Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆயிரம் ஆண்டு பழமையான ... மயிலிறகு அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகப்பெருமான் அருள்பாலிப்பு மயிலிறகு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவபெருமானை மனமுருகினால் வேண்டினால், திருவடி அடையலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவபெருமானை மனமுருகினால் வேண்டினால், திருவடி அடையலாம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
10:02

திருப்பூர்: ‘சிவபெருமானை மனமுருகி வேண்டினால், அவன் திருவடியை அடையலாம்என, மாணிக்கவாசகர் பாடுவதாக,’ திருவாசக பயிற்சியில் விளக்கப்பட்டது.


திருப்பூர், யூனிவர்சல் ரோடு, ஹார்வே குமாரசாமி திருமண மண்டப, திருவருள் அரங்கில், கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட்ஸ் ஆகியன சார்பில் திருவாசகப் பயிற்சி வகுப்பு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்று வருகிறது.


இதில், கோவை சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது: திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர், சிவனி டம் வேண்டும் போது, உன் திருவடியை அடைவது தான் பிறவிப் பயன். பிறவியில்லாப் பெரும் பேறு அடைய வேண்டும் என்று பாடுகிறார். கல்லாய், மனிதனாய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனிவராய், தேவராய், செல்லாய் நின்ற தாவர சங்கமம் என்று சொல்லி, அசையும் பொருளும் அசையா பொருளும் உள்ள இந்த உலகில், எல்லா பிறப்புகளும் நான் அடைந்து வந்தேன். இப்போது உன் திருவடியை திருப்பெருந்துறையில் கண்டதினால் அந்த துன்பங்களிலிருந்து விடுபடுகிறேன் என்று உருகுகிறார். பெருமானின் திருவடிகளை கண்டதால், ஏற்பட்ட பயன் என்னவென்றால், இப்பிறவியிலிருந்து நீக்கம், துன்பம் தரும் பிறவியிலிருந்து நீங்க வேண்டும் என்றால், பெருமானை மனமுருக வழிபட வேண்டும். அவனே குருவாய் வந்து காட்சி கொடுத்து தன் திருவடியைக் காட்டி மகிழ்விப்பான். மீண்டும் இப்பிறவிக்கு வராமல் நம்மை அழைத்துச் செல்வான் என்பதை மாணிக்கவாசகர் உறுதிப்படச் சொல்கிறார். இதனை வலியுறுத்தும் போது, எம்பெருமானை மனம் உருகி வழிபாடு செய்தால், அவனுடைய திருவடி காட்சி நமக்கு கிடைத்து, சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வான். அனைத்து விதமான பிறப்புகள் நாம் இந்த பூமியில் பிறந்தாலும் கூட பிறவி என்ற நோயிலிருந்து விடுபட வேண்டும். அவர் தந்த சிவபுராணத்தை, அனுதினமும் துதித்து, எம்பெருமானை மனம் உருகியும் வழிபாடு செய்தால், அவனருள் கிடைக்கும். இன்று உலகில் எவ்வளவோ பிரச்னை, கவலை மக்களுக்கு உள்ளது. மக்கள் சிவபுராணத்தை முறையாக பாடி வழிபட்டால், உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும். அனைவரும் திருவாசகம் படிப்போம்; மகிழ்வாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar