தேவைக்கு அதிகமாக உங்களிடம் பணம் இருந்தால் தர்மம் செய்யுங்கள். அதற்கு பணம் இல்லாத பட்சத்தில், ஒருவருக்கொருவர் சண்டையிட்டால் அவர்களை சமாதானம் செய்து வைத்தால் போதும். தானம் செய்ததற்கான நன்மை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள்...ஏன் உங்கள் வீட்டில் குழந்தைகள் கூட தங்களுக்குள் சண்டையிடலாம். அவர்களுக்கு இடையில் சமாதானம் செய்தால் அது தர்மத்திற்கு ஒப்பாகும் என்கிறது குர்ஆன்.