காரைக்கால் : காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி மாத விடையாற்றி உற்சவம் நடந்தது.
காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் தினமும் ஆண்டாளின் திருப்பாவை வாசித்து, சொற்பொழி, சிறப்பு பூஜைகள் நடந்தன. மார்கழி மாத விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினார். ஆண்டாளுடன் ஏகாசனத்தில் சிறப்பு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று காணும் பொங்கல் தினத்தில் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டனர். விடையாற்றி உற்சவத்தில் பக்தர்கள் பெருமாளை வழிப்பட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.