அன்னூர்: தமிழக அரசுக்கு, முருக பக்தர்கள், நன்றி தெரிவித்துள்ளனர்.
அன்னூர், மன்னீஸ்வரர் கோவில், திருமுருகன் அருள்நெறி கழகம் மற்றும் ஆறுபடைவீடு பக்தர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : தைப்பூசத்துக்கு, பொது விடுமுறை அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு அனைத்து இந்துக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எனவே, விடுமுறை அளித்ததன் வாயிலாக, இந்த விழாவை மேலும் சிறப்பாக கொண்டாட அரசு உதவி செய்துள்ளது. தமிழக அரசுக்கும், முதல்வர் பழனிச்சாமிக்கும், முருக பக்தர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.