பதிவு செய்த நாள்
31
டிச
2020
02:12
கோவை : கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியிலுள்ள சிவன் கோவில்களில், நேற்று ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது. கோட்டை சங்கமேஸ்வரர், பேட்டை விஸ்வேஸ்வரர், தடாகம் சாலை மாதேஸ்வரர், ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்ககொண்டீசர், வெள்ளலுார் தேனீஸ்வரர் கோவில்களில், சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு, அன்னதானத்திற்கு பதிலாக தேக்கு தொன்னைகளில் பிரசாதம் வழங்கப்பட்டது.சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவாதிரையையொட்டி நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனம், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.