பதிவு செய்த நாள்
17
ஜன
2021
03:01
திருவண்ணாமலை: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர் பேட்டை தென்பெண்ணை ஆற்றில், நாளை (ஜன.,18ல்,) நடக்கவிருந்த அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரிக்கு தடைவிதித்து, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் ஆண்டுக்கு மூன்று முறை வெளியில் சென்று, தீர்த்தவாரி நிகழ்வு நடக்கும். இதில், ரத சப்தமி நாளில், கலசப்பாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று, பள்ளிக்கொண்டாப்பட்டு துரிஞ்சலாற்றிலும், பொங்கல் பண்டிகை முடிந்து, மணலூர் பேட்டை, தென்பெண்ணை ஆற்றிலும், அருணாசலேஸ்வரர் பங்கேற்கும் தீர்த்தவாரி நடக்கும். அதன்படி நாளை தென்பெண்ணை ஆற்றில் நடக்கவிருந்த தீர்த்தவாரி, கொரோனா ஊரடங்கால் தடைவிதித்து, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.