புதுச்சேரி; இந்துகளின் மனதை புண்படுத்தும் விதமாக திருவாசகம் குறித்து வாட்ஸ் ஆப் கருத்து பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி சார்பில் சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர்.சட்டம், ஒழுங்கு சீனியர் எஸ்.பி., பிரதீக் ஷா கொடாராவிடம் இந்து முன்னணி புதுச்சேரி கோட்ட செயலாளர் முருகையன் தலைமையில், துணைத் தலைவர் நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், சிவா அளித்த மனு:எனது வாட்ஸ் அப்பில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று காலை 7 மணியளவில் திருவாசகப் புத்தகம், திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை, கோவில் உழவார பணியையும் இழிவாக பேசி பதிவிட்டுள்ளார்.திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தையை மிகவும் ஆபாசமான வார்த்தைகளுடன் ஒப்பீடு செய்துள்ளார். அவர் பேசிய உரையாடல், ஒலிப்பதிவையும் மனுவுடன் இணைத்துள்ளோம்.இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய அடையாளம் தெரியாத நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.