பதிவு செய்த நாள்
22
டிச
2020
06:12
திம்மராஜம்பேட்டை; தட்சிணாமூர்த்தி உழவாரப் படை சங்கம் சார்பில், திம்மராஜம்பேட்டை கோவிலில், 172வது உழவாரப் பணி நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத, ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.சென்னை பகுதியைச் சேர்ந்த ஆலயங்களை சுத்தம் செய்யும் தட்சிணாமூர்த்தி உழவாரப் படை சங்கத்தினர், 172வது கோவிலை சுத்தம் செய்தனர்.இதில், கோபுரம் மீது இருந்த, புறாக்களின் எச்சம் மற்றும் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர். இப்பணியில், ஏராளமான சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.