பால்கர்: மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், சமீபத்தில், ஏரிக்கு அருகே, பள்ளம் தோண்டும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பள்ளத்தில் இருந்து, மூன்று சிலைகளை, அவர்கள் கண்டெடுத்தனர். இரண்டு போர் வீரர்களின் சிலைகளும், ஒரு பசுவின் சிலையும் கண்டெடுக்கப்பட்டன. அந்த சிலைகள், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை என, தெரியவந்துள்ளது.