‘‘நான் இன்னாரின் மகளின் திருமணச் செலவு முழுவதும் ஏற்றேன். இன்னாரின் மருத்துவச் செலவுக்கு உதவி செய்தேன்’’ என சிலர் தற்பெருமையாக சொல்லிக் காட்டுவர். இப்படி சொல்வதால் அந்த நற்செயலுக்கான பலன் மறையும். உழைத்து சம்பாதித்த பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்தால் இரட்டிப்பான நன்மை கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்களை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் செய்த தர்மத்தை சொல்லிக் காட்டினால் மறுமை நாளில் சந்திக்க விரும்ப மாட்டான்.