பதிவு செய்த நாள்
11
ஜன
2021
10:01
விழுப்புரம்: விழுப்புரம் திரு.வி.க., வீதியில் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த இடத்தில் சங்கரமடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி மற்றும் ஆராதனை விழா நடந்து வருகின்றது. அதனடிப்படையில், நேற்று ஆராதனை விழா நடந்தது. இதையொட்டி, காலை 6:30 மணியளவில் கோபூஜையுடன் துவங்கி, ருத்ர ஜெபம், ருத்ர ேஹாமம் உள்ளிட்டவைகள் நடந்தது. இதில், ஏராளமான வேத விற்பன்னர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அவரது திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மதியம் 12:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகாளை சங்கரமட மேலாளர் ராமமூர்த்தி மற்றும் சுப்பிரமணியன், ஜெகதீசன், சூர்யநாராயணன் செய்திருந்தனர்.