ஊட்டி: ஊட்டியில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி ஊட்டி உட்பட மாவட்டத்தில் ஆஞ்சநேயர் ஆலயங்களில், அவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஊட்டியில், வேலிவியூ, புதுமந்து, காந்தள் காசிவிஸ்வநாதர் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் நடந்த சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சியில், பக்தர்கள் பங்கேற்று ஆஞ்ச நேயரை வழிப்பட்டனர். பக்தர்கள் கூறுகையில்,‘ மார்கழி அமாவாசை நாள் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.‘ என்றனர்.