியின் அடியில் கிடைத்த பெண் குழந்தையை, வேடர் தலைவன் நம்பிராஜன் எடுத்து வளர்த்தான். அக்குழந்தைக்கு அக்கொடியின் பெயரையே வைத்தான் என்ற கதையே வள்ளியின் பெயர்க்காரணமாக விளங்குகிறது. ஆனால், வாரியார் இந்தப்பெயருக்கு வேறோரு விளக்கம் தருகிறார். அரசன் மனைவி அரசி, பொன்னவன் மனைவி பொன்னி, அது போல வள்ளல் மனைவி வள்ளி ஆகிறாள். முருகன் பன்னிரு கைகளால் அடியார்க்கு அருளை வாரி வழங்குவதால் வள்ளல். அந்த வள்ளலின் மனைவியாக இருப்பதல் ‘வள்ளி’. வள்ளிக்கணவனான முருகனை வணங்கினால் வாழ்வு செழிக்கும். வள்ளிமணாளனாக முருகன் அருளும் தலம் திருத்தணி. இதனை அடுத்த ஆந்திராவில் அமைந்த சித்தூரே வள்ளி அவதரித்த ஊர். முன்பு தமிழ் பேசும் பகுதியில் இருந்தது. சிற்றுார் என்ற சொல்லே ‘சித்துார்’ என திரிந்தது. சின்னஊர் என்பது இதன் பொருள்.