Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் 25 ... பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி பிறப்பு சிறப்பு பூஜை பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுக்கு சிறப்பு வரவேற்பு
எழுத்தின் அளவு:
ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுக்கு சிறப்பு வரவேற்பு

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
10:02

தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த சிவனடியார்களுக்கு, கோவை ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.


மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் சிவாங்கா பக்தர்கள், கோவை ஈஷா யோகா மையத்திற்கு, சிவ யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், சென்னை, உடுப்பி, நாகர்கோவில் பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய ஆறு இடங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதில், சென்னையிலிருந்து வந்த சிவனடியார்கள் குழு, அறுபத்து மூவர் திருமேனிகளை தாங்கிய ஒரு பிரத்தியேக தேருடன் பாதயாத்திரையாக வந்தனர். சிவ யாத்திரை குழுக்கள் அனைத்தும், நேற்று காலை ஆலாந்துறை பகுதிக்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள், 63 நாயன்மார்களை பல்லக்குகளில் ஏந்தி, ஆதியோகி தேர்தலுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். வழிநெடுகிலும், கிராம மக்கள் திரண்டு சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதேபோல, ஈஷாவின் நுழைவு வாயிலான, மலை வாசலில் இருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஆதியோகியுடன் பக்தர்கள் தியானலிங்கம் வரை, கைலாய வாத்தியங்கள் முழங்க பவனி வந்தனர். அவர்களுக்கு, ஈஷா சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar