Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : மார்கழி பலன் தனுசு : மார்கழி பலன் தனுசு : மார்கழி பலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருச்சிகம் :மார்கழி பலன்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் :மார்கழி பலன்

பதிவு செய்த நாள்

16 டிச
2020
07:12


விசாகம் 4ம் பாதம் :  இந்த மாதத்தில் நட்சத்திர அதிபதி குரு நீச பலத்துடனும் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பலத்துடனும் முறையே மூன்று மற்றும் ஆறாம் வீடுகளில் அமர்ந்து சற்று சிரமத்தினை தரக்கூடும். முன்னுக்குப்பின் முரணான இந்த கிரக நிலை உங்களை மிகவும் நிதானமாகச் செயல்பட வைக்கும். அவசரப்பட்டு செய்த காரியங்களில் கிடைத்த அனுபவத்தின் காரணமாக மிகவும் முதிர்ச்சியோடு குடும்பப் பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள். பணவரவில் குறையேதும் இராது. சேமிப்பு உயர்வடையும். உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை நெருங்கிய நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது நல்லது. வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நற்தகவல் வந்து சேரும். செல்போன், ரிமோட் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை புதிதாக மாற்ற நேரிடும். உடன் பிறந்த சகோதரி உங்கள் உதவியை நாடி வருவார். குடியிருக்கும் வீட்டினை அழகுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மரச்சாமான்கள், பர்னிச்சர் பொருட்களை மாற்ற எண்ணுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். போட்டியாளர்களின் பொறாமை காரணமாக ஒரு சிலர் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். நேரத்திற்கு உணவருந்துவது உடல்நலத்திற்கு நல்லது. வாழ்க்கைத்துணையின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். உறவினர்களால் வீண் செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் பிரச்னையான நேரத்தில் அமைதியாக இருக்காமல் தங்கள் தரப்பு நியாயத்தை தைரியத்துடன் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் ஞாபகமறதியால் சற்றே அவதிக்குள்ளாகலாம். சராசரி பலன்களைக் காணும் மாதம் இது.


பரிகாரம் : சத்ரு சம்ஹார மூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 29

அனுஷம் :   ஜென்ம ராசியில் உச்சபலம் பெறும் கேதுவினால் மனதில் குழப்பங்கள் நிலவி வரும். ஆயினும் சமாளிக்கும் திறமை இருப்பதால் அதிகம் கவலைப்படாமல் செயலாற்றி வருவீர்கள். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். குடும்பத்தினரின் விருப்பத்திற்காக அதிகம் செலவழிப்பீர்கள். தனாதிபதியான குரு நீச பலம் பெற்றாலும் வரவினில் தடையேதும் இருக்காது. மற்ற கிரகங்களின் சாதகமான சஞ்சாரம் தன ஸ்தானத்தின் மீது வலிமையைத் தருவதால் சிறப்பான வரவினைக் காண்பீர்கள். நேரத்தினை பயன்படுத்திக்கொண்டு சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. நாவிற்கு ருசியான உணவு வகைகளை உண்பதில் தனி ஆர்வம் செலுத்துவீர்கள். சகோதரர்களினால் அனுகூலம் உண்டாகும். தைரியத்துடன் செயல்பட்டு எடுத்த காரியத்தில் சிறப்பான வெற்றியைக் காண்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை இருந்து வரும். வண்டி, வாகனங்களால் நன்மை உண்டாகும். இந்த மாதத்தில் வெளியூர் பிரயாணமும் உண்டு. பிள்ளைகளின் வாழ்வினில் ஏற்றமும், சுபநிகழ்ச்சிக்களுக்கான வாய்ப்பும் உண்டாகும். மனதின் ஒரு மூலையில் விரக்தியான எண்ணங்கள் நிலவி வந்தாலும், அதை ஒரு பொருட்டாகக் கொள்ள மாட்டீர்கள். ஜன. முதல் வாரத்தில் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத்துணை பக்கபலமாக துணை நின்று செயல்படுவார். நண்பர்களின் துணையோடு செய்யும் செயல்களில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள். பிதுரார்ஜித சொத்துக்கள் நன்மை தரும். வியாபாரிகளுக்கு தொழில் சூடு பிடிக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர்பதவிக்கான முயற்சியில் இறங்கலாம். கலைத்துறையினர் அதிக அலைச்சலைக் காண நேரிடும். மாற்று மதத்தைச் சார்ந்தவர்களால் நன்மை காண்பீர்கள். நன்மை தரும் மாதம் இது.

பரிகாரம் : அஷ்டலட்சு மி வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : டிச. 29, 30

கேட்டை :  ராசிநாதன் செவ்வாயின் ஆட்சி பலமும் நட்சத்திர அதிபதி புதனின் சாதகமான சஞ்சாரமும் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும். மாதத்தின் பிற்பாதியில் மூன்றாம் வீட்டில் இணையும் கிரகங்களின் வலிமையால் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களால் செய்யமுடியாத செயற்கரிய செயல்களைக் கூட உங்களது பேச்சுத் திறமையால் சாதித்து முடிப்பீர்கள். அடுத்தவர்கள் செய்யும் தவறினையும் அழகாக சுட்டிக்காட்டுவதுடன் அதனைத் திருத்தவும் முயற்சிப்பீர்கள். என்றாலும் நீங்கள் வெளிப்படுத்தும் குத்தலான பேச்சுக்கள் மற்றவர்கள் மனதைப் புண்படுத்தலாம். பொதுப்பிரச்னைகளை அலசி ஆராயும்போது உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும். அதே நேரத்தில் இதனால் வீண் விரோதம் உண்டாகும் வாய்ப்பும் உள்ளது. தனகாரகன் சுக்ரனின் தன ஸ்தான சஞ்சாரம் ஜன. 6 முதல் ஸ்திரமான பொருள் வரவினைக் காட்டுகிறது. கடும் உழைப்பாளியான உங்களுக்கு நேரத்திற்கு உணவு உட்கொள்ள இயலாது போகும். உடன்பிறந்தோரைக் கொண்டு ஒரு சில விஷயங்களைச் செய்து முடிப்பீர்கள். வண்டி வாகனங்களால் சிறப்பான நன்மை உண்டாகும். உறவினர்களின் மத்தியில் உங்கள் நற்பெயரும், சாதனைகளும் பரவும். பிள்ளைகள் பெருமைகொள்ளத்தக்க வகையில் செயலாற்றுவார்கள். உங்களது அறிவுத்திறன் மற்றவர்களின் பாராட்டினைப் பெறும். வாழ்க்கைத்துணையுடன் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆயினும் அவரது வழி உறவினர்களால் குடும்பத்தில் சலசலப்பு தோன்றும். குடும்பச் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர நினைத்து செய்யும் முயற்சிகளில் பலன் கிட்டாது போகும். வெளியூர் பிரயாணம் செல்லும் வாய்ப்புண்டு. கலைஞர்கள் நல்ல கவுரவமான நிலையைக் காண்பார்கள். தொழிலில் இதுவரை கண்டு வந்த நிலையான லாபம் இந்த மாதமும் தொடரும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண உடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : அருணாசலேஸ்வரரை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 30

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar