பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி 27ம்நாளான நேற்று கூடாரவல்லி உற்ஸவம் நடந்தது. அப்போது100 வட்டிலில் பொங்கல், 100 வட்டிலில் வெண்ணெய் சுவாமிக்கு நைவேத்தியம் நடந்தது.
மார்கழியில் சைவ, வைணவ கோயில்களில் திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பது வழக்கம். நேற்று மார்கழி 27 ம் நாளான்று ஆண்டாள் பெருமாளுடன் சேர்க்கையான தினம் கொண்டாடப்பட்டது.சுந்தரராஜப்பெருமாள் - ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது ஆண்டாள்தனது பாசுரத்தில் 100 தடாவில் பொங்கல், 100 தடாவில் வெண்ணெய்படைப்பதாக பெருமாளிடம் வேண்டியிருந்தார்.
இதனை ஆண்டாள் நிறைவேற்றினாரோ, இல்லையோ என்ற சந்தேகம் அடைந்து, பின்னாளில் ராமானுஜர் நிறைவேற்றியுள்ளார். இதனை நினைவு கூறும் வகையில் இக்கோயிலில் விழா நடந்தது.அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடப்பட்டு, தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள், திருப்பாவை கோஷ்டியினர் செய்திருந்தனர்.* எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள்ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்தனர்.