திருப்புல்லாணி கோயிலில் வைகுண்ட ஏகாதசி: டிச.25ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2020 11:12
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் வைணவத்திருத்தலங்களில் 44 வது இடத்தில் உள்ளது. இங்கு அத்யயன உற்ஸவத்தை முன்னிட்டு டிச.,15 முதல் ஜன.,3 வரை பகல் பத்து பூஜை நடக்க உள்ளது.
டிச.,25 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு சயனத் திருக்கோலமும், மதியம் 1:00 மணிக்கு விஸ்வரூப தரிசனக்காட்சிகளும், மாலையில் சொர்க்கவாசல் திறப்பிற்கான ஆயத்த பூஜைகளும் இரவு 7:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்ஸவர்களாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உள்பிரகார வீதி உலா நடக்கும்.இரவு 7:00 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்படும். டிச., 25 வெள்ளிக்கிழமை முதல் ஜன., 3 ஞாயிற்றுக்கிழமை வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கும். விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அரசின் விதிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.