வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை அமாவாசை வழிபாட்டிற்காக நாளை (டிச.12) முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கபட உள்ளனர்.நாளை காலை 7:00 மணி முதல் பக்தர்கள் உடல்வெப்ப பரிசோதனைக்கு பின் அனுமதிக்கபடுவார்கள். டிச.16 காலை 10 :00மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கபடுவார்கள். தரிசனம், அன்னதானம் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளதாக செயல் அலுவலர் விஸ்வநாத் தெரிவித்தார்.