தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரிலுள்ள வெள்ளாளர் தெருவில் விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நாளை காலை ஏழு மணிக்கு மேல் எட்டு மணிக்குள் நடக்கிறது. இதில், அறநிலையத்துறை இணை ஆணையர் இளங்கோ, உதவி கோட்ட பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஏற்பாட்டை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே தலைமையில் உதவி ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் அசோகன், செயல் அலுவலர் அரவிந்தன், கண்காணிப்பாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்கின்றனர்.