பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
சேலம்: ராஜகணபதிக்கு பொங்கல் படையலிட்டு, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், தாயார் சன்னதியில், சுந்தரவல்லி தாயார் மஞ்சள் குலை அலங்காரத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிரிநாதர், சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர். சேலம் ராஜகணபதி கோவிலில், பொங்கல் படையலிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. கடைவீதி, ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மன், ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் முத்தங்கி அலங்காரத்திலும், அஸ்தம்பட்டி மாரியம்மன் தங்க கவச சாத்துபடியிலும், வின்சென்ட் எல்லைப்பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். சேலம், குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் நடந்த பூஜைகளில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். உத்தமசோழபுரம் கரபுரநாதர், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, ஊத்துமலை முருகன் உள்ளிட்ட அனைத்து கோவில்களில், உற்சவர், மூலவருக்கு நடந்த சிறப்பு பூஜைகளில் திரளானோர் தரிசனம் செய்தனர்.