திருக்கனுார்; செட்டிப்பட்டு திரவுபதியம்மன், மாரியம்மன் கோவில் நிர்வாகத்திற்கான புதிய அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு திரவுபதியம்மன், மாரியம்மன் கோயில் நிர்வாகத்திற்கான 5 பேர் கொண்ட அறங்காவலர் குழு கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் பதவி காலம் கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய அறங்காவலர் குழு தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறங்காவல் குழு தலைவராக குமாரராஜா, துணை தலைவராக குருமூர்த்தி, செயலராக சிவக்குமார், பொருளாளராக வேல்முருகன், உறுப்பினராக கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளனர். செட்டிப்பட்டு கோவில் நிர்வாகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவினர் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, இந்து அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.