Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் :மார்கழி பலன் மகரம் : மார்கழி பலன் மகரம் : மார்கழி பலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனுசு : மார்கழி பலன்
எழுத்தின் அளவு:
தனுசு : மார்கழி பலன்

பதிவு செய்த நாள்

16 டிச
2020
07:12


மூலம் :  நட்சத்திர அதிபதி கேதுவின் உச்ச பலமும் ராசி அதிபதி குருவின் நீச பலமும் சரிசம பலன்களை தரும். இந்த மாதத்தின் துவக்கம் சற்ற சிரமத்தைத் தருவதுபோல் அமைந்தாலும், மாதத்தின் பிற்பாதி நற்பலன்களைத் தரும். நெடுநாட்களாக தடைபட்ட காரியம் ஒன்று டிசம்கர் 27க்குப் பிறகு நடந்தேறும். ஜன. 6, 7 ஆகிய நாட்களில் எதிர்பாராத செலவுகளால் அல்லல்படுவீர்கள். எளிதில் முடிந்துவிடும் என்றெண்ணிய செயல் ஒன்று இழுபறியைத் தரும். ஆளுக்கொரு அபிப்ராயத்தைச் சொல்லும் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் காண்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பதில் இடைஞ்சல் உண்டாகலாம். உடன்பிறந்தாரோடு வீண் மனஸ்தாபம் தோன்றக்கூடும். சுவையாகச் சாப்பிடுவதில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து போவதால் ஒரு சில இழப்புகளை சந்திப்பீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்க வேண்டியது அவசியம். உறவினர்களால் வீண் கலகம் தோன்றும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தாலும் அவர்களது முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். மிகுந்த ஈடுபாட்டோடு பொறுப்பினை சுமக்கும் நீங்கள் குறித்த நேரத்திற்குள் பணியினைச் செய்து முடிக்க வேண்டியது அவசியம். தம்பதியருக்குள் கலந்தாலோசித்து செயல்படுவதால் வெற்றி கைகூடும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் பணிச்சுமை கூடுவதால் அவதிக்குள்ளாவர். மாணவர்கள் அவசரத்தின் காரணமாக பாடங்களைத் தவறாகப் புரிந்து கொள்வர். சிரமங்களை சமாளித்து வெற்றி காணும் மாதம் இது.


பரிகாரம் : திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் படித்து வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 31

பூராடம் :   ராசிநாதன் குருவின் நீச பலமும் நட்சத்திர அதிபதி சுக்ரனின் 12ம் இடத்து அமர்வும் ஒரு சில குழப்பங்களைத் தந்து கொண்டிருக்கும். ஆயினும் மனநிலையை முகத்தில் வெளிக்காட்டாமல் தைரியத்துடன் செயல்பட்டு வருவீர்கள். இந்த மாதத்தில் மற்றவர்கள் நம்மை பெருமையாக நினைக்க வேண்டும் என்ற வீண் கௌரவத்திற்காக முன்பின் யோசிக்காமல் ஒரு சில காரியங்களில் இறங்கி மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் கடுமையான வேலை பளு கூடுவதோடு நீங்கள் திட்டமிட்டிருந்ததை விடக் கூடுதலாக செலவு ஆவதைத் தவிர்க்க முடியாது. ஆக எதிலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. சுக்ரனின் இடமாற்ற நிலையினால் ஜன. ஆறா முதல் தொடர்ந்து பொருள் வரவு நன்றாக இருந்து வரும். வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வினை உணர்வீர்கள். ருசியான உணவு வகைகளை உண்பதில் அலாதி பிரியம் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். உடன்பிறந்தோரின் உதவியால் நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த காரியம் ஒன்றினை அதிக அலைச்சலுக்குப் பிறகு செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகை குடும்பத்தில் அநாவசிய குழப்பங்களைத் தோற்றுவிக்கும். மாணவர்கள் பாடங்களில் உண்டாகும் சந்தேகங்களை தயங்காமல் ஆசிரியரிடம் கேட்ட தெளிவு பெற வேண்டியது அவசியம். மனதிற்குள் அவ்வப்போது சோம்பல்தன்மை எட்டிப்பார்க்கும். உடல்நிலையில் அவ்வப்போது அசதியை உணர்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளை தட்டாமல் செயல்படுத்துவது நல்லது. நண்பர்களோடு இணைந்து செய்து வரும் தொழில்களில் நல்ல ஆதாயத்தினைக் காண்பீர்கள். வியாபாரிகள் கூடுதல் அலைச்சலை சந்தித்தாலும் அதற்கேற்ற லாபத்தினைக் காண்பார்கள். கலைத்துறையினர் அந்நிய தேசத்திலிருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தகவல் ஒன்று இந்த மாதத்தில் வந்து சேரும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் திறமையை நிரூபித்து மேலதிகாரியின் பாராட்டினைப் பெறுவர். நன்மையைத் தரும் மாதமிது.


பரிகாரம் : அமாவாசை நாளில் அன்னதானம் செய்யுங்கள்.

சந்திராஷ்டமம் : ஜன. 1

உத்திராடம் 1ம் பாதம் :  நேரம் சாதகமாக இல்லாததை உணர்ந்து எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பீர்கள். ராசிநாதன் குரு நீசம் பெற்றாலும் நட்சத்திர அதிபதி சூரியன் ஜென்ம ராசியில் அமர்வதால் தைரியம் கூடும். குறைவாகப் பேசினாலும் ஆணித்தரமாகப் பேசுவீர்கள். வார்த்தைகளில் வெளிப்படும் கூர்மையான கருத்துக்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மனதில் பதியும் வகையில் அமையும். குடும்பத்தில் தொடர்ந்து மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். பொருளாதார நிலை இழுவையாக இருந்து வரும். உடன் பிறந்த சகோதரிகளால் நன்மை அடையும் அதே நேரத்தில் சகோதரர்களால் சிறுசிறு பிரச்சனைகளுக்கு ஆளாகலாம். வண்டி, வாகனங்களால் செலவுகளைச் சந்திக்க நேரிடும். தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டிய நேரம் இது. அவர்களுடைய வேகமான செயல்பாட்டினைக் கண்டு பெருமைகொள்ளும் அதே நேரத்தில் அவர்களைப் பற்றிய இனம் புரியாத பயமும் மனதில் குடிகொள்ளும். நீங்கள் அவர்களின் நலன் கருதி பேசும் வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு அவர்களின் மனதினை புண்படுத்தக் கூடும். அஜீரணக் கோளாறுகளால் உடல்நிலையில் சிரமத்தைக் காண நேரிடும். வாழ்க்கைத்துணையின் கருத்துக்கள் உங்களுக்கு சிறந்த ஆலோசனையாக அமையும். வெளியில் இருந்து வர வேண்டிய பணவரவுகள் சரியான நேரத்திற்கு வராது சிரமத்தைத் தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடலாகாது. குடும்பத்தில் பாகப்பிரிவினை போன்ற செயல்களைச் செய்ய ஏதுவான காலமாக இருக்கும். அரசு தரப்பு காரியங்கள் எளிதில் முடியாமல் இழுபறியைத் தரும். மாணவர்கள் மனப்பாடக் கலையில் முன்னேற்றம் காண்பர். கலைத்துறையினர் கடும் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : திருவாசகப் பாடல்களைப் படித்து வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 2

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar