புதுச்சேரி : சித்தானந்த சுவாமி கோவிலில் 175வது குருபூஜை விழா நேற்று நடந்தது. கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்த சுவாமி கோவிலில், சுவாமிகளின் 175வது குருபூஜை விழா நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், ருத்திர ஜபம் நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், 10 மணிக்கு கலசாபிஷேகம், 10.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், கிங்பைசல் குழுவினரின் சிவன் சக்தி நாடகம், இசைமாமணி சூசைராஜின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.பின், "நாமார்க்கும் குடியல்லோம் என்ற தலைப்பில் குறிஞ்சிப்பாடி வைத்தியநாதன் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்.