Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : மார்கழி பலன் கும்பம் : மார்கழி பலன் கும்பம் : மார்கழி பலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகரம் : மார்கழி பலன்
எழுத்தின் அளவு:
மகரம் : மார்கழி பலன்

பதிவு செய்த நாள்

16 டிச
2020
07:12


உத்திராடம் 2, 3, 4ம் பாதம் :   எந்த ஒரு காரியத்தையும் சிரத்தையோடு செய்து வருவீர்கள். ஏனோதானோவென்று வேலை செய்யும் மனிதர்களைக் கண்டு மன வருத்தம் கொள்வீர்கள். மனதில் தர்ம சிந்தனை கூடும். நல்ல காரியத்திற்காக பொய் சொல்வதில் தவறில்லை என்று வாதம் செய்வீர்கள். மாதத்தின் முற்பாதியில் நட்சத்திர அதிபதி சூரியனும், ராசி அதிபதி சனியும் இணைந்து 12ல் சஞ்சரிப்பதால் அதிக அலைச்சலைக் காணும் நீங்கள் பிற்பாதியில் காரியவெற்றி காண்பீர்கள். சனியின் பெயர்ச்சி நிலை காரணமாக டிச. 27 முதல் அலைச்சல் குறையவும் எளிதாக சாதிக்கும் திறன் கூடவும் காண்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பெரும்பாடு பட வேண்டியிருக்கும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். செல்போன், ரிமோட் முதலான எலக்ட்ரானிக் உபகரணங்களை புதிதாக மாற்ற நேரிடும். உறவினர் ஒருவர் உங்கள் உதவியை எதிர்பார்த்து நெடுநாட்களாகக் காத்திருப்பார். வண்டி வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும்.பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தை உயர்த்தும். தம்பதியருக்குள் அனாவசிய கருத்து வேறுபாடு தோன்றி மறையும். சிக்கன முயற்சிகள் தோல்வியில் முடியும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் நிலை உயரக் காண்பர். மாணவர்கள் அறிவியல் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சுற்றி வளைத்து விடையளிக்காமல் நேரடி பதில்களை விடைத்தாளில் வெளிப்படுத்தும் கலையில் பயிற்சி பெற வேண்டியது அவசியம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். செண்டிமென்ட் விவகாரங்களால் சற்று சிரமம் காண நேரிடலாம். இரவினில் உறக்கம் கெடுவதால் ஆரோக்யத்தில் லேசான தடுமாற்றம் உண்டாகும். வளர்ச்சி காணும் மாதம் இது.    
பரிகாரம் : ஏழுமலையான் வழிபாடு நலம் தரும்.
சந்திராஷ்டமம் : ஜன. 2, 3

திருவோணம் :   ராசிநாதன் சனியின் பெயர்ச்சியால் டிச. 27 முதல் உங்களது செயல்வேகம் கூடும். எந்த ஒரு விஷயத்தையும் யோசிக்காமல் பட்டென்று முடிவெடுத்துவிட்டு பின்னர் மனம் வருந்துவீர்கள். ஞாபக மறதித்தொல்லை அதிகம் இருப்பதால் எதையும் எழுதி வைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. தன ஸ்தானம் நல்ல முறையில் இருப்பதால் பொருள்வரவிற்குப் பஞ்சமில்லை. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த கடன்பாக்கிகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. வெளிப்படையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகள் மற்றவர்கள் மனதினைப் புண்படுத்தக்கூடும். முக்கியமான நேரத்தில் தைரியத்தினை இழந்துவிடுவதால் துவண்டுபோகிறீர்கள். குலதெய்வத்தை தியானித்து மனதில் தைரியத்தினை வரவழைத்துக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். வாழ்க்கைத்துணையோடு செலவழிக்கும் நேரம் குறையும் வாய்ப்பு ஏற்படும். அவரோடு லேசான கருத்து வேறுபாடு கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பகட்டான ஆடைகள், ஆபரணங்கள் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். நீண்ட நாட்கள் கழித்து குடும்ப நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்பட நேரிடும். தொழில்நிலை நன்றாகச் செல்லும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டாகும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். மாணவர்கள் ஞாபகமறதியில் இருந்து விடுபட கடுமையான பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உதவி செய்யப்போய் இக்கட்டான சூழலுக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையலாம். அவர்கள் மனநிலை கருதி விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். பிரச்னைகள் அதிகம் இல்லாத நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : ஜன. 3

அவிட்டம் 1, 2ம் பாதம் : நீச பலம் பெற்றிருந்தாலும் குருபகவானின் ஜென்ம ராசி அமர்வினால் இதுவரை இருந்து வந்த மந்தமான தன்மையும். சோம்பல்தன்மையும் மனதை விட்டு அகலும். நட்சத்திர அதிபதி செவ்வாய் நான்கில் ஆட்சி பெறுவதால் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். தனஸதானத்தின் வலிமை தொடர்ந்து சாதகமான நிலையில் இருப்பதால் பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து பொருள்வரவு இருந்து வரும். இன்பமயமான வார்த்தைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்தி அடுத்தவர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன்பிறந்தோர் உங்களுக்கு விரோதமாக செயல்படுவதாக நினைத்து கருத்து வேறுபாடு கொள்வீர்கள். உறவினர்களின் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவீர்கள். வண்டி, வாகனங்களால் செலவுகளை சந்திக்க நேரிடும். குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகளைச் செய்ய கால நேரம் சாதகமாக அமையும். எல்லாம் நல்லபடியாக நடக்கும்போதும் இனம்புரியாத பயமும், கலக்கமும் அடிமனதில் இருந்து வரும். ஆயினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்வீர்கள். அஜீரணக் கோளாறுகளால் உடல்நலம் குன்றும் வாய்ப்பு உள்ளதால் உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாட்டினை மேற்கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் மனமகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். நண்பர்களால் குறிப்பிடத்தகுந்த நன்மையை அடையும் நீங்கள் அவர்களுக்கும் உங்களால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்பதை மனதில் நிலை நிறுத்த வேண்டும். நேரம் நன்றாக இருப்பதால் சேமிப்பில் ஈடுபடுவது நன்மை தரும். வியாபாரிகள் தொழில் ரீதியாக சிறிது அலைச்சலுக்கு ஆளாவார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிக்கும் கீழ்நிலைப் பணியாளர்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவா£ர்கள். கலைத்துறையினர் தொழில்முறையில் லாபத்தினை காண்பார்கள். சிறப்பான நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : பிரதோஷ நாளில் அன்னதானம் செய்யுங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 4

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar