திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தொண்டி இரட்டைபிள்ளையார்,பாரதிநகர் கற்பகவிநாயகர் கோயில்களில் மார்கழி சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.