பதிவு செய்த நாள்
12
ஜன
2021
10:01
சென்னை : மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும், பஞ்சவடி ஆலயத்தில், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, அனுமனுக்கு, 2,500 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.
திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில், மத்திய திருப்பதி எனப்படும், பஞ்சவடி அனுமன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, எழுந்தருளி உள்ள, 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்ச முக ஆஞ்சநேயருக்கு, அனுமன் ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. இதற்கு முன்னோட்டமாக, ஜன., 8 முதல், காலை, மாலை இரு வேளைகளிலும் சாற்றுமுறையுடன் ஹோமம் நடந்தது. தொடர்ந்து, இன்று காலை, 4:00 மணி முதல், அனுமன் ஜெயந்தி விழா நிகழ்வுகள் துவங்கியது. காலை, 8:30 மணிக்கு, பஞ்ச முக ஆஞ்சநேய சுவாமிக்கு, 2,500 லிட்டர் பாலுடன், சந்தனம், கான்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சுத்தமான பன்னீருடன், ஷீராபிஷேகம் நடைபெற்றது. மத்திய அரசு உத்தரவுப்படி, கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.