பதிவு செய்த நாள்
17
ஜன
2021
10:01
சென்னை : மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் கோவில், கோ சாலை பசுக்களுக்கு பூஜை நடத்தி வழிபாடு நடந்தது. தை இரண்டாம் நாள் அனைத்து உழவர்களும் வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும், கோ சாலைகள் உள்ள கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.வடபழநி ஆண்டவர் கோவிலில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, நேற்று மாலை கோ பூஜை நடந்தது. முன்னதாக, கோ சாலையில் உள்ள அனைத்து பசுக்களும் சுத்தப்படுத்தப்பட்டன. இரண்டு பசுக்களை பிரதானப்படுத்தி, பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து, கோ சாலையில் உள்ள அனைத்து பசுக்களுக்கும் பூஜை நடத்தி, அவற்றுக்கு உணவளிக்கப்பட்டது.பின், கோ சாலை பராமரிப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பங்கேற்றார்.