மதுரை மீனாட்சி கோயிலில் இன்று முதல் எண்ணெய் காப்பு உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2020 09:12
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் இன்று(டிச.,21) துவங்குகிறது.
டிச., 29 வரை நடக்கும் உற்ஸவத்தில் தினமும் மாலை 6:00 மணிக்கு அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி, அங்கு தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் சித்திரை வீதிகளை சுற்றி வலம் வருவர்.டிச.,29 கனகதண்டியலில் அம்மன், டிச.,30ல் திருவாதிரையன்று பொன்னுாஞ்சல் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருவர்.
டிச.,29 இரவு முதல் டிச.,30 அதிகாலை வரை ஆரூத்ரா தரிசனம் நடக்கும். கால பூஜை முடிந்து காலை 7:00 மணிக்கு பஞ்ச சபை, ஐந்து உற்ஸவ நடராஜர், சிவகாமியம்மனுடன் ஆடி வீதிகளில் வலம் வருவார்.பக்தர்கள் அபிேஷக பொருட்களை டிச.,29 இரவு 7:00 மணிக்குள் கோயில் அலுவலகத்தில் வழங்கலாம்.