பதிவு செய்த நாள்
28
மே
2012
03:05
16. சிவலிங்க பூஜையின் பயன்
சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நமஸ்கரித்து ஸ்வாமி! சிவபெருமானுடைய கிரியாயோகத்தை ஸநத்குமார முனிவர் வியாசபகவானுக்கு உபதேசித்த வகையே, தாங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும். அவற்றைக் கேட்க, நாங்கள் பேராவல் கொண்டவர்களாக இருக்கிறோம் என்றார்கள். சூத புராணிகர் கூறலானார். மாதவர்களே, சிவபெருமானின் கிரியாயோகத்தை வியாச முனிவருக்கு ஸநத்குமார முனிவர் கூறியவகையிலேயே சுருக்கமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள். ஒரு காலத்தில் வியாசர் ஸநத்குமாரரை அடைந்து அவரது திருவடிகளை வணங்கிப் பணிந்து சுவாமி, சிவபெருமானின் கிரியாயோகத்தையும் அதனால் வரும் பயனையும் வேதாந்யாசத்தையும் மானசீக பூஜையையும் பாஹ்ம பூஜையையும் இவ்வகையானது என்று திருவாய் மலர்ந்தருள வேண்டும் அன்றியும் பிரமசரிய மனத்தாலும் புண்ணியகரமானவாக்கு காயங்களாலும் கிரியாயோகத்தைப் பெரியோர்கள் அனுஷ்டித்த முறைப்படி அனுஷ்டிப்பவன் எவ்வகைப் பயனை அடைந்து எப்படிச் சிவபதமடைவான்? சிவரூபமாகிய லிங்கத்தை விதிப்படி அபிஷேகித்தவனும் அர்ச்சனை செய்தவனும் பெறும் பயன்யாது? மலர்களில் எவை சிவபூஜைக்குரியவை? எம்மலர்கள் சிவபூஜைக்கு உரியனவல்ல? கனிகளில் எவை சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்யத் தக்கவை? எவை தகாதவை வாத்தியங்களில் சிவசன்னிதியில் வாசிக்கத் தக்கவை யாவை எவை நீக்கத்தக்கவை நெய், பால், முதலியவற்றால் அபிஷேகம் செய்தவன் அடையும் பயன் என்ன? சந்தனம் கஸ்தூரி முதலியவற்றால் சிவபிரானுக்கு யலேபனை செய்தவன் பெறும் பயன் யாது? மற்றைய சிவபணிவிடைகளின் பயன்கள் யாவன? இவற்றை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்? என்று கேட்க ஸநத்குமாரர் சொல்லுகிறார்.
சத்தியவதி மைந்தனே! வியாச முனிவனே! நீ என்னைக் கேட்ட சிவபூஜா விஷயங்களையெல்லாம் தெளிவாகச் சொல்லுகிறேன் முழுமனதுடன் கேள் பரமாத்மாவாகிய பரமசிவனிடத்தில் சித்தத்தைச் செலுத்தி நிற்பதே ஞானயோகம். பரமசிவத்தின் பாஹ்யமாகிய அர்ச்சா ரூபத்தில் எப்பொழுதும் பூஜை முதலிய உபசாரங்களைச் செய்வதே கிரியாயோகம் இதுவே சிவபெருமானைத் தியானிப்பதற்கு முக்கிய சாதனம், இஷ்டகாமியங்களைக் கருதி, சிவாலய நிர்மாணம் முதலிய சிவபுண்ணியங்களைச் செய்தவர்கள் அடையும் பயன்களையும் சொல்லுகிறேன்.
சிவபெருமானுக்குக் கருங்கல்லாலோ அல்லது மரத்தாலோ அல்லது பொன் வெள்ளி முதலிய உலோகங்களாலோ அல்லது மண்ணாலோ திருக்கோயில் கட்டுவித்தவன் நாள்தோறும் சிவயோகத்தால் அந்தச் சர்வேஸ்வரனைப் பூஜித்தவன் அடையும் பயனை அடைந்து தன் குலத்தில் இறந்த பிதுர்க்களை நூறு தலைமுறை வரையிலும் என்றும் ஆனந்தமயமான சிவலோகத்தை அடையச் செய்வான். சிவாலயம் ஒன்றைப் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ நிர்மாணஞ் செய்ய வேண்டும் என்று ஒருவன்தன் மனத்தால் நினைத்தவுடனே, தான் ஏழு ஜனங்களிற் செய்த பாவங்களிலிருந்தும் புனிதமடைவான் சர்வகர்த்தாவான சிவபெருமானுக்கு ஆலயம் கட்டுவித்து அதில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்வித்தவன் சகல லவுகீகபோகங்களையும் அனுபவிப்பான். புண்ணிய ஸ்தலங்களில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்வித்தவன் சகல லோகங்களிலும் சிறந்த முக்தியை அடைவான். கருங்கல்லால் சிவாலயம் செய்வித்தவன் அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராயிரம் ஆண்டுகள் சிவலோகத்தில் வசிப்பவன். சிவபெருமானது அர்ச்சாரூபங்களாகிய லிங்க மூர்த்தத்தைச் செய்வித்தவன் ஒருகாலத்தும் அழிவில்லாத சிவலோகத்தை அடைந்து அறுபதினாயிரம் ஆண்டுகள் பலவித சுகங்களை அனுபவித்து, அப்படியே ஒவ்வொரு பதவியிலும் அறுபதினாயிரம் ஆண்டுகள் வசித்திருப்பான். புண்ணியகரமான சிவலிங்க பிரதிஷ்டை மட்டுமே செய்தால் இறந்த பின்னரும் இறவாதவனாகவே இருந்து, தன் வம்சத்தில் இறந்தவர்களையும் இனி பிறப்பவர்களையும் கற்பாந்தகாலம் வரையில் புனிதர்களாகச் செய்வான். சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று மனத்தில் நினைத்தவன் தன் பிதுர்க்களை எட்டுத் தலைமுறை வரையிலும் தன்னோடு சிவசாயுஜ்யம் பெறச் செய்வான். சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவனைக் கண்டு, தானும் அவ்வாறு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தால் நற்கதியையடைலாம் என்று நினைத்தவன் அப்போதே பரமபுண்ணியனாகித் தான் முன்பு செய்த பாவங்களையெல்லாம் ஒழித்து முக்திக்கு அருகனாவான்.
முனிவர்களே! பூர்வத்தில் பிரமதேவன் இயமனுக்குப் பாசத்தையும் தண்டத்தையும் அதிகாரத்தையும் கிங்கரர்களோடு கொடுத்து நீ உலகத்தில் சஞ்சரித்து தர்ம அதர்மங்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு சொல்லத் துவங்கினார். இயமனே! பிற தேவர்களைப் பணியாமல் தேவதேவனாகிய சிவபக்தனையே பரம்பொருள் என்று உணர்ந்து அப்பெருமானையே சரணாகதி என்று சொல்லிக் கொண்டிருக்கும் சிவ பக்தர்களையும் உலகத்தில் மஹேஸ்வரனை மனதில் தியானித்துக் கொண்டிருப்பவர்களையும் நித்திரையிலும் நடக்கையிலும் இருக்கையிலும் இரவும் பகலும் யாது செய்கையிலும் சிவத்யானம் அகலாது சிவா மஹா தேவா! சந்திரசேகரா! நீலகண்டா! சங்கரமஹேஸ்வரா! ஜகத்பதீ! சச்சிதானந்த ஸ்வரூபா! என்று சங்கராமஹேஸ்வரா! ஜகத்பதீ! சச்சிதானந்த ஸ்வரூபா! என்று பஜனை செய்பவர்களையும், சிவபெருமானை நித்திய நைமித்திக பூஜைகளால் மகிழச் செய்பவர்களையும் சிவபெருமானைப் புஷ்பம், தூபம், தீபம் முதலியவற்றால் ஆராதிப்பவர்களையும் சிவாலயத்தை ஜீர்னோதாரணம் செய்பவர்களையும் சிவாலயத்தைக் காலையிலும் மாலையிலும் திருவலகிட்டுச் சுத்தஞ் செய்பவர்களையும் அவர்கள் முன்னோரது மூன்று தலைமுறையினரையும் சிவாலயத்தைக் கட்டுவிப்போர்களையும், அவர்கள் வமிசத்தில் பிறக்கும் நூறு தலைமுறையினரையும் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்வித்தவர்களையும் அவர்கள் வம்சத்தில் பிறக்கும் ஆயுத புருஷர்களையும் நீ நெருங்கக் கூடாது. அவர்கள் சிவகணங்களுக்குச் சமமானவர். அவர்களை நீ தண்டிக்க முடியாது என்று பிரமதேவன் கூற, இயமன் அதற்கு இணங்கித் தனது சேவகர்களாகிய கிங்கரர்களுக்கு நாள்தோறும் இந்த விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான்.
சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து முறைப்படிப் பூஜை செய்தவன் தன் மனத்தில் விரும்பிய கோரிக்கைகளையெல்லாம் சந்தேகமில்லாமல் சிந்திக்கப் பெறுவான். தேவர்களால் அர்ச்சிப்பதற்கு உரிய அர்ச்சாரூபமான சிவலிங்கத்தை தேன், பால், நெய், தயிர் முதலியவற்றால் அபிஷேகஞ் செய்தவன் ஆயிரம் பசுக்களை அருமையாளருக்குத் தானமளித்தவன் பெறும் பயன்களை வேதியருக்குப் பசு நெய்யைத் தானஞ் செய்தவன் பெறும் பயனைப் பெறுவான். ஆடகப் பிரமாணமான நெய்யினால் அபிஷேகித்தவன் தான் செய்த பாவங்களிலிருந்து விலகுவான், பூரணை அமாவாசைகளில் அர்ச்சாரூபமான சிவலிங்கத்தை பிரயத்தன பூர்வமாகப் பூஜித்தவன் சர்வபாபங்களிலிருந்தும் நீக்கப்படுவான். ஞானத்தாலாவது அஞ்ஞானத்தாலாவது ஒருவன் செய்த பாபங்கள் சிவபெருமானுக்குப் பிரதோஷங்காலத்தில் நெய்யபிஷேகம் செய்த அந்த க்ஷணமே அவனை விட்டு அகன்று போகும். தேவர்களால் சிறந்தவன் சிவபெருமான், அவ்யங்களில் சிறந்தது நெய். இந்தச் சர்வேஸ்வரகிருத சம்பந்தம் பாபங்களை வேரோடு அறுக்க வல்லது சிவபெருமானுக்குப் பசுவின் பாலால் சிறப்பாக அபிஷேகஞ் செய்தவன் இந்தவுலக்தை விட்டு நீங்கும் பொழுது, பாலே ஜலமாகப் பெருக்கெடுக்கும் நதியையும் பால் சம்பந்தமான சேற்றையுமுடைய வழியாகச் சிவலோகத்தை அடைந்து மகிழ்ச்சியும் சுகமும் ஸ்வஸ்தசித்தமும் ரோகமின்மையும் நல்ல உருவமும் பெற்று வாழ்ந்திருப்பான், தயிர் முதலிய பொருள்கள் பாலிலிருந்து உண்டாவதுபோல பெரும் போகங்கள் எல்லாம் சிவார்ப்பணமாக அபிஷேகித்த பாலினாலேயே உண்டாகும் தேகப் புஷ்டியை உண்டு பண்ணும் பாலினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தவன் திவ்யமான ஞானவிருத்தியை அடைவான். சிவபெருமான் பால் அபிஷேகத்தால் களிப்படைந்து அவ்வாறு அபிஷேகஞ் செய்தவனுக்கு நவக்கிரகங்களின் அனுகூலமும் புஷ்டியும் யாவரிடத்திலும் கிருபையும் உண்டாகும். நெய்யும் பாலும் சிவபெருமானுக்கு அபிஷேகித்தவுடன் சிவபெருமான் அருள் புரிவார் சிவபெருமானை எப்பொழுதும் நெய்யினாலும் பாலினாலும் அபிஷேகித்தவனுக்கு உலகில் யாவும் நன்மையாகவே அமையும் இதற்கு உதாரணமாக ஒரு பூர்வ சரிதத்தைச் சொல்லுகிறேன். பூர்வத்தில், பூஷ்ணன் என்பவனும் அவனது அதிரூபலாவண்யமான சுமதி என்னும் யவுவனமுடைய மனைவியும் சுவர்க்கலோகத்தை அடைந்து அங்கு பலவிதமாகக் கூடிமகிழ்ந்து சுகம் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கவுதமி என்பவள் அவர்களைக்கண்டு வியந்து, சுமதியைப்பார்த்து சுமதி! இந்தச் சொர்க்கலோகத்தில் இந்திராதி தேவர்கள் எண்ணற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் கூட உனக்குள்ள காந்தியும் உன்னைப்போன்ற தேகமணமும் அதிக அழகும் அருவிலைப் பணிகளும் பட்டாடைகளும் இல்லை. இவை எல்லாவற்றையும் விட இந்திராதி தேவர்களையும் விட நீங்கள் மேம்பட்டிருக்கிறீர்கள்! உங்கள் மன ஒற்றுமையும் அவர்களுக்கு இல்லை இத்தகைய சிறப்புகளையெல்லாம் ஒருங்கேயடைந்த நீ உன் கணவனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாயே? இது உனக்குத் தவத்தால் கை கூடியதான பலத்தால் கிடைத்ததா? யாகாதி கிருத்தியங்களால் சம்பவித்ததா? அதை நீ எனக்கு முழுமையாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டாள்.
அதற்கு சுமதி சொன்னாள். என் கணவரின் மூதாதையர் யாவரும், குல பூர்வமாகச் சிவபெருமானை ஆராதித்து வந்து கடைசியில் என் கணவர் அந்த சாம்பவமூர்த்தியைக் குறித்து அநேகம் யாகங்களைச் செய்ய அந்த யாகத்தால் யாகபதியாகிய சங்கர பகவான் திருவுளங்களித்து, அனுக்கிரகஞ் செய்ததால், சுவர்க்க பிராப்தி உண்டாயிற்று. அந்த யாகத்தில் தீர்த்தோக ஸ்நானமும் கிருதஸ்நானமும் கணக்கின்றிச் செய்ததால் எங்கள் இருவருக்கும் திவ்யமான தேககாந்தியும் மனவொற்றுமையும் மிருது தன்மையும் சுகமும் யாவருக்கும் விருப்பமும் உண்டாயின. இவை யாவும் நெய்யினால் அபிஷேகம் செய்த பயனாகவே கிடைத்தன. அந்த யாகத்தில் மனோபீஷ்டமான விலையுயர்ந்த வஸ்திரங்களையும் நவரத்தின பூஷணங்களையும் சந்தனம் முதலிய பரிமள வஸ்துக்களையும் அநேக விதமான மலர் மாலைகளையும் சிவார்ப்பணமாக்கினோம். ஆகையால் சிவார்ப்பணம் செய்தவை யாவும் இப்பொழுது எங்களுக்குக் கிடைத்துள்ளன. சிவபெருமானை நானாவித நைவேத்தியங்களால் திருப்தி செய்வித்தோம். ஆகவே நாங்கள் இங்கு எப்போதும் திருப்தியாகவே இருக்கிறோம். சுவர்க்க காமியாகிய என் கணவர் சிவார்ச்சனை செய்யும்போது, நானும் அவருடன் இருந்து அர்ச்சனை செய்ததால் எனக்கு அற்புதமான புஷ்டி உண்டாகியிருக்கிறது. மனோ வாக்கு காயங்களால் எந்தெந்த கோரிக்கையோடு ஒருவன் சிவபெருமானது அர்ச்சாரூபமான இலிங்கத்தைப் பூஜித்தால், அவன் அவ்வக் கோரிக்கையை விரும்பியவாறே அடைவான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று கவுதமியைநோக்கி சுமதி சொன்னாள். ஆகையால் ஒருவன் சிவபெருமானைப் பக்தி பூர்வமாக அர்ச்சனை செய்பவனாயின் அவன் தேவர்களுக்கும் துர்லபமான போகபோக்கியங்களை அனுபவிப்பான். சந்தனம், குங்குமப்பூ, அகரு கர்ப்பூரம் முதலிய சுகந்தத் திரவியங்களால் சிவலிங்கத்தை உபலேபனம் (பூசுதம்) செய்தவன், அப்போதே சுபகரமான வரங்களைப் பெறுவான். சிவபெருமானுக்குக் கருஞ்சந்தனமும் கருந்தூபமும் விநியோகித்தவன் யோகியாவான் நல்ல சுகந்தமுடைய வேத உக்தமான சாம்பிராணி முதலியவற்றை நெய் கூட்டித் தூபங் கொடுத்தவன் துஷ்டி புஷ்டிகள் உண்டாக்கப் பெறுவான்.
மனத்திற்கு ரம்மியமில்லாத மலர்மாலைகளைச் சிவபெருமானுக்குச் சாற்றக்கூடாது. மனோஹரமான மலர்களால் தொடுத்த மாலைகளையே தேவதேவனுக்குச் சாற்றலாம். சிவபெருமானுக்கு விருப்பத்தைத் தரத்தக்கமலர்கள் மிருதுவானதாகவும் மனமுடையதாகவும் இருக்க வேண்டும். தாமரை மலரும் உலர்ந்திருப்பினும் வில்வபத்திரமும் நீலோத்பலமும் ஜாதி புஷ்பமும் மல்லிகையும், பாடலமும், கரவீரமும், ஆத்தியும் கொன்றையும் கோங்கும் சதபத்திரமும், துளசியும், அகத்திப்பூவும் முல்லையும் இருவாட்சியும் பலாசமும் உகந்தவை, இவ்வகை மலர்களிலேயே சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும். இவையேயன்றி மனத்துக்கும் பார்வைக்கும் ரம்மியமான மலர்கள் சிவராதனைக்குத் தக்கவையாகும். சிவந்த மலர்களும் கறுத்த மலர்களும் சிவலிங்கரூபத்தில் பூஷணார்த்தமாகச் சமர்ப்பிக்க வேண்டும், சிவபெருமானைச் சிவந்த மலர்களால் தினந்தோறும் பூஜிப்பவன் சித்தர். வித்தியாதரர் அப்சரஸ் கணங்கள் முதலானவருடன் பலகாலம் வாழ்ந்து மகிழ்ந்திருப்பான். முள்ளையுடையதும் உக்கிரகந்தமுடையதுமான ஊமத்தை மலர்களால் சிவலிங்கத்தைப் பூஜித்தவன். சிவகணங்களுக்குப் ப்ரீதிவானவான் மலர்கள் கிடைக்காவிட்டால் அறுகம்புல், ப்ருங்க ராஜபத்திரம் (கரசராங்கண்ணி) சமீபத்திரம், தமாலம், முதலியவற்றால் பூஜிக்கலாம். இவ்வாறு தினமும் இலிங்கமூர்த்தத்தில் பூஜிப்பவன். அப்சரஸ்கணங்களில் பூஜிக்கப்பட்டு சிவலோகவாசியாவான். அவனுக்கு ஒரு காலத்தில் உலகத்திலே பிறவியுண்டாயினும் பேரரசனாய் பெருஞ்செல்வத்துடன் ஏகசக்கராதிபதியாய் கிரமமாகமுக்தியடைவான். தாழை மலர்களால் சிவபெருமானை அர்ச்சிக்கக் கூடாது. மருதோன்றி மலர்களால் பூஜித்தவன் மிலேச்சனாவான். சுகந்தமான மலர்களாலும் சுகந்த கர்ப்பூர சந்தனங்களாலும் பரிசுத்தமான ஜலத்தினாலும் சர்வேஸ்வரனாகிய சிவபெருமானை அபிஷேகம் செய்து பட்டினாலாவது பருத்தியினாலாவது நெய்யப்பட்ட ஆடை தரித்து மனோகரமான ருசியுள்ள விரும்பத்தக்க பக்ஷியங்களையும் சிறந்தவையான பலவகைப் பழங்களையும் சுவர்ண பாத்திரத்தில் வைத்து நிவேதனம் செய்து, சுவர்ணம், நவரத்தினம் முதலியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு மகாயோகியும் சதாசாரசம்பன்னுமான பிராமணனைச் சிவபெருமானாகவே பாவித்து ஸர்வாய வ்யக்த ரூபாய நாமநாதஸ்மை என்று சொல்லிக் கொண்டே சிவார்ப்பணம் செய்த பொருள்களில் சிலவற்றை அவ்வேதியனுக்குக் கொடுக்க வேண்டும். சங்கிராந்தி, லிஷுவத் புண்ணியகாலம், வ்யதிபாதம் தக்ஷிணயன, உத்தராயணங்கள், கிரஹணகாலம், பூரணை, அமாவாசை, சதுர்த்தசி அஷ்டமி முதலிய புண்ணிய காலங்களில் செய்யப்படும் பூஜை நைமித்திக பூஜை ஆகவே அந்தக் காலங்களில் சிவார்ச்சனை செய்தவர்கள் நித்திய பூஜை செய்வோரைவிட; ஆயிரம் பங்கு அதிகப்பயனை அடைவார்கள் இது சிவபெருமானாலேயே கூறப்பட்டது இவற்றை உள்ளது உள்ளபடி உமக்குச் சொன்னேன் என்று சநத்குமார முனிவர் வியாச மகரிஷிக்குச் சொன்னார். இவ்வாறு புராணிகர் நைமிசாரணிய வாசிகளுக்குக் கூறினார்.
17. யாகம், ஞானம், தியானம், தானம்
சவுனகாதி முனிவர்களே! வியாசபகவான் ஸநத்குமார முனிவரைப்பணிந்து மஹரிஷியே சிவபெருமானுக்குப் பரமபக்தராக இருந்து, வேதாகமங்களில் விதித்த முறைப்படி பக்தி செய்யும் சிவபக்தர்களைப் பூஜை செய்தவன், என்ன பயனை அடைவான் என்பதைச் சங்கரகமாக எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்க. ஸநத்குமாரமுனிவர் சொல்லுகிறார். வியாசமுனிவனே! சிவபெருமானிடத்திலேயே எப்போதும் தமது மன, வாக்கு, காயங்களை ஒப்புவித்த சிவபக்தர்களை; அச்சிவபெருமானாகவே பாவித்து பூஜித்தவன் எண்ணற்ற போகங்களை அனுபவித்து ஆயுள் முடிவில் சிவகடாஷத்தால் கைலாயப் பதவியை அடைவான். ஆகையால், சிறந்த போகங்களை அனுபவிக்க வேண்டும் என்று கருதுவோன் சிவபக்தர்களுக்குத் தனது சக்திக்கு இயன்றவரை வஞ்சனையில்லாமல் வஸ்திரம், ஆபரணம் அன்னம் முதலியவற்றைத் தானமாகக் கொடுத்துப் பக்தியோடு பூஜிக்கவேண்டும் சிவபக்தனுக்கு வஞ்சனையின்றித் தன்னால் இயன்றவரை விதிப்படிப் பணிவிடை செய்தவன் பிரபுவாயினும் ஏழையாயினும், அவன் அடையும் பயனைச் சொல்லுகிறேன். அவன் உயிர் நீங்கியவுடன் சூரியகிரணங்களைப் போன்ற ஒளியையுடைய விமானத்தில் ஏறித் தன் முன்னோரில் ஏழுதலை முறை வரையிலும் அதோகதியில் இருப்பவரையும் உடன் கொண்டு சிவமந்திரத்தையடைந்து மனோஹரமான போகங்களை அனுபவித்து தேவமான கணிதமான அநேகமாயிரம் ஆண்டுகள் பலரால் சேவிக்கப்பட்டுப் பின்னர் விஷ்ணுப்பதவியை அடைந்து அங்குள்ள போகங்களை அனுபவித்து மேற்கூறிய கால அளவு அங்குள்ளவரால் சேவிக்கப்பட்டுப் பிறகு பிரமலோகத்தையடைந்து அங்குள்ள விமலமான ஸ்திரீ முதலிய போகங்களை மேற் குறித்த கால அளவு வரை அனுபவித்து முறையே கந்தர்வலோகம் இந்திரலோகம் யஷலோகம் ஆகியவற்றையடைந்து ஆங்காங்குள்ள அளவற்ற போகங்களை அனுபவித்து மீண்டும் பூவுலகில் சிரேஷ்டமான வேதிய குலத்தில் தான் முன்பு அடைந்த விசேஷஞான குணமுடையவனாய்த் தோன்றி ஜன்மாந்தர புண்ணியவசத்தால் சற்குருவையுபாசித்து அக்குருவின் அருளால் சம்சாரபந்தத்திலிருந்து நீங்கி, சிவசாயுஜ்யத்தை அடைவான்.
வியாசரே! யாகம், கர்மயாகம், ஞானயாகம் என்ற இருவகைப்படும். அவற்றில் கர்மயாகமானது பலவிதமான தானம், பூஜை அக்கினி காரியம் முதலியவையாகும். தியானம், என்பது சர்வேஸ்வரனையடைய வேண்டும் என்னும் கொள்கையோடும் சாந்திராயணா சரணமும் சுவாத்தியாயமும் ஜெபமும் என மூவகையாகும். இதில் ஜெபம் என்பது எப்போதும் அடிக்கடிச் சிவ சிந்தனையுடன் இருப்பதால் அது ஞானயாகம் எனப்பெயர் வியாக்கியானம், சிரவணம், சிந்தித்தில் என்று ஐவகையாகும், இந்த ஐந்தில் முதலாகிய அத்தியாயனத்தைக் காட்டிலும் அத்தியயனமும், அத்தியயனத்தை விட வியாக்கியானமும், வியாக்கியானத்தை விட சிரவணமும், சிரவணத்தைவிட சிந்தித்தலும் ஒன்றுக் கொன்று அதிகமாகச் சொல்லப்பட்டிருப்பதால் ஞானயாகத்தின் ஐவகையில் சிந்தித்தலே சிவபெருமான் திருவருளால் முக்தியைக் கொடுக்கத் தக்கது. ஞானமின்றித் தியானம் கைகூடாது யோக மார்க்கத்தாலேயே, ஞானம் பெறப்படும். ஆகையால் ஞானமும் தியானமும் கொண்டவன் சம்சாரமின்மையும் விகாரமற்ற மனமும் அநித்தியப் பொருள்களில் அவாவின்மையும் உடையது, அத்தகைய ஞானமும் எப்பொழுதும் யோகசாதனமுடைய பரிபூரண விரக்தனுக்கே உண்டாகும். அந்த ஞானமே முக்தி மார்க்கத்தைக் கொடுக்க வல்லது ஒருவர் சொல்வதைக் கேட்டு உண்டான ஞானமானது விகல்பபுத்தியை உண்டாக்கி இராகத் துவேஷாதிகளைக் கொண்டு சஞ்சலத்தை உண்டாக்கும். ஆகவே அது மோக்ஷத்தைக் கொடுக்கமாட்டாது யோக மார்க்கத்தால் சுத்தமாகவும் இராகத் துவேஷாதிகளின்றி விளக்கும் ஞானத்தைப் பண்டிதனானவன் சிறிது சிறிதாக அப்பியசிக்க வேண்டும். கேள்வியால் வரும் ஞானமானது ஆரம்பத்திலும் சிரவணத்திலும் அப்பியாசத்தாலும் நிஷ்டையாலும் இராகத் துவேஷாதிகளால் பலவகையாகிப் பரிசுத்தமான ஞானம் உண்டாவதற்கு வழியாகும். பாத்திர சுத்தஞ் செய்ய வேண்டியவர் முதலில் அழுக்கு ஜலத்தாலும் பிறகு சுத்த ஜலத்தாலும் கழுவும் போது முதலில் கழுவிய நீரால் சிறிது அழுக்குப் போவது போலச் சிறிது பயன் தரும் என்று கொள்ள வேண்டும். புழுதியால் மூடப்பட்ட ஆகாயமானது முறையே சிறிது சிறிதாகத் தோன்றி இறுதியில் பரிசுத்த ஞானத்தை உண்டாக்கும். அலைகளால் கலக்கப்பட்ட சமுத்திரம், அசைவற்று நிற்பது போல விஷயவாதனைகளால் அலையும் மனம் சலனமற்று இருப்பதே ஞானம் எனப்படும். மற்றவை அஞ்ஞானம் இராகத் துவேஷாதிகள் இல்லாததும் பாவனமயமுமாகிய சிரேஷ்ட ஞானமே முக்தியை அளிக்கக் கூடியது. அஞ்ஞானமாகிய பாசத்தால் கட்டப்பட்டுள்ள புருஷன் அமுக்தன் எனப்படுவான். ஆயினும் ஞானத்தால் அஞ்ஞானத்தை அகற்றிய பிறகு அந்தப் புருஷனே முக்தன் என வழங்கப்படுவான். சமுசாரத்திற்குக் காரணமாக இருப்பது அஞ்ஞானம். அஞ்ஞானியே சம்சாரச் சேற்றில் அழுந்திக் கிடப்பான். அகண்ட தேஜஸால் தமஸ் நசிப்பது போல ஞானத்தால் அஞ்ஞானம் ஒழியும்; அஞ்ஞானம் உள்ள வரையில் இராகத்துவேஷாதிகளால் தர்மா தர்மங்கள் உண்டாகின்றன. தர்மா தர்மங்கள் உள்ளவரையில் அவனுக்கு சரீரம் உண்டாகும் சரீரம் உள்ளவரையில் கிலேசங்களால் பாதிக்கப்படுவான் கிலேசத்தை ஒழிப்பதற்காக மீண்டும் பிறவியை அடையாத உபாயத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.
அஃது எவ்வாறு எனில் தத்துவ ஞானம் அடைந்தாலன்றி அஞ்ஞானம் நசிக்காது. அஞ்ஞான நாசமுண்டான அந்த க்ஷணத்திலேயே இராகத்துவேஷாதிகள் உண்டாகாது அவை ஒழிந்தவுடனே புண்ணிய பாப பரிக்ஷயத்தால் பிறவி இல்லையாகும். பிறவியில்லாத பொழுது கிலேசம் முதலானவை உண்டாவதற்கு இடமில்லை. கிலேசங்கள் அற்ற இடத்தில் முக்தன் என்று சொல்லப்படுவான். ஆகையால் மனிதருக்குப் பலவிதத் துக்கங்களும் அஞ்ஞானத்தினாலேயே உண்டாகின்றன, அந்த அஞ்ஞானத்தை ஞானத்தாலன்றி கர்மாதிகளால் நசிக்க செய்யமுடியாது. ஞானத்தாலன்றி மற்றொன்றால் புண்ணிய பாப பரிக்ஷயமுண்டாகாது. ஆகையால் மோக்ஷத்தையடைய வேண்டியவன் ஞானத்தையே அடைய வேண்டும். வெண்கலம் புளியினால் சுத்தமாவதைப் போல ஒருவனது மனம் அவனது ஞானத்தால் புனிதமாகும். ஞானம் என்ற அமிர்த ரசத்தை ஒருமுறை அருந்தியவன். எல்லாக் காரியங்களையும் விடுத்து மீண்டும் அதையே அருந்தவே எப்போதும் விரும்புவான் அதன் தன்மை உணராது மற்ற விஷயங்களிலேயே மனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பான். ஞானாம்ருதத்தால் திருப்தியடைந்த கிருதகிருத்தியனான சிவயோகி உலகத்தில் செய்ய வேண்டிய காரியம் ஒன்றுமிராது. அப்படிச் செய்யத் தக்கது ஒன்று இருக்குமாயின் அவன் உண்மையான தத்துவஞானியல்லன் இதலோக பரலோகங்களில் அவன் செய்தற்குரிய காரியம் சிறிதுமில்லை. ஆகவே அவன் இவ்வுலகத்திலேயே முக்ததசையை அடைந்து பரிபூரணனாக விளங்குவான் ஞானத்தை விடப் பரிசுத்தமானதும் பரிசுத்தமாக்குவதும் வேறொன்றில்லை. அதைப் படிப்படியாக அப்பியசித்த பக்ஷத்தில் ஆத்ம சொரூபம் நன்றாக விளங்கும். விரதாசரணங்கள் தானங்கள் தவங்கள் நன்றாக விளங்கும். யாகங்கள் ஸந்நியாசம் முதலிய ஆசிரமதர்மங்கள் தீர்த்த யாத்திரைகள் முதலிய யாவும் சுவர்க்க பதவியை மட்டுமே உண்டு பண்ணவல்லவையேயன்றி பிறவியை ஒழிக்க வல்லவையன்று சாந்தியை அளிக்கும் சிறந்த ஞானம் ஒன்றே புனர்ஜன்ம நாசஞ்செய்ய வல்லதாகும். எப்பொழுதும் இந்திரிய நிக்கிரகமும் ஒரே மனமும் மாமுனிவர்களால் கூறப்பட்ட புராண தர்ம சிரவணமும் படனமும் உண்டாயிருக்கும் பக்ஷத்தில் பாபக்ஷய முண்டாகி அவ்வகை ஞானம் தோன்றி அதனால் முக்தி கைகூடும். யாகஞ்செய்தவன் தேவபோகங்களையடைவான். தவஞ்செய்தவன் பிரமபதவியை அடைவான் தானஞ் செய்தவன் பலவிதபோகங்களை அடைவான். ஞானப்பியாசம் செய்தவன் மோக்ஷத்தை அடைவான். அஞ்ஞானியோ புண்ணிய பாவங்களால் துன்பம் அடைவான் ஞானியோ தனது ஞானமாகிய கத்தியால் தன்னைப் பிறவிக்கு இழுக்கும் புண்ணிய பாவங்கள் ஆகிய சூத்திரத்தை அறுத்து பரம்பொருளாகிய சிவத்தை அடைவான் ஞானிகளுக்குச் சுபா சுப கர்மங்களால் பந்தம் உண்டானால் வினைக்கயிறால் கட்டப்பட்ட அவர்களுக்கு எவ்வாறு ரமுத்தி கைகூடும் என்று கேட்பீராகில் சொல்கிறேன் கேளும்.
தேகம் உள்ள வரையில் சுபாசுபகர்மங்களை இகலோகத்திலாவது பரலோகத்திலாவது அனுபவித்தே தீரவேண்டும். தர்மாதர்ம பரிக்ஷயத்தால் முக்தி கைகூடும் என்றதால், தர்மத்தைச் செய்யாமலும் அதர்மத்தைச் செய்யாமலும் இருப்பவன், முக்தியைப் பெறுவானோ என்றால் பெறமாட்டான் எவ்வாறு எனில் தர்மஞ் செய்யாதபோது அதர்மம் சித்தித்து நிச்சலத்துவம் உண்டாகாது. அதர்மம் செய்யாதபோது தர்மமும் கைகூடாது, ஆதலால் தர்மாதர்மங்களைப்பயன் விரும்பாது செய்து, அதனால் விளையும் புண்ணியபாபங்களை ஞானமாகிய அசியினால் நீக்கி, முக்தியை அடையவேண்டும். வியாச முனிவரே! அக்கினியானது உலர்ந்த விறகைத் தகிப்பதுபோல, ஞானம் என்னும் தீ, சுபாசுபங்களாலுண்டான தர்மாதர்மங்களாகிய விறகைத் தகித்து விடுகிறது. மணிமந்திர அவுதங்களையுடையவன் பாம்போடு பழகிக் கொண்டிருந்தாலும் விஷ உபாதையை அடையாததைப்போல் ஞானமுடையவன் இந்திரியங்களாகிய பாம்புகளுடன் கூடியிருப்பினும் அவற்றால் ஒரு துன்பமும் அடையமாட்டான். மந்திர அவுஷதிகளையுடையவன் விஷபானஞ் செய்தாலும் துன்பமடைய மாட்டான் அதுபோல ஞானமுடையவனாய் பாபங்கள் துன்புறுத்த மாட்டா. ஞானத்தைப் போலவே தியானமும் விளங்கும் அவையிரண்டும் சமமானவை. ஞானதியானங்களையுடைய முனிவன் சவுக்கியம் அடைந்து, ஆயுளின் முடிவில் மோக்ஷத்தை அடைவான். தியானத்தால் அகண்ட ஐஸ்வரியமும் ஐசுவரியத்தால் உத்தமமான சுகமும் உண்டாகும். பிறகு ஞானத்தால் அந்தச் சுகத்தை வெறுத்துப் பிறவியை ஒழித்து முக்தியை அடைவான் உத்கீதாதி பாசனைகள், யாகதானாதி அனுஷ்டானங்கள் தியான சமாதி முதலியவற்றால் உண்டாகத் தக்கஞானமானது நித்தமும் சுத்தமும் சூக்ஷ்மமும் பிரசன்னமும் தோஷகிதமும் சிரேஷ்டமும் முக்திஹேது மானதாகும். தியானயாகமே பிறயாகங்களைக் காட்டிலும் சிறந்ததென்று கொள்ள வேண்டும். அந்தர் யோகமான இந்தத் தியான யாகத்தால் எப்பொழுதும் சிவபெருமானைப் பூஜை செய்பவன் அடைதற்கரிய உயர்கதியை அடைவான். புலன்களை அடக்கி மனத்தைச் சிவபெருமானிடத்தில் இருத்தி, பத்துத்திசைகளிலும் நடுவிலும் இன்னும் பிறவிடங்களிலும் அச்சிவபிரானே இருக்கிறார் என்று தியானிப்பவனைப் பரமயோகி என்று உணரவேண்டும். கர்மயாகத்தைவிடத் தியானயாகம் நூறு பங்கு உயர்ந்தது, ஞானத்தியான சொரூபமும் சூக்ஷ்மமுமான சிவயோகமே சிறந்த மஹாயாகமாகும்.
சிவபூஜை செய்தவன், அகண்டமான பிரபல ராஜபோகமும் அக்கினி காரியஞ் செய்தவன் சம்பத்தும், ஜபம் செய்தவன் பாபநிவாரணமும், ஞானத்தியானங்களைச் செய்தவன் முக்தியும் பெறுவான். பாபத்தை ஒழித்தவனுக்கே ஞானத்தியானங்களில் மனஞ்செல்லும் ஒரு கோடி வருஷப் பியத்தனத்தால் யோக சித்தியும் அரைக்கோடி வருஷப் பிரயத்தனத்தால் அக்கினிகாரியச் சித்தியும், காற்கோடி வருஷ முயற்சியால் புண்ணியஸ்தல வாஸமும் புண்ணிய தீர்த்த ஸ்நானமும் கைகூடும், அக்கினி காரியஞ் செய்பவனுக்குப் பகவான் அக்கினியிலும் பண்டிதர்களுக்கு அவர்களது இதயத்திலும் அஞ்ஞானிகளுக்கு விக்கிரஹங்களிலும், ஞானவான்களுக்கு எல்லாப் பொருள்களிலும் விளங்குவதாகக் கொள்ளும் மகாயோகிகள் தங்கள் ஆன்மாவே பரமசிவம் என்று கொள்வார்களே தவிர விக்கிரகங்களில் தியானஞ் செய்யமாட்டார்கள். அந்த விக்கிரகங்களும் யோகிகளின் மனத்தால் தரிசித்தவாறே நிர்மணஞ் செய்யப்பட்டுள்ள சாந்தஸ்வரூபியாகிய சிவபெருமானைச் சர்வவியாபகன் என்று உணர்ந்து ஸ்மரணை செய்பவன் எவனோ அவன் இதயத்திலேயே சங்கரபகவானும் நீக்கமற எழுந்தருளியிருப்பார். இதயத்தில் தன்னுள்ளேயே விளங்கும் தலைவனைக் காணமுடியாதவர்கள் இறைவன் எங்கேயோ இருக்கிறான் என்று தேடித் திரிகிறார்கள், சர்வாந்தர் யாமியாய் எல்லாப் பொருள்களிலும் சிவபெருமான் நிறைந்திருக்கிறார் என்று உணர்ந்த சிவயோகிகள் ஒரு நாளாகிலும் அரைநாளாகிலும் வசித்த இடத்தின் பாக்கியமே பாக்கியம் அதுவே தீர்த்தம் அதுவே தபோவனம்! யோகம் செய்ய வேண்டும்! என்று கருதியவன் அவ்வாறு நினைத்தவுடனேயே அடையும் பயனை அநேகம் யாகங்களைச் செய்தவனும் அடையமாட்டான். நவமணியும் கற்களும் இரண்டும் கற்களாயினும் கல்லைச் சுமந்தவன் கஷ்டம் முதலியவற்றை அனுபவிக்கிறான் மணியைச் சுமந்தவன் சுகத்தை அடைகிறான். அதுபோலக் கர்மயாகஞ் செய்தவன் கஷ்டம் அனுபவித்தும் விசேஷ பயனையடையாமல் ஞானத் தியானயாகஞ்செய்பவன் சிறந்த பயனை அடைவான் உலகத்தின் அரசனாயிருப்பவனுக்கு அவன் அருகில் இருக்கும் அமைச்சர் முதலியோர் பிரீதி செய்தும் பிறர் பிரீதி செய்யாததும் போல, தியானயோகஞ் செய்யாதவர்கள் சிவபெருமானுக்குப் பிரியர்களாக மாட்டார்கள். யானையின் தந்தங்களில் உள்ளேயிருப்பவை அறுக்கப்படாமல் சுகமாயிருப்பதையும் வெளியே தோன்றுபவை அடிக்கடி அறுபட்டக் கஷ்டமடைவதும் போலவே சிவபெருமானை அந்தரங்கமானத் தியானயாகத்தால் பக்தி செய்பவர்கள் சுகமடைபவர்களாகவும் புறம்பேகர்ம யாகத்தால் பக்தி செய்பவர்கள் கஷ்டமடைபவர்களாகவும் கொள்ள வேண்டும்.
ஆகவே தியானயோகத்தால் மனதிற்கு மட்டுமே விஷயமாகவும் மகத்துவமும் உடையஞானம் உண்டாகும். அத்தகைய ஞானயோகத்தை அறிவுள்ளவன் எப்போதும் சிவார்ச்சனையாக செய்ய வேண்டும் ஆனால் கர்ம யாகத்தால் பயன் இல்லையோ என்று கேட்பீராயின் வியாச முனிவரே கர்மயாகத்தாலும் பயன் இருக்கிறது. அது எவ்வாறு? யானையைப் பிடிக்க வேண்டியவன் தன்னிடத்தில் நெடுநாளாய்ப்பழகி வந்த ஒரு யானையை தன்னுடன் கொண்டு கட்டளையடைந்து, ஆங்குப் பல காட்டு யானைகளுடன் போர் செய்து கொண்டிருக்கும் முரட்டு யானையைத் தன் யானையால் பிடித்துக் கொண்டு வருவதைப் போல அடைவதற்கு அரிய ஞான யாகத்தைத் தான் நெடுநாள் பழகிய கர்ம யாகத்தினாலேயே அடையலாம். ஆகாயத்தில் பறக்க விரும்பும் பறவையானது தன் ஒரு சிறகினால் சாத்தியப்படாமல் இரண்டு சிறகுகளாலும் பறப்பதைபோல, சிவசாயுஜ்யத்தை அடையவேண்டியவன் கர்மயாகத்தால் அடைந்தத் தியானயாக உதவியினால் அடைய வேண்டும் என்று பெரியோர்களால் சிலர் சொல்லுவார்கள். ஒரு முகூர்த்த காலம் சிவபெருமானைத் தியான யாகத்தால் அர்ச்சனை செய்தவன் பெறுகின்றபேற்றை அளவிட்டுச் சொல்ல இயலாது. தியான யாகம் செய்ய முயல்பவனுக்குத் தெய்வீகமாக அநேக விக்கினங்கள் சம்பவித்தபோதிலும் சிரத்தையும் குருபக்தியும் மட்டும் உண்டாயிருப்பது பற்றி, உருத்திர லோகத்தை அடைந்து அங்குள்ள சகல சுகங்களையும் அனுபவித்து; யோகிகளது புனிதமான குலத்தில் ஜனித்து ஞானயாகம் பெற்று சமுசார விரக்தியடைவான் அதமம் மத்திமம் உத்தமம் என்று சிரத்தை மூவகைப்படும் ஞானயோகமானது மூன்று பிறவிகளிலும் கைகூடப் பெறாதவனுக்கு அசிரத்தையுண்டென்று கருத வேண்டும். பக்தியோடு சிவபெருமானைத் தியானஞ்செய்பவன் விரதத்தாலும் தவத்தாலும் விரும்பத்தக்கவையாவும் பெற்றுஞானம் அடைந்து நித்தியமான மோக்ஷசுத்தை அடைவான் வியாசமுனிவனே இவ்வகையில் தியான யோகமகிமையையும் அந்த ஞானயோகத்தை அப்பியசிக்கும் சாந்த முடைய முனிவர்களுடைய பிரபாவத்தையும் சொன்னேன். இனி, அத்தகைய ஞானயாகஞ் செய்வோருக்குத் தானஞ் செய்தவன் பெறும் பேற்றினையும் சொல்லுகிறேன்.
வியாச முனிவனே! கர்மயாகஞ் செய்வோருக்கு ஒரு தரம் தானம் செய்தால் சாதாரணமாக தேவியாருக்குப் பத்து ஜனனங்களில் தானஞ் செய்த பயனும் தபோநிஷ்டர்களுக்குத் தானம் செய்தால் நூறு ஜனனங்களில் தானம் செய்த பயனும் கர்ம யாக தபோ யாகமுடையவருக்குத் தானம் செய்தால் ஆயிரம் ஜனனங்களில் செய்த பயனும், சிவபக்தர்களான தியானயாகமுடையவர்களுக்குத் தானஞ்செய்தால் லக்ஷம் ஜனனங்களில் செய்த பயனும் உண்டாகும். அற்பதான மாயினும் எக்காலங்களிலும் பயனளிக்கத்தக்கதாக முடியும். இதில் தேசம், காலம், விதி, சிரத்தை முதலியவற்றால் சத்பாத்திரமான சிவபக்தனுக்கு அற்பமாயினும் விசேஷமாயினும் சக்திக்கு ஏற்பச் செய்த தானமானது அக்ஷயமான பதவியைக் கொடுக்கும். தேச, காலங்களைக் கவனித்து விதிப்படிச் சிரத்தையோடு சத்பாத்திரனுக்குத் தானம் செய்தவனும் ஹோமஞ் செய்தவனும் அக்ஷயமான பயனடைவதில் சிறிதும் ஐயமில்லை. ஞானமாகிய ஜலத்தால் புனிதமாக்கப்பட்ட மனத்துடன் ஆசாரம், வமிசம், விபூதிதாரணம் முதலியனவுடையவன் சத்பாத்திர சிரேஷ்டனும் தானஞ் செய்தவனது கோரிக்கைகளைக் குறைவறக் கொடுக்கவல்லவனாவான். ஞானமின்மையாகிய நுரையையுடைய சமுசாரமாகிய சாகரத்தில் ஞானமாகிய தெப்பத்தால் தாண்டித்தன்னுடன் பலரையும் தாண்டச் செய்கிறவனும் பெரும் பாவமாகிய சமுத்திரத்தை ஞானமாகிய படகினால் எண்ணிறந்தோரையும் கரை காணச் செய்விக்கிறவனும் உத்தம பாத்திரமாவர், சிவயோகியானவன் எவன் வீட்டில் ஒரு வேளை பிøக்ஷ ஏற்கிறானோ, அவனுடைய வமிசத்திலிருப்பவர்கள் யாவரையும் முக்திக்கு அனுப்புவான். யாகத்தினாலும் தீர்த்த யாத்திரை முதலியவற்றாலும் உண்டாகும் பயன்கள் யாவும் சிவபக்தர்களுக்கு அன்னதானம் செய்தவனாலேயே உண்டாகும் சாந்தமும் சிவத்தியானமுமுடைய ஞானவானுக்கு சிரத்தையோடு ஒருமுறை அன்னமளித்தவன் தன்பாவங்களை எல்லாம் அப்போதே ஒழித்து இஷ்டகாமியங்களையெல்லாம் குறைவின்றி அடைவான்.
பிதுர்க்களை உத்தேசித்துச் சிரார்த்த காலங்களில் சிவபக்தர்களுக்கு அன்னமளித்தவன், தன் குலத்தவர்களைப் பதினோரு தலைமுறைவரை உடன்கொண்டு சிவலோகம் அடைவான். போஜன காலத்தில் சிவா! சங்கரா! என்று பகவன் நாமத்தைத் தியானஞ் செய்தவன் புசித்த உணவுகள் எல்லாம் சிவப்பிரீதியான பயனை ஏற்படுத்தும், சாஸ்திரோக்தப்படி சிவநிவேதனம் செய்து, அக்கினி காரியம் முடித்துத் தன் குருபாகத்தைக் குருவுக்குக் கொடுத்து, அங்கு வந்த பிராமண அதிதிகளுக்கும் அன்னமளித்துப் பிறகு புசிக்க வேண்டும் அல்லாதவன் அன்னம் புசித்தவனாகாமல் சமஸ்த பாவங்களையும் பக்ஷித்தவனாவான். அது எவ்வாறு என்றால், க்ருக்ஷி, விருத்தி, வர்த்தகம், கோபம், ஸம்மார்ஜனம் முதலியவற்றால் பலவிதமான பாவங்கள் புருஷர்களுக்கு விருத்தியாகிக் கொண்டிருக்கின்றன. அப்பாவங்களின் விருத்தியால் ஸம்மார்ஜனம் அஞ்சனம் தோயம் அக்னி குண்டம் நிபேஷனம் என்னும் பஞ்சசுகங்கள் எப்போதும் இல்லறத் தாரை அனுசரித்திருக்கின்றன. தான் புசிக்கும் பக்குவான்னங்கள் யாவும் சிவ அக்கினி குரு அதிதிகளுக்கு நிவேதித்துப் புசித்தால் இந்தப் பஞ்ச சுகங்களும் இதர பாவங்களும் இல்லறத் தோரை அடையாது, ஆகையால் அந்த உணவைச் சிவாதிகளுக்கு ஆராதித்தே புசிக்க வேண்டும். சிவ அக்கினி, குரு முதலியவர்களுக்கு எத்தனை பருக்கை நிவேதிக்கிறார்களோ அத்தனை ஆயிரம் ஆண்டுகள் சிவபுரத்தில் வசிப்பார்கள். நெய் பக்ஷியங்கள் அன்னம் ஆகியவற்றை நிவேதித்தவன் நூறு பங்கு விசேஷப் பயனை அடைவான். சாஷ்டிகோதன நிவேதனம் செய்தவன் ஆயிரம் பங்கு பயனையடைவான் செஞ்சாலியன்னம் படைத்தவன் முன் கூறியதைவிடப் பத்துப் பங்கு அதிகப்பயனை அடைவான் கலம்சாலி யன்னம் படைத்தவன் லக்ஷக்கணக்கான பயனைப் பெறுவான். இவ்வாறு ஒன்றுக்கொன்று விசேஷ பயனைத் தரத்தக்கவை நல்ல பதார்த்தங்களோடு கூட்டி அன்னம் படைத்தவன், புண்ணிய விருத்தியை அடைவான். பாலன்ன நிவேதனத்தால் முந்தையதை விடப் பத்துப் பங்குப்பயன் உண்டு. நல்ல சுவையும் குளிர்ச்சியும் பச்சைக்கர்ப்பூரம் முதலியனவற்றின் மணமுமுடைய அறுசுவையுடன் கூடிய அன்னம் படைத்தவன். பத்துக் கோடிப் பங்கு விசேஷ புண்ணியத்தை அடைவான். இவ்விதமாக ருசியை உடையதும் நெய்யால் செய்ததும் மணமுடையதுமான இவற்றைப் பயபக்தியுடன் சிவ, அக்கினி, குரு, பந்துக்களுக்குச் சமர்ப்பித்துப் பிறகு தான் புசித்தமளவில் அக்ஷயமான பயனையடைவான். பிதுர்த்தினத்தில் சிவயோகிகளை வரவழைத்து இப்படிச் சுவையோடு கூடிய உணவைப்பக்தி பூர்வமாக அவர்களுக்குப் படைத்தவன் தன் பிதுர்க்கள் செய்த பாவங்களை நீக்கி சுவர்க்கத்தை அடையச் செய்வான் வஸ்திரம் அன்னம், பானம் முதலியவற்றைச் சிரத்தையுடன் சிவயோகிகளுக்கு ஒரு முறையாவது கொடுத்துப் பூஜித்தவன் அப்போதே பிரம விஷ்ணு, ருத்திரர்களைப் பூஜித்த பயனையடைவான். சிரார்த்த தினத்தில் சிவனை ஆராதித்து சிவ யோகிகளைப் பிஷை கொள்ள அழைத்தவுடனேயே அவனுடைய பிதுர்க்கள் ஆனந்தித்து நடனஞ் செய்தும் கானஞ் செய்தும் அவனை ஆசீர்வதிப்பார்கள்.
வியாசமுனிவனே! விபூதியை உத்தூளனம் செய்து கொண்டு உருத்திராஷ மணிமாலையணிந்து சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு சிவயோகி ஒருவன் வந்து வாசலில் நின்றவுடனேயே அந்த வீட்டிற்குத் தன தானிய சம்பத்துகள் சேரும். ஆகையால் அதிதி வருவதை உணர்ந்தவன் அவனைக்கும்பிட்டு எதிர் கொண்டு அழைத்து வந்து தன் சக்திக்கு ஏற்றபடி பக்தியுடன் அன்னபானாதிகளால் அவனைத் திருப்தி செய்ய வேண்டும். அந்த அதிதி தேஜோரூபமுடையவனாயினும் விரூபியாயினும் மலினனாயினும் மலின வஸ்திரமுடையவனாயினும் அவன் இப்படியிருக்கிறானே என்று யோசிக்காமல் இவன் சிவயோகியே என்று உள்ளத்தில் கருதி உபசரிக்க வேண்டும். தன் வீட்டுக்கு வந்த அதிதியைத் துவேஷித்த இல்லறத்தோன் சாஷாத் சிவபெருமானையும் எல்லாத் தேவர்களையும் வேதங்களையும் யாகங்களையும் ஆகமங்களையும் துவேஷித்தவனாகி அதோமுகனாகவும் ஊர்த்துவ பாதனாகவும் நகரத்தில் பெருந்துயர் அனுபவித்து பலவித புழுக்களால் கடிக்கப்பட்டு அக்கினியால் தகிக்கப்பட்டு, கல்பாந்தம் வரையில் அநேக கோரமான நரகங்களில் பாதிக்கப்படுவான். சிவயோகிகளை அபராதிகள் என்று ஒருவன் சொல்லும்போது கேட்டுக் கொண்டிருந்தவன் இன்னும் விசேஷ நரகங்களில் இவ்வுலகம் உள்ள வரையில் பாதிக்கப்படுவான் சிவயோகியை அபராதிஎன்று சொல்பவன் விசேஷமான பாவங்களை அனுபவிப்பான் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. ஆயினும் சொல்பவனைக் காட்டிலும் கேட்பவன் இரட்டிப்புப் பாவத்தை அனுபவிப்பான் தூஷிப்பவன் தூஷணையைக் கேட்டவன் அதை அங்கீகரிப்பவன் தூஷிக்காலம் என்றவன், அவர்களுடன் கூடியவன் ஆகிய இவர்கள் ஐவரும் பஞ்சமாபாவிகள் என்று வழங்கப்படுவர்.
அஞ்ஞானமாகியச் சேற்றில் அழுந்தித் தன்னை இரட்சித்துக் கொள்ள சக்தியற்றுப் பாவமாகிய மலைகளால் மறைக்கப்பட்டுச் சற்குணம் சிறிதுமில்லாதவன் அபாத்திரவான் என்று அறிந்து கொள்ள வேண்டும். அபாத்திரனுக்குத் தானம் கொடுத்த பக்ஷத்தில் சுடாத பச்சை மண்ணால் செய்த பாத்திரத்தில் சொரிந்த ஜலமானது அதில் நிற்காது. பாத்திரத்தை விரித்துக் கொண்டு கீழே போய் விடுவதைப் போல, அந்தத் தானமும் பயனற்றதாகி விடும் அத்தானம் வாங்கியதைப் பறிக்க வல்லமையில்லாமல் தானம் ஏற்ற அபாத்திரனும் அழிவான். மேலும் அபாத்திரனுக்குக் கொடுத்த தானம் களர் நிலத்தில் விதைத்த விதையையும் சாம்பலறிச் சொரிந்த ஹோம திரவியத்தையும் போலப் பயனின்றி முடியும். ஞானஹீனனாகிய அபாத்திர வேதியனுடைய ஜன்மமானது ஸ்திரீயை அடைந்த நபும்ஸகனைப் போல நிஷ்பலமாகும். அபாத்திரனும் அவனுக்குத் தானங் கொடுத்தவனும் இரும்புத் தெப்பத்தில் ஏறிச் சலத்தைத் தாண்ட வேண்டியவன் தெப்பமும் தானும் மூழ்கி ஒழிவது போல, இருவரும் அஞ்ஞானத்தில் அழுந்திவருந்துவார்கள். காருணியமாகவும் சிரத்தா பக்தியோடும் சத்பாத்திரத்தில் தானஞ் செய்பவனது தானமே உத்தமக் கோரிக்கைகளையெல்லாம் கொடுப்பதாகும். குருடர், தரித்திரர், முடவர் திக்கற்றவர், பாலர்கள் விருத்தர்கள், யோகிகள், இவர்களை இல்வாழ்வோன் அதிதிகளைப் போஷிப்பதைப் போலவே தன் சக்திகேற்ற உதவி செய்ய வேண்டும். ஞானிகளை அவர்களது யோக்கியதைக்காகவும் பிறரை அவ்வாறில்லாதவராயினும் மானிடப்பிறவிவகித்ததற்கு ஏற்பப் பரோபகாரச் சிந்தனையோடும் உதவி புரிய வேண்டும். அதிதிகளும் சற்பாத்திரரும் தமக்குத்தானம் கொடுப்பவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தால் யாசிக்கின்றனரேயன்றித் தமது சுயப்பிரயோஜனத்திற்காக மட்டும் யாசிப்பவர்களல்லர் ஆகையால் தரித்திரனும் சாதுவுமாக இருப்பவனை அதிகப்பிரயத்தனத்தோடும் தயையோடும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பவனே இல்வாழ்வோன் எனப்படுவான். தானஞ் செய்யாமையினாலேயே ஒருவனுக்குத் தரித்திரமும் தானஞ் செய்வதனாலே சம்பத்தும் உண்டாகின்றன, அதிதியானவன் கொடையாளிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கொள்கையினாலேயே தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். அதனால் கொடுப்பவன் மேல் உலகத்திலும் வாங்குபவன் கீழ் உலகத்திலும் இருப்பார்கள். யாசகன் எனக்குக் கொடு! என்று கேட்பது தாதாவுக்குச் சில விஷயங்களைப் போதிப்பான். அவை யாசிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். அது முற்பிறவியில் தானஞ் செய்யாமையாலேயே உண்டானது. ஆகையால் இவனுக்குத் தானம் கொடுக்காத பட்சத்தில் இவனைப் போலவே நமக்கும் சம்பவிக்கும் ஆகையால் யாசகனைப் பூஜிக்காதவன்யாவன்? தானஞ் செய்ததனாலேயே சொர்க்கத்தை அடைவான். இந்த உலகத்தில் அதிதிகளைவிடப் பந்துக்கள் யாவருளர்? கொடையாளிக்கு இகலோகத்திலும் பரலோகத்திலும் பயனடையச் செய்பவர்களே யாசகர்கள் என்று உணர வேண்டும் நாள்தோறும் வந்து யாசிப்பவர்கள் அதிதிகள் அல்லர் திரவியவான்கள் யாசிக்க வருவாரானால் அவர்களும் அதிதிகள் அல்லர்.
ஸ்படிகத்துக்கு உற்ற அழுக்கைத் துடைத்தவுடனேயே நீங்குவது போல அப்போதைக்கு அப்போது தனக்குக் கிடைத்தப் பாவங்களைப் பரிகரிப்பவர்களே அதிதிகள். அத்தகைய அதிதி தானம் ஏற்றானாயின் தானும் தாதாவும் ஊர்த்துவலோகப் பிராப்தி அடைவர். தானம் கொடுப்பவனும் ஏற்போனுமாகிய இருவரில் கொடுப்போன் மேல் உலகத்தையும் ஏற்போன் கீழ் உலகத்தையும் பெறுவார் என்பதைத் தானகாலத்தில் அவர்கள் கைகளே உணர்த்துகின்றன. ஏழையாகிய யாசகன் தன் வீட்டை அடைந்து யாசிக்கையில் வணிகதர்மத்தை அனுசரித்து அவனைத் திரஸ்கரித்து, பிறரை எதிர்பார்ப்பவன் கொடையாளி யாகமாட்டான். உலகத்தில் யாசகர் இல்லாவிட்டால் தர்மம் என்பதே கிடையாது. ஆகையால் யாசகர் இருக்கவேண்டுவது தான் சாதுக்களான அதிதிகளுக்குத் தானஞ் செய்வதால் பெறும் பயனை, யாசகருக்கு உதவி செய்வதாலும் அடையலாம் சாதுக்களை வித்யா விஷயமாகப் பரீக்ஷிப்பவன் உலுத்தன். அவனுக்குச் சத்பாத்திரத்தாலாவது துஷ்பாத்திரத்திலாவது ஏழைகளிடத்தாவது தானம், தயை, பரோபகாரம் முதலியன சிறிதும் உண்டாகாது. இல்வாழ்வோரில் சிலர், வாயினால் மட்டும் மரியாதை பேசி, உபசா! வார்த்தைகள் சொல்லி கடைசியில் ஒன்றும் கொடுக்காமல் அனுப்புவோரும் இருக்கிறார்கள். அதிதிகளைக் கண்டவுடனே எழுந்திருத்தல் எதிர் செல்லல் ÷க்ஷமம் விசாரித்தல், ஆசனம் கொடுத்து அதில் இருக்கச் செய்தல், கால்கழுவச் செய்தல் பிரியமான வார்த்தைகளைக் கூறல், அவர்கள் செல்லும் போது பின்தொடர்தல் என்னும் ஏழும் இல்வாழ்வோனைச் சுவர்க்கமடையச் செய்யும் சோபனங்களாகும். பொருளுள்ள வரையில் தன் சக்திக்கு ஏற்பத் தானஞ் செய்யவேண்டும் என்ற யோசனை உண்டான பொழுதே யாசகனுக்குக் கொடுத்துவிட வேண்டும். இது தர்மராஜனான யமனுக்குத் துணையான தர்மமாக முன்னின்று அவனை நரகத்தில் தள்ளாமல் தர்மத்திற்குச் செலுத்தும், தானஞ் செய்வதிலேயே விருப்பமுடையவன் சொர்க்கவாசியேயாவான். பிரிய வார்த்தையோடு செய்த தானம் சிறந்தது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள் ÷க்ஷமத்தை அடைய விரும்புபவன் ஒரு காலத்திலாவது அன்பு பாராட்டி சத்பாத்திரனாகவுள்ள ஒரு வேதியனுக்கு உபசார பூர்வமாகத் தன்னால் இயன்றமட்டும் தானஞ்செய்தால் இஷ்டமான கோரிக்கையையும் சிறந்த கீர்த்தியையும் அடைவான். தானஞ் செய்யச்சிறிதும் சக்தியில்லாதவன் தன் வீட்டுக்கு வந்த யாசகனுக்கு நல்லவார்த்தைகள் சொல்லி செல்லவிடுவதும் சிறிது பயன் தரும் என்று பெரியோர் கூறுவார்கள். ஒருவன் வீட்டுக்கு வந்தவனை கடினமான வார்த்தைகளால் மனம் நோகச் செய்து. அதிகமாகத் தானம் செய்தாலும் அது தான் பயனைச் சிறிதும் கொடுக்கமாட்டாது. தானம், விரதம், நியமம், யாகம். தியானம் தவம் இவையாவுமே மனப்பூர்வமாகச் செய்யத் தக்கவை. அவ்வாறில்லாமல் நிர்பந்தத்தால் செய்தவன் சிறிய பயனையும் அடையமாட்டான் தானத்தைச் சிரத்தையோடு செய்தவனும் பரிசுத்தமான மனத்துடன் தானம் ஏற்றவனும் சுவர்க்கத்தை அடைவார்கள். நரகம் ஒரு காலத்திலும் அவர்கள் கண்களில் புலப்படாது, உதாரகுணம் சத்சாவகாசம் சிநேகத் தன்மை! அசூயையின்மை ஆகிய ஐந்தும் வள்ளற்குரிய குணங்களாலும் இவை பெரும் பயன்களைக் கொடுக்கக் கூடியவை. காசி, குரு÷க்ஷத்திரம், பிரயாகை, புஷ்கரம், கங்கா சமுத்திர சங்கமம் நைமிசாரண்யம். ஸ்ரீ பர்வதம், மஹா புண்ணியகரமான கோகர்ணம்; ஞானபர்வதம் இவை சுரர்சித்தர் முதலியோரால் எப்போதும் சேவிக்கப்படும் புண்ணிய ÷க்ஷத்திரங்கள் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடங்களெல்லாம் புண்ணிய ÷க்ஷத்திரங்களே! பசுக்கள் சித்தர்கள் முனிவர்கள் வசிக்கும் இடங்கள் யாவும் புண்ணிய ÷க்ஷத்தரங்களேயாகும். சிவ÷க்ஷத்திரங்களில் எவ்விடத்திலாவது அற்பதானம் கொடுத்தாலும் அது சிவ÷க்ஷத்திர மகிமையால் எண்ணற்ற பயன்களைத் தருவதாகும் சந்திர சூரியர் கிரகண காலமும் விஷ்வத்புண்ணிய காலமும், உத்தராயண, தக்ஷிணாயன காலமும் வியதிபாதமும் ஷடசீத் முதலிய காலங்களும் மாதப் பிறப்பும் புண்ணியத்தை விருத்தி செய்யத்தக்க காலங்கள் என்று சொல்லப்படும். இத்தகைய புண்ணிய காலங்களில் மகாபக்தியோடு தானஞ் செய்தால் அது அக்ஷயமாகும் ஞானத்துக்கும் சுகிர்தத்துக்கும் சிரத்தையே தாயாகும். ஆகையால் சிரத்தையுடன் கூடிய மனமுடையவனாய் ÷க்ஷமத்தைக் கோருகிறவன் தானஞ் செய்ய வேண்டும் சத்பாத்திரமானவனுக்குத் தேசமும் காலமும் உணர்ந்து. சிரத்தையோடு செய்த தானம் சமஸ்த காமியங்களையும் அவன் விரும்பிய வகையிலேயே அடையச் செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் சிரத்தையேயாகும் என்று ஸநத்குமார முனிவர் வியாச மகரிஷிக்குக் கூறினார். இவ்வாறு சூதமுனிவர், நைமிசாரணிய வாசிகளுக்குச் சொன்னார்.
18. பாப விவரணம்
சூத முனிவர், சவுனகாதி முனிவர்களை நோக்கி கூறலானார். மனம், வாக்கு, காயம், ஆகியவற்றால் தோன்றுவதும் நரகத்திற்கு ஏதுவுமாகிய பெரிய பாபங்களைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன், கேளுங்கள். பரஸ்திரீகளை அடைய விரும்புதல், அன்னியர் பொருள்களை அபகரிக்க எண்ணுதல், அபகாரஞ் செய்யவேண்டும் என்றே நினைத்தல், செய்யத்தகாத காரியங்களையெல்லாம் செய்ய விரும்புதல் ஆகிய இந்த நான்கும் மானஸீக பாபங்கள் எனப்படும். சம்பந்தமின்றிப் பேசுதல் பிரியமற்ற சம்பாஷணை பொய் பேசுதல், புறங்கூறுதல் ஆகிய இந்த நான்கும் வாசிகபாபங்கள் எனப்படும். புசிக்கத் தகாதவற்றைப் புசித்தல், ஜீவஹிம்சை, நிஷித்தகாரியா சரணம், பிறர்பொருள் அபகரித்தல் ஆகிய இந்த நான்கும் காயிகபாவங்கள் எனப்படும். இந்தப் பாபங்கள் பன்னிரண்டும் மானுடருக்கு நகரத்தை உண்டுபண்ணச் சாதகமானவை எண்ணற்ற துஷ்கர்மப் பயனைக் கொடுக்கத்தக்க இப்பாபங்களின் பயன்களைச் சொல்லுகிறேன். முனிவர்களே, சம்சாரமாகிய வனத்தைக் கடக்கச் செய்யும் சர்வேஸ்வரனைத் தூஷிப்பவர்கள் மஹாபாபிகள். ஈஸ்வரனையும் சாஸ்திரங்களையும் சர்வார்த்த ஞானத்தையும் தூஷிப்பவர்கள் மஹாபாதகர்கள். ஆகையால் அகோர நரகத்தையடைந்து அவர்கள் படும்பாட்டினை ஒருவராலும் சொல்ல முடியாது. சிவஞானத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் தபோ நிஷ்டனையும் குருவையும் பிதுர்க்களையும் நிந்திப்பவர்கள் சிறந்த நரகமான அதோகதியை அடைவார்கள். சிவநிந்தை குருநிந்தை, சிவஞான தேவர் பொருளை அபகரித்தல் வேதியர் பொருளை அழித்தல், ஆகிய இவை மகாபாதகங்கள் மூர்க்கர்கள் சிவஞானத்தை உணர்த்தும் நூல்கள் அபகரித்ததனால் அடையும் பாதகங்களும் மஹாபாதகங்களேயாகும். சர்வேஸ்வரனைப் பூஜித்துக் கொண்டிருக்கக் கண்டு மகிழ்ச்சியடையாதவர்களும் நமஸ்கரியாதவர்களும் பயபக்தியற்றிருப்பவர்களும் இஷ்டப்படி நடப்பவர்களும் குருசந்தியிலும் அக்கினி சந்நியிலும் இவ்வாறு இருப்பவர்களும் மகாபாதகர்களேயாவர். பருவகாலங்களில் சிவாலயத்தில் திருத்தொண்டினை விதிப்படிச் செய்யாதவர்களும் குருபூஜை செய்யாதவர்களும் ஞானயோகிகளின்றிக் கர்மயோகிகளாக இருந்தால் மகாபாதகர்களேயாவர். சிவாசாரநிவாரணம் சிவபக்த நிந்தை சிவாகமங்களைப் பூஜியாமை அத்தியயனஞ் செய்யாமை எழுதாமை அஞ்ஞானத்தால் சீலமில்லாத மொழிகளைக் கேட்டல் உச்சரித்தல் பொருள் ஆகையினால் நீடித்தமான உபசாரங்களைச் செய்தல், பரிசுத்தமில்லாத இடங்களில் ஞானபாகமாகிய வேதம் முதலியவற்றைச் சொல்லுதல், பொய்பேசுதல், சக்தியிருந்தும் தானஞ் செய்யாமை, சுத்தமான இடங்களில் சிவசரிதம் சொல்லும்போது அசுத்தமாக அங்கு சென்று சிரவணஞ் செய்தல், குருவினால் நூல் ஆராய்ச்சியுற்று யுக்தா யுக்தம் உணர்ந்து அந்தக் குருவுக்குப் பக்திசெய்யாமல் அவரை அவமதித்து, அவர் கட்டளையைக் கடந்து எதிர்த்துப் பேசுதல், குருபூஜை செய்யும்போது அலக்ஷியம் ரோகியும் அசக்தனும் பரதேசியும் சத்துரு பாதையுற்றவனுமாகிய குருவை அல்லது ஒருவனைப் புறக்கணித்தல், குரு பத்தினி, புத்திர மித்திரரிடத்தில் அவமானஞ் செய்தல் தர்ம மார்க்கத்தை உணர்த்தும் குருவுக்கு விசேஷ அவமானஞ் செய்தல் ஆகிய இவை ஒவ்வொன்றும் செய்தோர் சிவநிந்தையால் அடையத் தக்கப் பாவத்தை அடைவார்கள்.
முனிவர்களே, பிரமஹத்தி செய்தவனும் பொன் திருடியவனும் மதுபானஞ் செய்தவனும், குருபத்தினியைக் கூடியவனும் இவர்களோடு சேர்ந்தவனும் ஆகிய ஐவரும் பஞ்சமகாபாதகர்கள், குரோதம், லோபம், பயம், துவேஷம் முதலியவற்றால் வேதியனைக் கொல்ல வேண்டும் என்று கருதியவன், பொருள் கொடுப்பேன் என்று வேதியனை அழைத்துப் பிறகு கொடாதவன், காரணமின்றி ஒருவனைத் தூஷிப்பவன், வித்யாபிமானத்தால் சபா நாயகனாக அமர்ந்திருக்கும் சத்பிராமணனை இறுமாப்பால் எதிர்த்து அவமதிப்பவன், தானே யாவற்றிலும் வல்லவன் என்று பிறரிடம் தற்புகழ்ச்சி செய்து கொள்பவன், பிறருடைய நற்குணங்களை, மறைந்து அவர்களுக்கு இல்லாத துர்க்குணங்களையெல்லாம் உடையோன் என்று கூறுவோன் பசிதாகத்தால் வருந்திய சத்புருஷனைத் தன் வீட்டினுள்ளே சேர்க்காதவன் பிறருக்குப் பயத்தையே ஏற்படுத்துவோன் பாவசுபாவத்தால் பிறர் தோஷங்களை மன்னனிடம் சொல்லி, அவன் ஜீவனத்தைக் கெடுப்பவன், பசியால் வருந்திய, பசு பார்ப்பார். குரு முதலியோரை விக்கினமுறச் செய்பவன், தேவபூமி பிராமணபூமி கோபூமியாகவுள்ளவற்றைத் தன் பலத்தால் கிரஹித்துக் கொள்பவன் முதலியோர் பிரமஹத்தி செய்தவர்களுக்குச் சமமாவார்கள். தேவ வேதியரின் சொத்துக்களைக்கிரகித்தல் பிரமஹத்திக்குச் சமானமான பாவமென்று உணரவேண்டும் இதற்குச் சந்தேமேயில்லை வேதத்தையும் சிவஞானத்தையும் அறிந்தும் மூடனாய் அவற்றை விடுத்த வேதியனும் அனுசிதமானப் பூஜையைக் கைக்கொண்டு நியதியான பூஜையை விட்டவனும் பஞ்சயக்ஞங்களை விட்டவனும் சுராபானம் செய்ததற்குச் சரியான பாபத்தை அடைவான், தாய் தகப்பனை நீங்கியதால் வரும் பாபமும் வேதியனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொன்ன பாவமும், சிவபக்தர்களை நிந்திப்பதால் வரும் பாபமும் புசிக்கத்தகாதவற்றைப் புசித்ததால் பாபமும் வனத்தில் திரியும் மான் முதலிய மிருகங்களையும் பறவைகளையும் நிரபராதிகளாக இருக்கையில் கொன்றதால் வரும் பாபமும் சிவபக்தனைச் சாதாரண வேதியனுக்குப் பணி செய்க என்று பணிப்பதால் வரும் பாபமும், பசுக்கள் செல்லும் வழியிலும், வனத்திலும், கிராமத்திலும் நெருப்பு வைப்பதால் வரும் பாபமும் மகாகோரமானவை. அவை பிரமஹத்திக்குச் சமானமானவை அறிவு முதலியவற்றால் குறைந்த ஒருவனுடைய செல்வத்தை அபகரித்தல், புருஷர்கள் ஸ்திரீகள் யானைகள் குதிரைகள், பசுக்கள் பூமி, வெள்ளி, வஸ்திரம், தானியம், இரசப் பொருள்கள், சந்தனம், அகரு, கர்ப்பூரம், கஸ்தூரி தூப திரவியங்கள் முதலியவற்றைத் திருடல், பொன், திருடலுக்குச் சமமான பாபங்கள் விவாக தசையடைந்த கன்னிகையைக் கோரிவந்த தக்கவனுக்குக் கொடுக்காமல் வீட்டில் வைத்திருந்தல், புத்திரன் மனைவியாகிய மருகியோடும் நண்பனின் மனைவியோடும், உடன் பிறந்தவளோடும் புஷ்பவதியாகாத பெண்ணோடும் சண்டாளஸ்திரீயோடும் புஷ்பவதியாகாத பெண்ணோடும் கூடி மகிழ நினைத்தல் முதலியவற்றால் வரும் பாபங்கள்யாவும் குரு பத்தினியைக் கூடுவதான பாவத்திற்குச் சமமானவை இனி இவற்றிற்கு இயைந்த உபபாதகங்களையும் சொல்லுகிறேன் கேளுங்கள்.
சவுனகாதி முனிவர்களே! வேதியனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிய பொருளை அவனுக்குக் கொடாமல் நிறுத்திக் கொள்வதும் பிராமணனுக்குத் தானங்கொடுத்த பிறகு கொடுத்து விட்டேனே என்று நினைப்பதும் வேதியன் பொருளை அபகரிப்பதும் சமயாசாரத் தர்மங்களைக் கைவிடுவதும் மகாமானியாக இருப்பதும் கோபியாக இருப்பதும் டம்பமாக இருப்பதும் செய்ந்நன்றி மறப்பதும் மங்கை புஷ்பம் சந்தனம் முதலியவற்றில் பெருவிருப்பமும் கிருபையின்மையும் வஞ்சனையும் பொறாமையும், பரதார கமனம் பதிவிரதைகளைத் தூஷித்தல், மூத்தவன் மணஞ்செய்து கொள்வதற்கு முன்னால் இளையவன் மணமுடித்துக் கொள்ளுதல் இளையவன் மணஞ்செய்து கொண்டதைக் கண்டு மூத்தவன் வருந்துதல், இத்தகைய இருவருக்கும் தானம் கொடுத்தல், பிறரைவஞ்சித்தல், புத்திரர் மித்திரர் களத்திரர், யஜமானர், சாது பந்துக்கள், தவசிகள் முதலியோரைத் தனலோபத்தால் கைவிடுதல் பசுக்கள், மன்னர்கள் வைசியர்கள் இவர்களை வதைத்தல் சிவாலயத்திலுள்ள விருக்ஷத்தைச் சேதித்தல், நந்தவனத்தை அழித்தல் சிவ ÷க்ஷத்திர வாசிகளுக்குத் தோஷம் செய்தல், பசு, தனம், தானியம் முதலியவற்றை அபாத்திரனுக்குத் தானஞ் செய்தல் ஸ்வர்ணம், பசு முதலியவற்றைத் திருடுதல் சொல்லத் தகாதவரிடத்தில் வேதம் சொல்லுதல், யாக விக்கிரயம் தர்மவனத்தை விற்றல், தர்ம தடாகங்களை விற்றல், மனைவி புத்திரர் முதலானோரை விற்றல், தீர்த்தயாத்திரை செய்வோருடைய விரதங்களை விக்கினஞ் செய்தல், ஸ்திரீதனத்தால் ஜீவனம் செய்தல், கர்மத்தால் பெண்களுக்குச் சுவாதீனப்படுதல், விபசாரி சாவகாசஞ் செய்தல், இழிகுலமாதர் மீது விருப்பங்கொள்ளல் வயோதிகத் தசையில் மணம் புரிந்து கொள்ளுதல், எருதை வாகனமாகக் கொள்ளல் உச்சாண்டம் செய்தல், முறையறியாமல் வைத்தியம் செய்தல், சிவஞானப்பிரதி பாதகமான வேதத்தைப் பொருள் வாங்கிக் கொண்டு செல்லுதல் விரதங்களை விடுதல், குலாசார தர்மங்களைக்கைவிடுதல் பொய் நூல்களைப்பயிலல் ஸ்ருதி ஸ்மிருதிகளுக்கு விரோதமாக வாதித்தல், தேவநிந்தை குருநிந்தை, சத்ஜனநிந்தை கோநிந்தை பிராமண நிந்தை இராஜ நிந்தை தேவபூஜா நிக்கிரகம் குருபூஜா நிக்கிரகம், சீல மற்ற நாஸ்திகருடன் சேருதல், பருவகாலத்திலாவது பகற்காலத்திலாவது ஜலத்திலாவது ஸ்திரீ சங்கமம் செய்தல், மனைவி புத்திரர்மித்திரர் முதலானோரைக் கடிந்து பேசுதல், தந்தையை வெறுத்தல் காலத்தில் கெடுத்தல், ஏரி, குளம் முதலியவற்றின் கரையை இடித்தல் உடன் உண்ணும் உறவினரைப் பிரியச் செய்தல் முதலியவற்றால் உண்டாகும் பாபங்களை அடைந்த ஸ்திரீகளாவது புருஷர்களாவது உபபாதகர்கள் எனப்படுவர் இன்னும் இவற்றுக்குச் சமமான சில பாவங்களைச் சொல்லுகிறேன்.
பசு பிராமணன், கன்னிகை; சுவாமி மித்திரன், தவசி முதலானோருடைய காரியங்களை அழித்தல், பிறர் செல்வத்தைக் கண்டு பொறாமைப்படுதல், பிறருடையப் பொருளை அபகரிக்கத் திட்டமிடுதல், பிறரைக் கெடுக்கத் தந்திரஞ் செய்தல், பிராமணனுக்குத் துக்கம் உண்டாக்குதல், ஒருவனைப் பாணத்தால் குத்தித் தொந்தரவு செய்தல், வேதியன் சூத்தர சேவை செய்தல், விருப்பத்தால் மதுவாசனையைக் காணுதல் ஹிம்சை செய்வதிலே மனங்கொண்டிருத்தல், அயோக்கியனாக இருந்தும் பிறர் மதிக்கும் படித்தானம் யாகம் முதலியவற்றைச் செய்தல், பசு கட்டும் இடத்திலும் அக்கினி காரியம் செய்யுமிடத்திலும் ஜலத்திலும் வழியிலும் மரநிழலிலும்மலைகளிலும் வனத்திலும் சிவாலயங்களிலும் ஜலாசயத்திலும் சத்திரத்திலும் மலமூத்திரங்களை கழித்தல், மதுபானஞ்செய்ய விரும்புதல் பாம்புகளை ஆட்டிப் பிறரைப் பயமுறுத்தல், பிறரது குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலேயே விருப்பமாக இருத்தல், மூங்கில் செங்கல் கருங்கல் விறகு முள் முதலியவற்றால் வழியை அடைத்தல் அன்னியனுடைய புலத்தில் தன்புலத்துக்கு வரப்புப் போடுதல். கபடமாகத் தண்டித்தல் கபடகாரியங்களையே செய்யவிரும்புதல் கபடமாகப் போர் செய்தல், தகாத அன்னத்தைப் பிச்சை கொடுத்தல், தகுதியில்லாத வஸ்திரத்தைப் பிறருக்குக் கொடுத்தல், பெருலாபந்தேடி மோச வர்த்தகஞ் செய்தல், ஊழியக்காரரிடம் எப்போதுமே நிர்த்தயையாக இருத்தல், பசுக்களைப்பட்டியில் அடைத்தல் ஸ்வாமி, குரு, மித்திரர்களுக்குத் துரோகஞ் செய்தல், சஞ்சல புத்தியால் துன்மார்க்கமாக நடத்தல், மனைவிபுத்திரி ஆப்தர், மித்திரர் பாலர் ரோகிகள் முதலானோரையும் ஊழியக்காரரையும் பசியுற்றத் தன்னிடம் வந்த அதிதிகளையுமொழித்துப் புசித்தல் பல வேதியர் தன் வாசலில் வந்து புசிக்கக்கருதியிருக்க அவர்களை ஒழித்துத் தன்வரையில் திருப்திகரமாக உருசியுள்ள பதார்த்தங்களோடு புசித்தல் சன்னியாசம் ஏற்றுப்பிரஷ்டத்துவம் அடைதல், அந்தரங்கமான சங்கதிகளை வெளிப்படுத்துதல் பசுக்களை அடித்தல் வலிமையற்றவரை மனங்களிக்கச் செய்யாமல் எப்போதும் இழித்தும் பழித்தும் பேசுதல் தன்னை அடைந்த ஏழைகளைக் கஷ்டப்படுத்தி வேலை வாங்குதல், வண்டியில் கட்டிய குதிரை மாடுகளை இரண்டொரு நாழிகையில் அவிழ்த்து விடாமல் எந்த நேரமும் சவாரி செய்தல், தன் வீட்டில் சுமையெடுத்து அலுத்துக் கிழப்பருவமடைந்த எருதைப் புல் முதலியவற்றால் காப்பாற்றாமல் கைவிடுதல், எருதுகளை விதையடித்தல் மலட்டுப் பசுவைச் சுமையெடுப்பித்தல், பசிதாகத்தால் சிரமப்பட்டு ஆதரவு விரும்பித் தன் வீட்டுக்கு வந்த அதிதிகள் சத் புருஷர்கள் ஏழைகள் பாலகர்கள் ரோகிகள் விருத்தர்கள் முதலானோரை மூடப்புத்தியால் தயவுவையாமை முதலிய காரணங்களால் உண்டாகும் பாபங்கள் யாவும் உபபாதங்களே யாகும்.
ஒருவன் மரணம் அடைந்து ஸ்தூல தேகத்தை விட்டுச் செல்லும்போது அவனது தன, தானியச் சம்பந்துக்கள் யாவும் வீட்டிலேயே இருக்கின்றன. புத்திர, மித்திர, களத்திராதியர் மயானம் வரையில்வருவார்கள். அவன் செய்த சத்கர் மதுஷ்கர்ம பயன்கள் மட்டுமே அதற்கு மேலும் அவனுடன் வரும் அதனால் யோக்கியனாகவுள்ள மனிதன் இதனையறிந்து நடக்க வேண்டும். பிரமணராகப் பிறந்தும் ஆடு வியாபாரம் செய்தல், எருமை வியாபாரம் செய்தல், கடற்பயனம் செய்தல், சூத்திரப் பெண்ணோடு கூடிக்குலாவுதல், க்ஷத்திரிய விருத்தியால் ஜீவித்தல், முதலிய பாபங்களைச் செய்யும் பிராமணர்கள், பிராமண அதமர்கள் லக்ஷணமறியாமல் சிற்பத் தொழில் புரிதல், பொன் வேலை செய்து வஞ்சித்தல், முறையறியாமல் வைத்தியம் செய்தல், பொருள் வாங்கிக் கொண்டு தன் தேகத்தை ஸ்வாதீனம் செய்தல், துராலோசனை கொண்டவர்களுடனேயே கூடியிருத்தல் முதலியவற்றால் வரும் பாபங்களும் உபபாதகங்கள் ஆகும். இவற்றை செய்பவர்கள் மகாநரகிகள் எனப்படுவர். தன் நகரத்தில் வசிக்கும் குடிமக்களை வருத்திக் கிரமமான வரிப்பணத்தைக் காட்டிலும் விசேஷமாக வரிவாங்கி அவர்களைக் கஷ்டப்படுத்தும் கிராமாதி காரியானவன் அரசனால் தண்டிக்கப்பட்டு தன் செல்வத்தைக் கள்வர் அபகரித்துக் கொள்ள துக்கங்கொண்டு, ஆயுள் முடிவில் நரகலோகத்தை அடைவான். நரகத்தை அடையத் தக்கப் பாப கிருத்தியங்களைச் செய்வோரிடமும் அத்தகைய குடிமக்களை ஆண்டு வரும் மன்னவரிடத்திலும் தானம் வாங்கிய வேதியரும் கோரமான நரகத்தை அடைவார்கள். குடிகள் பொருளை அநியாயமாக அபகரித்து வேதியருக்குத் தானஞ் செய்யும் வேந்தனானவன் நரகவாதனையை அவ்வுலகில் அடைந்துத் துன்புறுதல் போல, குடிமக்களால் அவ்வரசன் இங்கேயே பாதிக்கப்படுவான். செங்கோல் முறைப்படி அரசு செலுத்தாத க்ஷத்திரியனுக்கும் பரதார கமனஞ் செய்வோனுக்கும் சோரனுக்கும் பெரும் பாவம் சம்பவிக்கும் அஞ்ஞானமுடைய அரசன் கள்வனல்ல வென்று கருதியும் விசாரணைக் குறைவால் திருடனை விடுவித்துத் திருடனல்லாதவனைத் தண்டித்த அபராதியானால் அவ்வரசன் பெருநரகையடைவான். நெய், எண்ணெய், அன்னம், பானம், மது, மாமிசம், கள், வெல்லம், கரும்பு, சர்க்கரை, தயிர், கிழங்குகள், பழங்கள், விறகுகள், இலைகள், புஷ்பங்கள், மருந்துகள், வாகனங்கள், குடைகள், வண்டிகள், பீடங்கள், பாத்திரங்கள், ஈயம், தாமிரம், பித்தளை, ஜலத்தில் தோன்றிய சங்கு முதலியவை வீணை முதலிய இசைக்கருவிகள் பட்டாடைகள், பருத்தியாடைகள் முதலியவற்றை விரும்பிப் பிறரை வஞ்சித்துக் களவாடுகிறவர்கள் நரகத்தை அடைவார்கள். அது எவ்வாறு இருப்பினும் இருக்கட்டும் பிறர் பொருளைக் கடுகளவேனும் அபகரித்தவன் சந்தேகமின்றி நரகமடைவான் என்பது சத்தியம். இவை போன்றப் பாவங்களும் மஹாபாதகத்திற்குச் சமமான பாதகங்களும் உபபாதகங்களும் உபபாதகத்துக்குச் சமமான பாதகங்களும் அவற்றைச் செய்தவன் உயிர்நீங்கியபின் யாதனா சரீரமடைந்து, யமலோகத்தையடைந்து பெருந்துக்கத்தை அனுபவிப்பான்! அதர்மத்திலேயே மனமுடைய தேவர் மானுடர் பசு, பக்ஷியாதிகளுக்கு இயமதர்மனே விசாரணைக் கர்த்தாவாக இருந்து பலவிதமான தண்டனைகளைக் கட்டளையிடுவான். வேதோக்தமான ஆசாரமுடையவர்களாக இருந்து, ஒரு காலத்தில் நீதி தவறியவர்களாயின் அவர்களுக்குக் குருவே தண்டனை கர்த்தாவாக இருந்துப் பிராயச்சித்தம் முதலியவற்றைக் கட்டளையிடுவான். அவ்வாறில்லாமல் மனப்பூர்வமாகச் செய்திருப்பார்களானால் இயமனே தண்டனை கர்த்தாவாக இருப்பான். பரதாரகமனஞ் செய்வோர் கோரர்கள். அநியாயக்காரர்கள் இவர்களுக்கு அரசனே தண்டனை கர்த்தாவாவான். ஒருவர் கண்ணுக்கும் புலப்படாத வஞ்சனையாகப் பாவங்களைச் செய்வோருக்கு யமனே சிக்ஷகன் ஆகையால் ஒருவன் செய்த பாபத்திற்கு அவசியம், பிராயச்சித்தம் செய்ய வேண்டும் அரசன். குரு, பிராயச்சித்தம் முதலிய வழியாகப் போக்கிக் கொள்ளாதவனுடையப் பாவமானது கற்பகோடி காலம் கழிந்தாலும் அவனை விட்டு நீங்காது பாவஞ் செய்வோனும் பாவஞ் செய்விப்போனும் பாவம் செய்கையில் ஆமோதிப்பவனும் பாவபயனை அனுபவிப்பது சத்தியம்!
19. பாவிகள் பெறும் தண்டனைகள்
ஸநத்குமார முனிவர் வியாச பகவானுக்குச் சொன்ன வகையே பின்னும் சொல்லுகிறேன் கேளுங்கள். மாமுனிவர்களே! மேலே சொன்ன நால்வகைப்பட்ட பாவியர்கள் பயத்தை உண்டுபண்ணும் மஹாகோரமான யமலோகத்திற்குக் கோரமான இயமபடர்களால் அடித்துப் பிடித்துக் கட்டிக் கொண்டு போகப்படுவார்கள். கர்ப்பத்தில் இருப்பவர்களாயினும் பிறந்தவர்களாயினும் பாலர்களாயினும் யவ்வனர்களாயினும் பெண்களாயினும் ஆடவர்களாயினும் நல்வினை தீவினை புரிந்ததற்கு ஏற்ப அனுபவித்தே தீரவேண்டும் என்று சித்திரகுப்தாதிகளும் வசிஷ்டாதி மாமுனிவர்களும் இதுவரை விசாரித்து அறிந்திருக்கிறார்கள். உலகிலுள்ள பிராணிகள் யாவும் யமதேவனின் சன்னிதானத்தைக் காணாமற் போவதில்லை. அங்கு சென்றதும் தங்கள் புண்ணிய பாபங்களை ஒப்புவித்து, இயமதர்மனால் சுவர்க்கநரகங்களை அடைய விதிக்கப்படுவார்கள். அவர்கள் இயமலோகத்தை அடைவது எப்படியென்றால். அதையுஞ் சொல்கிறேன்.
சாந்த சித்தர்களும் தயானர்களும் புண்ணியர்களும் கிழக்கு வழியாக யமபுரத்தை அடைவார்கள். பாவிகளும் தானாதிகள் செய்யாதவர்களும். பயங்கர தக்ஷிண வழியாக யமபுரத்தை அடைவார்கள். இப்பாவிகளுக்கு இயமாலயம் எண்பத்தாறாயிரம் யோஜனை தூரமாகக் காணப்படும் அநேகவித கோரஸ்வ ரூபமாகவும் தோன்றும் , புண்ணியர்களுக்கு அது சமீபத்தல் இருப்பதாகவும் அலங்காரரூபமுடையதாகவும் தோன்றும், அது ஏன் எனில் பாவிகள் செல்லும் வழி பயங்கரமானதும் சுற்று வழியுடையதும் ஊசிபோன்ற கூர்மையான முட்களும், இலந்தை முதலிய முள் மரங்களிலுள்ள முட்களால் செல்வோரைப் பிடித்து இழுப்பதும், கத்தியைப் போலக் கூர்மையும் கடினமான பாறைக் கற்களும், அதிகபந்தமானச் சேற்றில் சிறிது தூரம் காலடி பெயர்ந்து வைக்க முடியாததும், சிறிது தூரம் இரும்பு ஊசிகளைப் பதித்ததும், சிறிது தூரம் ஆழமான குளம் முதலிய ஜலாசயங்களும், சிறிது தூரம் உயர்ந்த மலைகளும் சிறிது தூரம் புல்முளைத்திருப்பது போலத் தோன்றிக் கால்வைத்தவுடன் சுருக்கி அளவு கடந்த ஆழத்தில் வீழத்தக்கமாயா ஜலாசயமும், சிறிது தூரம் பழுக்கக்காய்ச்சி நடப்பட்ட இரும்பு முளைகளும். சிறிது தூரம் தழைத்த மூங்கிற்புதரும் சிறிது தூரம் இருள் வழியும் சிறிது சிறுவழியாய்த் தவறினால் இருபுறத்திலும் விழத் தக்கப்பெரும் பள்ளங்களும், சிறிது தூரம் தாவானலமும் சிறிது தூரம் சுடும்பாகைகளும், சிறிது தூரம் மிகக் குளிர்ந்த பனிக் கட்டிகளும், சிறிது தூரம் கால்வைத்தவுடன் கழுத்து வரையில் பூமியில் இறங்கி விடத்தக்க வெண்மணலும், சிறிது தூரம் கொதிஜலமும், சிறிது தூரம் வரட்டி நெருப்பும், சிறிது தூரம் சிங்கங்கள், ஓநாய்கள், பெரும் புலிகள் பெருங்கொசுகள், அட்டைகள், மலைப்பாம்புகள்,கடூரமான ஈக்கள், விஷசர்ப்பங்கள், மத்தகஜங்கள் காட்டுப்பன்றிகள், நெடுங்கொம்புகளையுடைய எருமைகள், கனத்துப் பருத்த ஒட்டகங்கள் பயங்கரமான டாகினியாதி பைசாசங்கள், கோரைப்பற்களையுடைய ராக்ஷசர்கள், வியாதிகள் தூளிமயமான சுழற்காற்றுகள் முதலியன இடையிடையேவந்து தத்தம் இயற்கைக் குணங்களால் அவ்வழியே இயமபடர்கள் கொண்டுவரும் யாதனாசரீரத்தை துன்புறுத்த தக்கதுமான அவ்வழியிலுள்ள இன்னல்களை யெல்லாம் அனுபவித்துக் கொண்டும் மேலே இன்னமும் சொல்ல நேரிடும் அப்போதும் தாமொரு துன்பமும் அனுபவியாமல் உடன்வரும் தூதர்கள் அனுபவி! அனுபவி! என்று சொல்லிக்கொண்டே வர பாறை மழை சொரிந்தாற்போலக் காற்றினால் எறியப்படும் பாறைகளும் பயமுறக் குமுறி விழும் இடிகளும். அவயவம் முழுதும் காயப்படத்தக்க அம்பு மழையும், கண்களைத் திறக்கமுடியாத மின்னல்களும், நக்ஷத்திர விழுகைகளும், நெருப்புமழையும், பெருங்காற்றினால் புழுதிகள் நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டு வழி தெரியாமல் திக்பிரமை செய்தலும் மோககர்ஜனையும், ஆயுத மழையும் உப்பு நீர் மழையும் அதிசீரளமான காற்றும் அதி உஷ்ணமான காற்றும் சிறிது சிறிது யோசனையில் பல விதபேதங்களையுடைய வழியில் அன்னபானாதிகள் இன்று மூடர்களாகிய பாவிகளை நிர்த்தாக்ஷணியமுடைய இயமகிங்கரர்கள் பலாத்காரமாக இழுத்துக் கொண்டு செல்வார்கள். அப்போது, பாவிகள் திக்கற்றுத் தேற்றுவாரில்லாமல் தாம் செய்த பாவச் செயல்களை நினைத்தும் சொல்லியும் துக்கித்துப் பிரேதத்துவம் அடைந்து வஸ்திரமில்லாமல் பெருந்தாகத்தால் நாவும் நெஞ்சும் உலர்ந்து சுருங்கிய தேகமுடையவர்களாய் இயமதூதர்களுடைய அடிஉதை குத்துகளுக்கு அவ்வப்போது பயந்து பசியாகிய அக்கினியால் தபிக்கப்பட்டு இயமபுரத்தை அடைகையில் அவர்களை இயமகிங்கரர் செய்யும் செயல்களைச் சொல்கிறேன். கேளுங்கள்.
முனிவர்களே! இத்தகைய உபாதிகளையுடைய மார்க்கத்தில் பாவிகளை யமகிங்கரர்கள் எவ்வாறு கொண்டு போவார்கள் என்றால் சிலரை இரும்புச் சங்கிலியால் பிணித்தும் சிலரை சங்கிலி பாசக்கயிறு முதலியவற்றால் கட்டியும் சிலரை நெற்றியில் அங்கு சத்தால் குத்தி அதனைப்பற்றியும் சில பாபிகளை முட்களால் குத்தியும் சிலரை நெருப்பினால் வீழ்த்தி இழுத்தும், சிலரைத் தோள்களிற்பிணித்தும், சிலரை வயிற்றில் அங்குசத்தால் குத்தியும் சிலதீயோரைக் கையிலே கனமான இரும்புக் கட்டிகளைக் கட்டித் தொங்கவிட்டும்; சிலரைக் கழுத்தில் அங்குசத்தைச் சேர்த்தும் சிலரை நாவில் அங்குசத்தால் குத்தியும் சிலரை மூக்கிலே குத்திக் கயிறு கட்டியும், சிலரைக் காதைப் பிடித்தும் சில துன்மார்க்கரை மோவாயைப் பற்றியும் சிலரைக் கைகால்களையும் காதுகளையும் உதடுகளையும் நாசியையும் சிசனத்தையும் விருஷணத்தையும் அறுத்து ஹிம்சை செய்து கொண்டும் குந்தத்தால் செய்தும் சிலரை முசலத்தால் அடித்தும் சிலரை செஞ்சூரியனைப் போலப் பிரகாசிக்கும் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முட்களால் குத்தியும் பிண்டி பாலம் முதலிய ஆயுதங்களால் அடித்து உதிரம் ஒழுக இலந்தை முட்புதரில் தள்ளியும் அங்கிருக்கும் நானாவிதமான கிருமிகளை விட்டுப் பக்ஷிக்கச் செய்தும் மூர்ச்சையுற்றப் பிறகு கீழே வீழ்த்திச் சிறிது நேரத்தில் மூர்ச்சை தெளிந்து படுதாகமுற்று அன்னம் வேண்டும் பானம் வேண்டும்! நிழல் வேண்டும்! என்று கதறிக்கதறிக் கேட்கும்படி பாவிகள் யமதூதர்களால் அந்தக் கொடிய வழியில் கொண்டு போகப்படுவார்கள். தானதருமங்களையும் நற்செயல்களையும் புரிந்த புண்ணியர்களோ பசி தாகம் முதலிய தொந்தரவுகள் இல்லாமல் வேண்டிய இடங்களில் எல்லாம் அன்னம், ஆகாரம், நிழல் முதலியன குறைவின்றியும் மனத்துயர் சிறிதும் இல்லாமலும் சித்த சாந்தத்துடன் இயமபுரத்தை அடைவார்கள். அவ்வாறு புண்ணியர்களும் பாவிகளும் யமாலயத்தை அடைந்த பிறகு தூதர்கள் தம் தலைவனாகிய யமதர்மராஜனிடம் சென்று பிராணிகள் வந்திருப்பதைத் தெரிவிப்பார்கள். இயமன் அந்த ஜீவன்களைக் கொண்டு வருக என்று கட்டளையிட்டதும், தூதர்கள் தாம் கொண்டு வந்த பிராணிகளை யமன் சன்னிதியில் நிறுத்துவார்கள் அப்போது யமன் அவர்களில் புண்ணியவான்களாக உள்ளவர்களைக் கண்டு மகிழ்ந்து. ÷க்ஷமலாபங்களை விசாரித்து அவரவருக்குத்தக்கவாறு ஆசனம் முதலியன கொடுத்து நீங்கள் புண்ணியர்களாகையால் மேம்பட்டவர்கள். நீங்கள் சிறந்த போகபாக்கியங்களை அனுபவிக்க வேண்டியவர்கள்! என்று பலவிதமாக நன்மொழிகளால் உபசரித்துப் பேசிப் புகழ்வான். பிறகு திவ்விய விமானங்களில் ஏறிச் சுவர்க்க லோகத்தை அடைந்து எண்ணற்ற போகங்களை அனுபவித்து புண்ணியம் முடிந்த பிறகு சிறிது பாவச் செயலிருப்பின் இங்கு வந்து அதன் பயனை அனுபவியுங்கள் என்று சொல்லுவான், ஏனென்றால் ஆன்மாக்களுக்கு மித்திர பூதமான புருஷர்கள் இயமதர்மனை இவ்வாறு சாந்தமாகவும் தயாள புருஷனாகவும் காண்கிறார்கள்.
பாவச் செயல்களையே செய்து வந்த பாவிகளோ எவ்வாறு யமதரிசனம் செய்வார்கள். எனில், கோரமான வக்கிரதந்தங்களுடன் திறந்த வாயும் கோபம் மிகுதியால் நெரித்த புருவமும், ஊர்த்துவகேசமும் பெரிய நீண்ட மீசையும் உதறிக்கொண்டிருக்கும் பூரித்த உதடுகளையும் மலைபோன்று பருத்த, பதினென் புயங்களும் நீலமலைபோன்ற திடகாத்திரதேகமும், சர்வாயுதங்களையும் தாங்கி நிற்கும் கைகளும் பலவிதமானத் தண்டனாசக்தியும் மதித்த மகிஷவாகனமும், எரிந்து கொண்டிருக்கும் பெருநெருப்புப் போன்ற விழிகளும், செந்நிறமான வஸ்திரமும் சிவந்த மலர் மாலையும் மேருமலைபோன்று உயர்ந்த தேகமும், பிரளயகால மேகத்துவனி போன்ற கர்ஜனையும், சமுத்திரம் முழுவதையும் க்ஷணநேரத்தில் உறிஞ்சிக் குடிக்கவல்ல ஆற்றலும் பிரளயகாலாக்கினிக்குச் சமமான காலமிருத்யு, அஞ்சன நிறமான காலபாசன் கிரிநாந்தன், மாரீசன், கிரஹமாரி, காளராத்ரி; நானாவித பயங்கரமுண்டு செய்யும் வியாதிருபங்கள் முதலியன சமீபத்தில் விளங்கவும்; சக்தி சூலம், அங்குசம், பாசம், சக்கிரம், கத்தி, வஜ்ஜிரம், துண்டம், அம்புறாத்தூணிவில் முதலியவற்றைத் தரித்தும் பயங்கரமான கணக்கில்லாத கரியமலைகள் போலத் தேகமுடைய பல ஆயுதங்களை ஏந்திய மகாவீரர்களான இயமதூதர்களால் புடை சூழப்பட்டும் விளங்குவதாக இயமதர்மராஜனையும் சித்திரகுப்தனையும் காண்பார்கள். அப்போது இயமன் அவைகளை நோக்கிக் கடுஞ்சொல் கூறுவான். பிறர் பொருளை அபகரிக்க விரும்பியவர்களே! உருவச் சிறப்பால் அன்னிய ஸ்திரீகளைக் கூடி ரமித்தவர்களே! நீங்கள் செய்த கர்மங்களை நீங்களே அனுபவிக்கவேண்டும் உங்கள் ஆன்மாவை நாசஞ் செய்வதற்காகப் பாவகாரியங்களை செய்திருக்கிறீர்கள். இப்போது ஏன் தவிக்கிறீர்கள்! அவரவர் பாபத்திற்கேற்ப அவரவர்களே அனுபவிக்க வேண்டும் இங்குயாவரும் ஒருவரை வீணாகத் துன்புறுத்தமாட்டார்கள் என்று இயமதர்மன் கூறுவான். பாவிகளான அரசர்களும் இயமபுரத்தை இவ்வாறு வழிவருத்தத்துடன் சென்று இயமாலயத்தையடைந்தபோது, இயமதர்மன் அவர்களை நோக்கி. குடிமக்களைத் துன்புறுத்திய துராசாரமுடைய அரசர்களே! அற்பகாலம் அனுபவிக்கத் தக்க ஒரு ராஜ்ஜியத்தைக் கருதி இராஜ்யபோகத்தால் பிரஜைகளை அநியாயமாகப் பீடித்தபடியால் உங்களுக்கு விசேஷ பாவம் சம்பவித்தது. அதன் பயனை விஷயமாகவும் புத்திர மித்திர விஷயமாகவும் இந்தப் பெருந்தீமைகளைச் செய்து இப்போது அவர்களையெல்லாம் விடுத்துத் தனித்து வந்தீர்களே! குடிகளைத் துன்புறுத்தும் போது உங்களுக்கு இருந்த வல்லபம் எல்லாம் தூதர் கையில் அகப்பட்ட பொழுதே போய் விட்டனவே? என்று இவ்விதமாகப் பலவகையாக அவர்களை நிந்தித்து. உங்கள் கர்மங்களை அணுபவியுங்கள் என்பான். துஷ்ட மன்னர்கள் ஒன்றுஞ் சொல்ல முடியாமல் அழுது கொண்டு போய் முறைப்படி நரகாக்கினியில் வீழ்த்தி பரிசுத்தம் செய்யுங்கள்! என்று கட்டளையிடுவான் அவர்கள் அவ்வரசர்களது கால்களைப் பற்றிக்கொண்டு கிருகிருவென்று வேகத்துடன் சுழற்றிக் கீழே வீழ்த்துவதும் மேலே தூக்குவதுமாகச் செய் சுடுபாறைகளில் கிடத்திப் புரட்டி, இரத்தப் பிரபையிலிட்டு முழுக்கி செயலற்றவர்களாக்கி மீண்டும் மூர்ச்சை தெளிந்த பிறகு அவர்களைப் பாவ நீக்கம் செய்வதற்காக நரகத்தில் தள்ளுவார்கள்.
முனிவர்களே! நரகங்களில் சிறந்தவை இருபத்தெட்டு. அவை ஸப்தலோகங்கள் வரையிலும் தாழ்ந்து ஆழமாயிருக்கும். முதலில் உள்ளது கோரம், இரண்டாவது சுகோரம், மூன்றாவது அதிகோரம், நான்காவது அகோரம், ஐந்தாவது கோரரூபம், ஆறாவது தலாதலம், ஏழாவது பயாநகம், எட்டாவது காளராத்திரி, ஒன்பதாவது பயோத்கடம், பத்தாவது சண்டம், பதினொன்றாவது மகாசண்டம், பன்னிரண்டாவது சண்ட கோலாகலம், பதின் மூன்றாவது பிரசண்ட தரநாயகம், பதினான்காவது பத்மம், பதினைந்தாவது பத்மவதி, பதினாறாவது பிஷ்டை, பதினேழாவது பீமப் பிரணாயகம், பதினெட்டாவது கராளம், பத்தொன்பதாவது விகராளம், இருபதாவது வச்சிரம், இருபத்தொன்றாவது திரிகோணம், இருபத்திரண்டாவது பஞ்சகோணம், இருபத்து மூன்றாவது சுதீர்க்கம், இருபத்து நான்காவது பரிவர்த்துவம், இருபத்தைந்தாவது ஸப்தபவுமம், இருபத்தாறாவது அஷ்ட பவுமம், இருபத்தேழாவது தீப்தம், இருபத்தெட்டாவது மாயை என்னும் பெயர்களோடு ஒன்றன் கீழ் ஒன்றாக விளங்கும் இந்த நரகங்கள் தம்தம் பெயராலேயே பெருந்தீமை விளைக்கத்தக்கவை என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவையோ, யாதனாசரீரத்துடன் பாவிகள் தங்கள் பாவத்தின் பயனை அனுபவிக்கும் ஸ்தானங்கள் இன்னும் இந்நரகங்கள் இருபத்தெட்டினுள்ளும் ஐயைந்து முக்கிய யாதனா ஸ்தானங்கள் உண்டு. அவை யாவன ரவுரவம், மகாரவுரவம், தமசு சீதம் உஷ்ணம் சகோரம் மகாதீக்ஷண, பத்மஸஞ்சீவனம். சிவம் மகாதமவிலேபம் சுலோமம் கண்டகம் தீவிரவேகம். கராளம், விகராளம் பிரகம்பனம், மகாவிக்கிரம் விக்கிரம் காலம், பிரகர்ஜனம் ஸுசிமுகம் ஸுநேமி காதகம் சுப்பிரபீடனம், கும்பீபாகம் சுபாகம், கிரகசம் தாருணம் அங்காரராசி பவனம், மேதப் பிரஹிதம், அஸ்ருக்பிரஹிதம் தீக்ஷணதுண்டம் சகுனி. மகாசம்பவர்த்தகம், சிரது ஸப்தஜந்து பங்கலேபம், பிரதிமாசஸ்ரம் பூத்பவம் உச்வாஸம் நிருச்வாசம் ஸுதீர்க்கம் கூடசால்மலி பிரதீபத்மம் ஸுமஹாநாதம், பிரவாஹம், சுப்பிரவாகனம் மேகம் விருக்ஷம் சல்வியம் சிம்ஹம் வியாக்கிரம் கஜம் சுவராஜம் சூகராஜம் மகிஷம், அவிகாரம், விருகரணனம் கிருஹாக்கியம் மீனவக்திரம் சர்ப்பம் கூர்மம், வாயசம், குர்த்ரம்(பருந்து) உலூகம் (ஆந்தை) ஜலவுகம் (அட்டை) சார்த்தூலம் விகர்க்கடகம் மண்டூகம் பூதிமுகம் அக்னிகாஸம் பிரதிஷ்டம் ருதிராம்பம் ஸ்வபோஜனம் லாலாபக்ஷணம், ஆத்மபக்ஷணம் ஸர்வபக்ஷணம் ஸுதாருணம் ஸுகண்டம் ஸுவிசாலம் விகடம் கடபூதனம் அம்பரீஷம் கடாஹம் கஷ்டம் வைதரணிநதி சுதப்லலோகசயனம் ஏகபாதம் பிரபூரணம் அசிதாலவனம் கோரம் அஸ்திபங்கம் ஸுபூரணம் கிலோதசி சுயந்திரம் கூடபாசம் பிரமர்த்தனம் மகாசூர்ணி சசூர்ணி தப்தலோக மயம் பர்வதத்திலிருந்து விழும் ஜலப்பெருக்கு மலவார்த்ததம் மூத்திரவிஷ்டம் சுக்லபம் தாரகூபம் சீதலம் முசலம் உலூகம் யந்திரம் சிலை, சாகடம், லாங்கலம் தாலபத்திரம் கஹணம் மகாசகட மண்டபம் ஸம்மோஹம்ஹஸ்தி பங்கம் தப்தம் மலயம் குடம் பஹீதுக்கம் மகாதுக்கம் கஸ்மலம் ஸ்யமலம், மலம், ஹாலஹலம் விரூபம், கரூபம் யமானுகம் ஏகபாதம் திரிபாதம், தீவிரம் அர்வீசரம் என்று சொல்லப்பட்டப் பெயருடையனவாய் முறையே அவ்விருபத்தெட்டிலும் வகைக்கு ஒரு கோடியுண்டு, ஆகையால் நரகங்கள் இருபத்தெட்டுக் கோடி என்பர்.
இத்தகைய இருபத்தெட்டுக் கோடி நரகங்களிலும் ஒவ்வொன்றும் ஐயைந்துப் பிரதான ஸ்தானங்களாக ரவுரவம் முதல் அர்வீசரம் இறுதியாக முக்கிய ஸ்தானங்கள் நூற்றுநாற்பது கோடி இந்த நரகங்களிலே பாவிகள் பதை பதைப்பார்கள். அவரவர்கள் கர்ம நாசமடையும் வரையில் நானாவித உபாதைகளை அனுபவிப்பதில் மனஞ்சகியாமல் இங்கும் அங்கும் ஓடியலைவார்கள். அவர்கள் கர்மத்துக்கு ஏற்ப இயமதூதர்கள் அவர்களது கால் கைகளை உறுதியாக பிடித்துக் கொண்டு பழுக்கக் காய்ச்சிய இரும்பு சங்கிலிகளில் கட்டி பெருமரத்தின் உயர்ந்த கிளைகளில் தூக்கி முழு பலத்துடன் ஊசலாட்டுவதால் அவர்கள் பத்துக்காத தூரத்துக்கும் குறையாமல் ஒவ்வொருபுறமும் போயும் திரும்பியும் மூர்ச்சையடைவார்கள், இதுவுமின்றி இரும்புபாறைகளை அவர்களுடையகால் கைகளில் கட்டிச் சுமக்க செய்வார்கள் அப்போது அடிக்கடித் தாங்கள் செய்த பாவச் செயல்களை எண்ணிப் பரிதவிப்பார்கள். எரிந்து கொண்டிருக்கும் அங்குசத்தாலும் இரும்புத் தண்டங்களாலும் உடல் முழுவதும் நறுக்குவார்கள். பிறகு நெருப்புப் போலச் சுடும்படியான ஒரு வகைப் பொடியைத் தேகத்தில் பூசுவார்கள் அதனால் பின்னவகைப் பொடியைத் தேகத்தில் பூசுவார்கள் அதனால் பின்னதேகமடைவார்கள். மீண்டும் அப்பாவிகளின் அவயவங்களைத் தனித்தனியாகக் கொய்து காய்ச்சியுள்ள இரும்புக் கூடாரங்களில் புரட்டுவார்கள். மலகூபங்களிலும் கிருமி கூபங்களிலும் மேதைக் கிணற்றிலும் உதிரவாவிகளிலும் கிருமிகளும் இரும்பு துண்டங்களையுடைய காகங்களும் அவர்களைப் புசிக்கும் நாய்கள் ஓநாய்கள் புலிகள் பயங்கரமான சிங்கம் முதலிய மிருகங்கள் பலவிதமாகக் கடித்துத் துன்புறுத்தும் பிறகு அங்காரராசியென்னும் நரகத்தில் அவர்களை மீன் போலச் சமைப்பார்கள். செக்கில் எண்ணெய் ஆட்டுவது போலச் சக்கிரகம் என்னும் நரகத்தில் இவர்களைப் போட்டுத் திருப்பி உருண்டையாக்குவார்கள். மீண்டும் அவ்வுருண்டையை மிகவும் சுடுகையுடைய இருப்புச்சட்டியிற்போட்டு வறுப்பார்கள். அதன் பின்னர் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் போடுவார்கள். அசத்திய வார்த்தைகள் சொன்னவனுடைய நாக்கை அநேகம் துண்டுகளாகக் கொய்து பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சலாகையால் நாவிலும் மார்பிலும் குத்துவார்கள். பொய் நூல்களைப் பழக்குவித்தவனுடைய நாவை சுடுகின்றன. சூட்டுக் கோலினால் பலவிதமாகத் தண்டிப்பார்கள். தாய், தந்தை, குரு முதலிய பெரியோரை பயமுறுத்திய பாவிகளது மூக்கை வஜ்ஜிர மூக்குகளையுடை நீர் அட்டைகளைக் குத்தவிட்டு நெருப்புப் பொடிகளை அவர்கள் உடல் முழுவதும் பூசித்தகித்து கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஒழுக்கி அநேகவிதமான ஆயுதங்களால் அடித்து மலமூத்திரக் குழிகளில் தள்ளிவிடுவார்கள். சிலரை விரைவில் துண்டு செய்யத்தக்க கிரகசநரகத்தில் இடுவார்கள். அப்போதே அதில் இருக்கும் அரங்கள் அவர்கள் வினைக்கேற்ப துண்டு துண்டாகச் செய்து தங்கள் மாமிசத்தைத் தாங்களே புசித்து, தங்கள் உதிரத்தையே பானஞ் செய்வார்கள். அதிதி முதலானோருக்கு அன்னாபானாதிகள் உதவாமல் தன்வரைக்கும் குடும்ப சகிதமாய்ப் போஷணை செய்து கொண்ட பாவிகளை வாளினால் கரும்பைத் துண்டிப்பது போலத் துண்டித்து அசிதாலவனம் என்ற நரக விசேஷத்தில் இட்டு ஊசிகளால் உடல் முழுதும் குத்தி எரிந்து கொண்டிருக்கும் சூலத்தின் முனையில் ஏற்றிப்பல விதமாகக் கஷ்டப்படுத்துவார்கள், பின்னர் நிகுச்வாசம் என்ற நரகத்தில் வீழ்த்தி சுவாசமும் விடவொட்டாமல் வைத்திருப்பார்கள். அப்பொழுது பாவிகள் இறக்கமாட்டார்கள். யாதனா தேகமானது துன்பம் அனுபவிக்கவும் சுகம் அனுபவிக்கவும் பாத்திரமாக இருக்குமேயன்றி, துண்டந்துண்டமாக வெட்டினாலும் பொடியாக சூரணித்தாலும் மொத்தமாக அரைத்தாலும் அழியும் தன்மையுடையதன்று.
பிறகு அவர்களை எடுத்துப் பிரக்ஞை வரச்செய்து வாலுகரவிதனம் என்ற நரகத்தில் சிறிது காலம் இருக்க வைத்து, அதற்குப் பிறகு கனவான்களும் விழுந்து கிடந்து துன்பமடையும் இரவுரவம் என்னும் மகாநரகத்தில் வீழ்த்தி, அப்பாவிகள் துக்கமடையும் படிப் பலவித வாதைகளைச் செய்து அவர்களது பாதம், முகம், குய்யம் விழி கழுத்து, மார்பு, தலை முதலிய அவயவங்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முனைகளைக் கொண்டு குத்தி அடிக்கடி நெருப்புக்குச் சமானமான சுடுகையடைய மணலில் வீழ்த்தி உருட்டி எடுத்து கொதித்துக் கொண்டிருக்கும் அரக்குக் கூடாரத்திலிடுவார்கள். பரதார சங்கமம் செய்தவர்களை, இயமதூதர்கள் அழைத்து, பூர்வத்தில் அவன் அவணந்த பெண் வடிவமாகவே எஃகினால் செய்யப்பட்டுப் பழுக்கக்காய்ச்சியப் பதுமையை முன்னம் இவளை ஆலிங்கனம் செய்து கொள்! என்று அணையச் செய்வார்கள். அதுபோலவே அன்னிய புருஷணை அணைந்த ஸ்திரீயையும் அழைத்து அந்த ஆடவன் உருவம் போலவே எஃகினால் செய்து பதுமையை பழுக்கக் காய்ச்சி அவளை அந்தப் பதுமையை அணைத்து கொள்ளச் செய்வார்கள். அவள் அந்த உபாதையை சகிக்காமல் இங்கும் அங்கும் ஓட இமயதூதர்கள் அவளைப் பிடித்து வந்து, நீ உன் கணவனை வஞ்சித்துப் பிறர் புருஷனை இச்சித்தாய் அல்லவா? இப்போதும் அவனை கட்டியணைந்து கொள் என்று அணைந்து கொள்ளச் செய்து பிறகு அவளை இருப்புப் பாத்திரத்திலே ஏற்றித் தீயிட்டு எரிப்பார்கள். வேறு சிலபாவிகளை உரலிலிட்டு பொடியாக இடித்து அந்கரமான கிணறுகளில் வீழ்த்துவார்கள். அங்கிருக்கும் கிருமிகள் அவர்களைப் பலவிதமாக துளைக்கும் அதன் பின்னர் க்ஷராகூபத்தில் தள்ளுவார்கள் மீண்டும் அவர்களை அனந்தமாகத் துன்புறுத்தி அவர்கள் சகிக்காமல் ஓடும்போது கட்டிக் கொண்டு வந்து வீழ்த்துவார்கள். அவமானிகள் துன்மார்க்கர்கள் சேரர்கள் ஒருவர் கீர்த்தியைக் கெடுத்தவர்கள் முதலானோரை, நரகவிசேஷங்களைச் சிறப்பாக அனுபவீக்கச் செய்து இரும்புச் சங்கிலிகளால் கட்டி மஹாஜ்வாலம் என்னும் நரகத்தில் கிருமியாதி ஜந்துக்களால் பலவிதமான துக்கங்களையெல்லாம் அனுபவிக்கச் செய்து அவர்கள் உயிர் வருந்த எண்ணெய்க் கொப்பரைகளில் ஏற்றி எரித்து மகா உப்பு மிகுந்த நீரைக் குடிக்கச் செய்து, அவர்கள் பாவம் ஒழியும் வரையிலும் முள்மயமான பாறைக் கற்களிலிட்டுச் சந்தனம் அரைப்பதுபோல அரைப்பார்கள். அப்பொழுது அவர்களுடையத் தேகங்களிலிருந்து நசுங்கி விழுந்த துண்டுகளில் தோன்றிய புழுக்கள் அவர்களைப் பற்பலவிதமாகக் கடித்துத் துன்புறுத்தும் பிறகு துர்க்கந்தம் மிகுந்த மாமிச ராசியாகிய நரகத்தில் வீழ்ந்துவார்கள்.
அதன் பிறகு மலைப்பாறைகளை அடித்தும் மீண்டும் அதோமுகமாகவும் ஊர்த்துவ பாதமாகவும் அப்பாவிகளை நிறுத்தி அடியில் அக்கினியைக் கொளுத்தியும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குண்டுகளை விழுங்கச் செய்தும், விழுங்காவிட்டால் உலக்கையால் இடித்துவாயினுள்ளே புகுத்தியும் துன்புறுத்துவார்கள். சிவபெருமானுடைய திருக்கோயில் புஷ்பவனம் தடாகம் கிணறு முதலியவற்றிற்கும் நல்வேதியரின் வீட்டுக்கும் உபத்திரவம் உண்டுபண்ணி அவ்விடங்களை அபகரித்துக் கொண்டு தங்கள் உபயோகமாக ஸ்நானம் பானம் அப்பியங்கனம் செய்து கொண்டிருந்த பாவிகள், அநேகவித கோரமான கரும்பாலை போன்ற நரகங்களை அடைந்து பிரளய காலம் வரையில் கோரமான நரகவேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். பெரியோர்களை நிந்தனை செய்யும்போது ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தவனுடைய காதுகளில் உஷ்ணமேறிய இரும்பு முறைகளை அடித்து இறக்கி, ஈயம் முதலிய உலோகங்களை உருக்கி அவனது காதில் வார்த்து, அநேகவிதமானத் துன்பங்களை அனுபவிக்கச் செய்வார்கள். பரஸ்திரீகளை விரும்பி அவர்களைப் பெறுதல் அசாத்தியமென்று கைகளால் சமயத்தில் ஸ்பரிசித்தல் முதலியவற்றைச் செய்தவர்கள் அக்கினிமயமான இரும்புப் பொடிகளைக் கையில் தாங்கி க்ஷõராதிகளால் உடல் முழுவதும் பூசப்பெற்று பலவித யாதனா ஸ்தானங்களில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வருந்துவார்கள். தாய் தந்தையரைக் கையால் அடித்தும், காலால் உதைத்தும், கண்ணால் பயமுறுத்தியும் துன்புறச் செய்தவர்களும் பரஸ்திரீகளைக் காமதூரத்தால் பார்த்தவர்களுமான பாவிகளில் விழிகளில் நெருப்பு மயமான ஊசிகளால் குத்தி க்ஷõராதிகளை உடல் முழுவதும் பூசி முறையே அநேக நரகங்களில் அநேகவிதமான உபாதைகளை அனுபவிக்கச் செய்வார்கள். தேவர், குரு, அக்கினி, பிராமணர் முதலியோருக்குச் சமர்ப்பணம் செய்யாமல் முறை தவறிப் புசித்தவனும் தீவினையாளனுமான பாபியின் தாவையும் முகத்தையும் காய்ச்சிய இரும்புச் சலாகை முதலியவற்றால் குத்துவார்கள். சிவபெருமானுடையத் திருநந்தவனத்திலுள்ள மலரைத் திருடிக் கொண்டு போய் தலையிற் சூடிக் கொண்டவர் சிரத்தையும் நாவையும் அநேகம் இருப்பு முனைகளால் குத்தி க்ஷõராதிகளைப் பூசி சகல வேதனைகளையும் அக்கினியையும் சிவபெருமானையும் சாஸ்வதமான மனுவாதி தர்ம சாஸ்திரங்களையும் நிந்தித்தவர்களுடைய மார்பு, கழுத்து, நாக்கு, பற்சந்துகள், தவடை, உதடு, சிரம் முதலிய அவயவங்களில் அக்கினி வர்ணமான முத்தலையுடைய இரும்பு முளைகளை வைத்து இருப்புத் தண்டங்களால் மேலே அடித்து இறக்குவார்கள். பிறகு எரிந்து கொண்டு இருக்கும் க்ஷõரத்தாற் பூசி,உடல் முழுவதும் கித்திரவதைகள் செய்து எல்லா நரகங்களிலும் எல்லாம் துன்பங்களையும் அனுபவிக்கச் செய்வார்கள். அன்னியருடைய பொருளைத் திருடியவனும் பிராமணனுடைய பொருளையும் சிவபெருமானுடைய கைமுஷ்டிகளாலும் கால்களாலும் இடிக்கப்பட்டும் உதைக்கப்பட்டும் தத்தமது கை கால்களில் உண்டாகிய அதிக கஷ்டமான துன்பமாகிய நரக வாதனைகளை நுகர்வார்கள். சிவாலயத்திற்கு அருகிலும் நந்தவனத்திற்கு அருகிலும் மலமூத்திர விசர்ஜனஞ் செய்த பாவிகள் இரும்பு உலக்கைகளால் தங்கள் சிசின விருஷணங்களைப் பொடிக்கப்பட்டு இரும்பு ஊசிகளால் குத்தப்பட்டு க்ஷõரம்பூசப் பெற்றுக் காய்ந்திருக்கிற எண்ணெயை அவ்விரண்டு இடங்களிலும் ஊற்றப்பெறுவார்கள். மனதுக்கு விருப்பம் உண்டாக வேண்டும் என்னும் இச்சையே காரணமாக ஜனங்கள் பாவங்களைச் செய்து அவற்றால் விளைந்த நரக வேதனைக்கு ஆளாகிறார்கள் பொருள் இருந்தும் உலோபத்தால் தானஞ் செய்யாமலும் அதிகக் கஷ்டப்பட்டுவந்து தன் வீட்டை அடைந்த அதிதியை அவமதித்தும் இருப்பவன் மனம் வாக்கு காயங்களுக்கும் பொருந்தாத பெருங்கஷ்டமான நரகத்தை அடைவான் சுவானங்களுக்கும் காகங்களுக்கும் பலியிடாமல் அன்னத்தைப் புசித்தவனுடைய முகமானது வஜ்ஜிரத்தால் விகாரமடையச் செய்யப்பட்டு பலவிதமான புழுக்களாலும், இரும்புத் துண்டுகளாகிய மூக்கினையுடைய காகங்களாலும் பக்ஷிக்கப்பட்டும் பலவித உபத்திரவத்துடன் வருந்துவான். சுநகத்துக்குப் பலியிடும் போது,
ச்யாமஸ்சச் பவ ச்சைவ யமமார்க்காறுரோத கௌயென
ஸ்வஸ்தாப்யாம் ப்ரயச்யாமி தௌக்ருண்ஹீ தமிமம் பலிம்
(யமமார்க்கத்தைத் தடை செய்யும் ஸ்யாமம், சபளம் என்று இரண்டு சுநகங்களின் நிமித்தமாகப் பலியை கொடுக்கிறேன். அந்தப் பலியை அவ்விரண்டும் கிரகிக்குமாக) என்று சொல்லிக் கொண்டு பலியிட வேண்டும். வாயஸத்துக்குப் பலியிடும்போது
ஐந்த்ர வாருண வாயவ்ய யாம்பாநைர் ருதவாயஸா
வாயஸா புண்யகர்மான ஸ்தேமேக்ருண ஹந்த்விமம்பலிம்
(ஐந்திரம் வாருணம் வாயவ்யம் யாம்யம் என்னும் பெயருடன் கறைந்து கொண்டிருக்கும் புண்ணிய கர்மங்களைச் செய்த வாயஸங்கள் யான் கொடுக்கும் பலியை கிரகிக்குமாக என்று சொல்லிக் கொண்டு பலியிட வேண்டும். பிரயத்தன பூர்வமாக சிவமூல மந்திரங்களால் சிவபெருமானை ஆராதித்துப் பிறகு விதிப்படி அக்கினி காரியம் முடித்து, அதன் பிறகு பலியைக் கொடுத்தவர்கள் இயம தண்டனையைப் பெறமாட்டார்கள். அவர்கள் சொர்க்க பதவியை அடைவார்கள். ஆகையால் நாள் தோறும் பூமியில் நான்கு முலைகளையுடைய மண்டலத்தைச் செய்து அந்த மண்டலத்தைக் கந்த புஷ்ப தூப தீபங்களால் பூசித்து ஈஸான திக்கில் தன்வந்திரீக்கும் கிழக்கில் இந்திரனுக்கும் தென் திசையில் யமனுக்கும் மேற்கில் வருணனுக்கும் தக்ஷிணத்தில் பிதுரர்க்கும் கிழக்கில் சூரியனுக்கும், பூமியில் தாதா, விதாதா, துவாரபாலகர், சுவானங்கள், சுவபதிகள், வாயஸங்கள் முதலானோருக்கும் பலியைக் கொடுக்க வேண்டும்.
தேவர், பிதுரர், மானுடர் காணப்படாத பிரேதத்துவமடைந்து, வாயஸரூபமாக இல்வாழ்வோனை ஆஸ்ரயித்து இருப்பதால் வாயஸம் முதலானவற்றுக்கும் பலியிட வேண்டியது அவசியமாகும். சுவாஹாகாரம், சுவதாகாரம், வஷட்காரம், ஹந்தகாரம் என்னும் நான்கு தேனுவினுடைய ஸ்தனங்கள், அவற்றுள் சுவாஹாகாரம் என்னும் ஸ்தனத்தை தேவர்களும், சுவதாகாரத்தைப் பிதுரர்களும், வஷட்காரத்தை பூதேசுவரர் முதலிய இதர தேவர்களும், ஹந்தகாரத்தை மாநுடரும் எப்போதும் பானஞ் செய்கிறார்கள். ஆகையால் மனிதன், பசுவை சிரத்தையாக நாள்தோறும் விதிபூர்வமாகப் பூஜிக்க வேண்டும். அவ்வாறு செய்பவனுக்கு அத்தேனு அக்கினி காரியத்துக்குப் பஞ்ச கவுவியங்களைக் கொடுக்கும் தேனுவைப் பூஜிக்காத கிரகஸ்தன் தாமிசிரம்(அஞ்ஞானம்) என்ற நரகத்தை அடைவான். ஆகையால் அவசிய மாகக் கோபூஜை செய்து பின்னர் ஒரு க்ஷணநேரமாவது அதிதியின் வருகையை எதிர்பார்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு கிராமத்தில் வசிக்கும் அதிதியைத் திவ்வியமான அன்னபானாதிகளுடன் தனது சக்திக்கு ஏற்றபடித் தன்னுடன் போஜனம் செய்விக்க வேண்டும் ஒருவன் வீட்டுக்கு வந்த அதிதி உணவின்றிச் செல்வானாயின் அவ்வதிதியின் பாவம் கிரகஸ்தனையும் கிரகஸ்தன் பெற்ற புண்ணியம் அதிதியையும் சேரும். அதிதி பூஜை செய்யாமல் ஆவலோடு தான் மட்டும் புசித்தவன் நரகத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு நெடுங்காலம் துன்புற்று வீழ்ந்து கிடப்பான். அப்போது இயமதண்டலாளர் அவன் மாமிசத்தையே அறுத்து அவனை உண்ணச்செய்தும் அவன் இரத்தத்தையே அவனைப் பானஞ் செய்யச் செய்தும் கஷ்டப்படுத்துவார்கள். பாவி பசிதாகங்களுடன் பலவித நரகவேதனையை அடைவான். விசேஷமான பாவத்தையும் சிறிது புண்ணியத்தையும் செய்தவனும், விசேஷமான புண்ணியத்தையும் சிறிது பாவத்தையும் செய்தவனும் அடையும் கதியைச் சொல்லுகிறேன். அதிகப் பாவஞ் செய்தவன், தான் செய்த சுவலப் புண்ணியத்தின் பயனை முதலில் அனுபவிப்பான். அவன் புண்ணிய பயனை அனுபவித்தாலும் அது அவனுக்குச் சுகமாகத் தோன்றாது. அவன் புண்ணியம் குறையக் குறையச் சுகமும் குறைந்து பாவ அனுபவம் பின்னர் விரைவில் சம்பவிக்கும். உபவாசம் இருந்து மகா புண்ணியங்களைச் செய்த இல்வாழ்வோன் தான் செய்த சொற்பப் பாவபலனை முதலில் அனுபவித்தாலும் மகா தனவந்தனுக்கு கொஞ்சம் கஷ்டம் அடைந்த காலத்தில் அதுதோன்றாதது போலவே இலேசாக அனுபவித்து, பிறகு புண்ணிய வசத்தால் விசேஷமான சுகங்களை அனுபவிப்பான். புண்ணிய பாவங்கள் இரண்டும் தம்மைச் செய்தவர்கள் அனுபவிக்கும்படி ஒன்று பலவாக விருத்தியாகும்.
20. புண்ணியசாலிகள் பெறும் பதவிகள்
வேதவியாசர், ஸனத்குமார முனிவரைப் பார்த்து மாமுனிவரே! பாவிகள் பெருந்துக்கம் அனுபவித்துக் கொண்டு இயமபுரத்தை அடைவார்கள், என்று சொன்னீர்களே? இயமலோகத்துக்குச் செல்வோரைச் சுகமாகச் செலுத்தத்தக்க தருமங்கள் இவையென்று கூறியருள வேண்டும்! என்று கேட்டார், அதற்கு ஸனத்குமார முனிவர், வியாசரை நோக்கி, வியாசரே! அவற்றையுஞ் சொல்லுகிறேன் நிதானமாகக் கேளுங்கள் என்று சொல்லத் துவங்கினார். வியாசரே! சாஸ்திரங்களை அதிக்கிரமித்துச் செய்கிற அசுப கர்மங்களும் சாஸ்திரயுக்தமாக விளங்கும் சுபகர்மங்களும் செய்தவர்கள். அவற்றின் பயன்களை அனுபவித்தே தீரவேண்டும் ஆகையால் சுகத்தைக் கொடுக்கத் தர்மங்களைச் சொல்லுகிறேன் கேளும்.
இவ்வுலகத்தில் சாந்தமான மனசோடு, தயையுடன் சாஸ்திர சம்பந்தமான கர்மங்களைச் செய்பவர்கள் யாவரும் இயமமார்க்கம் மஹா பயங்கரமாக இருப்பினும் தாம் செல்லும் போது சுகத்துடனேயே காணப்படுவார். அத்தகைய சுகமான வழியிலேயே இயமபுரத்தை அடைவார்கள். வேதியருக்குச் செருப்பையாவது பாதுகையையாவது தானஞ் செய்தவன். சிறந்தவொரு குதிரையில் ஏறிச் சுகமாக யமபுரத்தை அடைவான். பிராமணருக்குப் பக்தி சிரத்தையுடன் குடையைத் தானஞ் செய்தவன் பட்டுக்குடை பிடித்துக் கொண்டும் இயமமார்க்கத்தைக் கடப்பான். பல்லாக்குத் தானஞ் செய்தவன் திவ்வியமான இரதத்தில் ஏறிக்கொண்டு இயமமார்க்கத்தைத் தாண்டுவான். கட்டில் முதலிய படுக்கைகளைத் தானஞ் செய்தவன் சுகமாக யமமார்க்கத்தைத் தாண்டுவான். வீதிகளில் மரங்களை வைத்து வளர்த்தவனும் நந்தவனங்களை உண்டு பண்ணினவனும் தோப்புகள் வைத்து நிழல் உண்டாக்கியவனும் புஷ்ப விமானங்களில் ஏறி இயம மார்க்கத்தை கடந்து யமபுரத்தை அடைவான். தேவாலயங்களையும் அநாத மண்டபங்களையும் சத்திரங்களையும் முனிவர்களுடைய ஆசிரமங்களையும் செவ்வையாகச் செய்வித்தவர்களும், தேவர் அக்கினி, குரு பிராமணர்,தாய் தந்தையர் முதலானோரை நாள்தோறும் பூஜித்தவர்களும் தாம் விரும்பியவகையில் சுகமாக இயமமார்க்கத்தைக் கடந்து செல்வார்கள். சத்திரஞ் சாவடிகள் கட்டுவித்து விழச்செல்வோரை ஆதரித்தவர்கள் சிறிதும் துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியாக இயம வழியைத் தாண்டுவார்கள் மந்திர உபதேசம் செய்த குருவுக்குப் பக்தியோடு பணிவிடை செய்துவந்தவன் இயமமார்க்கத்தில் தாம் விரும்பியபடித் திவ்வியமான தோப்பு, குளம் பூந்தோட்டம் முதலியன விளங்கச் சந்தோஷத்துடன் போவான். நோயுற்றுத் துக்கத்துடன் தன் வீடு வந்த சேர்ந்த ஒருவனை ஆதரித்தவனும் மருந்து முதலியவற்றால் அவனைக் குணப்படுத்தியவனும் சுகத்தோடு இயமமார்க்கத்தைக் கடப்பான். வேதியருக்குக் கோதானம் செய்தவனும் வேதியர்களை அன்னபானதிகளால் திருப்தி செய்தவனும் இயம மார்க்கம் முழுவதிலும் தன் இஷ்ட காமியங்களை அனுபிவித்துக் கொண்டே செல்வான். வேதியனுடைய கால்களைச் சுத்தஜலத்தால் கழுவிப் புனிதஞ் செய்தவர்கள் குளிர்ந்த பூஞ்சோலைகள் வழியாகக் குதிரையின் மீதேறி இயமவழியைக் கடப்பார்கள். வேதியருடைய கால்களைக் கழுவி, வஸ்திரங்களால் துடைத்து அன்னபானாதிகளை அளித்து உபசாரஞ் செய்தவன் சந்தோஷமாக இயமமார்க்கத்தைத் தாண்டி இயமனால் மரியாதை செய்யப் பெறுவான். நவரத்தினங்களையும் சுவர்ணத்தையும் அந்தணோத்தமருக்குத் தானம் செய்தவர்கள். கஷ்டமான வழி முழுவதும் சுகமாகத் தாண்டிச் செல்வார்கள். வெள்ளியால் செய்த ரிஷபத்தைத் தானஞ் செய்தவன் திவ்வியமான வாகனங்களில் ஏறிச் செல்வான். பூமிதானஞ் செய்தவன் அருமையான வழியில் போவான். இவ்வாறு நல்ல சவுக்கியத்துடன் சென்று யமதரிசனம் செய்து சுவர்க்க போகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். முன்பு சொல்லி வந்த எல்லாத் தானங்களிலும் அன்னதானமே சிறந்தது. ஏனென்றால் அப்போதே பிரீதியையும் திருப்தியையும் உண்டு செய்யவல்லதும்மனோகரமானதும் உடலுக்கு வலிமையும் புத்தி விருத்தியையும் உண்டாக்கத் தக்கதும் அதுவேயாகும்.
ஆகையால் வியாச முனிவரே! அன்னதானத்துக்கு ஈடானதானம் உலகத்தில் வேறொன்றும் இல்லை, அன்னத்தினாலேயே பூதங்கள் எல்லாம் ஜீவிக்கின்றன அன்னமில்லையென்றால் சகல பூதங்களும் அழியும். உதிரம், மாமிசம், நிணம், சுக்கிலம், முதலியன அன்னத்தாலேயே பெருகுகின்றன அன்னத்தால் உண்டான சுக்கிலத்தினாலேயே பூதங்கள் உண்டாகின்றன. இத்தியாதி நியாயங்களால் சராசரப் பிரபஞ்சம் முழுவதும் அன்னமயமாகவே விளங்கும். அன்னமின்றிப் பசியாக இருப்பவர்களுக்கு பொன், இரத்தினங்கள், குதிரைகள், யானைகள், ஸ்திரீகள் கொடுத்தாலும் ஆனந்தம் உண்டாகாது. வயிற்றில் இருப்போரும் பிறந்தவர்களும் பாலர்களும் வாலிபர்களும் விருத்தர்களும் தேவர்களும் அசுரர்களும் ஆகாரத்தையே கோருகிறார்கள். எல்லா நோய்களையும் விடப் பசிநோயே சிறந்து முற்பட்டுள்ளது. பசியாகிய வியாதி அன்னமாகிய மருந்தால் நசிக்கிறது. பசிக்குச் சமமான வியாதியும் துக்கமும் கிடையாது நோயற்று இருப்பது போன்ற சவுக்கியமும் குரோதத்தைப் போன்ற சத்துருவும் கிடையாது. அன்னதானத்தினால் உண்டாகும் புண்ணியம் அளவிட்டுச் சொல்ல முடியாதது. பசியாகிய அக்கினியால் தகிக்கப்பட்டுப் பிராணிகள்யாவும் இறக்க வேண்டியதுதான். ஆகையால் அன்னத்தை கொடுத்தவனே பிராணத்தைக் கொடுத்தவன். பிராணனைக் கொடுத்தவன். எல்லாவற்றையும் கொடுத்தவனாகிறான். ஆகையால் அன்னதானம் செய்தவன் தானங்கள் எல்லாவற்றையுஞ் செய்த பயனை அடைவான். ஒருவனுடைய அன்னத்தைப் புசித்துச் சீவித்துத் தர்ம மார்க்கத்தில் நடப்பவன் சம்பாதித்த தர்மத்தில் பாதிதர்மம் அன்னம் அளித்தவனுக்கும் பாதிதருமம் அதைச் செய்தவனுக்கும் சித்திக்கும் என்று அறநூல்கள் சொல்லுகின்றன. மூவுலகிலுள்ள இரத்தினங்கள், ஸ்திரீகள், வாகனங்கள் முதலிய சிறப்பான பொருள்கள் யாவும் அன்ன தாதாவுக்கு இவ்வுலகத்திலேயே கைகூடும், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை புருஷார்த்தங்களையும் அடைவதற்குத் தேகமே முக்கிய சாதனம் அன்னமே பிரமம்; அன்னமே விஷ்ணு, அன்னமே சிவம், ஆகையால் அன்னதானத்தைப் போன்ற சிறந்த தானம் மூவுலகிலும் முக்காலத்திலும் கிடையாது. திரிலோகங்களுக்கும் ஜலமே பிராணமயம் அது புனிதமானது. அமிர்தமானது எல்லா ரசங்களுக்கும் பிராண பூதமானது. ஒருவன் எல்லா பாவங்களையும் செய்தவனாயினும் பின்னர் அன்னபானாதிகளைத் தானஞ் செய்வானாயின் அவன் பாவங்களிலிருந்து விடுபட்டு ஸ்வர்கலோகத்துக்குப் போவான். அன்ன தானம், பான தானம், கோதானம், வஸ்திரதானம், படுக்கை தானம், குடைதானம், ஆதன தானம், பாதுகாதானம் என்ற எட்டும் பிரேத லோகத்தில் சிறந்த பயனையளிக்கும் தானங்கள் என்று சொல்லப்படும்; இவை போன்ற விசேஷ தானங்கள் இயமபுரத்தில் சுகத்தை அனுபவிக்கத்தக்க பயனளிக்க வல்லவையாகவும் உள்ளன என்று கூறினார். ஸனத்குமார முனிவர், அவரை வியாசர் நோக்கி, மகா ஞானியே! அந்தப் பிரேத லோகம் மகாக் கஷ்டமானது. அத்தகைய லோகத்தில் சுகத்தை அடைய வேண்டியவர்கள் மேலே சொன்ன சிறந்த தானங்களைச் செய்து அப்பெருங் கஷ்டங்களிலிருந்து நீங்குவர் என்பதைக் கேட்டு மிகவும் அஞ்சுகிறேன். ஆகையால் சுகமானது எதனால் உண்டாகுமோ அதை எனக்குப் போதித்தருள வேண்டும்! என்றார். அதற்கு ஸனத்குமார முனிவர் சொல்லுகிறார்.
வியாசரே நீர் ஆச்சரியகரமான விஷயத்தைக் கேட்டு விட்டீர்! நீர் விரும்பியபடி அதற்கும் நான் பதில் சொல்லுகிறேன். எவன் எத்தகைய கர்மத்தால் எத்தகைய கதியை அடைகிறானோ அக்கர்மத்தால் அவன் அக்கதியையே மரணமடைந்த பிறகும் அனுபவிப்பான், தவஞ் செய்வதால், சுவர்க்கம் கீர்த்தி ஆயுள் விருத்தி, மகிழ்ச்சி, கோபம், ஞானம், விஞ்ஞானம் ஆரோக்கியம் அழகு, சவுக்கியம்; சுகம் முதலியன கைகூடும். தவம் செய்யாதவர்களுக்கு உயர்கதியாகிய சிவலோகம் சம்பவிக்காது. தவஞ் செய்வதால் சுவர்க்காதி பதவிகள், கஷ்ட சாத்தியமான ஞானம் அதிதுர்லபமான சிவலோக பதவி, பாவநாசம் முதலிய யாவும் சுலபமாக கிடைக்கக் கூடும். அரும்பெரும் கஷ்டத்தால் அடையக் கூடிய செல்வமும் சகலரும் மதிக்கத்தக்க மதிப்பும் தவத்தாலேயே கிடைக்கத் தக்கவை, உலகத்தில் தானஞ் செய்வதால் செய்தவனுக்குச் சரியாக நடத்தியவன் ஆயுள் விருத்தியை அடைவான். அஹிம்சையால் வலிமையும் திவ்விய ரூபமும் உண்டாகும். சிவ தீøக்ஷயால் நற்குடிப் பிறப்பு உண்டாகும். பழங்கள் கிழங்குகளை புசிப்பதால் அரசுரிமை கைககூடும் . இலைகளைப் புசித்துத் தவஞ்செய்தவர்களுக்குச் சுவர்க்கம் கைகூடும். பாலைப் பருகித் தவஞ் செய்தவர்களுக்கு உயர் பதவி சித்திக்கும். குருவுக்குப் பணிவிடை செய்தவன் விசேஷ வித்தியாவனாவான். சிரார்த்தாதிகளால் பிதுர்த் தேவர்களைத் திருப்தி செய்பவனுக்குச் சந்ததி விருத்தி அடையும். ராகதீøக்ஷ செய்து கொண்டவர்களுக்குப் பசுக்கள் அபிவிருத்தியாகும். புல் முதலியவற்றைப் புசித்துத் தவஞ் செய்தவன் சுவர்க்கம் அடைவான். காலை உச்சி மாலைகளில் முறைப்படி ஸ்நானஞ் செய்யும் நியதியுடையவனுக்கு ஸ்திரீ லாபம் உண்டாகும் வாயு பக்ஷணம் செய்து கொண்டுத் தவத்தில் இருப்பவனுக்கு யாகபலன் சம்பவிக்கும். காலை உச்சி மாலைகளில் ஜபம் செய்தவனுக்கு நித்திய ஸ்நானம் செய்த பயனுண்டாகும் மவுனமாகத் தியானம் செய்வோனுக்கு இராஜ்ய சம்பத்து உண்டாகும். அன்னத்தை வெறுத்து தவஞ் செய்பவனுக்குச் சுவர்க்க பதவி சித்திக்கும், நில மிசை படுத்து (ஸ்தண்டலசாயி) தவஞ் செய்வோனுக்கு திவ்வியமான வாகனமும் நல்ல வீடுகளும் கைகூடும். மரவுரி உடுத்துவோருக்குத் திவ்வியமான பட்டு வஸ்திரங்கள் உண்டாகும் படுக்கை ஆசனம் முதலியவற்றைத் தவசிக்குத் தானம் செய்தவனுக்கும் நியதியாகி, அக்கினி காரியஞ் செய்தவனுக்கும் பிரமலோகம் கைகூடும் மதுரம் முதலிய அறுசுவைகளை வெறுத்தவர்களுக்குச் சம்பத்துகள் உண்டாகும். மாமிச பக்ஷணத்தை விட்டவனுடைய புத்திரர் முதலானவர்கள் ஆயுள்விருத்தி அடைவார்கள். உதயகாலத்தில் விழித்துக்கொண்டு இருப்பவன் இராஜ்யாதி காரியாவான் சத்தியவானாக இருப்பவன் தேவர்களுக்குப் பிரியவானாவான் எந்தப் பொருளையாவது தானஞ் செய்தவன் கீர்த்தியை அடைவான். ஜீவஹிம்சையை ஒரு காலத்திலும் செய்யாதவன் ஆரோக்கியத்தை அடைவான் வேதியர் பக்தியை உடையவன் பெரிய ராஜ்ஜியத்தை அடைவான். அல்லது வேதிய வமிசத்தில் தோன்றி நல்ல நடத்தையோடு விளங்குவான். சுத்த ஜலத்தை நல்ல வேனிற்காலத்தில் தானஞ் செய்தவனுக்கு இஷ்டகாமியங்கள் கைகூடும். சமஸ்தபூதங்களிடத்தும் பச்சாதாபமுடையவன் சகல துக்கங்களையும் ஒழிவான், வேதபக்தி செய்பவன் அகண்ட ராஜ்யாதி பத்தியத்தையாவது தேவபதவியையாவது அடைவான். தீபதானஞ் செய்தவன் பிரபுவாகி, நேத்திர வியாதியை ஒரு காலத்திலும் அடையமாட்டான். சர்வேஸ்வர ஞானப் பிரதிபாகமான சாஸ்திரங்களைத் தானஞ் செய்தவன் விசேஷ ஞானியாவான்.
கந்தபுஷ்ப சந்தனாதிகளைத் தானஞ் செய்தவன் கீர்த்தியை அடைவான். வானப்பிரஸ்த ஆச்சிரமத்தை மேற்கொண்டு சடைமுடிமுதலியவற்றை வளர்த்தவன். சிரேஷ்டமான சந்தானத்தை அடைவான். உபவாசம் இருத்தல், சிவதீøக்ஷ தரித்தல், சிவார்ச்சனை செய்தல் முதலிய கர்மங்களில் இருந்தவர்கள் யுத்த பூமியில் உயிர் இழந்து வீரசுவர்க்கமடைவோர் போல அந்தப் பதவியில் பன்னிரண்டு ஆண்டுகள் வீற்றிருப்பார்கள் வேதோக்தப்படி சத்பாத்திரனுக்குத் தனது கன்னிகையை தானஞ் செய்து பணி மகளிர் தாசர்கள், பூமி, பொன், அசுவம் முதலியவற்றை ஸ்திரீ தனமாகக் கொடுத்தவன் உத்தமமான கதியை அடைவான். பொன்னால் செய்த கொம்பணி பூட்டிய ஆயிரம் பசுக்களைத் தானஞ் செய்தவன் தேவலோகத்திலும் புகழ்ந்து பேசத் தக்க சிறந்த கதியை அடைவான். பொன் முதலியவற்றால் நன்றாக அலங்கரித்த காராம் பசுவைக் கன்றுடன் தானஞ்செய்தவன் தான் விரும்பிய இஷ்டச் சித்திகளையெல்லாம் அடைவான். ஒருவன் கோதானம் செய்த பசுவானது அத்தானவானையும் அவன் சந்ததியில் வரும் ஏழுதலைமுறையாரையும் தனக்குள்ள உரோமம் ஒன்றிற்கு ஒருவருஷம் தேவ பதவியில் இருத்த வல்லதாகும், பொன்னால் கொம்பும் வெண்கலத்தால் தேகமும். விலை உயர்ந்த வஸ்திரமும் தக்ஷிணையும் வைத்துச் சத் பிராமணனுக்குத் தத்தம் செய்தவன் வசுலோகத்தைச் சுலபமாக அடைவான். தமது வினைக்கு ஏற்ப அந்தகாரமான நரகத்தில் விழுந்து பரிதவிப்பவனுக்குச் சமுத்திரத்தைத் தாண்ட ஓடம் பயன்படுவதுபோல, கோதானமே அவனைக் கஷ்டத்திலிருந்து கரையேற்றத்தக்கது. கன்னிகாதானம் செய்தவனும் நானாவித திரவியங்களைத் தானஞ் செய்தவனும் இந்திரலோகத்தை அடைவார்கள். எல்லாப் பொருள்களும் நிறைந்துள்ள வீடு முதலியவற்றை வேதபாரகனாகிய வேதியனுக்குத் தானம் செய்தவன் குதிரை முதலியவற்றைத் தானஞ் செய்தவனும் விசுலோகத்தை அடைவார்கள் வெள்ளி, பொன் முதலியவற்றைத் தானஞ் செய்வோருக்குச் சுவர்க்க பதவி உண்டாகும் என்று சொல்கிறார்கள். குடைகளைத் தானஞ் செய்தோருக்கு நல்ல வீடு கிடைக்கும். பாதரøக்ஷ முதலியவற்றைத் தானஞ் செய்தவன் விசேஷமான வாகனங்கள் கிடைக்கும் வஸ்திர தானஞ் செய்தவன் நல்ல அழகினை அடைவான் கந்ததானஞ் செய்தவன் திவ்விய தேகத்தை அடைவான். புஷ்பம், பழம் முதலியவற்றோடு கூடிய விருக்ஷத்தை வேதியனுக்குத் தானஞ் செய்தவன் நல்ல வீட்டையும் மங்கையையும் செல்வத்தையும் பெறுவான். நல்ல வீட்டையும் மங்கையையும் செல்வத்தையும் பெறுவான். பக்ஷியம் அன்னம் பானம் முதலியவற்றைத் தானஞ் செய்தவன், மறைவு, கட்டிக்கொடுத்தல் முதலியவற்றைச் செய்தவன். மறு பிறவியில் விசேஷமான போகபாக்கியங்களை அடைவான். புஷ்பமாலை, சந்தனம், கண்ணப் பொடி முதலியவற்றைத் தானஞ்செய்தவனும் மகா ஆரோக்கியர்களாகி நல்ல ரூபத்துடன் அரசனைப் போன்ற சம்பத்தை அடைவான் தானியங்களை நிரம்பக் கொண்டதாய், பாத்திரங்கள் நிறைந்த ஒரு வீட்டை உத்தம வேதியனுக்குத் தானஞ் செய்தவன் நல்ல உத்தியான வனத்திற்குச் சமமான சிறந்த மாளிகையை அடைவான். மெத்தை. தலையணை, திண்டு முதலியவற்றுடன் கூடிய கட்டிலைத் தானஞ்செய்தவன் ரூபவதியும் புத்திரவதியுமாகிய மனைவியை பிரயத்தனமின்றிப் பெறுவான் என்று கூறினார். ஸனத்குமார முனிவரைப் பார்த்து, வியாசர் கேட்டார்.
சுவாமி! அடியேன் அறிந்து கொள்ளும்படிச் சிறந்தானங்களைப்பற்றிச் சொன்னீர்கள். ஆயினும் இவற்றில் முக்கியமாக அனுஷ்டிக்க வேண்டிய தானங்கள் எவையோ, அவற்றைத் தயவு செய்து சொல்லவேண்டும் என்று வியாசர் கேட்கவே ஸனத்குமார முனிவர் கூறலானார். வியாசரே சகல பிராணிகளுக்கும் துன்பம் உண்டாயிருக்கும்போது அபயம் கொடுத்து அருள் புரிவதும் தன்னை வந்துயாசித்தவனுடைய விருப்பத்தையறிந்து அவன் விரும்பிய பொருளை அவனுக்குத் தானம் செய்வதும் தானஞ்செய்தவனுக்குத் துணையாகி நின்று அவனுக்கு உதவி செய்தலின் இவையே சிறந்தவை இன்னும்கேளும் மதிவாணரே! சவர்ணதானம் கோதானம், பூதானம், கன்னிகாதானம் என்று சொல்லப்பட்டவை ஒருவன் செய்த பாவங்களை விலக்கத்தக்கவை இந்தத் தானங்களைச் சத் புருஷருக்குச் செய்யும் பட்சத்தில் அதிகஷ்டமான நரகத்திலிருந்து நீங்குவான். உலகத்தில் சிறந்த பொருளையாவது தன் வீட்டில் உள்ளவற்றில் சிறந்ததாக மதித்திருக்கும் பொருளையாவது குணவானுக்குத் தானம் செய்தால், அழியாத பதவி கிடைக்கும் வாங்குவோனுக்கு விருப்பமான பொருளை யடைந்து, இகலோகத்திலும், பரலோகத்திலும் சகல பூதங்களுக்கும் பிரியமானவனாவான். யாசியாதவனும் தேகாபிமானம் விடுத்தவனும் தரித்திரனமாகிய யாசகனுக்குச் சக்தியானுசாரம் பூஜைசெய்து உதவி செய்யாதவன் நர அதமனும் மகா பாவியுமாவான். சத்துருவாக இருந்தாலும் ஆபத்து வேளையில் ஆதரிப்பவனே புருஷன் என்று உலகில் சொல்லப்படுவான், ஏழையும் அபிமானியும் ஜீவனோபாயம் இல்லாதவனுமாகிய ஒருவனைக் காத்து வந்தவனும் புருஷனேயாவான், தரித்திரத்தால் துன்பம் அடைந்தவனும் மனைவி புத்திரர்களையுடையவனும் நியதவிரதமுடையவனும் நாணத்தால் யாசியாதவனுமாகவுள்ள சத்புருஷனை நல்ல தானகாலத்தில் எல்லா உபசாரங்களோடும் உபசாரஞ் செய்தவன் பெரும்புகழை உலகில் மானுடரும் தேவரும் பெறமாட்டார்கள். உண்மையைச் சொல்லுவோரும் நியாயவழியிலே ஜீவிப்போரும் முறைப்படி வேத ஆராய்ச்சியோடும் விரதங்களை அனுஷ்டித்தவரும் முக்திமார்க்கத்தையே விரும்பியவரும், பெருமை கருதாமல் தவஞ்செய்வோரும், பிற மகளிரைக் கூடி மகிழாதவரும் சக்திக்கு ஏற்பத் தானஞ்செய்வோரும் ஸ்ருதி, ஸ்மிருதி புராணங்களை உணர்ந்தவரும், யாகாதி காரியங்களைச் செய்தோரும் ஆகிய மகாத்மாக்களும் அவர்களது ஆசாரியர்களும் புரோஹிதர்களும் எப்போதும் பூஜிக்கத்தக்கவர்கள். ஆகையால் தர்மத்தையே செய்ய விருப்பம் தரகொண்டு, இவரைத் தமது புத்திரர் போலப் பரிபாலனஞ்செய்வோரும் சுபகாரிங்களையே செய்வோரும் பூஜிதர்கள் தன்னுடைய தர்மங்களை நியதியாக அனுஷ்டிப்பவன் வேதியரை எப்போதும் நமஸ்கரிக்க வேண்டும் வேதியனைத் தாயைப்போல மரியாதை பாராட்டிப்பணிபவனுடைய பாவங்கள் அவனுடைய பக்தியாகிய கத்தியினாலே கழிக்கப்படும் க்ஷத்திரியர்களும் உத்தம வேதியர்களை நமஸ்கரித்தே சிறந்த பயனை அடையவேண்டும். வேதியரிடம் பக்தி வையாமலும் பூஜியாமலும் திரஸ்கரித்தவனை உலகத்தார் நிந்திப்பார்கள். அவர்கள் மறுபிறவியிலும் கஷ்டம் அனுபவிப்பார்கள். இது அனாதியாக உள்ள தருமம். ஆகையால் இதை உமக்குச் சொன்னேன் க்ஷத்திரியன் எப்போதும் மறையவனைப் பணிய வேண்டும். வைசியன் க்ஷத்திரியனையும் வேதியனையும் வணங்க வேண்டும். சூத்திரன், வைசிய, க்ஷத்திரிய பிராமணரை நமஸ்கரிக்க வேண்டும் இத்தகையவர்ணத்தவர்களும் மேன்மைத் தன்மையும் சத்திய குணமும் தர்மானுஷ்டானமும் உள்ளவர்களைக் குடிப்பிறப்பு நோக்காமல் வணங்கத் தகும் என்று ஸனத்குமாரர் கூறினார்.
வியாசர், ஸனத்குமார முனிவரை நோக்கி, சுவாமி வித்தையில் மேம்பட்டவனும் வயதில் மேம்பட்டவனுமாகிய இருவரில், தானபாத்திரனாக உள்ளவன் யாவன்? என்னும் விஷயத்தை அடியேனுக்கு விளக்கியருளவேண்டும் என்று கேட்க ஸனத்குமார முனிவர் கூறுகிறார். வியாசரே! வித்தையால் சிறந்தவனும் வயதில் மூத்தவனும் சிறந்த தான பாத்திரர்களாகமாட்டார்கள். சதாசார சம்பத்தையுடைய அந்தணோத்தமனே தானம் பெறத்தக்கவரில் உயர்ந்தவன் யாசித்தவனுக்குக் கொடுக்கும் தானத்தைவிட யாசியாதிருந்த பிராமணனுடைய விருப்பத்தையறிந்து கொடுக்கும் தானமே சிறந்தது அப்படி யாசியாதிருப்பவர்களிலேயும் தேகாபிமானத்தால் மிக்க சிரமத்தை அனுபவிப்பவனை விட விரக்தனாக இருப்பவன் சத்பாத்திரன் யுத்தத்தில் பெரு விருப்பமுடைய க்ஷத்திரியனும் யாக காரியத்திலேயே மனமுடைய பிராமணனும் தேவர்களைத் திருப்தி செய்பவர்களாவார்கள். பிராமணன் ஒரு பொருளை யாசித்தலால் திருடன் ஊராரைத் தொந்தரவு செய்வது போல, பிறருடைய பஞ்சேந்திரிங்களைத் துன்புறுத்துகிறான். ஆனால் யாசித்தவன் மரணத்துத்குச் சமமான துக்கத்தை அடைகிறான். அவ்வாறு யாசித்தவனுக்கு இல்லை என்று சொல்வது! அதைக் காட்டிலும் துக்ககரமானது கொடையாளியோ தன்னால் இயன்ற வரையில் தானஞ் செய்து தன் ஆன்மாவை உஜ்ஜீவிக்கச் செய்கிறான். ஜீவஹிம்சை செய்யாதிருப்பதே உத்தமமான தர்மம் குடும்பம் வருத்தமடையும் பொழுதும் யாசிக்கப்படாதென்னும் கொள்கையால் துக்கமடைந்திருப்போரைக் கண்டுபிடித்து, முயற்சி பூர்வமாகத் தானஞ்செய்ய வேண்டும். எந்த ஆட்சியில் யாசியாத விரதம் பூண்ட வேதியர் வாழ்ந்திருப்பார்களோ, அந்த அரசாட்சியில் உள்ளோர் நீறு பூத்த நெருப்புப் போல விளங்குவார்கள். அவர்களுடைய தரிசனத்தால் தங்கள் பாவங்களை ஒழித்து கிருதார்த்தர்களாக்கப்படுவார்கள். ஞானம் விஞ்ஞானம் பிரபாவம் அந்தகரமான தவம் வேதவேதாகம உணர்ச்சி விரதாசரணம். சந்ததி விருத்திக்காக ஸ்திரீசங்கமம் முதலிய செயல்களையுடைய நல்ல பிராமணர்களைப் பிரியமான உபசாரங்களால் உத்தமமான தான காலங்களில் பூஜிக்க வேண்டும். அவ்வகையில் சக்திக்கேற்ப தானம் கொடுக்கும்போது வாங்குவோன் பொருளாசையுடன் வாங்காமல் கொடுப்போனை உஜ்ஜீவிக்கச் செய்யவேண்டும் என்னும் கருத்தோடு வாங்கிக்கொள்ள வேண்டும். பயிரானது வாட்டமடைந்த மேகமானது எப்போது மழை பொழியும் என்று எதிர் பார்த்துக்கொண்டிருப்பது போல, தானவான் சத்பாத்திரமானவன் எப்போது வருவான் என்று எதிர்பார்த்தவனாக இருக்க வேண்டும். இத்தகைய வள்ளலுக்குச் சந்தேகமின்றி மோக்ஷம் கரதலாமலகமாகச் சித்திக்கும்.
முனிவரே! க்ஷத்திரியனானவன் அரசியல் விஷயத்தில் பரிபாலிக்க வேண்டி அநேகத் தீயசெயல்களைச் செய்தாலும் அதனால் விளையும் பாபங்களை ஒழிக்க அநேகம் யாகங்களையும் சிறந்த தானங்களையும் செய்ய வேண்டும் பாவிகளான அரசர்கள் கொடுக்கும் தானத்தைப்புண்ணிய சீலர்களாகிய அந்தணர்கள் பெறமாட்டார்கள். பாவிகளான அரசர்கள் நாள்தோறும் தானஞ்செய்து நமது பாவங்களைப் போக்கிக் கொண்டு வருவார்களானால் புண்ணியர்களான அந்தணரும் அவர்களிடம் தானம் பெறுவார்கள். தனவான்மித்திரனையும் புத்திரனையும் வேதபாரகரையும் சதாசர சம்பன்னரையும் விசேஷமாகச் சன்மானித்து தன் வீட்டையடைந்த விப்பிரனுக்குத் தானம் செய்ய வேண்டும் பசுக்கள், எருதுகள் அன்னம்; குடை வஸ்திரம் பாதுகை குதிரை முதலிய வாகனங்கள் வீடுகள். சயனங்கள் என்பவை சிரேஷ்டமான பயனைக்கொடுக்கத் தக்கவை. பிழைக்க வழி இல்லாத பிராமணருக்குப் பிழைக்கவழி செய்வானாகில் எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்கி சுவர்க்கம் அடைவான். தன் ஊழியக்காரரைப் புத்திரரைப் போல அன்புபாராட்டி நடத்தவேண்டும் வேதியர் யோக÷க்ஷமங்களை நாள்தோறும் விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும் குடிகளை வருத்தி விசேஷமாக வரி முதலியவற்றை வாங்கிக் கஷ்டப்படுத்தும் மன்னன் பெரும்பாவியாக அழைக்கப்படுவான். நியாமார்க்கமாக வரி வாங்கித் தான தருமங்களைச் செய்யும் அரசன் கொடுத்த தானம் சிறிதாயினும் மேலோர் அதையே அனந்தமாகக் கொள்வார்கள் நல்லமுறைப்படி தேடிய பொருளால் செய்த யாகத்தால் தேவர்கள் திருப்தியடைவார்கள். சமுத்திர ஜலத்தைப் பானஞ் செய்து சூல் கொண்டு எழுந்த மேகமானது, பெருமழையை பெய்வித்தது போல, மன்னன் குடிகளிடத்தில் தேடிய பொருளைக்கொண்டு யாகஞ்செய்து அந்தணருக்கு அபரிமிதமாகத் தானம் கொடுக்க வேண்டும். பாலர், விருத்தர், அந்தகர், விவேகஹீனர் முதலானோருடைய பொருளை அரசனே காத்து அவர்களுக்கே பயன்படுத்துவது பெரியோராவது தானஞ்செய்த பொருளையும் அரசன் ஏற்கக் கூடாது. இவ்வண்ணம் செய்யாமல் அதிக்கிரமத்துப் பொருள் தேடும் மன்னன் தன் இராஜ்ஜியத்தைத்தானே அழிப்பவனாவான். பண்டிதரும் தேவபாரகரும் ஜீவனமில்லாமல் தன் இராஜ்ஜியத்தில் இருக்கும்படி ஆட்சி செய்வோன் உயிர் பிழைத்திருத்தல் அவலம் அவ்வரசன் வேதோக்தமாக பண்டிதர் முதலோனாருக்குச் சீவனோ பாயம் உண்டு செய்ய வேண்டும் என்று சிபிச் சக்கரவர்த்தி முதலியோர் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு செய்யாதவனுடைய இராஜ்ஜியத்தையும் குடும்பத்தையும் வடவாமுகாக்கினி தகித்து விடும் பதிவிரதா தர்மங் கெட்ட மங்கையர்கள் வாழும் இராஜ்யாதிகாரி மஹா நரகத்தை அடைவான். தானம், யாகம், நீதி முதலிய நற்செய்கைகள் இல்லாத அரசனை அவனது ஆட்சியிலுள்ளவர்கள் பலரும் நிந்தித்து அவமானப்படுத்துவார்கள் நன்றாக ஆட்சி புரிவேன் என்று கூறி முறை தவறி நடத்தும் அரசனைப் பலரும் கூடி அடித்துக் கொல்லுவார்கள், அரசனது ஆக்ஞைக்குறைவால் குடி மக்கள் செய்யும் பாவத்தில் அந்த மன்னன் காற்பங்கு பெறுவான் என்று கூறுகிறார்கள் ஆயினும் அது என் மதமன்று அவன் அந்தப் பாவம் முழுவதையும் அல்லது அரைப்பங்கையாவது அடையவேண்டும். வேந்தன் சரிவர ஆட்சி நடத்துவதால் குடி மக்கள் செய்யும் புண்ணியத்தில் அவன் காற்பங்கு பெறுவான் என்பதில் ஐயமில்லை! என்று ஸனத்குமார முனிவர், வியாச முனிவருக்குத் திருவாய் மலர்ந்தருளினார்.
பிதுர்களும் தேவர்களும் வேதியர்களும் அதிதிகளுமாகிய இவர்களை அன்னத்தால் ஆனந்திக்கச் செய்பவன் அளவற்ற புண்ணியத்தை அடைவான், பெரும்பாவியாக இருந்தாலும் அதிதிக்கு அன்னம் அளித்தவனுடைய பாவங்கள் எல்லாம் நெருப்புப் பொறிபட்டபஞ்சுப் பொதிபோல் ஒழிந்துபோம், அதிலும் அந்த அதிதி அந்தணனாக இருப்பின், விசேஷமான பலன் கைகூடும். சூத்திரனுக்கு அன்னபானங்களைத் தானஞ் செய்தால் அவை சிறந்த பயனை விளைவிக்கும் அதுவே பிராமணருக்குக் கொடுக்க நேர்ந்தால் அக்ஷயமாகும். ஆதரவற்று வந்த அதிதியை, குலம் கோத்திரம் விசாரியாமல் அந்த அதிதிக்கு அன்னதானஞ் செய்யவேண்டும் அன்னதானம் செய்தவன் திவ்வியமான சம்பத்துகள் உண்டாகப் பெற்று, தன் பிள்ளைகள் நண்பர்கள் முதலானவர்களால் உபசரிக்கப் பெற்று, அவ்வாறே சுவர்க்கலோகத்திலும் காமதேனு, கற்பக விருக்ஷம் முதலியவற்றால் தன் பணிகள் செய்யப்பெறுவான். வியாசரே! அன்னதானத்தினால் சுவர்க்கலோகத்தை அடைந்து அதைப் பிரகாசிக்கச் செய்வார்கள். அங்கு அவர்கள் விரும்பிய சுகங்கள் யாவும் சித்திக்கும் பொன்னாலான கிணறுகளும் மனோகரமான தடாகங்களும் மலர்ச்சோலைகளும் எண்ணற்ற வாகனங்களும் சிறந்த பக்ஷியங்களும் தேவான்னமும் சீனி சீனாம் பரங்களும் நவரத்தின ஆபரணங்களும் அவர்களுக்கு உண்டாகும். அங்கு நதியாகப் பால் பெருக்கெடுத்து ஓடும் பவளமாளிகைகள் பொன் நிறக்கட்டில்கள் முதலானவற்றோடு விரும்பிய இடங்களிலெல்லாம் சஞ்சரிப்பார்கள். புண்ணியகரமான அன்னதானத்தால் இத்தகைய சிறந்த பதவிகள் கைகூடுவதால் அன்னதானமே விசேஷமாகச் செய்யத்தக்கது.சிரார்த்த காலத்தில் நல்லவனான வேதியனுக்குப் பக்தியோடு, அன்னதானம் செய்தவன் தன் பிதுர்க்களை குறைவற்ற பதவியில் இருத்துவான்.
21. நீர்வழங்கல், மரம்வெட்டல் வாய்மை தவம்
நீர்த்தானம் எல்லாத் தானங்களிலும் சிறந்தது. ஆகையால் வாவி, சுபம், தடாகம் முதலியவற்றை ஒருவர் ஏற்படுத்த வேண்டும் கிணறு வெட்டவேண்டும் என்று கருதியவனுக்கு அப்போதே அவனிடமுள்ள பாவத்தில் பாதி தொலையும். பசுக்கள், விப்பிரர், நல்லோர் சாதாரண மனிதர்கள் முதலிய எல்லோருக்கும் பயன்படும்படி ஒரு நீர்த் துறையைத் தோண்டுவித்தவன் தன் வம்சத்தார்கள் எல்லோரையும் புனிதர்களாக்க வல்லவனாவான். அந்த நீர்த்துறை வேனிற்காலத்திலும் வற்றாத தண்ணீர் உள்ளதாகவும் சாதாரணமாக ஏறி இறங்கக்கூடிய தாகவும் இருக்க வேண்டும். தடாகம் நிர்மாணஞ் செய்தவன் மூவுலகங்களிலும் மற்றெவ்விடத்திலும் பூஜிக்கத் தக்கவனாகவாவது சூரிய லோகத்திலாவது வீற்றிருப்பான். இவ்வுலகில் அவனுக்குப் புகழ் உண்டாகும் திருத்தலங்களில் விசாலமான ஒரு தடாகத்தையாவது, கிணற்றையாவது பலருக்கும் பயன்படும்படி ஏற்படுத்தியவனுக்கு அறம், பொருள், இன்பம் என்பன கைகூடுவதுடன் உத்தமமான சம்பத்தும் கைகூடும். இத்தகைய ஜலாசயத்தைத் தேவர்களும் மனிதரும் கந்தர்வரும் பிதுரரும் உரகரும் ராட்சசரும் தாவரங்களும் எப்போதும் விரும்புகிறார்கள். வருஷருதுவில் முழுநீருள்ள கிணற்றை எடுப்பித்தவனுக்கு எப்போதும் நிக்தியாக்னியை வளர்த்த பயன் சித்திக்கும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். சரத்காலத்தில் முழுநீருள்ள கிணற்றை எடுப்பித்தவனுக்கு ஆயிரம் கோதானம் செய்த பயன் சந்தேகமில்லாமல் கிடைக்கும்.
ஏமந்த சிசிரருதுக்கில் முழுநீருள்ள கிணற்றை எடுப்பித்தவனுக்கு, சிறப்பான பொன் தக்ஷிணை கொடுத்து மகாயாகம் செய்வித்த கிணற்றை எடுப்பித்தவனுக்கு அதிராத்திரம் அஸ்வமேதம் என்ற யாகங்களைச் செய்த பயன் உண்டாகும். பலவிதமான மரங்களை நிழல் இல்லாத இடங்களில் உண்டாக்கி வளர்த்து வழிப் போக்கர்களுக்கு நிழலுண்டாக்கியவன் தன் வமிசத்தில் இறந்தவர்களையும் இனி பிறப்பவர்களையும் பாவிகளாக இருந்தாலும் தூய்மைப்படுத்த பிதுரர்களுக்குப் பிரீதி உண்டாக்குபவனாவான். ஒருவன் இறந்து பிறகு, அவனது புத்திரர் அவனைச் சந்ததியடையும் படிப் பலவித கிரியைகளைச் செய்வது போல், ஒருவன் வளர்த்த மரங்களும் அவனைச் சந்ததியடையச் செய்விக்கும். மரங்கள் மலர்களினால் தேவகணங்களையும் பழங்களினால் பிதுர்த்தேவர்களையும் நிழலினால் அதிதிகளையும் பூஜிக்கின்றன, மலர், பழம் முதலியவற்றுடன் கூடி நின்று, பூவுலகத்தில் இருப்பவர்களையும் திருப்தி செய்விக்கின்றன. கின்னரர், உரகர் இராக்ஷசர் தேவர், கந்தருவர், மானவர், ரிஷிகணங்கள் முதலிய யாவரும் விருக்ஷங்கள் விரும்புகிறார்கள் இகத்திலும் பரத்திலும் இம்மரங்கள் தம்மை வளர்த்தவனுக்குப் புத்திரர்கள் என்று சொல்லப்படுகின்றன. நீர்த் துறைகளை உண்டாக்குபவர்களும் மரங்களை நட்டுவளர்ப்பவர்களும் யாகங்களைச் செய்த வேதியர்களும் சத்தியவான்களும் ஒரு காலத்திலும் ஸ்வர்க்க லோகத்தை விட்டு நீங்கமாட்டார்கள்.
வியாச முனிவரே! மேலும் கேளும். சத்தியமே பரப்பிரம்ம சொரூபம், சத்தியமே சிறந்த தவம் சத்தியமே சிறந்த யாகம், சத்தியமே சிறந்தது என்று சொல்லப்படுகிறது. சத்தியமே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, சத்தியமே மேம்பட்ட பதவி சத்தியமே தேவரிஷி, பிதுர் பூஜைக்கு உரியதாக இருப்பது, சத்தியமே, விரதாசரணம், சத்தியஸ்வரூபமே, ஓங்காரம் சத்தியத்தினாலேயே காற்று வீசுதலும் சூரியன் தகித்தலும் அக்கினி எரிதலும் என்று உணரவேண்டும், சத்தியத்திலேயே சுவர்க்கம் நிலை பெற்றுள்ளது. சத்தியவானுக்கு சர்வவேத பாராயணமும் சகல தீர்த்தஸ்நானமுஞ் செய்த பயன் கைகூடுவதுடன் தன் கோரிக்கைகள் யாவற்றையும் அடையக்கூடும். ஆயிரம் அஸ்வமேத யாகங்களைச் செய்த பயனையும் சத்தியத்தின் பயனையும் நிறுத்தால் சத்தியத்தின் பயனே விசேஷமாக இருக்கும் சத்தியத்தினாலேயே தேவர்களும் முனிவர்களும் திருப்தியடைகிறார்கள் சத்தியமே கவனிக்கத்தக்கது, முனிவர்கள் சத்தியத்தினாலேயே சிறந்த சித்திகளை அடைந்து, அப்சரசுகளுடன் கூடி திவ்விய விமானங்களில் ஏறி விரும்பிய இடங்களில் சென்று திரும்புகிறார்கள். ஆழ்ந்தும் பரந்தும் வணங்கும் புண்ணிய தீர்த்தமான சத்தியத்தில் நல்ல மனத்தோடு மூழ்கவேண்டும். அதுவே தூய்மையான நீராடலாகும்; தன்னை முன்னிட்டோ பிறரை முன்னிட்டோ பொய் சொல்லாமல் சத்தியத்தையே சொல்பவர்கள் எப்பொழுதும் சுவர்க்க பதவியிலேயே இருப்பார்கள். பிராமணரிடத்தில் வேதம் யாகம் மந்திரம் முதலியன எப்போதும் இருக்கின்றன எனினும் அவர்கள் சத்தியமற்றவர்களானால் ஒரு புல்லையும் அடையமாட்டார்கள். ஆகையால் மனநிறைவாக மக்கள் அனைவரும் வாய்மையே உறுதியாக கொள்ள வேண்டும். இவ்வாறு கூறிய குமார முனிவரை நோக்கி வியாச முனிவர் பிரம்ம புத்திரராகிய ஸநத்குமார முனிவரே! எல்லா வருணத்தவர்களுக்கும் விசேஷமாகப் பிராமணர்களுக்கும் நிதியாக விளங்கும் தவத்தின் பிரபாவத்தை விவரிக்கச் சொல்ல வேண்டுகிறேன் என்று கேட்டார் ஸநத்குமார முனிவர் கூறலானார்.
வியாசரே! எல்லா விருப்பங்களையும் கொடுக்கவல்லதும் பிராமணர்களால் பெருங்கஷ்டத்துடன் செய்யத்தக்கதுமான தவத்தின் மகிமையைச் சொல்லுகிறேன் கேளும். தவமே பரப்பிரம ஸ்வரூபம் என்று பெரியோர்கள் கூறுவார்கள். தவத்தினாலேயே பெரும் பயன்கள் சுகமனுபவிப்பார்கள். விருப்பமுடையவர் தேவர்களுடன் கூடிச் சுகமனுபவிப்பார்கள். தவத்தாலேயே சுவர்க்கம் புகழ் மோட்சம் இறைவன் தரிசனம் ஞானம், அஞ்ஞானம், சவுபாக்கியம் உருவம் இஷ்ட சித்திகள் முதலியன கைகூடும். தவஞ்செய்யாதவர்கள் ஒரு காலத்திலும் பிரமலோகத்தைக் காணமாட்டார்கள் எந்தக் கோரிக்கையோடு தவஞ்செய்தாலும் அது அந்தக் கோரிக்கையை ஈடேற்றுங்கள் பிரமச்சரியத்தை மேற்கொண்ட எண்பத்தாறாயிரம் முனிவர்களும் தவத்தை அனுசரித்தே சுவர்க்கத்தில் தேவர்களுடன் கூடி ஆனந்தப்படுகிறார்கள். இந்திரன் எண்ணிறந்தக் காலம் பெருந் தவஞ் செய்து உலகங்களைப் பிரகாசிக்கச் செய்கிறார்கள். தவத்தைச் செய்யா விட்டால் இகத்திலும் பரத்திலும் சிறிதும் சுகம் என்பது உண்டாகாது. தவத்தையே கடைப்பிடித்துச் செய்தவர்கள் பலவிதமான பயன்களை அடைவார்கள். எல்லாவற்றையும் மனிதன் தவத்தாலேயே அடைய வேண்டும். காட்டிலுள்ள கந்த மூலங்களையே சாப்பிட்டுத் தபோ வனத்தில் தவஞ்செய்து கொண்டிருப்பவன் மிகவும் பரிசுத்தனாக வேதத்தை முறைப்படி அத்தியயனம் செய்தவன் பெறும் பயனை அடைவான்.
ஸத்யவதி புதல்வரே இவற்றையெல்லாம் முறைப்படி அறிந்து கொள்வதற்குப் புராணங்கள் சிறப்பானவை, புராணம் கேட்பதினால் பரத்தின் தன்மை இத்தகையது, என்று ஒருவன் உணரக்கூடும். புராணம் சொல்லுதலும் சத்தியவானாகித் தவத்தை மேற்கொண்டு வனத்தில் இருக்கும் புண்ணிய வடிவமான வேதியனால் சொல்லத்தகும். புராணங்களின் விஷயங்களையெல்லாம் உணர்ந்த குருவே, நல்லோருக்குள் உயர்ந்தவன். பாவத்தால் நரகம் அடைய வேண்டியவனிடம் சிறிது பொருளைப் பெற்று அவனுடைய பாவத்தை விலக்கிப்புண்ணியத்தை உண்டு செய்ய வல்லவன் என்பதே அதற்குப் பொருள்படும் தனம், தானியம் இளமை தீரம் முதலியவற்றை உத்தமனுக்குத் தானம் செய்தவன் உன்னதமான கதியை அடைவான். பகவும் இரதமும் எருமையும் குதிரையும் சத்பாத்திரன் பெறும்படித் தானஞ்செய்தவன் எல்லாப் பயன்களையும் கொடுக்கத்தக்க அஸ்வமேத யாகம் செய்த பயனை அடைவான். கருமையாயும் விசேஷ விளைவைக் கொடுப்பதாகமுள்ள பூமியைத் தானஞ் செய்தவன். தன் வம்சத்தில் முன் சென்ற பத்துத் தலைமுறைகளையும் பின்வரும் பத்துத் தலைமுறையினரையும் கடைத்தேறச் செய்து தானும் திவ்வியமான விமானத்தில் ஏறிச் சிவலோகத்தை அடைவான். புராணம் கேட்பதால் திருப்தியடைவதைப் போல் யாகத்தாலோ புஷ்ப பூஜையாலோ கூடத்தேவர்கள் திருப்தியடையமாட்டார்கள். சிவாலயத்திலோ பெருமாள் கோவிலிலோ சூரியனின் எதிரிலோ பிறதேவர் சந்நிதியிலோ புராணத்தைத் திகழச் செய்பவன் இராஜசூய அஸ்வமேதயாகங்கள் செய்த பயனைப் பெறுவான். புராண இதிகாசங்கள் படிப்பதால் விரும்பியவற்றையெல்லாம் பெற்று சூரிய மண்டல பூவுலகில் பேரரசனாகப் பிறப்பான் தேவர் சன்னிதியில் ஜெய ஜெயவென்று புகழ்ந்தோர் ஆயிரம் அஸ்வமேத பயனை அடைவார்கள் ஆகையால் எல்லா ஆலயத்தில் புராண இதிகாசங்களைக் கேட்டால் சிவபெருமானுக்கும் பிறதேவர்களுக்கும் பெரு மகிழ்ச்சியுண்டாகும். இவ்வாறு ஸநத்குமாரமுனிவர் வியாசமுனிவருக்குச் சொன்னதாக சூதமுனிவர், நைமிசாரணிய வாசிகளுக்குச் சொன்னார்.
22. புராணம் கேட்பதின் பலன்கள்!
புராணம் படித்தலின் பலன் எத்தகையது என்று எனக்குச் சொல்லவேண்டும் என ஸநத்குமாரமுனிவர் தம் தந்தையான பிரமதேவரைக் கேட்டார் பிரமதேவர் அதை ஸநத்குமாரமுனிவருக்குச் சொன்னார். ஸநத்குமாரர் அதையே பின்னொரு காலத்தில் வியாசருக்கு வெளியிட்டார். அவ்வியாச பகவான் எனக்கு கூறியருளிய வகையிலேயே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் கேட்பீர்களாக என்று சூத புராணிகர் சொல்லத் தொடங்கினார். பிரமதேவர், ஸநத்குமார முனிவரை நோக்கி, மகனே! நான் ஒரு காலத்தில் இயமலோகத்திற்கு வேடிக்கை பார்க்கச் சென்றேன். அப்போது யமதர்மராஜன் என்னைப் பூஜித்து அர்க்கிய பாத்திய ஆசமனாதிகளால் உபசரித்தான். பிறகு ஒரு திவ்வியமான பீடத்தில் இருவரும் அமர்ந்து உரையாடினோம் அப்போது அற்புதம் ஒன்றைக் கண்டேன். அதாவது வைடூரிய மணிகளால் உருவாக்கிய ஓரங்கள் உள்ளதும் பலவித இரத்தினங்களாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டதும் மணி மலைகள் கட்டபட்டுக் கணகணவென்று ஒலிப்பதுமான திவ்விய விமானம் ஒன்றில் ஒரு திவ்விய புருஷன் வந்தான் அவனை யமன்கண்டதும் எழுந்து நல்வார்த்தைகளைச் சொல்லி, சுகமா? என்று விசாரித்து தர்மம் உணர்ந்தவனே! உன் தரிசனத்தால் மகிழ்ந்தேன். உனக்கு இங்கு இருக்க விருப்பம் உள்ள வரையில் இங்கிருந்து, பிறகு நீ பரமலோகத்திற்குப் போகலாம் என்று சொன்னான். அப்பொழுதே மற்றொருவன் அது போன்ற ஒரு விமானத்தில் வந்தான். இயமன் அவனையும் அன்புடன் பூசித்து முன்வந்தவனுக்குக் கூறியதைப் போலவே, உபசார வார்த்தைகளைக் கூறி நலம் விசாரித்தான் அதைக்கண்டு நான் வியப்புற்று. இயமனை நோக்கி, உன்னிடம் இப்போது வந்த இருவரும் யார்? அவர்கள் செய்துள்ள நற்கர்மங்கள் யாவை? நீ அவர்களை மதித்த காரணம் என்ன? தேவர்களால் பூஜிக்கப்பட்ட அவர்கள் யார் என்று கேட்டேன் அதற்கு இயமதர்மன் கூறினான்.
பூவுலகில் வைதிசம் என்ற நகரத்தில் தராபாலன் என்ற அரசன் ஒருவன் இருந்தான். அந்தச் சமயத்தில் பார்வதி தேவி தனக்கு அபகாரம் செய்த ஒரு தோழியைப் பன்னிரண்டு ஆண்டுகள் நரியாகத் திரியும்படிச் சாபமிட்டாள். பிறகு விதஸ்தா வேத்திரவதி என்ற நதி சங்கம தீரத்தில் உன் சாபம் ஒழிக! என்று சாபவிமோசனமும் கூறினாள். அதனால் அந்தத் தோழி நரிவடிவம் பெற்று உலகில் பன்னிரண்டு ஆண்டுகள் சஞ்சரித்து, ஒரு காலத்தில் நதிகளின் சங்கம÷க்ஷத்திரத்தை அடைந்து அங்கு உணவு எதுவும் கிடைக்காமல் உயிர் நீங்கித் திவ்விய சரீரம் பெற்று விமானத்தில் ஏறிச் சிவசன்னிதியை யடைந்து, பண்டைய பணிவிடைகள் புரிந்து வந்தாள். அதை அச்சமயத்தில் அருகிருந்து கண்ட தராபாலன் என்ற மன்னன். ஆஹா இந்த நரி உயிர் விட்டவுடனே திவ்வியவிமானம் ஏறி நற்கதி அடைந்தது அல்லவா? இது உத்தம ÷க்ஷத்திரம் என்று கருதி அங்கு ஓர் ஆலயம் கட்டி, அதில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பரிவார தேவதைகளையும் நிறுத்தி, திவ்வியமான மண்டபம், கோபுரம் பிரகாரம் முதலியயாவையும் முடித்து அனைவரும் வழிபடச் செய்தான். இந்நிலையில் புராண இதிகாசங்களை நன்றாகக் கற்றுத் தேர்ந்து பிறருக்குரைத்து பிரமஞானம் பெற்ற வேதியர் ஒருவர் வந்தார். அரசன் அவரை பூஜித்து அவனிடமிருந்த புராணப் புத்தகத்தையும் கந்த புஷ்ப தூப தீபங்களால் பூஜித்து வினையமாக அவ்வேதியரை நோக்கி, நான் சிவாலயம் ஒன்றை இங்கு கட்டியிருக்கிறேன் அச்சிவ சன்னிதானத்தில் புராணம் கேட்க வேண்டும் என்று கருதும் நாற்குலத்தார்களும் கேட்கும்படி புராணச் சொல்லும்போது வருஷம் ஒன்றுக்கு நூறு பொன் நிஷ்கம் ஜீவனத்திற்காகக் கொடுத்து வருகிறேன். உமக்கும் இது ஒரு நல்ல உத்தியோகம்! என்று கூறி அவரைச் சம்மதிக்கச் செய்துப் புராணஞ் சொல்லுவிக்கத் துவங்கி ஆறுமாதம் ஊராருடன் தானும் இருந்து புராணம் கேட்டான், பிறகு தன் ஆயுள் முடிந்ததால் அரசன் காலகதியடைந்தான். அப்பொழுதே சிவனருனால் திவ்வியமான விமானத்தைக் கொண்டு சென்று அவனை நான் அழைத்துக் கொண்டு வந்தேன் இது இவனுடைய சுககர்ம பலன்! இது புண்ணிய சரிதம் புராணம் கேட்டால் எல்லாத் தேவர்களுக்கும் திருப்தியுண்டாவது போல் கந்த புஷ்பாதி உபகரணங்களால் செய்த பூஜையாலும், கோதானம் சொர்ணதானம் வெள்ளிதானம் வஸ்திரதானம் முதலிய தானத்தாலும் திருப்தியுண்டாகாது, தர்மங்களைச் சொல்லும் புராணம் கேட்பதாலேயே தேவர்கள் பிரீதியை அடைவார்கள். புராண இதிகாச சிரவணத்தால் நானும் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன் அதையே நானும் புகழ்வேன். இவன் இவ்வாறு புராண சிரவணம் செய்த புண்ணியன் நல்லோர் உறவால் அறவுணர்வு உண்டாகி, தர்மங்களை யெல்லாம் நன்கு உணரப்புராணம் கேட்க வேண்டும் என்ற இச்சையால் சிரத்தை பக்திகளுடன் கூடிப் புராணஞ் சொல்லிச் செய்து அதைக் கேட்டு விசேஷமான பக்தியை அடைந்தான் ஆகையால், மனிதன் புராணஞ்சொல்லும் பெரியோரிடம் சென்று வலம் சுற்றி வணங்கி கருமித்தனமின்றிப் பொன்னைத் தக்ஷிணயாகக் கொடுத்தால் சாசுவதமாகப் பிரமபதவியை அடைவான்.
இரண்டாவது விமானத்தில் வந்தவனும் அதே நற்செயல் செய்தவனேயாகும். அவன் புராணிகனுக்கு விசேஷ பூஜை செய்திருக்கிறான் ஆகையால் அதைக் கருதியே நான் அவனையும் பூஜித்தேன் புராணஞ் சொல்பவனைப் பூஜித்தலால் நானும் பிரமவிஷ்ணு ருத்திரர்களும் பூஜிக்கப் பட்டவர்களாவோம் சிரார்த்தாதி காலங்களில் உத்தமமான பக்ஷிய போஜனங்களுடன் ஒருமுறை பூஜிப்பவர்கள் என்னைப் பதினைந்து ஆண்டுகள் பூஜித்த பயனை அடைவார்கள் புராணப் பிரசங்கியை ஒருமுறை திருப்தி செய்தால் பல ஆண்டுகள் நான் திருப்தியடைவேன் நான் மட்டுமல்ல. இந்திராதி தேவர்களும் பிருமா திருமால் சிவபெருமான் முதலானவர்களும் திருப்தியடைவார்கள். புராணப் பிரசங்கி மகிழ்ச்சியடைவானாயின் எல்லாத் தேவர்களும் மும்மூர்த்திகளும் சந்திர சூரியர்களும் கிரகங்களும் மகிழ்ச்சியடைவார்கள் ஸ்நானம், பூஜை, ஜபம் ஹோமம், சாஸ்திரம், சவுசம் அஹிம்சை, விரதாசரணம், உபவாசம், தைரியம், மவுனவிரதம், புலனடக்கம், பிரமஞானம், குரோதமின்மை, தானம், சாந்தி, தயை நீர்த்துறைகளை நிலைநாட்டல் சாந்திராயணம், யாகங்கள் தீர்த்தங்கள் ஆசிரமங்கள் முதலியனவெல்லாம் தர்ம சாதனத்திற்காகவே இருக்கின்றன என்று பெரியோர் கூறுவார்கள். தர்மத்தாலேயே பொருளும் காமமும் மோக்ஷமும் உண்டாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு விதப் புருஷார்த்தங்களாலேயே இக பரங்களில் நிலையான சுகம் ஏற்படும் பவத்தால் துக்கம் உண்டாகும். ஆகையால் பாவத்தைச் செய்யாமல் தர்மத்தைக் கடைப்பிடித்துப் புண்ணிய கர்மங்களையே செய்ய வேண்டும். அத்தகைய தர்மமும், ஸத்வமயம், ரஜோமயம், தமோமயம், என்று மூவகைப்படும், சத்வமயமான தர்மம், தவத்தால் பிரமஞானமடைந்த முனிவர் சித்தர்கள் போன்றோரிடம் எப்போதும் நிலையாக இருக்கும். ரஜோமயமான தர்மம், தேவர்களிடம் இருக்கும், தமோமயமான தர்மம், தானவ தைத்தியர்களிடம் இருக்கும் பரிசுத்தமான இவர்களுடையச் சத்கர்மம் சொல்லப்பட்டது இது சத்தியம் அத்திவ்விய புருஷர்கள் இருவரும் மஹா புண்ணியர்கள். அவர்களுடைய சரிதத்தை நீ கேட்டதால் நீயும் புண்ணிய புருஷன் என்பதில் சந்தேகமில்லை! இவ்வாறு இயமன் கூறியவை யாவும் சத்தியமே என்று யாவரும் நம்ப வேண்டும்.
மைந்தனே! எனக்கு ஐந்தாவதுமுகம் ஒன்று இருந்தது, அந்த முகத்திலிருந்தே புராணங்கள் பலவிதமாக வெளிப்பட்டு உலகத்திற்கு இதத்தைச் செய்கின்றன. புராணங்கள் எனக்குப் பிரியமானவை வேத வேதாங்கங்களும் எனக்குப் புராணங்களைப் போல் பிரியமானவையல்ல. இந்தப் புராண இதிகாசங்களைச் சிரத்தை பக்திகளுடன் சொல்லும் புராணிகனுக்கு வாழ்க்கை வசதிகள் உண்டாக்கி எப்போதும் புராணம் கேட்டு வருபவர்கள் உத்தமமான கதியை அடைவார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்பவை பூவுலகில் நன்றாக விளங்குவதற்காகவே புராண இதிகாசங்கள் யாவற்றையும் சொன்னேன். இவை வேதப் பொருளை விளக்கமாகச் சொல்லத் தக்கவை. புலமை உடையவர்களே வேதப் பொருளை உணர முடியும் ஆகையால் எல்லோரும் நன்கு உணருமாறு விரிவான புராண இதிகாசங்களைச் சொன்னேன். புராண இதிகாச்களை கேட்பவனும் பக்தியோடுப் பாராயணஞ் செய்பவனும் உன்னதமானப் பதவியை அடைவார்கள். தக்ஷிணத்தைக் கொடுத்துப் புராணம் கேட்டால் பரம்பொருள் வடிவத்தில் ஐக்கியமாகிறான் இது ஓர் ஆச்சரியமல்ல. தீர்õத்தங்களில் கேதாரம், விரதங்களில் மஹாவிரதம் பர்வதங்களில் மேரு, பறவைகளில் கருடன், நதிகளில் கங்கை, தேவர்களில் சர்வேஸ்வரனாகிய சிவபெருமான். பாத்திரங்களில் வாசகன்(புராணிகன்) சிறப்பாகும். இவ்விஷயத்தில் சிறிதுஞ் சந்தேகமில்லை புராணஞ் சொல்லும்போது பக்தியோடு பூஜை செய்தவன் சகல தேவர்களையும் பூஜை செய்தவனாவான்: புராண பாராயணம் செய்தவர்கள் பெறும் புண்ணியம் விந்தையானது; நாள் தோறும் பக்தி சிரத்தையோடு சிவ சந்நிதானத்திலிருந்து புராணம் கேட்பவள் சிவசாயுச்சியத்தை அடைவதில் சிறிதும் சந்தேகமில்லை இது சத்தியம்!
23. தானம் செய்தவர்களின் கதைகள்
நைத்குமாரர் மேலும் கூறலானார்.
வியாச முனிவரே! நல்லோருக்கே தானம் வழங்க வேண்டும் சுவர்ண(பொன்) தானம், கோ(பசு) தானம், பூ (நில) தானம் முதலியவற்றை வாங்குவோர் தானஞ் செய்வோரைப் பவித்திரர் ஆக்குவதோடு தாங்களும் பவித்திரராவார்கள். இத்தானங்களை செய்தோர் எல்லா பாவங்களிலிருந்தும் நீங்குவார்கள். கோ தானம், பூதானம், வித்தியாதானம் ஆகிய மூன்றும் சமமான பயனைக் கொடுக்கக் கூடியவை. இவற்றில் கோதானம், பூதானம் என்பவற்றைக் காட்டிலும் வித்தியா தானம் சிறிது சிறந்ததேயாகும். எருது, பசு, குடை, பாதுகை, பானம், அன்னம் இவற்றைத் தக்கவர்களுக்கு நல்ல மனத்துடன் தானம் செய்தால் சிரத்தையுடன் பெருந் தக்ஷிணை வைத்துச் செய்த யாகமாகும். அசூயையில்லாமல் தானஞ் செய்வதே எல்லா யாகங்களிலும் சிறந்தது. தானம் வாங்கத் தக்க நல்லோரின் பிராமணத் தன்மையையும் நீக்கிவிடத் தக்க கோரமான தானங்களைப் பற்றி இனிச் சொல்கிறேன். செத்தவனின் படுக்கை மான்தோல், சண்டாளன். கைப்பொருள், மிலேச்சன் கைப்பொருள் உபயகோமுகி திராசில் ஏறிய பொருள் குரு÷க்ஷத்திரத்தில் தானம் வாங்குதல் எள் பதிதன் கைப்பொருள், விசேஷ தக்ஷிணையை விரும்பி ஒருவன் பாவத்தை வாங்கல் என்ற இவை பத்தும் கெட்ட தானங்கள் ஆகையால் இவற்றில் ஒன்றை வாங்கிய வேதியன் ஞானஹீனனாகிக் கோரமான நரகத்தை அடைவான். இவற்றைத் தானஞ் செய்தவன் களிமண்ணில் கல்லை வைத்துக் காலையூன்றி அதைக் கடந்து செல்பவன் போல், தன் பாவகர்மத்தில் அவ்வேதியனை வைத்து தான் உத்தம பதவியை அடைவான். தானம் கொடுப்பவனும் வாங்குபவனும் அடையும் பயனைச் சொன்னேன் இன்னும் பெருந்தானங்களையும் கெட்ட தானங்களையும் வாங்குவோனின் நிலையாக விரித்துச் சொல்கிறேன்.
வியாசரே! புத்திமானாகிய கொடையாளி எப்பொழுதும் சத்பாத்திரனான வேதியனுக்குத் தானஞ் செய்து கொண்டேயிருக்கிறான். ஆயினும் வாங்குவோன் பொன் வெண்மையான எள், யானை, கன்னிகை, பணிமகள், வீடு, இரதம், அஸ்வம், பூமிகாரம் பசு என்னும் பத்துச் சிறந்த தானங்களையும் வாங்குவானாயின் தானஞ் செய்தவனைப் பரிசுத்தமாக்குவதுடன் தானும் ஞான வளர்ச்சி பெற்றுப் புனிதனாவான். பொன் முதன்மையானது, அதுவே, சிறந்த தக்ஷிணை அதுவே உன்னதமானது. மங்களகரமானது அதைத் தானம் கொடுப்பவன் தன் முன்னோர் பதின்மரும் பின்னோர் பதின்மரும் தான் ஒருவனுமாகிய இருபத்தோரு தலைமுறையினரையும் பாவம் கழிந்தவர்களாக்குகிறான். சுவர்ணத்தைச் சுத்தமான மனத்துடன் தானஞ் செய்தவன் சகல தேவர்களாலும் சகல கோரிக்கைகளையும் ஈடேறப் பெறுவான். அக்கினி முதலான தேவர்கள் அனைவரும் பொன்வடிவமாக இருக்கிறார்கள். புனிதமான சுவர்ணமானது(தங்கமானது) புனிதமற்ற பிறபொருள்களோடு கூடும்போது அவற்றையும் புனிதமாக்கிவிடும். பிதுரர்க்கும் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் பொன்னே எப்போதும் பிரியமானது உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் தூய்மையாக்குவது தண்ணீர் எனினும் அந்த நீரையும் பொன்னே தூய்மையாக்கி விடும் நாள்தோறும் விடியற் காலத்தில் அக்கினி காரியத்தை முடித்துப் பொன் தானஞ் செய்தவர்கள் தாம் விரும்பிய பொருள்களையெல்லாம் அடைவார்கள் பொன் தானஞ் செய்தவன் சகல தானங்களையும் செய்த பயனை தானஞ் செய்த பயனை இந்த நிலவுலகிலேயே அடைவான். அப்சரஸ்மங்கையர் கந்தர்வர்கள் முதலானவர்கள் ஆடல் பாடல்கள் புரிய, அன்னங்களால் சுமக்கப்பட்டு விரும்பிய இடத்துக்குச் செல்லத் தக்க பொன் விமானத்தில் ஏறிச் சுவர்க்க லோகத்தில் தான் விரும்பிய இடத்தில் தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் அனுபவிப்பான். ஆகையால் சக்திக்கு ஏற்ப அதிதிகளுக்குப் பொன் தானஞ் செய்ய வேண்டும் பொன் தானம் செய்தவன் புனிதமான இதயத்தோடு எண்ணற்ற வருஷங்கள் தேவபோகங்கள் அனுபவிப்பான்.
இனி பூதானம் பற்றி ஒரு முன் கதையைச் சொல்கிறேன். முன்பு சித்திராதன் என்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவன் ஏழு தீவுகளுக்கும் தலைவனாகி எல்லாச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்து. ஒரு காலத்தில் திவ்வியமான இரதத்தில் ஏறிச் சுவர்க்கம் லோகத்தையடைந்து, தேவ சைனியங்களோடு கூடிய இந்திரன் வென்று தன் ஆணையை அங்கும் பரவச் செய்தான் மூவுலகங்களுக்கும் அதிபதியாகத் திகழ்ந்தான். பிறகு இப்பெரு நிலையும் செல்வமும் எப்படி உண்டாயின என்று யோசித்து வியப்புற்றான். ஆறாயிரம் புதல்வரைப் பெற்றான். குறைதலற்றப் பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு, குடிமக்களுக்கு உதவியாக இருந்தான். சிறந்த வாகனங்களை அடைந்து அகாலமரணம் முதலியன வின்றி நீதியோடு அரசாட்சி செய்து வந்தான். அவனுக்கு அதிமோகனத் தோற்றமுள்ள மனைவியும் இருந்தாள். அவ்வாறு இருக்கும் போது, அந்த மன்னன் இதகைய பெருஞ்செல்வத்தை மறு பிறவியிலும் அடையக்கூடிய வழிவகைகள் என்ன என்று சிந்தித்தான். எனவே அறங்களை யெல்லாம் நன்கு உணர்ந்து வசிஷ்டமுனிவரை அவன் அணுகி அவரை வணங்கி தவஞானியே உம் அருளால் நான் அளவற்ற செல்வத்தை அனுபவிப்பதோடு மனோகரமான மனைவி தானம் வழங்கும் வல்லமை, செல்வம், பல பெண்மணிகள் அன்னபானங்களை அனைவருக்கும் வழங்கும் சாமர்த்தியமும் ஆயிரம் யானைகளின் வலிமை, பகைவர் நாசமும் நல்ல புத்திரர்கள் உத்தமமான பணியாட்கள் அநுராகம் முதலான தோஷமற்ற குடிமக்கள், தர்மமுறைப்படி அரசாளும் ஆற்றல் முதலானவற்றையும் அடைந்திருக்கிறேன். நான் விரும்பிய யாவும் தடையின்றி அப்போதே கைகூடுகின்றன. இவையாவும் முற்பிறவிகளில் நான் செய்த தர்மமாசரணத்தால் உண்டானவை என்று தெரிந்து கொண்டேன். ஆயினும் நான் செய்த புண்ணிய கருமம் யாதென எனக்கு விளக்கியருள வேண்டும் என்று கேட்டான். வசிஷ்டமுனிவர் சிறிது யோசித்து விட்டு கூறலானார்.
அரசனே, நீ முற்பிறவியில் தாழ்ந்த குலத்தில் தோன்றி அவந்தி என்ற பட்டணத்தில் இருந்தாய். அந்த நகரத்தில் தர்மபாலன் என்ற மன்னன் தர்மம் செய்பவனாக இருந்தும் நீ அவனை அடையக் கூடாமல் உன் குலத்தின் இயற்கைப்படி வாழ்ந்து வந்தாய் நீ அங்கு இருக்கும்போது பல ஆண்டுகள் மழையின்றி பஞ்சம் உண்டாயிற்று அதனால் உனக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை காட்டுக்குச் சென்றாய். அந்தக் காட்டில் கந்த மூலபங்களைப் புசித்துக் கொண்டிருக்கும் பெரியோர் பலர் இருந்தார்கள். அங்கு பலர் வந்து சேர்ந்தாலும் பஞ்சத்தினாலும் அந்தக் காட்டிலும் உண்ணும் உணவின்றிக் கஷ்டப்பட்டு நேர்ந்தது. அப்போது நீ உன் மனைவியோடு மரங்களைகொளுத்தி அந்தக் கரியை விற்றுக்காலம் கழித்து வந்தாய் ஒரு காலத்தில் ஒரு சுமை விறகைத் தலையில் சுமந்து அந்த நரகத்து வீதிகளில் விலை கூறித் திரிந்தாய். தெருக்கள் எங்கும் சுற்றியும் அந்த விறகு விலைபோகவில்லை. அந்தத் தினமோ மாசி மாச பூரணையும் இராகு கிரஸ்த சந்திரக்கிரகணமுமாக இருந்தது. அதனால் அந்த நகரத்திலிருந்த வேதியர் சிலர் ஒரு வைசியன் வீட்டில் ஓமம் செய்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து விறகு தலையனான நீ உன் மனைவியுடன் அங்கு சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விலையாக விறகை அந்த ஓமகுண்டத்தில் இட்டு அவ்வந்தணருக்குச் சீதநிவாரணஞ் செய்து அங்கேயேயிருந்தாய். அப்போது தனவானான அந்த வைசியன் நூறு பலம் எடையுள்ள பொன்னைப் பூதானப் பிரதிநிதியாக அவ்வந்தணருக்குத் தானம் கொடுத்தான். அதை கண்ட நீ அந்தோ! இது நல்ல உத்தம புண்ணிய காலமாயிற்றே? இந்தக் காலத்தில் வேதியருக்கு இப்படி தானம் கொடுக்க நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்று மனம் விருந்தி, நான் ஏழையாகையால் மானசீகமாகத் தானம் செய்தேன்! என்று உனக்குள் நீயே கழிவிரக்கத்தோடும் கற்பனைத் தானத்தை நினைத்துக் கொண்டாய் அதனால் உனக்கு இந்தப் பிறவியில் இத்தகைய சிறந்த போகங்கள் யாவும் உண்டாயின ஆகையால் நீ இப்போதும் பூதானம் செய்து கொண்டிரு பூதானம் செய்தால் தேவர்களுக்கும் எட்டாத பதவியை அடைவாய் உன் முற்பிறவி வரலாறு முழுவதையும் நான் சொல்லக் கேட்டாய் அல்லவா? அரசனே! நிலதானம் எப்போதும் சுவர்க்கத்திலிருந்து உன்னை அகற்றாது அத்தகையத் தானத்தையே செய்து கொண்டிரு! தம் உள்ளத்தில் கருதியவர்களே சிறந்த பயனை அடைவார்களாயின் பூதானம் செய்தவர்கள் பெறும் பெற்றினைச் சொல்ல முடியுமோ?
முன்னொரு காலத்தில் தேவர் மனிதர் அரக்கர் முதலானவர்களையெல்லாம் அடக்கி உலக முழுவதையும் ஏகசக்கராதி அன்னபானம் முதலானவற்றை அருந்திய உரகர், சித்தர், முனிவர் முதலியவர்களால் புகழப்பெற்றான். ஏழுதீவுகளிலும் தன் செங்கோலைச் செலுத்தி நீதியுடன் அரசு செலுத்தியதால் பரிசுத்தமற்றவர்கள் நோயாளிகள் திருடர்கள், வஞ்சகர்கள், அங்கஹீனர்கள் முதலியோர் அவன் ஆட்சியில் இருக்கவில்லை. அந்தச் சிறப்பான அற்புதங்களைக் கண்ட அவ்வரசனின் மனைவி மிகவும் வியப்புற்று இத்தகைய பெருஞ் செல்வங்கள் அனைத்தும் முற்பிறவியில் செய்த எத்தகைய புண்ணியத்தால் கிடைத்தன என்று யோசித்து, தன் கணவனிடம் தன் எண்ணத்தை உணர்த்தினான். பிருது மன்னனும் உண்மையை உணர முடியாமல் வியந்து எல்லாமுணர்ந்த வேதியரை அணுகி, நன்கு வணங்கி வேதிய உத்தமர்களே! நீங்கள் என்னிடம் தயையுடையவர்களாயின் உங்கள் சிறந்தஞான நான் உங்களுக்கு வேண்டுவனவற்றையும் குறைவில்லாமல் கொடுப்பவனல்லவா? நீங்களும் யாவருக்கும் உதவிசெய்யும் தயாளர்களல்லவா? என்றான். முனிவர்களே, அரசனே! உன் மனத்திலுள்ள சந்தேகம் என்ன என்று எங்களுக்கு உணர்த்துவையானால் நாங்கள் அதன் விபரத்தை வெளியிடுவோம், நீ ஏழுதீவுகளையும் முறைப்படி அரசு செய்வதால் உன்னிடத்தில் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். தக்க நியமமுடைய முனிவர்களிடமே தர்மங்களைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உன் கருத்து என்ன என்று சொல் என்று கேட்டார்கள். ஆதி அரசனான பிருதுச்சக்கரவர்த்தி வேதியரைப்பணிந்து நான் பூர்வத்தில் செய்த நல்வினையையும் என் முற்பிறப்பையும் அதிசவுந்தரியமுடைய என் மனைவி செய்துள்ள நற் செயல்களையும் எங்கள் இருவருக்கும் நீங்காத பெருவிருப்புற்று இருப்பதற்குக் காரணத்தையும் அறம், பொருள், இன்பம் முதலான புருஷார்த்தங்கள் உண்டான வரலாற்றையும் மன்னர்கள் யாவரும் எனக்குக் கப்பங்கட்ட நேர்ந்தவகையையும் அளவிட முடியாமல் என் பொக்கிஷம் பெருகியிருப்பதில் காரணத்தையும் தோள் வலிமையிற் சிறந்து நோயற்றவாழ்வு பெற்ற என் வரலாற்றையும் அறிய விரும்புகிறேன். எனவே அவற்றை விவரமாகத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டான். மகரிஷிகள் யாவரும் ஒன்றுகூடி மரீசிமுனிவரை அணுகி அரசனது கேள்விகளுக்கு அவரே விடையளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். மரீசி முனிவர், சிறிது நேரம் யோக நிஷ்டையிலிருந்து விருத்தாந்தங்கள் யாவற்றையும் உணர்ந்து கைகட்டி தம் முன்பு நிற்கும் மன்னர் மன்னனை நோக்கிக் கூறலாயினர்.
சக்கரவர்த்தியே! நீ எல்லாப் போகங்களையும் இப்போது அனுபவிப்பதற்குக் காரணம் நீ பூர்வ ஜன்மத்தில் உன் மனைவியுடன் கூடிச் செய்த நல்வினைகளின் பயனேயன்றி வேறல்ல. அதையும் விவரமாகச் சொல்லுகிறேன். சாவதானமாகக் கேள் நீ முற்பிறவியில் ஜீவஹிம்சை செய்வதிலேயே விருப்பமுடைய ஒரு சூத்திரன் உன் மனைவியோ மஹாப்பதிவிரதை ஆகையால் அவள் உன் விருப்பப்படி நடந்து உனக்குப் பணி விடை செய்வதிலேயே மனமுடையவளாக இருந்தாள் நீ உன் ஏழ்மையின் காரணமாக உன் மனைவியை நீங்கி ஒருவனிடம் ஊழியத்துக்கு அமர்ந்தாய் நீ உன் மனைவியை பிரிந்த போதிலும் அவள் உன்னைப் பிரியாது அவ்வப்போது உன்னைக்கண்டு உனக்குப் பணி செய்வதையே உறுதியாகக் கொண்டு வாழ்ந்து வந்தாள். அப்படியிருக்கும்போது அயோத்தியில் பெரும் தனவானாக விளங்கிய மன்னன் ஒருவன். பக்தி சிரத்தைகளோடு அங்கு ஒரு விஷ்ணு ஆலயம் கட்டி அதில் விஷ்ணுமூர்த்தியைப்பிரதிஷ்டை செய்து கொண்டிருந்தான். அப்போது பொன் மயமான பூதானத்தை நல்ல வேதியருக்கே வழங்கி அந்தக் கோயில் முழுவதும் பொன் மயமாக்கினான். அந்தத் தேவாலயத்தில் நடந்தவற்றை நீயும் உன் மனைவியும் அதி ஆவலுடன் பார்த்து கொண்டும் இருந்தீர்கள் ஆலயத்தில் அலகிடுதல் முதலிய தொண்டுகளைச் செய்து வந்ததால் அப்போதே உங்களிடமிருந்த பாவங்கள் எல்லாம் அகன்றொழிந்தன. அன்றியும் பொன்னால் செய்த பசுவைத் தானஞ்செய்த பயனை அடைந்தாய். அதனால் இந்தப் பிறவியில் உனக்கு இவ்வளவு செல்வ போகங்களும் பெரும் நிலப்பரப்பும் உனக்குச் சொந்தமாயின் முற்பிறவியில் சூத்திரனாக இருந்து நீ செய்த நற்பணியால் இந்தப் பிறவியில் பேரரசனாய் இனி இப்பிறவியில் சிறந்த நிலதானம் செய்! வேறு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. எவன் சுவர்ண விகாரமான பூதானத்தைச் சத்பாத்திரனுக்குக் கொடுப்பானோ அவன் தன் பிதுரர்களையும் தன் வம்சத்தில் இனிமேல் பிறப்பவர்களையும் தன்னுடன் கொண்டு சூரியர், சந்திரர் உள்ளவரையில் சுவர்க்க லோகத்திலேயே வாழ்ந்திருப்பான் அறம் பொருள் இன்பம் வீடு என்பனவும் பூதானத்திலேயே கைகூடும். உன் முற்பிறப்பை உனக்கு நன்கு உணர்த்தினேன் அல்லவா? எல்லாக் காலத்திலும் பூதானம் செய்வாயாகின் உன்கோரிக்கைகள் எல்லாம் ஈடேறும் துவிஜர்களேயன்றி சூத்திரராயினும் பூதானஞ் செய்ய வேண்டும் என்று மனத்தில் கருதியவனும் சுவர்க்கப் பதவியை படித்தவர்களும் எல்லாப் பாவங்களும் ஒழிந்து சுவர்க்கப் பதவியை அடைவார்கள் என்று பிரம்மபுத்திரராகிய மரீசி முனிவர் கூறியருளினார்.
24. பூதான விதிகள்
வியாசரே! சக்திக்கு வஞ்சனையின்றித் தானஞ் செய்வோரில் உத்தமர், மத்திமர், அதமர் என்று மூன்று வகையினர் உண்டு. அவர்கள் தம்வகைக்கேற்ற பயன்களை அனுபவிப்பார்கள் சுவர்ணப் பொடிகளையாவது தாமிரப் பொடியையாவது, பிருத்வியையாவது தன் கையால் மூன்று கையாவது இருகையாவது, ஒருகையாவது குப்பலாக வைத்து, அதன்மேல் தக்ஷிணையாகச் சுவர்ண நிஷ்கங்கள் இலக்ஷமாவது ஆயிரமாவது நூறாவது ஐம்பதாவது வைத்து, அதன்மீது நவரத்தினங்களையாவது பொற் பொடியையாவது வைத்து, அந்தப் பொற்குவியலை மேருமலையாகக் கொண்டு, அதன் கிழக்கில் மந்தரமும் தெற்கில் கந்தமாதனமும் மேற்கில் நீலமும், வடக்கில் விபுலமும் அந்தமேருவின் உச்சியில் வைடூரிய மயமான வீடும், அந்த வீட்டின் கிழக்கில் நானாவித வடக்கில் பத்மராகமும் வீட்டின் மேல் பலவிதமான ரத்தினங்களும் அல்லது சுகந்த சுண்ணங்களும், தாம்பூலமும் வைத்து அவற்றைப் பூமண்டலமாகக் கொண்டு, அதைச் சுற்றிலும் உப்புக்கடல் இருப்பதாக உப்பைப் பெய்தால் அது ஜம்புத் திவீபமாகும், அதைச் சுற்றிச் சிறிது தூரத்தில் கரும்புரசத்தைப் பெய்தால் அது பிலக்ஷத் தீவாகும். அதன் வெளியே நெய்யைச் சொரிந்தால் சான்மலித் தீவாகும். அதன் புறம்பே தயிரை ஒழுக்கக் குசைத் தீவீபமாம். அதைச் சுற்றிலும் பாலைச் சொரிந்தால் அது சாகத்வீபமாம். அதன் வெளியே நல்ல நீரை வார்த்தால் புஷ்கரவீபமாகும். இத்தகைய ஏழு தீவுகளோடு கூடியதாகச் செய்து அந்தப் பூமியை வைதீகனாகவுள்ள தானபாத்திரனுக்குக் கொடுக்க வேண்டும்.
வியாச முனிவரே! உத்தமமான நில தானத்தின் முறைமையை உமக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இந்தத் தானத்தைச் செய்த பிறகு தாதாவின் கையளவாக ஒரு குண்டம் உண்டாக்கி அதில் அக்கினியை வளர்த்து யவை, கடுகு, எள் இவற்றைக் கலந்து, திக்குப் பாலகர்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் அவரவர்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லி மும்முறையும் விஷ்ணு ப்ரீதியாக மும்முறையும் வருணனுக்கும் வசுவுக்கும் மும்முறையும் ஹோமஞ் செய்ய வேண்டும். அதன் பிறகு பிருத்வியைக் குறித்து ஒருமுறை ஹோமஞ் செய்ய வேண்டும், அதன்பிறகு சிவபெருமானைக் குறித்து அவரே உலகுக்கு ஆதரவாக இருப்பவர் என்றும் யாவராலும் துதிக்கதக்கவர் என்றும் தேவ தேவர் என்றும் பயபக்தியுடன் உம்மை நான் பூஜிக்கிறேன்! நீரே உலகினைப் படைத்துக் காத்துத் தானஞ் செய்து. அதைப் பெற்றுக் கொண்டவர்! என்று கூறித் தானம் வாங்கிய பிராமணரை ஆராதித்து ஆடை அணிமணிகளையும் சிறப்பாக வழங்கி என் கோரிக்கைகள் எல்லாம் ஈடேறுமாக! என்று நமஸ்கரிக்க வேண்டும். உன்னதமான தானகாலத்தில் நற்பத்திரனுக்கு இவ்வாறு தானஞ் செய்தால் தன் முன்னோர் நூற்றுவரையும் தனக்குப்பின் பிறப்போர் நூற்றுவரையும் சுவர்க்கம் ஏற்றி, தானும் சொர்க்கப் பதவியை அடைவான். இந்த வகையாகச் செய்யப்படும் பூதானத்தால் அடைய முடியாத விருப்பங்களே எதுவும் கிடையாது!
25. திலஹஸ்திதானம்!
வியாச முனிவர் ஸநத்குமாரரை நோக்கி, சுவாமி! சிறந்த தானத்தையோ அல்லது தவத்தையோ செய்யச் சக்தியில்லாதவனுக்குப் பிரமஹஸ்தி முதலான தோஷங்கள் எப்படி ஒழியும்? இதை நீங்கள் பிரமதேவரிடம் கேட்டு உணர்ந்தவாறு அடியேனுக்கு எடுத்துரைக்க வேண்டும்! என்று கேட்டார். ஸநத்குமாரர் கூறலானார். ஒருவனுடைய உடல் தூய்மையடைந்தால் அவனுடைய எல்லாப் பாவங்களும் சிறிது சிறிதாகக் கழித்து போகும் என்று முன்பே சொல்லியிருக்கிறேனல்லவா? உடலின் நடுவே இருக்கும் பிராணனே ஜீவன் எனப்படும். உடலின் வெளியே உள்ள தனமும் பிராணனேயாகும். ஜீவனைக் கஷ்டப்படுத்தித் தவஞ்செய்தாவது பொருளை விரையப்படுத்தித் தானஞ் செய்தாவது முக்தியை அடைய வேண்டும். முனிவர்களில் உயர்ந்த வியாசரே! இன்னும் நீர் அறிய வேண்டிய விஷயம் ஏதாவது இருந்தால் அதையும் கேளும்! என்றார். ஸநத்குமாரர் வியாசர் அவரை நோக்கி, பாவங்களைச் செய்வதிலேயே நாட்டமுடையவர்களாகவும் ஞானமற்றவர்களாகவும் இருந்து பலவித பாவங்களைச் செய்து ரவுரவாதி நரகங்களில் விழுந்து கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய நரகவேதனையை அடையாமல் தப்பித்துக் கொள்ளத் தக்க தானம் எது? எந்த தானத்தைச் செய்தால் நரகத்தைக் கண்ணிலும் காணாமல் இருக்கலாம். இவற்றைச் சொல்லவேண்டும்! என்று வியாசர் கேட்க ஸந்தகுமார முனிவர் பின்வருமாறு சொன்னார்.
நல்ல விரதத்தையுடையவரே! கேளும் கார்த்திகை மாத பூரணையிலாவது நாக சதுர்த்தியிலாவது. எள்ளைக்கொண்டு யானை வடிவமாகச் செய்து, விஷ்ணுபூஜை இயற்ற வேண்டும். கன்றுள்ள பசுவை ஒரு பக்கமாகக் கட்டி தீபம் வைத்து எள்ளாற் செய்த யானையின் கண்களில் முத்துக்களும் பற்களில் வெள்ளியும் சுற்றிலும் பவளமும் நெற்றியில் திலகமாகப் பொன்னும் கர்ணங்களில் சாமரையும் வெண்கலமணி இரண்டும் உடலில் பட்டாடையும் கும்பஸ்தானத்தில் முத்துக்களும் சிரசில் சிந்தூரமும் வைத்து, முத்துமாலை பாதுகை, குடை, கிண்ணம், ஆசனம், கண்ணாடி முதலியவற்றைச் சக்திக்கேற்பப் பொன்னால் செய்து வைத்து, அந்த யானையின் முன்பு குங்குமத்தால் அஷ்ட தனக் கமலம் வரைந்து அதன் இடையே சர்வலோக காரண பூதரான சிவபெருமானையும் விஷ்ணுவையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அந்த அஷ்டத்தளத் தாமரையின் கிழக்கே தேவர் தலைவனான இந்திரனையும் அதன் பக்கத்திலுள்ள தளத்தில் அக்கினியையும் தென் பக்கத்தில் பிதுர்தேவப் பிரபுவும் தர்மவான்களுக்கு இன்பங்கொடுப்பவனுமாகிய இயமனையும் அதற்கு அடுத்த தளத்தில் இராக்ஷப் பிரபுவாகி நரகலோகத்துக்குச் சமீபமாகவுள்ள லோகத்தில் வசிக்கும் நிருதியையும் அதற்குப் பக்கத்தில் ஜலத்துக்கு நாயகனும் சவுக்கியத்தை ஏற்படுத்துவோனுமாகிய வருணனையும், அதற்குப் பக்கத்தில் பொன் விமானத்தில் சஞ்சரிப்பவனும் எல்லோருக்கும் ஆயுர்ப்பூதமாக இருப்பவனுமான வாயுவையும், அதன் பக்கத்தில் தனாதிபதியான குபேரனையும் அதன் பக்கத்தில் பசுக்களான பிராணிகளுக்கெல்லாம் பதியாகவுள்ள ஈசானனையும் தனித்தனி நமஸ்காரம் என்று துதித்து முறையே ஆவாஹனம் செய்ய வேண்டும். தீய வழியிலிருந்து காக்கத்தக்கவனும் மும்மூர்த்தி வடிவாகவும் விஸ்வரூபமாகவும் விளங்குபவனும் சுகத்தைக் கொடுப்பவனுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம் என்று துதித்து பரிவார தேவர்களைப் பூஜித்து உலகபாலன் கர்த்தாவாகிய திருமாலை மீண்டும் பூஜித்து கைகூப்பிக் கும்பிட்ட வண்ணம் இந்த யானை என்னை யமலோகத்துக் கொடிய வழியில் சுகமாகச் செலுத்தி எனக்கு மங்களபலமான பூரண கும்பமும் காமதேனுவும் கற்பக வருக்ஷமும் சிந்தாமணியும் ஐராவதமும் உண்டாக்குமாக! என்று சொல்லிக் கொண்டு சக்திகேற்ப, நற்பாத்திரனான வேதியனுக்குப் பொன் ஆபரணங்களை வழங்கி அத்திலஹஸ்தியையும் தானஞ்செய்து அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் தீபதானம் செய்து, அதற்குப் பிறகு போஜனம் செய்ய வேண்டும்.
வியாச முனிவரே! இத்தகைய விதிப்படி அவரவர்சக்திக்கு ஏற்ப திலஹஸ்தி தானம் செய்தவர்கள் கோரமான நரக ஸ்வரூபமாக விளங்கும் இயம மார்க்கத்தைக் காணாமலேயே, எல்லாப் பாவங்களையும் ஒழித்து உற்றார் நண்பர்களோடுக் கூடிச் சுவர்க்க லோகத்தில் பதினான்கு இந்திரபட்டம் கழியும் வரையில் வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் ஜோதிஷ்டாபுஷ்கரத்தில் காராம் பசுக்கள் ஆயிரம் தானம் செய்த பலனும் உபயமுகி கோதானம் நூறு செய்த பலனையும் அடைவார்கள். இராகு கிரஸ்தமான சூரியக் கிரஹண காலத்தில் பூதானம் செய்த பயனும் இதற்கு ஈடானதல்ல. இந்தத் தானமானது கிருஷ்ணாசன் தானத்தால் உண்டாகும் பயனைவிட நூறு பங்கு சிறப்பான பயனை அளிக்கும் யானை குதிரை இரதம் எருது முதலியவற்றை ஒரே காலத்தில் தானஞ் செய்த பயனைக் கொடுக்கும் எள், நெய், ஜலம், பசு முதலிய தானபயனைக் காட்டிலும் நூறு பங்கு சிறப்பான பயனைக்கொடுக்கும், இந்த விதியை உணர்ந்து திலஹஸ்தியைப் பூஜித்து, மஹேஸ ஸ்வரூபமானதும் திக்குகஜஸ்வரூபமான இந்த யானையைத் தானம் செய்கிறேன்! என்று சங்கல்பம் செய்து காந்தாரஸ்தியைத் தானம் செய்தான். சர்வேஸ்வரனாகிய சிவபெருமானும் தைத்திய சங்கரானாகிய திருமாலும் மகிழ்வார்கள். குடும்பஸ்தனாகவும் ஏழையாகவும் இருக்கும் உத்தமமான வேதியனுக்கு இதைத் தானம் செய்ய வேண்டும் இந்தத் தானம் பாவத்தை ஒழித்துப் புண்ணியத்தைக் கொடுப்பதும் நரகத்தை ஒழித்து மோட்சத்தைக் கொடுப்பதுமாகும். இதைப் படித்தும் வாசித்தும், சிந்தித்தும் உள்ளவர்கள் சுவர்க்க பதவியை அடைவார்கள்.
26. பார்க்கவர் பயணக் கதையும் சதுர்த்தி விரத மகிமையும்
பிரமபுத்திரரான ஸநத்குமார முனிவரை வியாசர் நோக்கி, பிரம்ம நிஷ்டரே! சர்வேஸ்வரனான சாம்பவமூர்த்தியை ஒரு நாள் பூஜித்து உபவாசமிருப்பதில், எல்லா விரதங்களையும் அனுஷ்டித்து எல்லாத் தானங்களையும் செய்த பயனை அடையத்தக்க ஒரு விரதத்தைச் சொல்லுங்கள்! குருக்களுக்கெல்லாம் குருவான தாங்கள் கூறும் ஒவ்வொன்றும் பெரும் பயனைத் தரவல்லவையாக இருக்கும். ஆகையால் அத்தகைய விரதம் ஒன்றையும் அதை விளக்கிக் காட்டக் கூடிய ஒரு வரலாற்றையும் சொல்ல வேண்டுகிறேன்! என்று கேட்டார். ஸநத்குமாரர் கூறலானார். வியாசரே! சிவபெருமானை நியமத்துடன் ஒருநாள் ஆராதித்தால் அவருடைய அருளைப் பெறலாம். உடலுக்குச் சிரமமான பலவித விரதங்களைச் செய்து. அதனால் அடையும் பயன்கள் அனைத்தையும் சுக்கில பக்ஷ சதுர்த்தசியில் சிவார்ச்சனை செய்வதாலேயே இரத்தின வியாபாரி ஒரே பொருளால் பெரிய லாபத்தைத் தேடிக் கொள்வதைப் போல, அதி சுலபமாக அடைந்து விடலாம்.
ஸத்யவாதி புத்திரரே! பூர்வயுகத்தில் ஜம்புத் தீவில் ஒருமா மன்னன் இருந்தான் அவன் தர்மவான். நூறு அக்குரோணி சேனைகளையுடையவன் வில்லாளர்களில் மேம்பட்டவன் வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையும் சக்தியவாக்கும் ஈகைத்தன்மையும் வாய்ந்தவன். எல்லாபோக அனுபவமும் அதிதிகளிடம் விருப்பமும் உள்ளவன் பொன், ஆடை முதலியவற்றை நாள்தோறும் அவன் தானஞ் செய்வான். அவனுக்கு எண்ணற்ற வீரப்படைகள் இருந்தும் சதாநீகன் என்பது பெயராக இருந்தது. அவன் தன் இராஜ்ஜியத்தைப் பலகாலம் அரசாண்டு ஒரு புத்திரனைப் பெற்று மரணமடைந்தான். அப்புதல்வன் குலமுறையாக அனுபவித்து வந்த ராஜ்ஜியத்தை தர்ம முறைப்படி காத்து வந்தான். பிரதாபத்தால் சூரியனையும் காந்தியால் சந்திரனையும் போன்று பகைவர் பயமின்றி ஆட்சிபுரிந்த அவன். தன் தந்தையைப் போலத் தானஞ்செய்தல் ஒன்று மட்டும் இல்லாதவனாக இருந்தான்.
நியதியான விரதமுடைய வேதியர் அனைவரும் யோசித்தார்கள் அரசனிடம் தானச் செயல் இன்மையால் ஏழைகளாகிய நாம் எல்லோரும் அவனைக் கண்டு இவ்விஷயத்தைப்பற்றிக் கேட்க வேண்டும்! என்று தீர்மானித்து அரசனிடம் சென்றார்கள். அரசன் அவ்வந்தணர்களை முறைப்படிப் பூஜித்து ஆசனமளித்தான் அவனை வேதியர்கள் பார்த்து, அரசனே! நாங்கள் ஒரு விஷயத்தை வெளியிடக் கருதியிருக்கிறோம். அதை நிதானமாகக் கேட்க வேண்டும். உன் தந்தை நாள்தோறும் ஆடை அன்னம் பொன் முதலானவற்றை எங்களுக்குத்தானங் கொடுத்துத் திருப்தி செய்து வந்தார் நீயோ சிறிதும் தானஞ் செய்யாமையால் அந்தணர் பலர் அன்னமில்லாமல் தேசாந்திரம் போய் விட்டார்கள் நாங்களோ பெரியகுடும்பஸ்தர்கள். உன்னிடத்தில் இதைச் சொல்லி விட்டு நாங்களும் இன்னுஞ் சில தினங்களில் நாடுகடந்து செல்லக் கருதியிருக்கிறோம் எங்களுக்கு உள்ள வறுமையாலேயே இந்த யோசனை எங்களுக்குத் தோன்றியது! என்றார்கள். அதைக்கேட்டதும் மன்னன் புன்னகை செய்து வேதியர்களே! அந்தணர்க்குத் தானங் கொடுப்பதால் புண்ணியம் கிடைக்கும் என்பது எனக்குத் தெரிந்திருப்பினும் நான் கேட்கத் தக்கது ஒன்று உண்டு. அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்; தானஞ் செய்பவன் இவ்வுலகிலிருந்து சுவர்க்கத்துக்குச் சென்று அங்குள்ள போகங்களை நுகர்ந்து மீண்டும் பூமியை அடைந்து சுகமாக வாழ்கிறான் என்று நீங்கள் சொல்கிறீர்கள் அல்லவா? பிராமணர்களே! என் தந்தை தானஞ்செய்து வந்தவர் அல்லவா? அவர் இப்போது சுவர்க்கத்தில் எவ்வாறாக இருக்கிறார் என்பதை நீங்கள் நன்றாக அறிந்துகொண்டு அதை எனக்கு சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றான். வேதியர்கள் ஒன்றும் தோன்றாமல் அரசன் முகத்தைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் புறத்தே சென்று, ஒருவரோடொருவர் யோசிக்கலானார்கள். இவ்வரசனின் தந்தை மகாதார்மீகன் ஆகையால் இப்போது அவன் எவ்வுலகில் இருக்கிறானோ? அதை நாம் எப்படி இவனுக்குச் சொல்ல முடியும் என்று எவ்வாறு யோசித்து அவன் யோசனையிலே ஆழ்ந்திருந்ததால் நெடுநாள்வரை தங்கள் நித்யகர்ம சந்தியாவந்தன அக்கினி காரியாதிகளையெல்லாம் மறந்தார்கள்.
முனிவரே! வேதியர் ஒழுக்கங்குன்றியதால் சூரியன் முதலியகோள்கள் நிலைதவறி மழையின்மையால் பஞ்சம் உண்டாயிற்று. அக்கினியில் ஹோமம் செய்தவை சூரியனை அடையும். சூரியன் அந்த ஆகுதியால் மகிழ்ந்து, மழை பொழிய செய்வான். அந்த மழையால் ஜீவகோடிகளுக்கெல்லாம் ஆகாரம் உண்டாகும். அன்னத்தால் உலகுக்கு எப்போதும் திருப்தியுண்டாகும். அவ்வாறின்றி நிலைமாறியதால் உலகத்தில் வேதியர் யாககர்மங்களைச் செய்யாது மழை மாறி உலகம் அழியும் அவர்களைக் கண்டு பேசி அவர்கள் கருத்தை அறிய வேண்டும் என்று சூரிய பகவான் கருதினான். எனவே அவன் பிராமண வடிவம் பூண்டு பூலோகத்திற்கு வந்து வேதியர்களை அணுகி, நீங்கள் ஏன் துக்கத்துடன் இருக்கிறீர்கள் உங்கள் குலாச்சார தருமங்களை ஏன் கைவிட்டீர்கள்? பஞ்ச யக்ஞங்களின் பயன் எண்ணிறைந்த தல்லவா? நித்திய கர்மம் செய்யாது நைவித்திக கர்மத்தைச் செய்து பயனடையக் கருதுவோர் அந்தப் பயனை அடையமாட்டார்கள் ஸ்வதர்மங்களை விட்டவர் தீர்த்த யாத்திரை செய்தாலும் பயனடைய மாட்டார்கள். நால்வகை ஆச்சரமத்தவர்க்கும் பஞ்சயக்ஞபயன் நித்தியமானதும் புக்தி முக்திகளைக்கொடுப்பதுமாகும் ஆகையால் நீங்கள் அதை விடக் கூடாது. நித்திய கர்மத்தை அனுஷ்டித்து நைமித்திகத்தைச் செய்வோர் நூறு பங்கு பயனையும் அடைவார்கள். தானங்கொடாத அரசனை உயிரிழந்தவனாக நினைத்து தானத்தை விரும்பாமல் தவத்தை மேற் கொண்டு ஒழுகும் அந்தணன் மிகவும் சிறந்தவனாவன். அத்தகைய அந்தணனை உபசரித்தால் எல்லாப் போகங்களும் கிடைக்கும்! என்றான்.
அதைக் கேட்டதும் வேதியர் யாவரும் மனம் திரும்பியவர்களாய் தானம் ஏற்காது. தவஞ் செய்யும் மறையோனை வழிபடுவதே சிறந்ததாகக் கருதி வேதியவடிவில் வந்த சூரிய பகவானை வணங்கினார்கள். பிறகு நாற்றிசையும் சென்று அத்தகைய பிராமணனை எங்கெங்கோ தேடிக்கொண்டு அலைந்தார்கள். இறுதியில் ஓரிடத்தில் கைகளை மேலெடுத்து உயர்த்தி ஒரு காலில் நின்று மற்றொரு காலை மடக்கிக் கொண்டு தவத்திலிருந்த பார்க்கவ முனிவரைக்கண்டு வலம் சுற்றி வணங்கி எதிரே நின்றார்கள் பார்க்கவ முனிவர் சூரியன் மேற்கே திரும்பிய போது கண் விழித்து தேவ பிதுர்த் தர்ப்பணங்களைச் செய்து முடித்து தம் எதிரே நிற்கும் வேதியர்களைக் கண்டு கைகூப்பி சாஸ்திர முறைப்படி அவர்களைப் பூஜித்து கந்தமூல பலங்களை அளித்து மகிழ்ந்தார். அப்பொழுது வேதியர்கள் அனைவரும் தங்கள் அரசனின் செயலைப்பார்க்கவ முனிவருக்கு எடுத்துரைத்தார்கள். அவ்வரசனுடையத் துர்க்குணங்களைக் கேட்ட பார்க்கவ முனிவர் நான் இதுவரை செய்த தவத்தைவிடச் சிறந்தது பயமுற்றவருக்கு அபயம் அளித்தலால் சகல தானங்களுஞ் செய்த பயன் கிடைக்கும். தயையே சிறந்த குணம்? என்று தமக்குள் யோசித்து, தற்கால மன்னனுடைய தந்தை எந்த உலகத்தில் இருக்கிறானோ அந்த உலகத்தை நான் அடைவேன்! என்று மனவுறுதிகொண்டு புறப்பட்டார்.
பார்க்கவ முனிவருடையத் தவப்பயனால் சூரியபகவான் சாந்தமுடையவனாய் வேதிய வடிவேற்று அவருக்கு வழிகாட்டுவான் போல முன்னே சென்றான். இவ்வாறு பார்க்கவ முனிவர் புறப்பட்டு, எண்பத்தெட்டுகாத தூரம் சென்று, தண்ணீரும் மரநிழலும் இல்லாதலும் சீதோஷ்ணங்களால் துன்பகரமானதும் தேவ தானவர்களாலும் சகிக்க முடியாததுமான வழியைக் கடந்து. இருபத்தெட்டுக்கோடி நரகங்களையும் அதில் வேதனைப்படுவோரையும் பார்த்துக் கொண்டே சூரியன் முன்னே செல்ல முனிவர் பின்னே சென்றார் நரகவேதனைகளை அனுபவிப்போரது கூக்குரலைக் கேட்டுக் கொண்டே அவ்விடத்தை அதில் மஹாபதவியைக் காணச்செல்லும்போது, பார்க்கவ முனிவரை ஒரு வேதியன் தன் கையில் பெரியதொரு தண்டந்தாங்கி, நான் முன்பு உனக்குக் கொடுத்தவற்றை இப்போது எனக்குக் கொடுத்து விட்டுதான் இங்கிருந்து செல்ல வேண்டும்! என்று தடுத்தான்.
பார்க்கவர் தன்னைத் தடுத்தவனை நோக்கி, நீ எந்தக் காலத்தில் என்னக் கொடுத்தாய்? என்று கேட்டார். அதற்கு அவ்வந்தணன் நான் முற்பிறவியில் உனக்கு ஒரு புராணம் உரைத்தினேன். அதை நீ கேட்டுச் செல்லும்போது எனக்கொன்றும் கொடுத்திலையே என்று நான் கேட்க, நீ என் வீட்டிற்குச் சென்று ஏதேனும் கொண்டு வந்து கொடுப்பேன் என்று சொல்லிவிட்டுப் போனாயே தவிர மீண்டும் என் கண்ணில் புலப்படாமல் ஒழிந்தாய்! என்றான். அதைக்கேட்டு பார்க்கவர் வியப்புற்று, ஒருவேளை நான் சொல்லித் தவறியிருக்கலாம். ஆனால் அது மத்திய லோகத்தில் நடந்ததாகையால், நாம் அங்கே போய்த் தீர்த்துக் கொள்ளலாம் இங்கு என் கையில் ஒன்றுமில்லை என்று கூறினார். அவ்வேதியன் பார்க்கவரை நோக்கி, நீ செய்த புண்ணியத்தில் பாதியை எனக்கு கொடுத்ததாகச் சொல்! என்றான். ஆனால் பார்க்கவர் என் தர்மபயனில் பாதியை உனக்குக் கொடுக்கமாட்டேன்! என்றார். அவ்வுரையாடலைக் கேட்ட வண்ணம் வேதியர் வடிவில் இருந்த சூரிய பகவான் அவர்கள் இருவரையும் நன்மொழியால் சமாதானஞ் செய்து, அவ்வேதியன் புராணஞ் சொன்னதும் நீ அதைக் காதில் கேட்டதும் பின்னர் நீ பொருள் கொடுப்பதாகக் கூறியதும் உண்மையே! ஆகையால் உன் தர்மத்தில் அரைப்பங்கு கொடுக்காமல் ஆறில் ஒரு பங்கைக் கொடுக்கலாம்! என்று கூறினார். அதற்கு அவர்கள் இருவரும் இணங்கினார்கள். பார்க்கவர் தம் புண்ணியத்தில் ஆறில் ஒரு பாகத்தைக் கொடுத்தார். அவரை வழிமறித்த வேதியன் அதைப் பெற்றுக் கொண்டு போய்விட்டான்.
மீண்டும் சூரியனைப் பின் தொடர்ந்து பார்க்கவர் செல்லும் போது ஒரு யாதவன் அவரைத் தடுத்து நான் முற்பிறவியில் உன் பசுக்களை மேய்த்ததில் நீ எனக்கு எட்டு கவுடிகள்(நாணயங்கள்) கொடுப்பதாகச் சொல்லி கணக்குத் தீர்த்துக் கொடுக்காமற் போய் விட்டாய். அதை இப்போது கொடுத்து விட்டுப் போ! என்று கூறினான். அதற்கு பார்க்கவர், ஐயோ! சுலபமானதையும் கடனாக்கிக் கொண்டேனே! இது எம்மாத்திரம்? என்று யோசித்தார். உடனே யாதவன் உன் தர்மத்தை எனக்கு கொடு என்று கேட்டான். பார்க்கவர் துக்கமடைந்து சூரிய பகவான் தீர்மானித்தபடி மற்றும் ஆறில் ஒரு பங்கு புண்ணியத்தை அவனுக்குக் கொடுத்து அவனை விட்டு விலகி மேலே தொடர்ந்து சென்றார். அப்போது ஒரு சாலியன் அவரைத் தடுத்து. நீ என்னிடம் ஆடைகள் வாங்கியதில் விசேஷ பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய். அதைத் தீர்த்து விட்டுப் போ! என்றான். முன்போலவே இருவரும் விவாதிக்கவே சூரியபகவான் தீர்மானித்தபடி விசேஷ பாக்கிக்காக தன் புண்ணிய மிச்சத்தை அவனுக்குக் கொடுத்து அவனை அனுப்பிவிட்டு, தன் புண்ணியம் முழுவதும் போய்விட்டதால் பிரம்ம தேஜஸ் நீங்கி அதற்கு அவர் மேலே செல்வதற்கு சக்தியற்றவராக தத்தளித்தார். அப்போது அவர் பார்க்கப் புறப்பட்ட அரசனிருக்கும் இடத்திற்கு பார்க்கவரின் கையைப் பற்றிக் கொண்டு சூரிய பகவான் அழைத்துச் சென்றார்.
அச்சமயத்தில் இயமகிங்கரர்கள் அந்த அரசனை ஒரு பாத்திரத்திலிட்டு அடுப்பிலேற்றிச் சமைத்துக் கொண்டிருந்தார்கள், அதைக் கண்ட பார்க்கவ முனிவர், ஐயோ! மகா புண்ணியவனான இவனுக்கும் இத்தகைய துன்பம் வந்து சேர்ந்ததே! என்று வியப்புற்று சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, சதாநீக மகாராஜனே! நீ சோடச மகாதானங்களையும் நற்பிராமணருக்குச் செய்தாய் என்றும் இரத்தினங்கள், ஆடைகள், கிரமங்கள் முதலியவற்றைத் தானம் செய்தவன் என்றும் அந்தணோத்தமர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்! தவஞ் செய்தாலும் பகவத் பக்தி செய்தாலும் தானஞ் செய்தாலும் சுவர்க்கம் அடைய வேண்டியிருக்க மாபெரும் தானங்களைச் செய்த உனக்கு எந்தப் பாவபலனால் இங்கு சுடப்பட்டிருக்கிறாய்? அது உனக்குத் தெரியுமே! அதைச் சொல்லுக! என்று கேட்டார். உடனே சதாநீசன் அவரை நோக்கி, வேதியனே! என் வரலாற்றைக் கேள்! நான் பலவிதமான தானங்களை அந்தணருக்குப் பரிபூரணமாகக் கொடுத்தேன். ஆயினும் அஞ்ஞானத்தினால் பிரஜா பீடையால் பொருள் தேடினேன். அதனால் தான் இந்தப் பாவத்தை அனுபவிக்கிறேன். என் விஷயத்தில் நீர் தயவு காட்டி, பூவுலகிலுள்ள என் புத்திரனிடம் சென்று நான் விழுக்தனாகும்படி நற்சுகிர்த விசேஷத்தை அனுஷ்டிக்கும்படிச் சொல்லியருள வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பாவத்தை அனுபவித்தல் பெருங் கஷ்டமாகும். நல்லோர் கூட்டுறவாலே இது நீங்க வேண்டும், தாங்களும் இச்சமயத்தில் இங்கு வந்தீர்கள்! என்றான்.
பார்க்கவர் தம் புண்ணியங்கள் ஒழித்தும் தமக்கு இதமுண்டாகவும் அவ்வரசனது வாதனை நீங்கவும் உலகின் சுலபமாக நற்கதியடையவும் விரும்பினார். எனவே அவர் வேதிய வடிவிலுள்ள சூரிய தேவனை நோக்கி, சுவாமி! சத்ஜன தரிசனம் மகா புண்ணியகரமானது சத்ஜனர் புண்ணிய தீர்த்தங்களுக்கு ஒப்பான வரல்லவா? தீர்த்த யாத்திரை காலக்கிரமமாகப் பயனளிக்கும் புண்ணியம் இல்லாதவனுக்கும் சர்வேஸ்வரனான சிவபெருமானிடமும் வேதியர்களிடமும் சத்ஜனரிடமும் தவசிககளிடமும் பக்தி என்பது ஏற்படாது ஒருவனுக்குப் பாபம் குறையும்போதே தானம், தியானம், முதலியன செய்ய வேண்டும் என்ற நினைப்பு உண்டாகும், நான் தங்களைத் தேவதேவனாக சந்தேகமில்லாமல் நினைக்கிறேன். தங்கள் தரிசனத்தாலேயே இந்த நரக வாசிகள் அனைவரும் சுகமடைவார்கள். நான் தங்கள் சந்நிதியிலிருந்தும் சுகமடையவில்லை ஆகையால் சிறிதும் தர்மம் எனபதில்லாத எனக்குத் தர்மத்தை உண்டாக்குவதும் அதை அனுசரிப்பவர்கள் யாவரும் சொர்க்கமடையச் செய்ய வல்லதும் மண், பெண், பொன் என்னும் ஈஷணாத்திரவியங்களால் துன்புறுவோர்களைக் கடைத்தேற்றுவம் தர்மாசரணையற்றவர்களையும் உய்விக்கவல்லதுமான விரதம் ஒன்றைச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார், அதனால் சூரியதேவனை மகிழ்ந்து முனிவரே! உலகத்திற்கு இதமுண்டாக்க நீ என்னை இந்தக் கேள்வி கேட்டாய். உன் தர்மம் வளர்ச்சியுறத்தக்க விரதம் ஒன்றைச் சொல்லுகிறேன் கேள்.
பார்க்கவ முனிவனே! தர்மத்தைப் பிறருக்குக் கூறுவோன் அந்தத் தருமத்தைச் செய்த பயனை அடைவான். தர்மத்தைச் சொல்லும் நாவே சிறந்தது. உலகத்திற்கு இதமுண்டாக்கத்தக்க தர்ம மார்க்கஞ் செல்ல வேண்டுவதேயாகும். ஆதலின் பாவங்கள் அனைத்தையும் நலியச் செய்யக்கூடிய விரதத்தை சொல்லுகிறேன். ஆண்டு முழுவதும் முதற்பாகமாகிய சித்திரை மாசமானது சிவபெருமானுக்கும் மற்ற தேவர்களுக்கும் பிரியமானது. அந்த மாதத்தில் தேவர்கள் வினோதத்தை முன்னிட்டு ஆனந்தித்து பூமியில் வந்து தங்கள் ஸ்தானத்தை அடைகிறார்கள். சிவபெருமானும் இளமை வடிவத்தோடு பார்வதி தேவியாருடன் விளையாடிக் கொண்டிருப்பார் பார்வதி தேவியின் தோழியர்கள் சிறந்த ஆடையாபரண அலங்காரங்களுடன் அந்த மகாதேவிக்கு உபசாரஞ் செய்வார்கள். இந்தச் சித்திரை மாதத்துச் சதுர்த்தசி திதியில் தீபதானஞ் செய்து வருவோர், சிவபெருமான் முதலிய எல்லாத் தேவர்களுக்கும் கண் கொடுத்த பயனையும் மோக்ஷத்தையும் அடைவார்கள். அதன் விதியையும் சொல்லுகிறேன்.
சித்திரை மாதத்தில் பூர்வபக்ஷத்திலாவது அப்ரபக்ஷத்திலாவது சம்பவிக்கும் சதுர்த்தசியில் உபவாசமிருந்து சர்வேசுவரனான சிவபெருமானைக் குறித்து ஒரு கோதானஞ் செய்து, தீப தானம் முதலியன செய்தவன் எல்லாப் பாவங்களையும் ஒழித்து சுவர்க்க பதவியைச் சந்தேகமின்றி அடைவான் என்று சூரிய பகவான் சொன்னார். அவரிடம் பார்க்கவமுனிவர் விடைபெற்று சென்று ஜம்புதவிபத்தையடைந்தார். பிறகு அங்குள்ள வேதியர்களோடு சென்று மன்னனின் புதல்வனைச் சந்தித்தார். அவனும் அவன் மதியமைச்சர்களும் அவனது கொலுமண்டபத்தில் இருந்தவர்களுமான அனைவரும் அறியும்படி மன்னனின் தந்தையான சதாநீக ராஜன் நரகத்தில் துன்புறும் நிலையையும் அவன் அந்தத் துன்பத்திலிருந்து நீங்கத் தக்க வழியையும் சதுர்த்தசி விரத பயனையும் அதன் முறைமையையும் விவரமாக எடுத்துரைத்தார், பார்க்கவர் சொன்னதைக் கேட்டதும் புரவலன் அப்பொழுதே புறப்பட்டுச் சொன்று அருகிலுள்ள ஒரு புண்ணிய தவத்தை அடைந்து பெரும் பொருள் செலவில் ஒரு தடாகம் அமைத்து. பலவித கோதானம் பூதானம் முதலியவற்றைச் செய்து பார்க்கவ முனிவர் கூறியபடி சதுர்த்தசி விரதத்தை அனுசரித்து மகிழ்ச்சியுடன் தன் நகரத்தை அடைந்தான். அவன் முறைப்படி சதுர்த்தசி விரதாசரணஞ் செய்து, பலவகைத் தானங்களையும் கொடுத்ததால் அவன் தந்தை தனக்குற்றிருந்த நரக வேதனைகளிலிருந்து, நீங்கிச் சுவர்க்கமடைந்து தன் மூதாதையருடன் ஒரு பகல் உபவாசம் இருக்க வேண்டிய இந்த விரதத்தை அனுஷ்டித்தவன் சகல பாவங்களும் நீங்கிச் சுவர்க்கத்தை அடைவான்.
வியாசரே! சித்திரை மாதச் சதுர்த்தசியில் சிவபெருமானை வழிபட்டு உபவாசம் இருந்த உத்தமனான வேதியனுக்கு கோதானமாவது, நெய் நிறைந்த யாத்திர தானமாவது, கொடுத்து அன்னபானம் ஆடை முதலானவற்றால் உபசரித்தால், எல்லாப் பாவங்களுளம் நீங்கி சுவர்க்கத்தையும் பிறகு உருத்திரலோகத்தையும் அடைந்து அநேககாலம் அங்குள்ள சுகத்தை அனுபவித்து மீண்டும் இவ்வுலகில் தர்மசீலனான அரசனாகப் பிறப்பான் வசந்தருதுவில் சிவசங்கரருக்குப் பிரியமான சதுர்த்தி விரதத்துக்குரிய மந்திர விசேஷத்தைச் சொல்லுகிறேன் மந்திரத்தைவிட வேதியன் சிறந்தவன் க்ஷத்திரியனும் வைசியனும் சுத்தர்களே! மந்திரபலம் இல்லாவிட்டாலும் தானவிருப்பம் உடையனாயின் சூத்திரனும் பரிசுத்தனே இவர்கள் அனைவரும் மரியாதை செய்கிறார்கள். மந்திரம் அறியாதவர்களை யாரும் அவமதிக்கிறார்கள். ஆகையால் உமாபதியின் விரதம் முழுவதும் மந்திரபூர்வமாகவே செய்ய வேண்டும் பாவங்களை ஒழித்து சுவர்க்கத்தை அடையச் செய்யும் மந்திரம் முதலான விதிகளைச் சொல்கிறேன்.
முதலாவது ஏகாதசியில் ஒரே வேளை உணவும் நீரும் அருந்தி துவாதிசியில் யாசிக்காமல் உண்டு, திரயோகதசியில் இரவில் மட்டும் உணவருந்தி, சதுர்த்தசியில் உண்ணாத விரதம் இருந்து பூரணையில் கோதானஞ் செய்தால் அந்தச் சதுர்த்தி விரதபயனை அடையலாம். அதனால் சிவபெருமான் பெரிதும் மகிழ்வார். அவனுக்குச் சிறந்த பயன்கள் கைகூடும். இந்த விரதத்தை முறைப்படிச் செயயப் பொருளும் தேகவலிமையும் இல்லாவிடில் ஒரு பொற்கிண்ணம் செய்து அது நிறைய நெய்யை விட்டு, அதற்கு ஆடையாவது நூலாவது சுற்றி, ஸ்தாணுவும் ஈசனும் ஜகத்பிரபவும் சூலபாணியும் உலக நாயகனும் பூதநாதனும் கபால மாலிகாபரணனும் கட்வாங்கதாரியும் ஜகந்நாதனும் பிறை நிலா சூடியபெருமானும் சர்வாபரண பூஷிதனும் உமாநாதனும் ஞானிகளின் மனத்தில் விளங்குபவனும் என் இதயத்தில் இருப்பவனும் அகங்கார மற்றவனாகவும் உள்ள சர்வேஸ்வரனை நான் நமஸ்கரிக்கின்றேன்! அவன் என் பாபங்களை ஒழிப்பானாக! என்ற அர்த்தமுள்ள மந்திரத்தைக் கூறிச் சிவபெருமானைப் பூஜித்து அந்தணோத்தமனுக்கு அந்த நெய்ப் பாத்திரத்தைச் சர்வேஸ்வரன் மகிழ்வானாக என்று சொல்லிக் கொண்டு தானஞ் செய்ய வேண்டும். அதனால் திவ்விய தேஜோ ரூபம் பெற்றுத் தனவான்களாவார்கள். மனவாக்குக் காயங்களால் காலை உச்சி மாலை எனப்படும் சந்தியாதி காலங்களில் மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம். இந்த விரதத்தை அனுஷ்டித்தவுடனே தண்ணீரில் போட்ட உப்பைப் போலாகி சுகவான்களாக இருப்பார்கள்.
முன் யுகத்தில் குமுதன் என்ற மன்னன் இந்த விரதத்தைக் கடைப் பிடித்துத் தன் பாவங்களை ஒழித்துச் சுவர்க்கத்தை அடைந்தான். இந்த விரதத்தை அனுஷ்டித்தவன் அடையும் புண்ணியத்தை அளவிட்டுச் சொல்லி முடியாது. நியமம், ஆசாரம் முதலியவற்றுடன் சிவபெருமானிடமே தன்மனத்தை நிலைநிறுத்தி அவ்விறைவனது ஆயிரம் திருநாமங்களையும் துதித்துக் கொண்டிருப்பவன் பாவம் ஒழிந்து சிவலோகத்தை அடைவானாகையால் அவன் பெறும் பயனுக்குச் சமமாகச் சொல்லக்கூடியது வேறொன்றுமில்லை! இவ்வாறு ஸநத்குமார முனிவர் சொன்னார்.
27. சதுர்த்தசி விரத சமானம்
வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, மாதவரே இகலோகத்திலும் பரலோகத்திலும் பயனைக் கொடுக்கத்தக்க சிவ சஹஸ்ர நாமங்களைச் சொல்லி அருளவேண்டும் என்று கேட்டார். ஸனத்குமார முனிவர் மகிழ்ச்சியோடு கூறலானார். வியாசரே! பாவங்கள் அனைத்தையும் ஒழிக்கத்தக்க சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களையும் சொல்லுகிறேன் அது நானாகச் சொல்லுவதல்ல. சிவபெருமானது திருநாமங்களையெல்லாம் சொல்வதற்கு அவ்விறைவனின் திருவருளே அவசியம் இருக்க வேண்டும் ஆகையால் வரதனும்; விஸ்வேஸ்வரனும் சாந்தனும் சர்வகர்த்தனும் அவ்யயனும் சர்வக்ஞனும் ஸ்வபாவதப்பிரகாசனும் சாந்தனும் சர்வகர்த்தனும்; அவ்யயனும் சர்வக்ஞனும் ஸ்வபாவதப்பிரகாசனும் அசலானும் அமேயனும் அநாதியும் அதுலனும் சூக்ஷ்மனும், மஹானும் சித்கனனும் வியாபியும் முக்தப் பிரியனும் அமலனும் சதாசிவனும், பூதநாதனும் சர்வவேதாகமப் பிரதிபாதகனும் தைரியவானுமாவார் அந்தச் சர்வேஸ்வரன் அவரை ஸ்படிகநிறம் சடைமுடி, ஐந்து திருமுகம், பத்துக் கரங்கள், ஒருதேகம், இருதிருவடிகள், வலக்கரத்து இச்சாஞானக் கிரியை என்னும் மூவிலைச்சூலமும், பராசக்தி ரூபமான மழுவும் கர்த்துருபாவமான கட்வங்கமும் வாஜம் பீஜா பூரகமும் வஜ்ரமும், ஜனன பயத்தைப்போக்குவதான அபயமும் இடக்கரத்து ரித்து குணமாகிய நாகமும் ஸ்தூலசூக்கும் பூதங்களை நடத்தும் மாயாரூபமாகிய பாசமும், குணமாகிய நீலோத் பலமும், அங்குசமும் சுத்தாசுத்த அத்துவாவைப் பிரவர்த்திக்கும் குணமான தமருகமும் போகத்தைத் தரும் வரதமும், நாத குணமாகிய மணியும் சங்கார குணமாகிய அக்கினியும் திரோதாயியென்னும் பரிவட்டமும், அருளாகிய சுகந்தமும்
பரையாகிய மாலையும் அநுக்கிரக காங்குரமான சிறுநகையும், பொருந்தியவனாகச் சிவ தியானஞ் செய்ய வேண்டும். என் தந்தை எனக்கு உபதேசித்த சிவநாமங்கள் ஆயிரத்தையும் சொல்லுகிறேன். அவை பதினாயிரம் திருநாமங்களாக இருந்தவை. அவற்றை என் தந்தையாகிய பிரம்ம தேவர் கண்டு, மனத்தால் அவற்றின் பொருளைக் கிரஹித்து அவற்றின் சாரபூதமான இந்த ஆயிரம் திருநாமங்களை, தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்போரைப் போலவும் பர்வதத்தை இடித்து அதனுள் இருக்கும் சாரமாகிய பொன்னை எடுப்பார் போலவும் நான்கு வேதங்களுக்கும் சம்மதமாகவுள்ளவையாய் எடுத்து இவ்வண்ணமாகத் துதிப்போர் எல்லாப் பாவங்களையும் ஒழிப்பர் என்று சொன்னார். உலகினர் பெருந்தவஞ் செய்தாலன்றி இந்நாமங்களைப் படனம் செய்வதற்கு இயலாது இது சாந்தியையும் புஷ்டியையும் கொடுக்கவல்லது. யக்ஷ ரக்ஷ பிசாசங்களையெல்லாம் விலக்கவல்லது. இவை மிகவும் புனிதமானவை. பக்திமானும் ஆஸ்திகனும், சிரத்தையுடையவனுமாகிய புருஷனுக்கு உபதேசிக்கத் தக்கதேயன்றிச் சிரத்தையற்றவர்களுக்கும் நாஸ்திகர்களுக்கும் புலனடக்க மற்றவர்களுக்கும் உபதேசிக்கத்தக்கதன்று பூதாத்மகனும் தேவதேவனும் பிநாக பாணியுமான சிவபெருமான் விஷயத்தில் அசூயையுடையவன் தன் மூதாதையர்கள் அதிக புண்ணியஞ் செய்து, சுவர்க்கம் முதலான பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் தன் பகவத் அபசார தோஷத்தால் அவர்களையும் தன்னோடு நரகவேதனையை அடையச் செய்வான். இதுவே ஞானம், தியானம், யோகம் இதுவே தியானிக்கத் தக்கது இது ஒருவனுடைய ஆயுள் முடிவில் ஸ்மரிக்கும் படி ஜன்மாந்தர புண்ணிய வசத்தால் நிகழ்ந்தால் அவன் பெரும்பாவியாக இருந்தாலும் உத்தம கதியை அடைவான். இது புண்ணியகரமானது உத்தமமானது மங்களகரமானது இந்த ஸஹஸ்ர நாமங்களே எல்லா ஸ்தோத்திரங்களிலும் உத்தமமான ஸ்தோத்திரமாகும் இதைச் சொல்லுகிறேன் கேளும்.
இதையும் இன்னும் அநேக ஸ்தோத்திரங்களையும் ஆதியில் பிரமதேவன் வைத்துக் கொண்டு இவற்றின் தாரதம்மியங்களை விசாரித்து, இதுவே எல்லாவற்றிற்கும் மேன்மையான அரசன் என்று அரசத் தன்மையும் கொடுத்திருக்கிறான் அது முதல் மகாத்மாவான சிவபெருமானுடைய இந்த ஸ்தோத்திரம் உலகத்தில் மனிதர்களாலும் சுவர்க்கத்தில் தேவர்களாலும் பூஜிக்கப் பெற்று ஸ்தஸராஜம் என்று புகழ் பெற்றிருக்கிறது இத்தவராஜம் முதலில் பிரமலோகத்திலிருந்து தோன்றி, அங்கிருந்து இவ்வுலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது அதனால் இதுபரமான தோத்திரங்களிலும் பரமானது தேஜஸ்களுக்கெல்லாம் தேஜஸானது தவத்துக்கெல்லாம் தவமானது சாந்திக்கெல்லாம் சாந்தியானது தைத்திற்கெல்லாம் தைரியமானது யோகத்திற் கெல்லாம் யோகமானது காரணத்துக்கெல்லாம் காரணமானது சத்தியத்துக்கெல்லாம் சத்தியமானது. சிறந்தவற்றில் எல்லாம் சிறந்தது. எதனால் உலகங்கள் எல்லாம் பிறக்கின்றனவோ. எதனால் உலகங்கள் பிறவாதிருக்கின்றனவோ அதுவே இதுவாகும். இது சர்வேஸ்வரனுடையதேஜோஸ்வரூபம் இத்தகையப் பிரபாவமுடைய சாம்பவமூர்த்தியின் ஸஹஸ்ரநாமங்களையும் சொல்லுகிறேன். பக்தி சிரத்தையுடன் இதைக் கேட்டால் எல்லாக்கோரிக்கைகளையும் சிறிதும் ஐயமின்றிப் பெறுவீர்கள் என்று கூறத்துவங்கினார்.
ஓம் அஸ்திராய நம:
ஓம் ஸ்தாணவே நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் பாநவே நம:
ஓம் ப்ரவராய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வராய நம:
ஓம் சர்வாத்மனே நம:
ஓம் சர்வ விக்யாலாய நம:
ஓம் சர்வாய நம: 10
ஓம் சர்வகாய நம:
ஓம் உத்பவாய நம:
ஓம் ஜடிநேவர்மிணே நம:
ஓம் ஸிகினே நம:
ஓம் கட்கினே நம:
ஓம் ஸர்வாங்காய நம:
ஓம் ஸர்வ நம
ஓம் பாவநாய நம:
ஓம் ஹராய நம:
ஓம் ஹரிணாக்ஷõய நம: 20
ஓம் ஸர்வ பூதஹராய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் ப்ர வ்ருகதயே நம:
ஓம் நிவ்ருத்தயே நம:
ஓம் நியதாய நம:
ஓம் சாசுவதாய நம:
ஓம் த்ருவாய நம:
ஓம் ஸ்மசான சாரிணே நம:
ஓம் பகவதே நம:
ஓம் கேசராய நம: 30
ஓம் கசரோத்பவாய நம:
ஓம் அபிவந்த்யாய நம:
ஓம் மகாகர்மணே நம:
ஓம் தபஸ்விநே நம:
ஓம் பூதபாவனாய நம:
ஓம் உன்மத்த வேஷாய நம:
ஓம் ப்ரசன்னாய நம:
ஓம் சர்வலோகப் பிரஜாபதயே நம:
ஓம் மஹி ரூபாய நம:
ஓம் மஹாகாயாய நம: 40
ஓம் ஸர்வரூபாய நம:
ஓம் மகாசனாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் விரூபயே நம:
ஓம் விசவ நம:
ஓம் புஜேவாமனாய நம:
ஓம் மனவே நம:
ஓம் லோக பாலாந்தர் நம:
ஓம் ஹ்தாத்மனே நம:
ஓம் ப்ரசாதாயஹயாய நம: 50
ஓம் கர்த்தபிநே நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் மகதே நம:
ஓம் நியமாய நம:
ஓம் நியமாஸ்ரயாய நம:
ஓம் ஸர்வவர்மணே நம:
ஓம் ஸ்வயம்புவே நம:
ஓம் அநாதயே நம:
ஓம் ஆதயே நம:
ஓம் அவ்யாய நம: 60
ஓம் ஸெளக்யரூபாய நம:
ஓம் விரூபாக்ஷõய நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் நக்ஷத்த சாதகாய நம:
ஓம் சந்த்ராய நம:
ஓம் ஸூர்யாய நம:
ஓம் சந்யே நம:
ஓம் கேது க்ரஹாய நம:
ஓம் க்ரஹபதயே நம:
ஓம் வராய நம: 70
ஓம் அத்ரயே நம:
ஓம் அத்ரியாலயாய நம:
ஓம் கர்த்தே நம:
ஓம் ம்ருகபரணார் பணாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் மஹாதபசே நம:
ஓம் தீர்க்க தபஸே நம:
ஓம் அதீனாய நம:
ஓம் தீன சாதகாய நம:
ஓம் சம்வத்சரகரிய நம: 80
ஓம் மந்த்ராய நம:
ஓம் ப்ரமாணாய நம:
ஓம் பரமாய நம:
ஓம் தபஸே நம:
ஓம் யோகீனே நம:
ஓம் யாஜ்யாய நம:
ஓம் மகச்பீஜ்யாய நம:
ஓம் மகாமாத்ராய நம:
ஓம் மகாத்பஸே நம:
ஓம் ஸ்வர்ணரேதஸே நம: 90
ஓம் ஸர்வக்ஞாய நம:
ஓம் கபிநாய நம:
ஓம் வ்ருஷவாகநயே நம:
ஓம் தஸபாகவே நம:
ஓம் அநிமிஷாய நம:
ஓம் நீலகண்டாய நம:
ஓம் உமாபதயே நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் ஸ்வயம் சிரேஷ்டாய நம:
ஓம் பலயே நம: 100
ஓம் வைரோசனாய நம:
ஓம் சரிக்னே நம:
ஓம் கணகர்த்ரே நம:
ஓம் கணபதயே நம:
ஓம் திக்வாஸஸே நம:
ஓம் காம்யாய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் பரமாய நம:
ஓம் மர்த்ராய நம:
ஓம் ஸர்வ பாவ ஹராய நம: 110
ஓம் ஹராய நம:
ஓம் கமண்டலுதராய நம:
ஓம் தந்விநே நம:
ஓம் பாண நம:
ஓம் ஹஸ்தாய நம:
ஓம் ப்ரதாபவதே நம:
ஓம் அசநயேஸதக்நயே நம:
ஓம் கட்கிநே நம:
ஓம் பட்டிசிரே நம:
ஓம் ஆயுதிநே நம: 120
ஓம் மகதே நம:
ஓம் சுருவ ஹஸ்தாய நம:
ஓம் சுரூபாய நம:
ஓம் தேஜஸே நம:
ஓம் தேஜஸ்கராய நம:
ஓம் மஹதே நம:
ஓம் உஷ்ணீசிணே நம:
ஓம் சுவக்த்ராய நம:
ஓம் அத்யுக்ராய நம:
ஓம் விந்தாய நம: 130
ஓம் தீர்க்காய நம:
ஓம் ஹரிநேத்ராய நம:
ஓம் சுதீர்த்தாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் ஸ்ருகால ரூபாய நம:
ஓம் ஸாவார்த்தாய நம:
ஓம் முண்டாய நம:
ஓம் குண்டிநே நம:
ஓம் கமண்டலவே நம:
ஓம் அஜாய நம: 140
ஓம் ம்ருகரூபாய நம:
ஓம் கந்தமாலினே நம:
ஓம் கபர்த்திநே நம:
ஓம் ஊர்த்வரேதஸே நம:
ஓம் ஊர்த்வலிங்காய நம:
ஓம் ஊர்த்வசாயினே நம:
ஓம் நமஸ்தலாய நம:
ஓம் த்ரிஜடினே நம:
ஓம் சீர் வாசஸே நம:
ஓம் ருத்ராய நம: 150
ஓம் சேனாபதயே நம:
ஓம் விபவே அஹஸ் சாராய நம:
ஓம் நந்தஞ்சராய நம:
ஓம் கால யோகிநே நம:
ஓம் மகாநாதாய நம:
ஓம் சர்வாசாய நம:
ஓம் சதுர்பதாய நம:
ஓம் நிசாசராய நம:
ஓம் ப்ரேதசாரிணே நம:
ஓம் பூதசாரிணே நம: 160
ஓம் மகேசுவராய நம:
ஓம் பகுபூதாய நம:
ஓம் பகுதனாய நம:
ஓம் சர்வதாராய நம:
ஓம் அமிதாயகதயே நம:
ஓம் ந்ருத்ய நம:
ஓம் ப்ரியாய நம:
ஓம் ந்ருத்யத்ருப்தாய நம:
ஓம் தர்த்தகாயஞ் நம:
ஓம் விலாசகாய நம: 170
ஓம் போஷாய நம:
ஓம் மஹாதபஸே நம:
ஓம் ப்ராம் ஸுவே நம:
ஓம் நித்யாய நம:
ஓம் கிரிசராய நம:
ஓம் நபஸே நம:
ஓம் ஸகஸ்ரஹ ஸ்தாய நம:
ஓம் விஜயாய நம:
ஓம் வ்யவசாயாய நம:
ஓம் அநிச்சிதாய நம: 180
ஓம் அமர்ஷணாய நம:
ஓம் மர்ஷணாத்மனே நம:
ஓம் யக்ஞக்நே நம:
ஓம் காமநாசகாய நம:
ஓம் தக்ஷயக்ஞாப நம:
ஓம் ஹாரிணே நம:
ஓம் சுபதாய நம:
ஓம் மத்யமாய நம:
ஓம் தபோ பஹாரிணே நம:
ஓம் பலவதே முத்தாய நம: 190
ஓம் அர்த்தினே நம:
ஓம் அஜீதாய நம:
ஓம் வராய நம:
ஓம் கம்பீரகோஷாய நம:
ஓம் கம்பீராய நம:
ஓம் கம்பீர நம:
ஓம் பலவாகனயே நம:
ஓம் ந்யக்ரோதாய நம:
ஓம் வ்ருஷகர்ணாய நம:
ஓம் அபியே நம: 200
ஓம் விபவே நம:
ஓம் ஸுதீக்ஷணதஸநாய நம:
ஓம் மகாகாயாய நம:
ஓம் மகானனாய நம:
ஓம் விஷ்வக் சேனாய நம:
ஓம் அரயே நம:
ஓம் யக்ஞாய நம:
ஓம் ஸம்யுகாபீடவாகநாய நம:
ஓம் தீக்ஷண பாஹவே நம:
ஓம் ஹர்யக்ஷõய நம: 210
ஓம் மகாங்காய நம:
ஓம் கர்மகால விதே நம:
ஓம் விஷ்ணு ப்ரஸாதிதாய நம:
ஓம் யஞ்ஞாய நம:
ஓம் ஸமுத்ராய நம:
ஓம் வடவாமுகாய நம:
ஓம் லம்பனாய நம:
ஓம் லம்பிதோஷ்டாய நம:
ஓம் பகுமாயா நம:
ஓம் பயோநிதயே நம: 220
ஓம் மகாதம்ஷ்ட்ராய நம:
ஓம் மஹாஜிஹ்வாய நம:
ஓம் மஹாமஹாய நம:
ஓம் மஹாநகாய நம:
ஓம் மகாரேம்ணே நம:
ஓம் மகாகே ஸாய நம:
ஓம் மஹாஜடாய நம:
ஓம் அஸபத்னாய நம:
ஓம் ப்ரஸாதாய நம:
ஓம் பரத்யயாய நம: 230
ஓம் கிரிஸாதகாய நம:
ஓம் ஸ்நேஹனாய நம:
ஓம் அஸ்நேகனாய நம:
ஓம் அஜதாய நம:
ஓம் மஹா முநயே நம:
ஓம் வ்ருஷகாராய நம:
ஓம் வ்ருக்ஷகேதவே நம:
ஓம் தரளாய நம:
ஓம் வாயுவாஹனாய நம:
ஓம் மண்டலினே நம: 240
ஓம் வாயுதாம்னே நம:
ஓம் தேவதானவ தர்ப்பக்னே நம:
ஓம் அதர்வ சீர்ஷாய நம:
ஓம் ஸாமா ஸ்யாய நம:
ஓம் ரிபுஹஸ்தாய நம:
ஓம் மிதக்ஷணாய நம:
ஓம் யஜுஷே நம:
ஓம் பாதபுஜாய நம:
ஓம் குஹ்யாய நம:
ஓம் ப்ரகாசாய நம: 250
ஓம் ஜங்கமாய நம:
ஓம் அமோகாய நம:
ஓம் அர்த்த ப்ரசாதாய நம:
ஓம் அபிகம்பாய நம:
ஓம் ஸுதர்சனாய நம:
ஓம் உபாகாராய நம:
ஓம் ப்ரியாய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் கநகாய நம:
ஓம் காஞான ஸ்திராய நம: 260
ஓம் நநீதினே நம:
ஓம் நந்திகராய நம:
ஓம் பவ்யாய நம:
ஓம் புஷ்கராயாயஸ் நம:
ஓம் தபதயே நம:
ஓம் ஸ்திராய நம:
ஓம் தபனாட நம:
ஓம் தாபனாய நம:
ஓம் ஆத்யாய நம:
ஓம் க்ரிணினே நம: 270
ஓம் யக்ஞாய நம:
ஓம் ஸமாஹிதாய நம:
ஓம் நகதாய நம:
ஓம் கலயே நம:
ஓம் காலாய நம:
ஓம் மகராய நம:
ஓம் கால பூஜிகாய நம:
ஓம் கருணாய நம:
ஓம் கணகாராய நம:
ஓம் பூதபாவனாய நம: 280
ஓம் சாரதயே நம:
ஓம் பஸ்மசாயீனே நம:
ஓம் பஸ்ம ரூக்ஷõய நம:
ஓம் பஸ்மரூபாய நம:
ஓம் தாங்கணாய நம:
ஓம் அகணாய நம:
ஓம் லோபாய நம:
ஓம் மகாத்மனே நம:
ஓம் ஸர்வபூஜிதாய நம:
ஓம் சங்கவே நம: 290
ஓம் சங்குசம்பன்னாய நம:
ஓம் கசயே நம:
ஓம் பூதநிஷேவிதாய நம:
ஓம் ஆஸ்ரமஸ்தாய நம:
ஓம் கபோதஸ்தாய நம:
ஓம் விஸ்வகர்மபதயே நம:
ஓம் வராய நம:
ஓம் சாகாய நம:
ஓம் வீசாகாய நம:
ஓம் கும்பாண்டாய நம: 300
ஓம் அர்த்தஜாலாய நம:
ஓம் ஸூநிச்சயாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் அகபிலாய நம:
ஓம் சூராய நம:
ஓம் ஆயுஷே நம:
ஓம் அபராய நம:
ஓம் உரகாய நம:
ஓம் கந்தர்வாய நம:
ஓம் அதிதயே நம: 310
ஓம் தார்க்ஷ்யாய நம:
ஓம் அவிஞ்ஞேயாய நம:
ஓம் சுகாரதயே நம:
ஓம் பரஸ்வதாயுநாய நம:
ஓம் தேவாம நம:
ஓம் அர்த்தகராய நம:
ஓம் ஸுதியே நம:
ஓம் வராய நம:
ஓம் தும்பவீணாய நம:
ஓம் மஹாகோபாய நம: 320
ஓம் ஊர்த்துவரேதஸே நம:
ஓம் ஜலேஸயாய நம:
ஓம் உக்ரவம்ஸகராய நம:
ஓம் வம்சாய நம:
ஓம் வம்சதராய நம:
ஓம் அநிந்தியாய நம:
ஓம் சர்வாங்க ரூபாய நம:
ஓம் மாயாவிநே நம:
ஓம் சுகிர்தாய நம:
ஓம் அநியாய நம: 330
ஓம் அநலாய நம:
ஓம் பாந்தவாய நம:
ஓம் பந்துகர்த்ரே நம:
ஓம் ஸுபந்தவே நம:
ஓம் அவிலோசனாய நம:
ஓம் சுயக்ஞாரயே நம:
ஓம் சுகாமாரயே நம:
ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
ஓம் அஸமாய நம:
ஓம் பாஹவே நம: 340
ஓம் அநிந்த்யாய நம:
ஓம் சாவாய நம:
ஓம் சங்கராய நம:
ஓம் தனதாயதனாய நம:
ஓம் அமரேசாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் விசுவதேவாய நம:
ஓம் சுராரிக்நே நம:
ஓம் தீதிதயே நம:
ஓம் வஜ்ரஸ்தம்பனாய நம: 350
ஓம் அஹிர்புதன்யாய நம:
ஓம் சேகிதானாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் அஜாய நம:
ஓம் ஏகபாதாய நம:
ஓம் கபாலிநே நம:
ஓம் த்ரிஸங்கவே நம:
ஓம் அஜிதாய நம:
ஓம் சிவாய நம:
ஓம் தந்வந்த்ரிணே நம: 360
ஓம் தூமகேதவே நம:
ஓம் ஸ்கந்தாய நம:
ஓம் வைசிரவணாய நம:
ஓம் தாத்ரே நம:
ஓம் ஸக்ராய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் மித்ராய நம:
ஓம் த்வஷ்ட்ரே த்ருவாய நம:
ஓம் தனாய நம:
ஓம் ப்ரபாவாய நம: 370
ஓம் ஸர்வகாய நம:
ஓம் வாயவே நம:
ஓம் அர்யமாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் ரவயே நம:
ஓம் உதக்ராய நம:
ஓம் விதாத்ரே நம:
ஓம் மாந்தாத்ரே நம:
ஓம் பூதபாவனாய நம:
ஓம் ஸுததீர்த்தாய நம: 380
ஓம் வாக்மினே நம:
ஓம் ஸர்வமால குணாவஹாய நம:
ஓம் பத்மவக்த்ராய நம:
ஓம் மஹாவக்த்ராய நம:
ஓம் சந்த்ரவக்த்ராய நம:
ஓம் மனோஜவாய நம:
ஓம் பலவதே நம:
ஓம் உபசாந்தாய நம:
ஓம் புராணாய நம:
ஓம் புண்ய சஞ்சரிணே நம: 390
ஓம் குரவே நம:
ஓம் கர்த்ரே நம:
ஓம் கால ரூபிணே நம:
ஓம் குருபூதாய நம:
ஓம் மஹேஸ்வராய நம:
ஓம் சர்வாசனாய நம:
ஓம் தர்ஸு பாயினே நம:
ஓம் சர்வபிராணிபதயே நம:
ஓம் தேவ தேவாய நம:
ஓம் ஸுகாஸக்தாய நம: 400
ஓம் ஸதே நம:
ஓம் அஸாத நம:
ஓம் ஸர்வரத்னவிதே நம:
ஓம் கைலாச கிரிவாசினே நம:
ஓம் ஹிமவத்கிரி ஸம்ஸ்ரரயாய நம:
ஓம் கூலஹாரிணே நம:
ஓம் கூலகர்த்ரே நம:
ஓம் பகுபீஜா நம:
ஓம் பகுப்ரதயா நம:
ஓம் வணிஜாய நம: 410
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வ்ருக்ஷõய நம:
ஓம் நகுலாய நம:
ஓம் சந்தனச்சதாய நம:
ஓம் ஸார பீடாய நம:
ஓம் மஹாஜந்த்வே நம:
ஓம் அலோகாய நம:
ஓம் மஹெளஷதாய நம:
ஓம் சித்தார்த்த காரிணே நம:
ஓம் சித்தார்த்தாய நம: 420
ஓம் சந்தாய நம:
ஓம் வ்யாகரணாந்தராய நம:
ஓம் ஸிங்கநாதாய நம:
ஓம் ஸிங்க த்மஸ்ட்ராய நம:
ஓம் ஸிங்ககாய நம:
ஓம் ஸிங்கவாகனாய நம:
ஓம் ப்ரபாவாத்மனே நம:
ஓம் ஜகத்காலாய நம:
ஓம் தலாய நம:
ஓம் லோகஹிதாய நம: 430
ஓம் ஜ்ஞானசாராய நம:
ஓம் நவக்ர காங்காய நம:
ஓம் கேதுமாலினே நம:
ஓம் சுபாவனாய நம:
ஓம் பூதாஸயாய நம:
ஓம் பூதபதயே நம:
ஓம் அகோராத்ராய நம:
ஓம் அநிந்திதாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் ஸர்வபூதாத்மனே நம: 440
ஓம் நிலயாய நம:
ஓம் விபவே நம:
ஓம் பவாய நம:
ஓம் அமோகாய நம:
ஓம் ஸஞ்சயாய நம:
ஓம் பார்ஸ்வாய நம:
ஓம் ஜீவனாய நம:
ஓம் ப்ராணதாரணாய நம:
ஓம் த்ருதிமதே நம:
ஓம் ஆத்மவதே நம: 450
ஓம் தக்ஷõய நம:
ஓம் ஸத்க்ருதாய நம:
ஓம் யுகாதிகாயா நம:
ஓம் கோபாலாய நம:
ஓம் கோயுத்யே நம:
ஓம் க்ராஹாய நம:
ஓம் கோசர்மவசனாய நம:
ஓம் அராய நம:
ஓம் ஹிரண்யபாகவே நம:
ஓம் குஹாபாலாய நம: 460
ஓம் ப்ரவேசிதாய நம:
ஓம் ப்ரதிஷ்டாயினே நம:
ஓம் மகாஹர்ஷாய நம:
ஓம் ஜிதகாமாய நம:
ஓம் ஜிதேநத்ரியாய நம:
ஓம் காந்தராய நம:
ஓம் ஸுராலாய நம:
ஓம் தனவே நம:
ஓம் ஆத்மனே நம:
ஓம் சுதயே நம: 470
ஓம் வராய நம:
ஓம் மஹாகீதாய நம:
ஓம் மகாந்ருத்யாய நம:
ஓம் அப்சரோகண நம:
ஓம் சேவிதாய நம:
ஓம் மஹாகேதவே நம:
ஓம் தனுஷேதாதவே நம:
ஓம் விகர்த்ரே நம:
ஓம் ச்ரேசுவராய நம:
ஓம் ஆவேதநீயா நம: 480
ஓம் ஆவாஸாய நம:
ஓம் ஸர்வகந்த சுகரவஹாய நம:
ஓம் தோரணாய நம:
ஓம் தாரணாய நம:
ஓம் வாயவே நம:
ஓம் பர்ஜன்யாய நம:
ஓம் ஹுதா ஸனஸஹாயாய நம:
ஓம் ப்ரசாந்தாத்மனே நம:
ஓம் ஹுதாஸனாய நம:
ஓம் உக்ரதே ஜஸே நம: 490
ஓம் மஹாதேஜஸே நம:
ஓம் ஜ்யாய நம:
ஓம் விஜய காலவிதே நம:
ஓம் ஜ்யோதிஷே நம:
ஓம் அயனாய நம:
ஓம் சித்தயே நம:
ஓம் ஸந்தி விக்ரகாய நம:
ஓம் ஸிகிநே நம:
ஓம் தண்டிநே நம:
ஓம் ஜடிநே நம: 500
ஓம் ஜ்வாலினே நம:
ஓம் மூர்த்திஜாய நம:
ஓம் துர்த்தராய நம:
ஓம் வணிஜே நம:
ஓம் வைணவினே நம:
ஓம் வணவினே நம:
ஓம் தாளினே நம:
ஓம் காலாய நம:
ஓம் காலகடங்கராய நம:
ஓம் நக்ஷத்ராய நம: 510
ஓம் விக்ரகாய நம:
ஓம் வ்ருத்தயே நம:
ஓம் குணவ்ருத்தயே நம:
ஓம் அயோகமாய நம:
ஓம் பிரஜாபதயே நம:
ஓம் திஸாபாஹவே நம:
ஓம் விபாகாய நம:
ஓம் ஸர்வதோமுகாய நம:
ஓம் விமோசனாய நம:
ஓம் சுரகணாய நம: 520
ஓம் ஹிரண்யகவ சோத்பவாய நம:
ஓம் மேட்ரஜாய நம:
ஓம் பலசாரிணே நம:
ஓம் மஹாசாரிணே நம:
ஓம் ஸுதாய நம:
ஓம் சர்வதுர்வ நிநாதினே நம:
ஓம் சர்வ வாத்ய பரிக்ரஹாய நம:
ஓம் பாலரூபாய நம:
ஓம் பிலாவாசாய நம:
ஓம் ஏமமாலினே நம: 530
ஓம் தாங்கவிதே த்ரிதஸாயத்ரு நம:
ஓம் விருதாய நம:
ஓம் சந்தஸே நம:
ஓம் சர்வபந்த விமோசனாய நம:
ஓம் பந்தனாய நம:
ஓம் சுரேந்தராய நம:
ஓம் சத்ருவிநாயனாய நம:
ஓம் சாங்க்ய நம:
ஓம் ப்ரசாதாய நம:
ஓம் துர்வாசசே நம: 540
ஓம் சர்வ சாதுநியே நம:
ஓம் விதாய நம:
ஓம் ப்ரஸ்கந்தனாய நம:
ஓம் விபாகாய நம:
ஓம் அதுலாய நம:
ஓம் யக்ஞசாமவிதே நம:
ஓம் சர்வாஸாய நம:
ஓம் சர்வசாரிணே நம:
ஓம் துர்வாசசே நம:
ஓம் வாசவாய அமராய நம: 550
ஓம் ஏமாய நம:
ஓம் ஏமகராய நம:
ஓம் யக்ஞாய நம:
ஓம் சர்வதாரிணே நம:
ஓம் தரோந் தமாய நம:
ஓம் லோகிதாக்ஷõய நம:
ஓம் மகாக்ஷõய நம:
ஓம் விரூபாக்ஷõய நம:
ஓம் விஸாரதாய நம:
ஓம் சங்கரகாய நம: 560
ஓம் விக்ரகாய நம:
ஓம் காமாய நம:
ஓம் சர்ப்ப நம:
ஓம் சீர நிவாஸநாய நம:
ஓம் முக்யாய நம:
ஓம் வியுக்த தேகாய நம:
ஓம் தேகாரயே நம:
ஓம் சர்வ காமதாய நம:
ஓம் சர்வகாலப்ரசதாய நம:
ஓம் சுபலாய நம: 570
ஓம் பலரூபத்ருஸே நம:
ஓம் சதாகாசாய நம:
ஓம் நிரூபாய நம:
ஓம் நிபாஸ்யே நம:
ஓம் உரணாய நம:
ஓம் சுகாய நம:
ஓம் ரௌத்ர ரூபாம்ஸ்வே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் வசவே நம:
ஓம் அக்னயே நம: 580
ஓம் சுவர்ச்சிநே நம:
ஓம் வசுவேகாய நம:
ஓம் மகாவேஹாய நம:
ஓம் மனோவேஹாய நம:
ஓம் நிசாகராய நம:
ஓம் சர்வா வாசாய நம:
ஓம் ப்ரியா வாசினே நம:
ஓம் உபதேசகராய நம:
ஓம் ஹராய நம:
ஓம் முநயே நம: 590
ஓம் ஆத்மாகராய நம:
ஓம் லோகாய நம:
ஓம் ஸம்போஜ்யாய நம:
ஓம் ஸகஸ்ரபுஜே நம:
ஓம் பக்ஷிணே நம:
ஓம் பக்ஷிரூபிணே நம:
ஓம் விசுவதீபாய நம:
ஓம் விஸாமபதயே நம:
ஓம் உன்மாதாய நம:
ஓம் தேனாகாராய நம: 600
ஓம் அர்த்தகராய நம:
ஓம் நாமதேவாய நம:
ஓம் வாமாய நம:
ஓம் ப்ராக்தேவாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் சுத்தயோகாபசாரிணே நம:
ஓம் சித்தாய நம:
ஓம் சித்தார்த்த நம:
ஓம் சரதகாய நம:
ஓம் பிக்ஷவே நம: 610
ஓம் பிக்ஷúரூபிணே நம:
ஓம் விஷாணினே நம:
ஓம் ம்ருதவே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் மஹாசேனாய நம:
ஓம் விசாகாய நம:
ஓம் சஷ்டி நாகாய நம:
ஓம் திசாம்பதயே நம:
ஓம் வஜ்ர ஹஸ்த நம:
ஓம் ப்ரதி ஷ்டம்ஹினே நம: 620
ஓம் ஸ்தம்பனாய நம:
ஓம் க்ஷமாவ் ருத்தாய நம:
ஓம் காலாய நம:
ஓம் மனவே நம:
ஓம் மதுகராய நம:
ஓம் சலாய நம:
ஓம் வானஸ்பத்ராய நம:
ஓம் வாஜி மேகாய நம:
ஓம் நித்யாய நம:
ஓம் ஆசிரம பூஜிதாய நம: 630
ஓம் பிரஹ்ம சாரிணே நம:
ஓம் லோக சாரிணே நம:
ஓம் சர்வசாரிணே நம:
ஓம் சுசாரவிதே நம:
ஓம் ஈஸாநாய நம:
ஓம் ஈசுவராய நம:
ஓம் காலாய நம:
ஓம் நிசாசாரிணே நம:
ஓம் அநேக த்ருவே நம:
ஓம் நிமித்தஸ்தாய நம: 640
ஓம் நிமித்தாய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நந்திகராய ஹராய நம:
ஓம் நந்திசுவராய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நந்திவதே நம:
ஓம் நந்திவர்த்தனாய நம:
ஓம் பகஸ்யாக்ஷி நம:
ஓம் நிஹந்த்ரே நம:
ஓம் காலாய நம: 650
ஓம் பிரம விதாம்வராய நம:
ஓம் சதுர்முகாய நம:
ஓம் மகாலிங்காய நம:
ஓம் சதுர்லிங்காய நம:
ஓம் லிங்காத்யக்ஷ்யாய நம:
ஓம் மகாத் யக்ஷ்யாய நம:
ஓம் லோகாத்யக்ஷ்யாய நம:
ஓம் யுகாவஹாய நம:
ஓம் பீஜாத்யக்ஷ்யாய நம:
ஓம் பீஜகர்த்ரே நம: 660
ஓம் அத்யாத் மாநுகதாயபலாய நம:
ஓம் இதிகாஸ நம:
ஓம் கர்த்ரே நம:
ஓம் கல்யாய நம:
ஓம் ஸோத்தமாய நம:
ஓம் ஜ்லேசுவராய நம:
ஓம் தம்பாய நம:
ஓம் தம்பகராய நம:
ஓம் ரம்ஹாய நம:
ஓம் வசியாய நம: 670
ஓம் வசியகராய நம:
ஓம் கலயே நம:
ஓம் லோக கர்த்ரே நம:
ஓம் பசுபதயே நம:
ஓம் மகர கர்த்ரே நம:
ஓம் மகௌவதாய நம:
ஓம் அக்ஷராய நம:
ஓம் பரமாய நம:
ஓம் பலவதே நம:
ஓம் சுக்ராய நம: 680
ஓம் நீதயே நம:
ஓம் அநீதயே நம:
ஓம் சுததாத்மனே நம:
ஓம் சுத்தமானாய நம:
ஓம் கதிப்ரதாய நம:
ஓம் பருப்ர சாதாய நம:
ஓம் கஸ்வப்னாய நம:
ஓம் தக்ஷிணௌகாய நம:
ஓம் அமித்ரஜிதே நம:
ஓம் வேதகராய நம: 690
ஓம் ருத்ரகாராய நம:
ஓம் வித்வாம்சாய நம:
ஓம் பரமாய நம:
ஓம் தபஸே நம:
ஓம் மஹாமேக நினாதினே நம:
ஓம் மஹா கோரவ சீகராய நம:
ஓம் அக்னி ஜ்வாலினே நம:
ஓம் மஹாஜ்வாலினே நம:
ஓம் அதிதூமாய நம:
ஓம் ஹுதாய நம: 700
ஓம் ஹவிஷே விருஷணாய நம:
ஓம் ஸங்கராய நம:
ஓம் நித்யாய நம:
ஓம் வாசஸ்வினே நம:
ஓம் தூம கேதனாய நம:
ஓம் நீலாய நம:
ஓம் ஸதத்தாங்கலுத்தாய நம:
ஓம் சோபனாய நம:
ஓம் நிரவக்ரஹாய நம:
ஓம் ஸ்வஸ்திதாய நம: 710
ஓம் ஸ்வஸ்தி பாகாய நம:
ஓம் பாகினே நம:
ஓம் பாககராய நம:
ஓம் பகவே நம:
ஓம் உத்ஸங்காய நம:
ஓம் மகாங்காய நம:
ஓம் மஹா கர்ப்புராய நம:
ஓம் பகுனே நம:
ஓம் க்ருஷ்ணவர்ணாய நம:
ஓம் சுவர்ணாய நம: 720
ஓம் சர்வதேஹினா மிந்திரியாய நம:
ஓம் மஹாபாதாய நம:
ஓம் மஹா ஹஸ்தாய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் மஹாயஸஸே நம:
ஓம் மஹாமூர்த்தனே நம:
ஓம் மஹாநேத்ராய நம:
ஓம் மஹாமாத்ராய நம:
ஓம் விசாலாய நம:
ஓம் மஹாதந்தாய நம: 730
ஓம் மஹாகர்ணாய நம:
ஓம் மகேஷவே நம:
ஓம் மகாநுகாய நம:
ஓம் மஹாநாதாய நம:
ஓம் மஹாகம்பவே நம:
ஓம் மஹாக்ரீவாய நம:
ஓம் சுசாந் தத்ருஸே நம:
ஓம் மஹாசக்ஷúஷே நம:
ஓம் மஹா வக்த்தாய நம:
ஓம் அந்தராத்மனே நம: 740
ஓம் ம்ருகரலயாய நம:
ஓம் மஹாகடினே நம:
ஓம் மஹாக்ரீவாய நம:
ஓம் மஹா பாஹவே நம:
ஓம் ப்ரதாபவதே நம:
ஓம் ஸம்யோகாய நம:
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வ்ருத்தாய நம:
ஓம் நித்யவ்ருத்தாய நம:
ஓம் குணாதிகாய நம: 750
ஓம் நித்யாய நம:
ஓம் தர்மஸகாயாய நம:
ஓம் தேவாசுரபதயே நம:
ஓம் பதயே நம:
ஓம் அயுக்தாய நம:
ஓம் யுக்தபாஹவே நம:
ஓம் த்விவிதாய நம:
ஓம் சுபர்வணாய நம:
ஓம் ஆஷாடாய நம:
ஓம் சுஷாடாய நம: 760
ஓம் த்ருவாய நம:
ஓம் ஹரிஹராய நம:
ஓம் வஸவே நம:
ஓம் ஆவ்ருத்திமதே நம:
ஓம் நித்யாய நம:
ஓம் வசுஸ்ரேஷ்டாய நம:
ஓம் மஹா ரதயே நம:
ஓம் சிரோ ஹாரிணே நம:
ஓம் ஜலோத்பவாய நம:
ஓம் விஸர்ப்பிணே நம: 770
ஓம் ஸர்வலக்ஷண பூஷிதாய நம:
ஓம் அக்ஷராய நம:
ஓம் க்ஷராய நம:
ஓம் யோகினே நம:
ஓம் சர்வ யோகினே நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் சமாம்னாயாய நம:
ஓம் தீர்த்த சேவினே நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் மகாரதாய நம: 780
ஓம் நிர்ஜீவாய நம:
ஓம் ஜீவனாய வாசினே நம:
ஓம் நீரசாய நம:
ஓம் பஹுகர்க்க நம:
ஓம் சாயரத்னப் பிரபுதாய நம:
ஓம் ரத்னாங்காய நம:
ஓம் மஹா ஹ்ருதநிகாத நம:
ஓம் க்ருதே நம:
ஓம் முலாய நம:
ஓம் விசாகாய நம: 790
ஓம் நிரவருத்தாய நம:
ஓம் யக்தாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் நிதயே நம:
ஓம் ஆரோஹணாய நம:
ஓம் நிருஹாய நம:
ஓம் சயிலஹாரிணே நம:
ஓம் மஹாதபஸே நம:
ஓம் சேனாகல்பாய நம:
ஓம் மஹாகல்பாய நம: 800
ஓம் யோகாய நம:
ஓம் யோககராய நம:
ஓம் ஹராய நம:
ஓம் யுகரூபாய நம:
ஓம் மஹாரூபாய நம:
ஓம் அயனாய நம:
ஓம் ககனாய நம:
ஓம் நராய நம:
ஓம் நாட்யநிர்வாமணாய நம:
ஓம் பாதாய நம: 810
ஓம் பண்டிதாய நம:
ஓம் விஸ்வலோசனாய நம:
ஓம் பஹுமாலாய நம:
ஓம் மஹாமாலாய நம:
ஓம் சுமாலாய நம:
ஓம் பஹுலோசனாய நம:
ஓம் விஸ்தாராய நம:
ஓம் பவனாய நம:
ஓம் க்ரூராய நம:
ஓம் குசுமாய நம: 820
ஓம் சுபலோதயாய நம:
ஓம் வ்ருஷபாய நம:
ஓம் வ்ருஷபாங்காய நம:
ஓம் மலலி பில்வாய நம:
ஓம் ஜடாதராய நம:
ஓம் இந்தவே நம:
ஓம் விசர்க்காய நம:
ஓம் சுமுகாய நம:
ஓம் சுகாய நம:
ஓம் சுவாயுததராய நம: 830
ஓம் நிவேதனாய நம:
ஓம் சுதன்மனே நம:
ஓம் ஸங்கா தாராய நம:
ஓம் மஹாஹனுஷே நம:
ஓம் கந்தமாலினே நம:
ஓம் பகவதே நம:
ஓம் உத்தானாய நம:
ஓம் மந்தானாய நம:
ஓம் பஹுளாய நம:
ஓம் பாஹவே நம: 840
ஓம் சகலாய நம:
ஓம் சர்வலோசனாய நம:
ஓம் உரஸ்தாளீகராய நம:
ஓம் தானினே நம:
ஓம் ஊர்த்வ ஸம்ஹனனாய நம:
ஓம் வடவே நம:
ஓம் சத்ரபத்ர சுவிக்யாதாய நம:
ஓம் சர்வலோகாஸ்ரயாய நம:
ஓம் மகதே நம:
ஓம் முண்டாய நம: 850
ஓம் விரூபாய நம:
ஓம் விகிர்தாய நம:
ஓம் தண்டினே நம:
ஓம் முண்டாய நம:
ஓம் விகர்ஷ்ணாய நம:
ஓம் ஹரியக்ஷõய நம:
ஓம் கோகசாய நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் தீப்த ஜிஹ்வாய நம:
ஓம் ஸகஸ்ரபாதே நம: 860
ஓம் ஸகஸ்ரமூர்த்னே நம:
ஓம் தேவேந்த்ராய நம:
ஓம் சர்வ பூதமயாய நம:
ஓம் குரவே நம:
ஓம் ஸகஸ்ர பாஹவே நம:
ஓம் சர்வாங்ககாய நம:
ஓம் சண்யாய நம:
ஓம் சர்வலோகச்ருதே நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் த்ருமதவே நம: 870
ஓம் மந்த்ராய நம:
ஓம் கனிஷ்டாய நம:
ஓம் கிருஷ்ண பிங்களாய நம:
ஓம் பிரஹ்ம தண்டவி நம:
ஓம் நிர்மாத்ரே நம:
ஓம் சதக்னினே நம:
ஓம் சதபாகத்ருதே நம:
ஓம் பத்ம கர்ப்பாய நம:
ஓம் பிரமகர்ப்பாய நம:
ஓம் ஜலகர்ப்பாய நம: 880
ஓம் கர்ப்பஸ்தாய நம:
ஓம் ப்ரஹ்மவிதே நம:
ஓம் பிரஹ்மணே நம:
ஓம் பிரமயக்ஞாய நம:
ஓம் பிராஹ்மணாய நம:
ஓம் கதயே நம:
ஓம் அனந்த ரூபாய நம:
ஓம் நௌகாத்மனே நம:
ஓம் திக்மதேஜஸே நம:
ஓம் தமோநுதாய நம: 890
ஓம் ஊர்த்துவகாத்மனே நம:
ஓம் பசுபதயே நம:
ஓம் வாதரம்ஹஸே நம:
ஓம் மனோஜவாய நம:
ஓம் சந்தனினே நம:
ஓம் பத்ம நாளாக்ராய நம:
ஓம் சுரப்யுத்தரணாய நம:
ஓம் நராய நம:
ஓம் கர்ணிகாராய நம:
ஓம் மகாசக்கராய நம: 900
ஓம் நீலமால பிநாகத்ருதே நம:
ஓம் உமாபதயே நம:
ஓம் உமாகாந்தாய நம:
ஓம் ஜான்ன வீஹ்ருதயங்காய நம:
ஓம் வராய நம:
ஓம் வராகாய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வரேசாய நம:
ஓம் சுமகாசுவனாய நம:
ஓம் மஹாப் பிரசாதாய நம: 910
ஓம் அநகாய நம:
ஓம் சக்ரக்னே நம:
ஓம் சுவேத பிங்களாய நம:
ஓம் பீதாத்மனே நம:
ஓம் ப்ரயதாத்மனே நம:
ஓம் ஸம்யதாத்மனே நம:
ஓம் பிரதான விதே நம:
ஓம் சர்வபார் சுவசுதாய நம:
ஓம் தார்க்ஷ்யாய நம:
ஓம் தர்ம சாதாராணாய நம: 920
ஓம் தராய நம:
ஓம் சராசராத்மனே நம:
ஓம் சூக்ஷ்மாத்மனே நம:
ஓம் சுவர்ஷாங்காய நம:
ஓம் வ்ருஷேசுவராய நம:
ஓம் சாத்யாய நம:
ஓம் வருஷயே நம:
ஓம் வசவே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் விவசுவதே நம: 930
ஓம் சவித்ரே நம:
ஓம் அர்ச்சிதாய நம:
ஓம் வியாசாய நம:
ஓம் சர்வார்த்த சம்÷க்ஷபாய நம:
ஓம் விஸ்தாராய நம:
ஓம் பரியாய நம:
ஓம் பயாய நம:
ஓம் ருதவே நம:
ஓம் ஸம்வத்சராய நம:
ஓம் மாசாய நம: 940
ஓம் பக்ஷõய நம:
ஓம் ஸந்த்யாஸ நம:
ஓம் மாபகாய நம:
ஓம் கலாய நம:
ஓம் காஷ்டாய நம:
ஓம் லவாய நம:
ஓம் மாத்ராய நம:
ஓம் முகூர்த்தாய நம:
ஓம் அவ்னே நம:
ஓம் க்ஷபாய நம: 950
ஓம் க்ஷணாய நம:
ஓம் விசுவ÷க்ஷத்ராய நம:
ஓம் பீஜலிங்காய நம:
ஓம் பீஜாய நம:
ஓம் ஆத்யாய நம:
ஓம் அநிந்திதாய நம:
ஓம் சர்வதயே நம:
ஓம் ஸதே நம:
ஓம் அஸதே நம:
ஓம் வியக்தாய நம: 960
ஓம் பித்ரே நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் பிதா மஹாய நம:
ஓம் சுவர்க்கத்வாராய நம:
ஓம் பிரஜாந்வராய நம:
ஓம் திரிவிஷ்டபாய நம:
ஓம் நிர்வாணாய நம:
ஓம் ஹ்லாதனாய நம:
ஓம் ப்ரஹ்ம லோக நம:
ஓம் பராகதயே நம: 970
ஓம் தேவாசுர விநிர்மாத்ரே நம:
ஓம் தேவாசுரபராயணாய நம:
ஓம் சுராசுர கதயே நம:
ஓம் தேவாய நம:
ஓம் தேவாசுர நமஸ் க்ருதாய நம:
ஓம் தேவாசுர மஹா மாத்ராய நம:
ஓம் தேவாசுர சாஸ்ர யாய நம:
ஓம் தேவாசுர கணாத்யக்ஷõய நம:
ஓம் தேவாசுரகணாத்ரத்ணயே நம:
ஓம் தேவாசுரகுரவே நம: 980
ஓம் தேவாய நம:
ஓம் தேவாசுர ப்ரிஷ்க்ருதாய நம:
ஓம் தேவேசுர மகாமந்த்ராய நம:
ஓம் தேவாசுரமகேசுவராய நம:
ஓம் சர்வதேவமயாய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் சிந்த்யாய நம:
ஓம் தேவாத் சமம்பவாய நம:
ஓம் உத்பூஜாய நம:
ஓம் சுக்ராய நம: 990
ஓம் ஆவேத்யாய நம:
ஓம் விரஜாய நம:
ஓம் விரஜாம்பராய நம:
ஓம் ஈஜ்யாய நம:
ஓம் ஹஸ்தினேசுர நம:
ஓம் வியாக்ராய நம:
ஓம் தேவ சிங்காய நம:
ஓம் நரர்ஷ்பாய நம:
ஓம் நிராயுதாய நம:
ஓம் வரஸ்ரேஷ்டாய நம: 1000
ஓம் சர்வ தேவோத்த மோத்தமாய நம:
ஓம் குரவே நம:
ஓம் காந்தாய நம:
ஓம் நிஜாய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் சர்வவாகனாய நம:
ஓம் ப்ரயுக்தாய நம:
ஓம் சோபனாய நம:
ஓம் வஜ்ராய நம: 1010
ஓம் ஈஸாநாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் சிருங்கிணே நம:
ஓம் சிருங்கப்ரியாய நம:
ஓம் ராஜ்ஞே நம:
ஓம் ராஜ ராஜாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் அபிராமாய நம:
ஓம் சுரகணாய நம: 1020
ஓம் விராமாய நம:
ஓம் சுவர்க்க சாதனாய நம:
ஓம் லலாடாக்ஷõய நம:
ஓம் விசுவ தேவாய நம:
ஓம் ஹரிணாய நம:
ஓம் ப்ரஹ் மவர்ச் சஸாய நம:
ஓம் ஸ்தாவரணாம்பதயே நம:
ஓம் நியா மந்த்ரியாய நம:
ஓம் வர்த்தநாய நம:
ஓம் ஸித்தார்த்தாய நம: 1030
ஓம் ஸித்த பூதார்த்தாய நம:
ஓம் ஸத்யவ்ரதாயத் ஸுசயே நம:
ஓம் வ்ரதாதியாய நம:
ஓம் பரஸ்மை ப்ரஹ்மணோ நம:
ஓம் பக்தா நுக்ரஹ காரகாய நம:
ஓம் விமுக்தாய நம:
ஓம் முக்த தேஜஸ் ஸ்ரீமதே ஸ்ரீவர்த்தநாய நம:
ஓம் ஜகதே ஸ்ரீஸாம்பஸ் தாஸிவாய நம: 1038
சிவ சஹஸ்ர நாமங்கள் முற்றிற்று.
