உறவு என்பது வாழ்க்கைக்கு அவசியமானது. பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர், நண்பர், சகபணியாளர் என நம்மைச் சுற்றியுள்ள உறவுகளை அரவணைக்க வேண்டும். அற்ப காரணங்களுக்காக அவமதிக்க கூடாது. ஆனால் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் பிள்ளைகள் ஈடுபடுகின்றனர். உடன்பிறந்தவர்களை எதிரிகளாக கருதும் சிலர் வெறுப்புடன் நடக்கின்றனர். உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்கிறார் நாயகம். * எந்த காரணமாக இருந்தாலும் உறவுகளைத் துண்டிக்காதீர். * பிறரை சந்திக்கும் போது முகமலர்ச்சியுடன் ஸலாம் சொல்லுங்கள். * முடிந்த வரை பிறருக்கு உணவளியுங்கள். * உறவினர்களுடன் ஒற்றுமையுடன் வாழுங்கள். * தொழிலைக் கற்றுக் கொடுத்து மற்றவரின் முன்னேற்றத்திற்கு உதவுங்கள். * சகபணியாளருடன் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்.