விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜர் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பகல் 11:00 மணிக்கு மேல், நடராஜர் சன்னதியில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் திருப்பாவை உற்சவம் நடந்தது.நடனமாடியபடி உற்சவ மூர்த்தி, உட்பிரகார வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு கோபுர வாசலில் மலர்கள் துாவ, நடராஜர் சுவாமி தரிசனம் தரும் ஐதீக நிகழ்ச்சியுடன், நான்கு கோபுர வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.