Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் மலையில் மகாதீபம்: எளிமையாக ... இன்று நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நடப்பாண்டின் கடைசி சந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம்: 40 கி.மீ., வரை பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம்: 40 கி.மீ., வரை பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

30 நவ
2020
08:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீபத்தை, 40 கி.மீ., வரை பக்தர்கள்தரிசனம் செய்துவழிபட்டனர்.

அபிஷேகம்திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 20ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.சுவாமி கருவறை எதிரில், கீர்த்திவாசன் சிவாச்சாரியார், ரமேஷ் சிவாச்சாரியார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது.

பின், ஏகன் அனேகன் என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்தில் இருந்து, அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.பரணி தீபத்தை கணேசன் சிவாச்சாரியார் கையில் ஏந்தியவாறு எடுத்து செல்ல, அம்மன் சன்னிதிஉள்ளிட்ட கோவிலில் உள்ள அனைத்து சன்னிதிகளிலும் பரணி தீபம்ஏற்றப்பட்டது.காலை, 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில், சுப்ரமணியர் தீர்த்தவாரி நடந்தது.பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பஞ்ச பூதங்கள்தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகளும், தனித்தனி தங்க விமானத்தில் மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் பிரகாரத்தில், தீப தரிசன மண்டபத்தில், தீபத்தை காணும் வகையில், மலையை நோக்கி அமர்ந்தனர்.பார்வதி அம்மனுக்கு, சிவபெருமான் இடபாகம் அளித்ததை நினைவுகூரும் வகையில், அர்த்தநாரீஸ்வரராய், கோவிலினுள் இருந்து மாலை, 5:59 மணிக்கு வெளிவந்தார்.அப்போது, காலையில் ஏற்றப்பட்ட பரணி தீப விளக்கில் இருந்து, கோவில் கொடி மரம் எதிரில் உள்ள அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டது.அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காட்டப் தொடர்ச்சி 7ம் பக்கம்பட்டது.அதே நேரத்தில், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என, பக்தி பரவச கோஷமிட்டு வழிபட்டனர். பின் பஞ்ச மூர்த்திகள், ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். மஹா தீபத்தை, 40 கி.மீ., வரை பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.* பக்தர்களுக்கு தடைகார்த்திகை தீப திருவிழா நாட்களில், வழக்கமாக, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால், வெளி மாநில மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், திருவண்ணாமலை நகருக்கு வர தடை விதிக்கப்பட்டது.

இதனால், மாட வீதி மற்றும் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.அரசு அதிகாரிகள், போலீசாரின் வாகனங்கள் மட்டுமே நகரில் சுற்றி வந்தன. கிராமப்புற விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து, விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர். பால் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. நகரில் மக்கள் நடமாட்டம் உள்ளதா என்பது, ஹெலி கேம் மூலம் கண்காணிக்கப்பட்டது. வெளியூர் வாகனங்கள் நகரினுள் அனுமதிக்கப்படாமல், பைபாஸ் சாலை வழியாக திருப்பி அனுப்பப்பட்டன. கோவிலுக்கு வந்த பக்தர்களை, மாவட்ட எல்லையிலேயே கண்டறிந்து, திருப்பி அனுப்பப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, உயர் நீதிமன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar