சாத்தூர்:சாத்தூர் வெள்ளை மடம் வன்னி விநாயகர்கோயில் கும்பாபிஷேகம், ஜூன் 1ம்தேதி நடக்கிறது.இதை தொடர்ந்து இன்று காலை ,மங்கள இசை விநாயகர் வழிபாடு,நவகோள் வழிபாட்டுடன் பூஜைகள் துவங்குகின்றன. காலை 9மணிக்கு சுவாமி தீர்த்தங்கள் சேர்த்தல்,மாலை 4 மணிக்கு முதல் கால வேள்வி பூஜை, தீபாராதனை நடக்கிறது. நாளை (மே31) காலை நான்காம் கால யாக வேள்வி,மறுநாள்(ஜூன் 1) காலை 6.30 மணிக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 9.30மணிக்கு அன்னதானம் மற்றும் மகேஸ்வர பூஜையும் நடைபெறவுள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் ஒ.எஸ்.வேலுச்சாமி, அறங்காவலர்கள் எஸ்.கே.எஸ். ராஜேந்திரன், எஸ்.வெங்கடேஸ்வரன், எஸ்.குருசாமி, எஸ்.ராஜேஸ்வரி செய்து வருகின்றனர்.