பதிவு செய்த நாள்
17
ஜன
2021
03:01
மதுக்கரை: க.க.சாவடியை அடுத்து பிச்சனூர் ரங்க சமுத்திரம் பிரிவு அருகே ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, தை மாத மகா உற்சவ விழா, கடந்த, 14ல் பெரிய அபிஷேகத்துடன் துவங்கியது.மூன்றாம் நாளான நேற்று, மாதேஸ்வரருக்கு பக்தர்கள் பாலபிஷேகம் செய்தனர். ஏராளமானோர் மாடு, கன்று, எருது, ஆடு, கோழிகளின் உருவாரங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி, நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். சலங்கை மாடுடன் வந்தவர்கள், விளையாடி சென்றனர்.விழாவில், கேரள மாநிலம் பாலக்காடு, சித்தூர், கொல்லங்கோடு, கொழிஞ்சாம்பாறை, கோபாலபுரம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகள் மற்றும் கிணத்துக்கடவு , தொண்டாமுத்தூர் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.இன்று தீர்த்தவாரி நடக்கிறது. நாளை தரிசனத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி ஜெகநாதன் சுவாமிகள் செய்துள்ளார்.