நெட்டப்பாக்கம் : செம்பியப்பாளையம் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது. நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட செம்பியப்பாளையம் கிராமத்தில் சுந்தர விநாயகர், செங்கழுநீர் மாரியம்மன், அய்யனாரப்பன், முத்துமாரியம்மன் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டு, மகா கும்பாபி ேஷக விழா இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது.பின்னர் தீர்த்த பிரசாதம், அன்னதானம், இரவு 7.30 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை செம்பியப்பாளையம் கிராம மக்கள் செய்துள்ளனர்.