திருவண்ணாமலை கோயிலில் ஒன்பது ராஜகோபுரங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் எனப்படும் பிரதான கோபுரம் 11 நிலை கொண்டது. உயரம் 217 அடி. தெற்கு கோபுரத்தை திருமஞ்சனக் கோபுரம், மேற்கு கோபுரத்தை பேய்க்கோபுரம், வடக்கு கோபுரத்தை அம்மணி கோபுரம் என்பர். இரண்டாம் கோபுரத்தை வல்லாள மகாராஜா கோபுரம் என்றும், மூன்றாம் கோபுரத்தை கிளி கோபுரம் என்றும் கூறுவர். இதுதவிர, மூன்று கோபுரங்கள் இங்கு உள்ளன.