வியாச முனிவரே! பிருமா இந்திரன் முதலான தேவர்களும் காண்பதற்கரிய சிவபெருமானை முன்பொரு காலத்தில் நான் இந்த ஆயிரம் திருநாமங்களால் சிரத்தை பக்தியாக ஸ்தோத்திரம் செய்தேன். இந்த ஸ்தோத்திரத்தால் நாள்தோறும் பக்தியோடு துதிசெய்வோன் மேலான பதவியை அடைவான். இது பிரமதேவரால் சொல்லப்பட்டது முனிவர்களும், தேவர்களும் நாள்தோறும் இந்தத் திருநாமங்களால் துதிக்கிறார்கள் தினந்தோறும் பக்தியுடன் இதனால் துதித்தவர்களைச் சிவபெருமான் கருணையோடு தம்மிடம் சேரச் செய்கிறார். பூவுலகில் ஆஸ்திகர்களான நம்பிக்கையுடைய சாதுக்கள் பலர் இந்த சிவ சஹஸ்ர நாமத்தைச் சொல்லிச் சற்கதியடைந்திருக்கிறார்கள். இதையே ஸ்தோத்திரஞ் செய்து ஆனந்தித்திருக்கிறார்கள். மனிதப் பிறவி கோடியுண்டானால் அதில் ஒரு பிறவியில் சிவபெருமானிடம் பக்தியுண்டாகிறது. அந்தப் பக்தி நிலையாக இருக்குமேயானால் அதுவே முக்திக்குக் காரணம் இந்த ஸ்தோத்திரம் தேவர்களுக்கும் கிடைத்தற்கு அரியது. சிவபக்தியோ அவ்விறைவனது பிரசாதத்தினாலேயே உண்டாகத் தக்கது, எந்த வகையிலாவது சிவபெருமானையே இடைவிடாமல் ஸ்தோத்திரஞ் செய்பவர்கள் சம்சார சாகரத்திலிருந்து கரையேறுவார்கள். தேவர்களும் சிவபெருமானைப் பூஜித்தே தம் உயர்பதவிகளை அடைந்தார்கள். ஆகையால் மனிதர்கள் முக்தியடைவதற்கு மகாதேவனைத் துதித்தலைத் தவிர வேறோரு மார்க்கமுங் கிடையாது சிவத்திருமாங்களால் சிவபெருமானை இடைவிடாமல் துதித்துவந்த தண்டி என்பவர் உயர்ந்த சிவகதியை அடைந்தார் பிரம்மா இத்துதியை இந்திரனுக்கு உபதேசித்தார். இந்திரன் மிருத்யுவுக்கும். மிருத்தியு உருத்திரருக்கும் உருத்திரர் தண்டிக்கும் முறையே உபதேசித்தனர் தண்டி என்பவர் பற்பல காலம் தவஞ்செய்து இந்த மந்திரரூபமான சிவ சஹஸ்ர நாமங்களைத் தனக்குக் கிடைக்கப் பெற்றார், அவர் சுக்கிரனுக்கும் சுக்கிரன். கவுத்தமருக்கும், கவுத்தமர் வைவஸ்வதமநுவுக்கும் வைவஸ் வதமநு பதரிகாசிரமத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த தனக்கு இஷ்டராகிய நரநாராயணருக்கும் தர்மப் பிரஜாபதியின் புதல்வனான நாராயணர் இயமனுக்கும் இயமன் மிருகண்டுவுக்கும் மிருகண்டு மார்க்கண்டேயருக்கும் மார்க்கண்டேயர் புத்திசாலியான நாசிகேதருக்கும் நாசிகேதர் உபமன்யுவுக்கும், உபமன்யு செல்வமுண்டாகும்படி கிருஷ்ணமூர்த்திக்கும் முறையே உபதேசித்தனர். இந்த ஆயிரம் சிவத்திருநாமங்களும் இவ்வண்ணம் உலகத்தில் பிரசித்தி பெற்றன இந்த ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம் காமபோகத்தையும் சர்வசித்தியையும் சுவர்க்கத்தையும் தேகாரோக்கித்தையும் தீர்க்காயுளையும் தனதான்ய விருத்தியையும் ஏற்படுத்தும் இதை நாள்தோறும் படிப்பவருக்கு யக்ஷர் தானவர் பைசாசம் முதலானவற்றால் ஒருவித விக்கினமும் உண்டாகாது. யாவர் ஜிதேந்திரியாராயும் பிரமசாரிகளாயும், பூரண மனத்துடன் இதை ஒரு வருஷகாலம் ஜபிப்பரோ, அவர் பசுபதியாகிய சிவபெருமானைக் கண் கூடாகத் தரிசிப்பார் இதைச் சிவ சந்நிதியில் ஸ்தோத்திரம் செய்தவர்கள் சகல பாவங்களையும் ஒழித்து அஸ்வமேத யாகப் பலனையும் சதுர்த்தசி விரத பயனையும் அடைவார்கள்! என்று ஸனத்குமார முனிவர் கூறினார்.
28. துலா புருஷ தானம்
ஸனத்குமார முனிவரை வியாச முனிவர் நோக்கி, மகாத்மாவே! தர்மம் ஒன்றினாலேயே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேறுகளையும் அடையலாம் என்று சொன்னீர்களே. ஆகையால் பண்டிதனாக இருப்பவன் தர்மத்தைச் செய்ய வேண்டும் என்பது புலனாகிறது. சாத்வீகமாகிய தவம் தானம் விரதம் நியமம் முதலியவற்றால் சுவர்க்கத்தையடைலாம். கருமித்தனம் முதலான தீய குணங்களை ஒழித்து மனிதப் பிறவியில் தானஞ்செய்தவர்கள் சிவபதவியை அடைவார்கள். ரஜோகுணமாகியத் தவஞ்செய்தவர்கள் அதியாசையுடையவர்களாய் உலகத்தில் பிறந்து சுவர்க்க போகத்தை விரும்புவார்கள் தபோ குணமான தவத்தைச் செய்தவர்கள் குரூரமான குணத்துடன் உலகில் பிறப்பார்கள். தாமஸகுணமுடையவர்களுக்கு கண் முதலான இந்திரியங்களாலேயே பாவம் விளைகிறது. ஆகையால் ரஜோகுண தமோகுணங்களின்றிச் சத்துவ குணத்துடன் செய்யும் தவத்தையே தவம் என்று சொல்ல வேண்டும். சருகுகளையும் காற்றையுமே உணவாக உட்கொண்டு வனசஞ்சாரஞ் செய்து புலன்களை ஒடுக்கியவர்களைவிட தமது இருப்பிடத்திலேயே இருந்து இல்லற தர்மத்தை அனுசரித்து புலனடக்கம் செய்தவர்களே சிறந்தவர்கள்! ஆசையை ஒழித்துப் பிறருக்குத் தீமை செய்யாமல் தம்மிடத்திலேயே இருப்பவர்களுக்கு அதுவே தபோவனமாகும். நான்காவது மேம்பட்டதுமாகிய சன்னியாச ஆசிரமம் சிறந்ததாயினும் புலன் ஒடுக்கமில்லாமல் அது கை கூடாதகையால் புத்திமான்கள் இல்வாழ்க்கையிலிருந்தே புலனடக்கம் செய்து பரமபதம் அடைவார்கள் தவ காட்டிலிருந்து தவஞ்செய்து வந்த பசியோடு ஊரையடைந்தவர்களுக்கு இல்வாழ்க்கையிலிருந்து அன்னபானம் முதலானவற்றைக் கொடுத்து உபசரித்தவன் அத்தவசியின் புண்ணியத்தில் ஒரு பங்கைப் பெறுவான். ஆகையால் பிரமசரியம் முதலான நான்கு வித ஆஸ்ரமங்களில் இல்வாழ்வோனே ஏனைய மூன்று ஆஸ்ரமிகளுக்கும் துணையாக இருப்பதுடன் அவன் இவ்வுலகத்தில் இஷ்ட போகங்களை அனுபவித்துப் பின்னர் சுவர்க்கத்தை அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அந்த இல்லறவாசி பாவஞ் செய்துவிட்டால் என்ன தானஞ் செய்வதின் மூலம் தன் பாவத்தை ஒழித்துச் சுவர்க்கத்தை அடைவானோ அதை அடியேனுக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டார். ஸனத்குமார முனிவர் சொல்வாராயினர்.
ஸத்யவாதி மைந்தரே! பாவத்தை ஒழித்து எல்லாச்சம் பத்துக்களையும் ஈந்து, இம்மை மறுமைப் பயன்களைக் கொடுக்க வல்லதான ஒரு தானத்தை உமக்குச் சொல்லுகிறேன். அதுவோ, நித்ய நைமித்ய கர்மங்களை முடித்துச் சுபகரமான முகூர்த்தத்தில் சிவபெருமானைத் தியானித்துச் செய்யத் தக்கது நரகத்தை அடையாமல் விலக்க விரும்புகிறவன் சுத்தமான திரவியத்தினால் இந்தத் தானத்தைச் செய்து தேவர் பிராமணர்களுக்கு உபயோகித்துச் சிரேஷ்டமான கதியை அடைகிறான். பூர்வத்தில் இந்தத் தானத்தைச் செய்த புத்திரர்களால் சதாநீக முனிவர் கடைத்தேறினார். தர்ம சாஸ்திரத்தில் சொல்லிய படிப் புண்ணிய ÷க்ஷத்திரத்தில் தானகாலமறிந்து சத்பாத்திரர்களுக்குத் தானம் செய்தால் விசேஷபயனை அடையலாம். பெரும் பெருளால் செய்யத் தக்கதும் உடல் தூய்மை உண்டாக்கத் தக்கதும் சுவர்க்க பதவியை அடையச் செய்வதும் பெரும் பாதகங்களையும் ஒழிப்பதுமான இந்தத் தானத்தைச் செய்தால் சத்தியமாக மோட்சத்தையடைவான். பிருகு வமிசத்தில் பிறந்த பரசுராமர் இருபத்தோரு தலைமுறைவரையில் க்ஷத்திரிய வதஞ்செய்த பாவத்தை ஒழிக்கப் பலவித தானஞ்செய்தும் அசுவமேதம் முதலியன நடத்தியும் அந்தப் பாவத்தை அகற்ற முடியாமல் வருந்தியிருக்கும் சமயத்தில் முக்கண்ணரான சிவபெருமானால் இந்தத் துலாபுருஷதானம் அவருக்குச் சொல்லப் பட்டது பாவத்தையே செய்து வந்தவனும் பிறன் மனைவியரைக் கூடிக்கலந்தவனும் மதுபானஞ் செய்தவனும் மாமிசம் தின்றவனும் குருபத்தினியைக் கூடியனுபவித்தவனும் உண்ணத் தகாதனவற்றை உண்டவனும் குழந்தை வதை செய்தவனும் யாகஞ்செய்வதற்கு அருகரல்லாதவருக்கு யாகஞ் செய்வித்தவனும் ஒரு நாளி உபவாசமிருந்து இந்தத் தானத்திற்கு முயற்சி செய்ய வேண்டும்.
வியாச முனிவரே! துலாபுருஷ தானஞ்செய்பவன் முதலில் இந்திரன், வருணன், வாயு, நிருதி; புதன்; அக்கினி முதலிய தேவர்களுக்கும் பிரீதியாக ஹோமம் செய்யவேண்டும் கிரகதேவதை, இஷ்ட தேவதைகளுக்கும் வியாஹ்ருதியால் அதற்குப் பிறகு ஓமஞ் செய்ய வேண்டும் யத்தேவா தேவஹேடனம் என்னும் மந்திரத்தாலும் யதிதிவா என்னும் மந்திரத்தாலும் யஜ்ஜாக்ரதா என்ற மந்திரத்தாலும் பசு நெய்யினால் சாகல்லிய சூத்திரோக்தமாக ஹோமம் செய்ய வேண்டும். இவ்வாறு தேவப்ரீதியாக ஹோமஞ்செய்து. இரண்டு யக்கு ஸ்தம்பங்களை நிறுத்தி அவற்றில் கணபதியையும் ஸ்கந்தரையும் ஆவாஹனம் செய்து கந்த புஷ்ப தூபதீபங்களால் ஆராதித்து அவர்கள் அனுக்கிரகத்தைப் பெற்று, பினாகபாணியான சிவபெருமானை ருத்ர ஸூக்தத்தால் ஆசனம் முதலான ÷ஷாடசோப சாரங்களோடு பூஜித்து, பல திண்பண்டங்களை நிவேதித்து யானைத் தோலையணிந்தவரே! உமாபதியே! சூலபாணியே! என்று துதித்து, அடியேன் செய்த பூஜையை ஏற்றுக்கொண்டு அருள் புரியவேண்டும்! என்று பிரார்த்தனை செய்து பிரம்மகூர்ச்ச பவித்திரம் அணிந்து, ஸூர்யஸ்யைவது என்ற மந்திரத்தால் ஹோமம் செய்து தூபதீப நிவேதனம் முடித்து துலாபுருஷாயஸ்வாஹா என்று ஆகுதி செய்து பூர்ணாஹூதியை முடிக்க வேண்டும். துலைவை(திராசை) சித்தஞ்செய்து அதன் ஒரு தட்டில் திரவியத்தை வைத்து, மற்றொரு தட்டில் தான் ஏறவேண்டும் அதன்பிறகு துலையே! பூமிதேவியே! உன் தாயும் பிரமதேவனே உன் தந்தையுமாக இருப்பது சத்தியமானால் நீ சத்திய தர்மரூபமாகி உன் பேரில் ஏறியிருக்கிற என்னைத் தரிக்க வேண்டும் சத்தியத்தினாலேயே தேவர்களும் முனிவர்களும் நற்கதியை அடைந்திருக்கிறார்கள். அந்தச் சக்தியரூபமாகிய நீ என்னால் செய்யப்பட்டத் தானத்தை அங்கீகரித்து என் பாவத்தைப் போக்க வேண்டும் என்று துதித்துத் துலையினின்று இறங்கி விட வேண்டும், பாரமான தன் தேகத்தைவிடத் திரவியத்தைச் சாமானியமாக நினைப்பவனே இந்தத் தானஞ் செய்வதற்கு அருகனாவான். இந்தத்தானத்தை ஒருமுறை செய்தவன் சகல பாவங்களும் ஒழித்தவனாவான். இரண்டாம் முறை செய்தால் சிவ கணத்தலைவர்களில் ஒருவனாகச் சந்தேகமின்றித் திகழ்வான். மூன்றாம்முறை செய்தால் சிவ சாரூப்யத்தை (சிவனுருவை) அடைவான். இந்தத் தானம் பூரணை, வருஷப் புண்ணிய ÷க்ஷத்திரத்திலாவது தீர்த்தக் கரையிலாவது செய்யத்தக்கதாகும் அப்படிச் செய்தவன் கிருதகிருத்தியனாவான். இந்தச் சரிதத்தைக் கேட்டவனும் இதைச் செய்ய விரும்பியவனும் பாவங்கள் விலகி சுவர்க்க லோகத்தை அடைவார்கள். இவ்வாறு ஸனத்குமார முனிவர் கூறினார்.
29. பரசுராமர் கதை
ஸனத்குமார முனிவரை வியாசமுனிவர் நோக்கி, தல ஞானியே! பரசுராமர். இந்தத் தானத்தைச் சிவபெருமானால் உபதேசிக்கப் பெற்றுச் செய்தார் என்று சொன்னீர்களல்லவா? பரசுராமர் பரிசுத்தராயிற்றே! க்ஷத்திரிய குலத்தை சேர்ந்த அவர் தவஞ் செய்வதற்கும் சிவபெருமான் அவருக்கு இவ்விரதத்தை உபதேசிப்பதற்கும் காரணங்கள் என்ன? அவற்றையும் தயவு செய்து சொல்ல வேண்டும் என்று கேட்டார். ஸனத்குமார முனிவர் கூறலானார். வியாசரே! சிவ பக்தரான பரசுராமரின் பிறப்பையும் அவர் சவுரிய வீரியங்களைப் பெற்ற வகையையும் துலாபுருஷ தானம் செய்த காரணத்தையும் நீர் விரும்பியதால் சொல்லுகிறேன் கேளும். முன்னொரு சமயம் தர்மவானான குசிகன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பலசாலியான ஒரு புத்திர பாக்கியத்தைப் பெற விரும்பி தன்னுடன் மிகவும் வருந்தக் கடுந்தவஞ் செய்து இந்திரனைத்தரிசித்து அவனையே புத்திரனாகப் பெற்றான். அப்புதல்வனுக்கு காதி என்ற பெயர் உண்டாயிற்று, காதி என்பவனுக்கு சத்யவாதி என்னும் ஒரு புதல்வி பிறந்தாள். அவளை ரிசிகமுனிவர் திருமணஞ் செய்து கொண்டார். ரிசிக முனிவர்காதி ராசனுக்குச் சந்ததி விருத்தி செய்ய விரும்பி ஒரு யாகஞ் செய்து, அதிலிருந்து தோன்றிய இரண்டு சருக்களையும் தன் மனைவியின் கையில் கொடுத்து, உன் தாயின் கர்ப்பத்திலிருந்து பிறரால் வெல்ல முடியாத க்ஷத்திரிய சிரேஷ்டன் ஒருவனும் உனக்குப் பிராமண தர்மங்களில் குறைவின்றி என்னைப் போல் விளங்கும் புதல்வன் ஒருவனும் பிறப்பார்கள். நீ இதையும் உன் தாய் இதையும் சாப்பிடுங்கள்! என்று கூறி அவற்றைக் கொடுத்து வனத்தை அடைந்து தவத்தில் இருந்தார்.
அந்தச் சமயத்தில் அவருடைய மாமனாரான காதிராஜன் தன் மனைவியுடன் ரிசிக முனிவரின் அச்சிரமத்திற்கு வந்தான். முனி பத்தினி சத்தியவதி தன் பெற்றோரைக்கண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்று விரைந்து தன் கணவர் கொடுத்த சருக்கள் இரண்டையும் தன் தாயிடம் கொடுத்து தன் கணவன் கூறியதைச் சொன்னாள். தாயானவள் அவற்றை வாங்கிக் கொண்டு வஞ்சனை செய்ய விரும்பியவளாய்த் தான் உண்ணவேண்டிய சருவைச் சத்தியவதியிடம் கொடுத்து குமாரத்தி உட்கொள்ள வேண்டிய சருவைத் தான் உண்டாள். அதனால் சத்யவதி க்ஷத்ரிய குலகாளனான புத்திரனை குரூர தேஜஸுடன் கர்ப்பத்தில் அடைந்தாள். பிறகு ஒரு சமயம் ரிசிக முனிவர் தம் மனைவியின் பயங்கரமான கர்ப்பத்தைத் தம் ஞான திருஷ்டியினால் உணர்ந்து சத்தியவதியை நோக்கி பெண்ணே! நீ உன் தாயால் வஞ்சிக்கப்பட்டு விட்டாய் மகாதபசியாக உன் தம்பி பிறக்கப்போகிறான் அவன் தன் வேதிய தவத்தால் உலகங்கள் அனைத்திலும் புகழ் அடைவான்! என்றார். அதைக் கேட்டதும் சத்யவதி தன் கணவனைப் பணிந்து நாயகரே! பிராமணர்களுக்குள் துஷ்டனான பிள்ளை எனக்குப் பிறப்பான் என்று சகல சாஸ்திரங்களையும் உணர்ந்த நீங்கள் சொல்வது தகுதியல்ல! என்றாள். அதற்கு அவர் அடி பெண்ணே! அது என் கருத்தல்ல. உன் தாயின் செயலே அவ்வகையாகச் செய்தது! என்றார். அதற்கு சத்தியவதி நாதா! புதிய உலகங்களையும் படைக்க வல்லவரான நீங்கள் எனக்கு நல்ல புத்திரன் பிறப்பதற்குத் தயை செய்ய வேண்டும்! என்றான். அதற்கு ரிசிக முனிவர், ஐயோ நான் அக்கினி தேவனை நோக்கி அந்தச் சருவை உண்டாக்கும்போது, ஜெபித்த மந்திரம் அத்தகையதல்லவே! நான் விளையாட்டாகக் கூடப் பொய் சொல்லாதவனாயிற்றே! என்றார். அதைக் கேட்டதும் சத்தியவதி சுவாமி அப்படியானால் அவ்வகையில் ஒருவன் நம்மிருவருக்கும் ஒரு பேரனாவது பவுத்திரனாவாவது தோன்றட்டும்! என்று கெஞ்சினான். ரிசிகர் பெண்ணே! நான் புத்திரனிடத்திலாவது பவுத்திரனிடத்திலாவது ஏற்றத்தாழ்வு கருதமாட்டேன் உன் விருப்பத்தின்படியே ஆகட்டும்! என்றார். அதனால் அவர்களுக்குப் பவுத்திரராகவும் ஜமதக்கினி முனிவருக்கு புத்திரராகவும் தவம் புலனடக்கம் முதலி நற்குணங்கள் நிறைந்தவராகவும் பரசுராமர் தோன்றினார். காதிராசனின் மனைவி தவத்தில் மேம்பட்ட அக்கினிக்குச் சமானமான பிரமதேஜசுடன் கூடிய விசுவாமித்திரமுனிவரைப் பெற்றாள்.
வியாசரே! அவ்வாறு தோன்றிய பரசுராமர் க்ஷத்திரியர்களுக்கு உரிய தோள்வலிமையோடும் தனுர்வேதத்தின் (வில்வித்தையின்) எல்லையுணர்ந்தவராயும் சகல சாஸ்திங்களையும் கற்றறிந்தவராயும் ஜ்வாலையோடு கூடிய அக்கினிக்குச் சமமான காந்திமானையும் விளங்கச் சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து கொண்டிருந்தார். அந்நிலையில் ஒரு காலத்தில் ஹைஹய வமிசத்தில் தோன்றிய கிருதவீர்யனுக்குப் புத்திரனாக கார்த்தவீர்யார்ச்சுனன் என்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் ஆயிரங்கைகளும் அதிதேஜசும் சூரியனுக்குச் சமமான காந்தியும் வாய்ந்தவன் அவன் திரிஷிதர் என்ற முனிவரை வழிபட்டு அவர் அருளால் அக்கினி பகவானையே அஸ்திரமாகப் பெற்று, அவ்வஸ்திரத்தால் பற்பல நகரங்கள் கிரமங்கள் நந்தவனங்கள் முதலானவற்றையெல்லாம் சுட்டெரித்து சமுத்திரத்தையும் முனிவர் ஆசிரமங்களையும் கொளுத்திக் கொண்டு ஆபஸ்தம்ப முனிவர் இருக்கும் ஆசிரமத்தையும் கொளுத்தினான். அந்த முனிவர் அதனால் கோபங்கொண்டு அவனை நோக்கி, நீ விரைவில் பரசுராமனால் தலை ஒழிக! என்று சாபமிட்டார். அந்தச் சாபத்தைப்பெற்று கார்த்தவீரியார்ச்சுனன் சில நாட்கள் சென்ற பிறகு ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அவர் கார்த்தவீரியனுக்கு மரியாதை செய்தார். அப்போது அவரிடத்திலிருந்த காமதேனு என்னும் தெய்வீகப் பசுவைப் பார்த்து வியப்புற்று, இது நான் நினைத்தவற்றையெல்லாம் கொடுக்கும்; ஆகையால் இதை எப்படியாவது அடையவேண்டும் என்று பேராசைப்பட்டு ஜமதக்னி முனிவரை நோக்கி மகரிஷியே நான் உமக்கு பற்பல பசுக்களைத் தருகிறேன். இந்தக் காமதேனுவை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் மறுக்கவே கார்த்தவீரியன் மூர்க்கத்தனமாகப் போர் செய்ய முயன்றான். அந்தச் சமயம் முனிவர் அருகிலிருந்த அவரது குமாரரான பரசுராமர் தம் ஆயுதங்களால் அவனுடன் போர் செய்து அவனது ஆயிரம் பூஜங்களையும் அறுத்தெறிந்து, மஹேந்திரகிரியை அடைந்து சிவ சந்நிதியில் தவஞ்செய்து கொண்டிருந்தார். அதையறிந்த கார்த்தவீரியார்ச்சுனன் புத்திரர்கள் ஜமதக்கினி முனிவரிடம் சென்று அவரைக் கொன்று விட்டார்கள். பின்னர் மகேந்திரகிரியில் தவஞ்செய்து கொண்டிருந்த பரசுராமர் சிவப்பிரசாதம் பெற்றுக் கொண்டு தம் இருப்பிடத்திற்குத் திரும்பி வந்தார். அங்கு தம் தந்தை மாண்டதற்காகப் பெரிதும் வருந்திப்பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று குமுறினார். கார்த்தவீரியனையும் அவனது புத்திரர்களையும் பவுத்திரர்களையும் கொன்று, தன் தந்தையின் உடலில் தைத்த அஸ்திர காயங்களைக் கண்டு மனம் கலங்கி, அந்த க்ஷத்திரிய குலத்தையே (அரசினத்தையே) நிர் மூலமாகச் செய்வேன்! என்று சபதஞ்செய்தார். அவ்வாறே க்ஷத்திரியர்களையெல்லாம் கொன்று பூவுலகம் முழுவதும் எவ்விடத்திலும் க்ஷத்திரியப்பூண்டு என்பது சிறிதுமில்லாமல் செய்து, பூமியைப் பிராமணர்களுக்குத் தானஞ்செய்து விட்டு, தவச்செயலை மேற்கொண்டார்.
பிறகு பல காலம் கழித்து அவர் மீண்டும் வந்து பார்க்கும்போது, மாண்டுபோன க்ஷத்திரிய வம்சத்தினரின் பெண்கள் பிராமணர்களைக் கொண்டு பிள்ளைகளைப் பெற்று தங்கள் வம்சத்திற்கு சந்ததி விருத்தி செய்து கொண்டிருப்பதையும் அப்புத்திரர்கள் பிராமணர்களிடம் இராஜ்ஜியத்தை வாங்கிப் பரிபாலனஞ் செய்வதையும் அறிந்தார். அந்தக்குலம் தலையெடுக்க வொட்டாமல் ஆங்காங்கே சென்று க்ஷத்திரியர்களைக் கொன்றார். இவ்வாறு இருபத்தோரு தலைமுறை க்ஷத்திரிய குலத்தைக் கருவறுத்து ஒழித்தார். அதில் சில க்ஷத்திரிய மங்கையர் பிராமணரின் கிருபையால் சில பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொண்டார்கள். பரசுராமர், தாம் செய்த க்ஷத்திரியக் கொலை நீங்கும்படி பூமி முழுவதையும் அநேகம் பசுக்களையும் காசிப முனிவருக்குத் தானஞ்செய்து அதன்பிறகு அஸ்வமேத யாகம் செய்து அதனாலும் தன் பாவம் ஒழியாது சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து, இப்பாவம் எப்படி நீங்கும்? என்று கேட்டார். சிவபெருமான் அவரை நோக்கித் துலாபுருஷதானம் செய்யும்படிச் சொன்னார். சர்வேஸ்வரனாகிய சிவபெருமானால் சொல்லப்பட்டச் சிறந்த துலாபுருஷ தானத்தைப் பரசுராமர் செய்து தம் பாவங்களிலிருந்து நீங்கிப் புனிதமானவராய் தவச் செயலை மேற்கொண்டார். வியாசரே க்ஷத்திரிய குலத்தைப் பலமுறை துவம்சம் செய்த பாவத்தைப் போக்கும்படியாக இந்தத் தானம் பரசுராமரால் செய்யப்பட்டது. பிரமஹத்தி முதலான பெரும் பாவங்களையெல்லாம் அழிக்கத்தக்க இந்தத் துலா புருஷதானத்தைப் பொன்னை கொண்டு செய்வதற்குச் சக்தியற்றவர்கள், வெள்ளி, தேன், நெய், வெல்லம், ஆடையணி முதலிய பொருள்களையாவது துலாவில் (திராசில்) ஏற்றி பொன் தக்ஷிணையுடன் தானம் செய்தால் புகழடைந்து, சுவர்க்கம் முதலான போகங்களை எய்துவார்கள். மனம் வாக்கு காயங்களால் செய்த பாவங்களும் கொலை முதலியவற்றால் நேர்ந்த பாவங்களும் இந்தத் துலா புருஷ தானத்தால் நீங்கி விடும் எந்தப் பாவத்தைச் செய்த போதிலும் துலாபுருஷ தானஞ்செய்தவன் அவற்றிலிருந்து நீங்கிப் பரிசுத்தனாவான் என்பதற்குச் சந்தேகமில்லை. நான் பால்யத்திலாவது இளமையிலாவது முதுமைத்தசையலாவது செய்திருக்கும் பாவங்களையெல்லாம் பொறுத்தருள வேண்டும். துலா புருஷ ரூபமாக இருக்கும் பரமசிவனே! நான் துலாவில் ஏறிப் பொன்னை நிறை காட்டி உம்மை நமஸ்கரிக்கிறேன்! என்று பிரார்த்தித்துப் பல அந்தணோத்தமர்களுக்கு அப்பொருளைத் தானமாக வழங்க வேண்டும். துலா புருஷ தானத்தை ஒரே வேதியனுக்கு கொடுக்கக் கூடாது. அப்படி ஒருவனுக்கே கொடுத்தால் பாபம் ஒழியாது. இந்தத் துலா புருஷ தானத்தைச் செய்தேன் பதினான்கு இந்திரப்பட்டம் வரையில் சுவர்க்கலோகத்தில் விருப்பமானவற்றையெல்லாம் அனுபவித்து வாழ்ந்திருப்பான்! இவ்வாறு ஸனத்குமார முனிவர் கூறினார்.
30. பாதாளலோக வர்ணனை
வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி ஞானச் செல்வரே! எந்தத் தானத்தைச் செய்வதால் சகல தானங்களையும் செய்த பயனை அடையக்கூடுமோ அந்தத் தானத்தை எனக்காகவும் மானுடர்க்காகவும் சொல்லியருள வேண்டும்! என்று கேட்டார். அதற்கு ஸனத்குமார முனிவர், எல்லாத் தானங்களையும் செய்த பயனை அளிக்கவல்லதும் முக்தியைக் கொடுக்க வல்லதும் சம்சார துக்கத்திலிருந்து கரையேறச் செய்யவல்லதும் ஏழு உலகங்களுக்கும் அதிபனாகச் செய்யத்தக்கதும் சூரிய சந்திராதிகளுள்ள வரையில் சுவர்க்க பதவியில் தன் வமிசத்தாருடன் வாழ்ந்து, பிறகு விஷ்ணு பதவியைப் பெறச் செய்யத் தக்கதாகவும் உள்ளது பிரம்மாண்டதானம்! என்று கூறினார். அதைக் கேட்டதும் வியாசர் பிரம்மாண்டதானம் என்பது எத்தகையது? என்று கேட்டார். வியாசரே! அண்பாண்ட பிரம்மாண்டங்களையும் அவற்றிலுள்ள ஆன்மகோடிகளுடன் படைத்து காத்து துடைக்கும் ஆற்றலுடையவன் சிவபெருமானே என்று தன் ஞானத்தால் உணர்ந்து. யான் எனது என்னும் தற்போதும் ஒழிந்து யாவுஞ் சிவன் செயல் எனக்கொண்டு சுகதுக்கங்களும் கர்மஞானங்களும் அவனாலேயே திருவுளஞ் செய்யப்பட்டனவென்றும் மனத்துடன் உலக வியாபாரமின்றி இறைவனிடத்திலேயே மனதைப் பதித்திருத்தல் பிரமாண்ட தானம் எனப்படும் அத்தகையினர் எல்லாப்போக பாக்கியங்களையும் இம்மை மறுமைப் பயன்களையும் ஐயமின்றி அடைவார்கள்! என்று ஸனத்குமாரர் கூறினார். ஸனத்குமார முனிவரே! பிரமாண்டம் எப்படி உண்டாக்கப்பட்டது? அது யாரால் படைக்கப்பட்டது? அது எவ்வளவு பரப்பளவு வாய்ந்தது? அதற்கு ஆதாரம் என்ன? இவற்றை எனக்கு விளக்கிச் சொல்லவேண்டும்! என்று வியாசர் கேட்டார் ஸனத்குமார முனிவர் கூறலானார்.
வியாசரே! இந்தப் பிரமாண்டத்தின் பரப்பளவையும் உயரத்தையும் சுருக்கமாகச் சொல்லுகிறேன். இந்தப் பிரமாண்டத்திற்குக் காரணமாகவும் அவ்யக்தமாயும் அனாமயமாயும் எல்லாவற்றுக்கும் பிறப்பிடமாயும் எல்லாவற்றிற்கும் லயஸ்தானமாயும் விளங்கும் சிவத்தினின்று ஆகாயம் உண்டாயிற்று. ஆகாயத்திலிருந்து வாயுவும்(காற்றும்) வாயுவிலிருந்து அக்கினியும் (நெருப்பும்) அக்கினியிலிருந்து ஜலமும் (நீரும்) ஜலத்திலிருந்து பிருத்வியும் (நிலமும்) தோன்றின. பஞ்ச பூதாத்மகமான பிரமதேவர் உண்டாகிப் பிரமாண்டத்தைச் சிருஷ்டி செய்தார். அவற்றுள் பாதள லோகங்கள் ஏழு சுவர்க்க லோகங்கள் ஏழு இந்த உலகங்களுக்கு ஆதாரமாக வெண்ணிறமான ஆதிசேஷன் விளங்குவான். அவன் விஷ்ணுவென்று சொல்லப்படுவான். பிரமவாக்கின்படி அந்த ஆதிசேஷன் எல்லா உலகங்களையும் தாங்கி நிற்பான். அந்தச் சேஷனுடைய குணானுபவங்களைத் தேவர் முனிவர் முதலானவர்களாலும் சொல்ல முடியாது. ஆயிரம் தலைகளும் தேவர் முனிவர்களால் செய்யப்படும் பூஜையும் சித்தர்களால் சொல்லப்படும் அனந்தன் என்ற பெயரும் எல்லாத் திக்குகளையும் பிரகாசிக்கச் செய்யும் ஸவஸ்திகா பூஷணம் போன்ற ஆயிரம் பணமுடிகளும் நெருப்புடன் பிரகாசிக்கும் வெண்மலை போலச் சுவாலையோடு சுழன்று கொண்டிருக்கும் ஈராயிரம் விழிகளும் நவமணிகள் இழைத்த கிரீட குண்டலங்களும் திவ்விய மணம் பொருந்திய மலர்மாலைகளும் வெண்ணிற ஹாரமும் நீலநிற ஆடையும் கைலாயகிரி போன்ற உயர்வும் கலப்பை இரும்புலக்கை முதலான ஆயுதங்களும் வருணன் கன்னிகையானவாருண அருகிலிருந்து செய்யும் உபாசனையும் பிரகாசிக்கும் விஷஜ்வாலையும் சங்காஷணாத்மகமும் ருத்திர ரூபமும் பிரளய காலாந்தத்தில் சர்வ லோகங்களையும் தன்னிடத்தில் ஒடுக்கும் வல்லபமும் சகல அண்டங்களையும் ஒரு கடுகு போலச் சுமக்கும் ஆற்றலுடையவனாக விளங்கும் ஆதிசேஷனுடைய உருவத்தை ஒருவராலும் வர்ணிக்க இயலாது அவனது தலை இரத்தினங்களின் மேல் படிந்திருக்கும் பூமியானது அம்மணிகளின் மீது பிரதிபிம்பத்தில் குசுமமாலை போலத் தோற்றமளிக்கும், அந்தச் சேஷன், சோர்வுற்ற காலத்தில் எல்லா மலைகளோடும் உலகம் முழுவதும் அசையும் அது பூகம்பம் எனப்படும் அவனுடைய குண விசேஷங்களைச் சித்தர், முனிவர், கந்தர்வர், உரகர், கின்னரர், யக்ஷர், தைத்திரியர், தானவர் முதலானவர்கள் அறியாதவர்களாகி அனந்தன் என்று சொல்வார்கள்.
அழிவில்லாதவனாக விளங்கும் அந்த ஆதி சேஷன், தன் மார்பில் அணிந்திருக்கும் செஞ்சந்தனதைத்தன் பெருமூச்சினால் பறக்கச் செய்து திக்குகளான மாதர்களை அடையச் செய்யவல்லவன். பலகாலம் தவஞ் செய்த கர்க்கர் அவனிடமிருந்து நிமித்த சாஸ்திரத்தையும் சகலமான ஜோதிஷ சாஸ்திரத்தையும் அடைந்தார். பாதள லோகங்களில் இரத்தின மயமான பூமியும் ரத்தினங்கள் இழைத்த உப்பரிகைகளும் மதில்களும் தங்கம் விளையும் பூமியும் உள்ளன. அங்குதிதி புத்திரர்களான தைத்தியர்களும் நாகராஜர்களும் இராக்ஷஸர்களும் வசிக்கிறார்கள். ஒளி வீசும் இரத்தினங்கள் உள்ள பாதளலோகமானது ஆனந்தத்தை அளவின்றி ஏற்படுத்தும் அதில் அதற்கு இணையான லோகம் கிடையாது. தேவதானவ கன்னிகைகளால் உண்டாகும் மோகத்தை விடுத்த விரக்தனுக்கும் பாதள லோகத்தில் விருப்பம் உண்டாகத் தடையிராது என்று திரிலோக சஞ்சாரியான நாரத பகவான் சுவர்க்க லோக வாசிகளான இந்திரன் முதலான தேவர்களுக்குச் சொல்லியிருக்கிறார் அங்கு பகலில் சூரியவொளியும் இரவில் சந்திரன் ஒளியும் கிடையாது. குளிர்ச்சிவெப்பங்களும் இல்லை இரத்தின ஒளியே இவை யாவுமாக விளங்கும் அங்கு தேவாமிர்கத்திற்கு இணையான பானவகை உணவு வகைகளும் திருப்தியை விளைவிக்கக் கூடிய அன்னபானங்களும் ருதுக்கள் ஆறிலும் புஷ்பிக்கும் மலர் வகைகளும் அம்மலர்களிலுள்ள தேனைப்பருகி ரீங்காரஞ் செய்யும் பொன் மயமான வண்டுகளின் கூட்டங்களும் வைடூரிய மயமான, மரங்களும், அவற்றின் தளிர்களை உண்டு களித்த கோகிலங்களின் குரலோசையும் ஸ்படிகத்தினாற் செய்த படிக்கட்டுகள் நிறைந்த தடாகங்களில் அன்றலர்ந்த பொன்மயமானத் தாமரை மலர்களும், அமிர்தமயமான தண்ணீரைப் பெருக்கும் ஆறுகளும், இரத்தின மயமான நீலாம்பர பீதாம்பரங்களைக் கொடுக்கும் மரங்களும், வஜ்ரகோமேதங்களால் உருவாக்கிய அணிமணிகளை வழங்கும் மலைகளும் வாயாது வாசனை வீசும் மலர்களையும் சந்தனத்தையும் கொடுக்கும் மரங்களும், வீணை, வேணு, மிருதங்கம் முதலிய வாத்தியங்களை எப்போதும் வாசித்துக் கொண்டிருக்கும் நாக கன்னிகைகளும் நிரம்பப் பெற்றுள்ள பாதாள லோகத்தில் ஒருவன் எவ்வளவு காலம் வாழ்ந்திருப்பினும் அவனுக்குக் காலம் கழிந்ததாகவே தோன்றாது.