திருவெண்ணெய் நல்லூர் : இருவேல்பட்டு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் அருகே உள்ள இருவேல்பட்டு கற்பகவிநாயகர், பாலமுருகன், பொன்னியம்மன், மாரியம்மன், அய்யனார் கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 28ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமத் துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. 29ம் தேதி நவக்கிரக ஹோமங்களும், ரக்ஷாபந்தனம், பூர்ணாஹூதியும் நடந்தது. 30ம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 4 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் மஹாபூர்ணாஹூதி நடந்தது. காலை 7.30 மணிக்கு யாக சாலையிலிருந்து கலசங்கள் கொண்டுவரப்பட்டு கற்பகவிநாயகர், பாலமுருகன், அய்யனார், மாரியம்மன், பொன்னியம்மன் கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.