பதிவு செய்த நாள்
11
டிச
2020
11:12
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், உற்சவர் சன்னதி, தேர் அமைக்கும் பணி துவக்க விழா சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை-பொள்ளாச்சி ரோட்டில், நுாற்றாண்டு பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டுத்தேர்த்திருவிழா, பிரசித்தி பெற்றதாகும். பல லட்சம் பக்தர்களுக்கு மத்தியில், முன்னே வடம் பிடித்து பக்தர்கள் இழுக்க, பின்னே, யானை தள்ளும் சிறப்பு பெற்றதாகும்.கும்பாபிேஷகம் நடந்து, 12 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது திருப்பணி நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில், புதிதாக உற்சவர் சன்னதி அமைக்கப்படுகிறது. இதற்கான பணி துவக்கத்திற்கு, சிறப்பு பூஜை நேற்று நடந்தது. மேலும், கோவிலுக்கு புதிதாக, 50 லட்சம் ரூபாய் செலவில் தேர் அமைக்கப்படுகிறது. இதற்கான பூஜையும் நேற்று நடந்தது.