பரமக்குடி : பரமக்குடி சந்திரசேகரசுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஆருத்ரா தரிசனவிழா நடராஜரின் ஆனந்த தாண்டவத்துடன் நடந்தது.
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் தனிச்சன்னதியாக அருள்பாலிக்கும்மூலவர் சிவகாம சுந்தரிசமேத நடராஜருக்கு டிச.,21ல்மாணிக்கவாசகர் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.* பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில்ஆருத்ரா தரிசனத்தையொட்டி, உற்ஸவம் அபிேஷகம் நிறைவடைந்து வீதிவலம் வந்தார்.* எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் உற்ஸவருக்கு சிறப்புஅபிேஷக, ஆராதனை நடந்தன.* நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கோயிலில் அதிகாலை 2:30 முதல் 3:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின் கோயிலில் மாணிக்கவாசகர் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து நடராஜர் சன்னதி முன் எழுந்தருளினார்.பின் கோயில் குருக்கள்திருவாசகம் பாடியதும் சுவாமி நடராஜர் சன்னதிமுன் மூடி இருந்த 7 திரைகள் காலை 5:30 மணிக்கு விலகியதும், தங்க கவசம் அணிந்திருந்த சுவாமி நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் மாணிக்கவாசகருக்கு காட்சியளித்தார்.