பதிவு செய்த நாள்
12
ஜன
2021
07:01
செங்கல்பட்டு அடுத்த, திருவடிசூலம் ஆஞ்சநேயர் கோவில் அருகில், பொங்கல் பண்டிகையையொட்டி, சமத்துவ பொங்கல் விழா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. செங்கல்பட்டு கலெக்டரின் மனைவியும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான லுாயிஸ் ஷர்மிளா பங்கேற்று, சமத்துவ பொங்கலை துவக்கி வைத்தார்.பாரம்பரிய கலாசார விழாவான, சிலம்பாட்டம், உறியடி, கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, இசை நாற்காலி, கோலப்போட்டி, குதிரை போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் என, பல்வேறு போட்டிகள் நடந்தன.போட்டிகளில், சிறுவர்கள், பெரியவர்கள் என, பல தரப்பினரும் பங்கேற்று, அசத்தினர். இதன் ஏற்பாடுகளை, தனியார் அமைப்பினர் செய்தனர்.இதேபோல், காஞ்சிபுரம், திருக்காலிமேடில் தி.மு.க., சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.